பழமொழி.....

Thursday, September 29, 2011

வானோடி அனுமதிப்பத்திரங்களின் வகைகள்.........


1. மாணவர் வானோடி அனுமதி பத்திரம் . (Student Pilot’s License)












2. கிளைடர் வானோடி அனுமதி பத்திரம்  (Glider Pilot’s License)










3. மைக்ரோ லைட் வானோடி அனுமதி பத்திரம்  (Microlite Pilot’s License)








4. தனியார் வானோடி அனுமதி பத்திரம்  (Private Pilot’s License)








5. வர்தக வானோடி அனுமதி பத்திரம்  (Commercial Pilot’s License)











6. முதுநிலை வர்தக வானோடி அனுமதி பத்திரம்  (Senior Commercial Pilot’s License)
7. விமான கம்பெனி வானோடி அனுமதி பத்திரம் . (Airline Transport Pilot’s License)

Tuesday, September 27, 2011

போயிங் B-787 டிரீம்லைனர் ( Boeing B-787 Dreamliner )



பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் கனவு வானூர்தியான  “போயிங் 787 டிரீம்லைனர்’ வானூர்தி Boeing 787 Dreamliner ) நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது.
உலகின் அதிநவீன, சொகுசு வானூர்தி என்று அழைக்கப்படும் இந்த வானூர்தி அடுத்த சில நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்த கனவுலக வானூர்தித் திட்டம் குறித்து போயிங் நிறுவனம் அறிவித்தது. ஆனால், இந்த புதுமையான வானூர்தி திட்டமிட்டபடி வெளிவரவில்லை. அதிக விலையும், குறைவான முன்பதிவுகளும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், மூலப் பொருட்கள் பற்றாக்குறை, அதிக எடை, இறக்கைகளை பொருத்துவதில் ஏற்பட்ட தொழில் நுட்பசிக்கல் போன்றவைகளும் 'டிரீம்லைனர்’ வானூர்தி தாமதமானதற்கு காரணங்கள் ஆகும்.

இத்தனை தடைகளையும் தாண்டி, நேற்று இந்த வானூர்தி வெள்ளோட்டம் விடப்பட்டது. முதற்கட்டமாக, பத்திரிகையாளர்கள் இந்த வெள்ளோட்டத்தின் போது வானூர்தியில் பயணித்தனர். “டிரீம்லைனர்’ விமானம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. உயரம் அதிகம் கொண்ட கேபின், அமர்ந்திருப்பதே தெரியாத அளவிற்கு மெத்தை போன்ற இருக்கைகள், கண்களைக் கவரும் பல வண்ண விளக்குகள், மிக குறைந்த எரிபொருள் செலவு, நிறைந்த திறனும், குறைந்த சத்தமும் கொண்ட இயந்திரங்கள், பயணிகள் விண்ணைப் பார்த்து ரசிப்பதற்காக நீண்ட ஜன்னல்கள் என பல சிறப்புகள் இந்த வானூர்தியில் உண்டு.

இந்த வானூர்தி, சிட்னியில் இருந்து சிகாகோ வரையில் தரையிறங்காமல், தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஏர்பஸ் நிறுவனம் ஏ 380 என்ற உலகின் மிகப் பெரிய வானூர்தியை அறிமுகப்படுத்தியது. இந்த வானூர்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து முன்பதிவுககள் குவிகின்றன. இந்நிலையில், ஏ 380 ரக வானூர்திக்கு போட்டியாக போயிங் நிறுவனம் 'டிரீம்லைனர்’ வானூர்தியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ 380 வானூர்தியில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய முடியும். இதனால், நீண்ட தூர வானூர்தி சேவையில் ஏர்பஸ் ஏ 380  வானூர்திகள் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால் 'டிரீம்லைனர்’ வானூர்தியில் 290 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இருப்பினும் இரு நகரங்களுக்கு இடையிலான, சொகுசு பயணத்திற்கு 'டிரீம்லைனர்’ வானூர்தி ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எப்படியோ மிக நீண்ட தாமதத்திற்குப் பின், உலகின் கனவுலக வானூர்தி என்று கருதப்படும் 'டிரீம்லைனர்’ வானூர்தி அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகள் சேவைக்காக வெளி வந்துள்ளது.



                              படத்தின் மேல் அழுத்துங்கள் பெரிதாக தெரியும்.... 




போயிங் 787 வானூர்தியின் உள் தோற்றம் 



                          

Sunday, September 25, 2011

Antonov An-225 (அன்டனோ An-225 ரக வானூர்தி)



Antonov என்று சுருக்கமாக அழைக்கப்படும் Antonov Aeronautical Scientist/Technical Complex வானூர்தி  உற்பத்தி நிறுவனமானது உக்ரெய்னைத் தலைமையகமாகக் கொண்டு 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட Antonov An-225 வானூர்தியே உலகின் மிகப்பெரிய வானூர்தியாகும். இவ்வானூர்தி சோவியத் ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்காக, விண்ணோடங்களை இடம்மாற்றல் மற்றும் விண்ணோடங்களுக்கான உந்துகணைகளை ஏற்றிச்செல்லல் போன்ற செயற்பாடுகளிற் பயன்படுத்தப்படுகின்றது. 1988 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஒரேயொரு வானூர்தியே Antonov நிறுவனத்தினால் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.
பொருட்களை ஏற்றுவதனையே பிரதான நோக்காகக் கொண்டு உருாக்கப்பட்ட இவ்வானூர்திவானூர்தியின் உட்பகுதியில் 250000 கிலோக்கிராம் நிறையையோ அல்லது அதன் உடற்பகுதியின் மேற்புறத்தே 200000 கிலோக்கிராம் நிறையையோ காவிச்செல்ல வல்லது.
An-225 வானூர்தியானது அதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வானூர்தியான An-124 வானூர்தியின் அடியொற்றியே தயாரிக்கப்பட்டது. மேலதிக சுமை ஏற்றத்தக்கதாக வானூர்தியின் உடற்பாகம் மற்றும் இறக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன் மேலதிகமான இரு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு ஆறு இயந்திரங்களைக்கொண்ட வானூர்தியாக உருவாக்கப்பட்டது. அத்துடன் அதிக எடையைத் தாங்கவல்லதாக, பிரதான சக்கரத்தொகுதி (landing gear) 32 சக்கரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டதுடன் உடற்பகுதியின் மேற்புறத்தில் சுமையேற்றிச்செல்ல வல்லதாகக் காணப்படுவதன் காரணமாக, விமானத்தின் காற்றியக்க நிலையைச் சமன்செய்வதற்காக இரட்டை நிலைக்குத்துச் சமநிலைச் செட்டைகள் (twin vertical stabilizer) கொண்டதாக இவ்வானூர்தி உருவாக்கப்பட்டது. இந்த வானூர்தி An-124 விமானத்தினை அடியொற்றி உருவாக்கப்பட்ட போதிலும், முன்னணி இராணுவ நிலைகளுக்கான விநியோகத்திற்கோ அல்லது குறுந்தூரப் பறப்புக்களுக்கோ பயன்படுத்தப்படுவதில்லை.
An-225 வானூர்தியின் மேலெழும் நிறையானது (takeoff weight), அண்மையில் பயன்பாட்டிற்கு வந்த Airbus A-380 உள்ளடங்கலாக அனைத்து விமானங்களிலும் அதிகமாகும்.
இவ்வகை வானூர்தி உலகிலேயே ஒன்றேயொன்றுதான் காணப்படுகின்றது. இரண்டாவது வானூர்தியின் உற்பத்திச் செயற்பாடுகள் 1980 களின் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரண்டாவது வானூர்தி முதல் வானூர்தியின் வடிவத்திலிருந்து சிறிது மாறுபட்டுக் காணப்பட்டது. ஆயினும் சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து இரண்டாவது வானூர்தியின் உற்பத்திச் செயற்பாடுகள் யாவும் இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு அந்த இரண்டாவது வானூர்தியின் உற்பத்திப் பணியினைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டளவில் அதனை முடிப்பதாகத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேறவில்லை.


6 உயர்வலு இயந்திரங்கள் (D-18T 26 390 kgp)
அதிக வேகம் 850 Km/h
பறப்பு வேகம்: 700 Km/h
தொடர்ந்து பறக்கக் கூடிய து}ரம் : 15 400 Km
பறக்கக் கூடிய உயரம் : 11 145 m
நிறை : 350 000 Kg
சுமக்கக் கூடிய நிறை : 250 000 Kg
12 பணியாளர்கள்.
துருப்புக் காவி நிலையில் 600 துருப்புக்கள்
விண்வெளி விமானத்தை மேற்பகுதியில் காவிச்செல்லக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது
நீளம் : 84 m.
உயரம் : 18.20 m 



Saturday, September 24, 2011

உலங்கு வானூர்தி...



உலங்கு வானூர்தி, மனிதனால் உருவாக்கபட்ட மிகச் சிறந்த, பயனுள்ள வானூர்தி ஆகும்.
வானூர்த்தியினால் செங்குத்தாக மேலே உயரவும், கீழிறங்கவும், முன்னோக்கி, பின்னோக்கியும், பக்கவாட்டிலும் பறக்க முடியும். இதனால் நகராமல் ஒரே இடத்திலும் தொடர்ந்து பறக்க இயலும். உலங்கு வானூர்தி தரையிறங்கவும், மேலேறவும் சிறிய இடமிருந்தால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலங்கு வானூர்தி பறக்கும் நுட்பம் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கபட்டுவிட்டது என்பதே உண்மை. கி.பி. 4-ம் நுற்றாண்டில் சீன நாட்டில் ஒரு விளையாட்டுக் கருவி உருவாக்க பட்டது. அக் கருவியில் உலங்கு வானூர்தி விசிறி போல இருந்தவற்றின் உதவியால் அது காற்றில் சுற்றி பறந்தது. 1483-ம் ஆண்டில், பிரபல ஓவியரான லியனார்டோ டாவின்சி, ஒரு உலங்குவானூர்த்திக்கான மாதிரியை வரைந்தார். ஆனால் முதல்முறையாக 1907-ம் ஆண்டில்தான் உலங்கு வானூர்தி வெற்றிகரமாக பறக்கபட்டது. பிரெஞ்சு நாட்டவரான பால் கோர்னு அச்சாதனையை புரிந்தார். அவர் சுமார் 2 மீட்டர் உயரத்தில் 20 நொடிகள் பறந்தார்.
அடுத்து 1936-ம் ஆண்டில், இரட்டை விசிறி உலங்கு வானூர்தியை ஹென்ரிக் போக்கே உருவாக்கினார். ரஷியாவில் பிறந்த பொறியாளரான இகோர் சிகோர்ஸ்கி, ஓர் ஒற்றை விசிறி உலங்கு வானூர்தியை 1939-ல் அமெரிக்காவில் உருவாக்கினார். `சிகோர்ஸ்கி விஎஸ்- 300′ என்ற அந்த உலங்கு வானூர்தி, போரில் பயன்படுத்தபட்ட முதல் உலங்கு வானூர்தி ஆகும்.
இன்று உலகிலேயே பெரியது, ரஷியாவின் `எம்ஐ 26′ உலங்கு வானூர்தி ஆகும். இதில் 20 மெட்ரிக் டன் எடையளவுக்குச் பொருட்களை  எடுத்துச் செல்ல முடியும். இது சாதாரண உலங்குவானூர்திகளிலும் எடுத்துச் செல்லபடும் அளவை விட பத்து மடங்கு அதிகம். கடந்த 2005-ம் ஆண்டில் பாகிஸ்தானில் பூகம்பம் ஏற்பட்டது. அபோது, பாதிக்கபட்ட பகுதிகளுக்கு `புல்டோசர்களை’யும், மற்ற அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்ல ஐ.நா.வால் இந்த உலங்கு வானூர்தி பயன்படுத்தபட்டது.

Friday, September 23, 2011

வேகத்தின் அடிப்படையில் வானூர்தி வகைகள்...


1)ஒலியின் வேகத்தை (1236 கி.மீ) விட குறைவான வேகத்தில் செல்லும் வானூர்தி (Subsonic aircraft).

2) ஓலியின் வேகத்தை (1236 கி.மீ மேல் 5625 கீ.மீ க்கு கீழாக) விட அதிக வேகத்தில் செல்லும் வானூர்தி (Supersonic aircraft).

3) ஐந்து மடங்கு (5625 கி.மீ) ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும் வானூர்தி(Hypersonic aircraft).




Thursday, September 22, 2011

எடை (Weight) அடிப்படையில் வானூர்தி வகைகள்..


1) காற்றைவிட லேசானது. (Hot Air Baloons - பலூன்கள்)

2) மிக குறைந்த எடை உடைய வானூர்தி.
கிளைடர் வானூர்தி.   ( Glider )

 3) 7000 Kgs கும் குறைந்த எடை உள்ள வானூர்தி.

 4) 7001 - 1,36,000 kgs மிதமான எடை உள்ள வானூர்தி.

5) 1,36,001 kgs மேல் அதிக எடை உடைய வானூர்தி.

Wednesday, September 21, 2011

இறக்கை மற்றும் உடல் அடிப்படையில் வானூர்தி வகைகள்..


1. இறக்கையை அடிப்படையில்:
 பிக்ஸ்ட் விங் (Fixed Wing) சாதாரண  வானூர்தி 
 ரோட்டரி விங் (rotary wing) 
உலாங்கு வானூர்தி 


 2 உடல் அமைப்பு அடிப்படையில்:

 நீளமான உடல் (Long Body)
 அகலமான 
உடல் (Wide body)









Friday, September 16, 2011

இயந்திரத்தின் அடிப்படையில் வானூர்தி வகைகள்....


1 .Hot Air Baloon
2 .Glider Aircraft
3 .Single Engine
4 .Twin Engine
5 .Multi Engine
6 .Reciprocal Engine
7 .Jet Engine
8 .Turbo Jet Engine
9 .Turbo Propeller
10.Rocket Engine
                                                   காற்றை விட லேசான பலூன் 
                                                           (Hot Air Baloon) 


                   இயந்திரம் இல்லாம பறக்க கூடிய கிளைடர் வானூர்தி  
                                     Glider Aircraft
  
                                                   ஒற்றை என்ஜின் உள்ள வானூர்தி  
                                                               Single Engine

                                              
                                                 இரண்டு என்ஜின் உள்ள வானூர்தி 
                                                               Twin Engine

                                                 
                                                       பல என்ஜின் உள்ள வானூர்தி 
                                                                Multi Engine

                
                கார்களில் உபயோகப்படும் என்ஜின் உள்ள வானூர்தி     Reciprocal Engine 
                   முன்பக்கம் உள்ள காற்றாடி போல் உள்ள சுற்றும் இறக்கை   Propeller

                                                      
                                                    ஜெட் என்ஜின் உள்ள வானூர்தி  
                                                                  Jet Engine


                                                          டோர்போ ஜெட் வானூர்தி  
                                                                Turbo Jet Engine

                        
                                                        டோர்போ ப்ரோப்பெல்லர் வானூர்தி 
                                                                   Turbo Propeller


                                                  ரொக்கெட் இயந்திரம் உள்ள 
வானூர்தி
                                                                    Rocket Engine