பழமொழி.....

Friday, October 14, 2011

விபத்தை தவிர்க்கும் உலங்குவானூர்தி


UNSW@ADFA gas-turbine powered helicopter.This helicopter is fitted with laser range finder, embedded vision sensor, GPS and Inertial Measurement Sensors.
   வானூர்தி என்றாலே எங்கேயாவது மோதி சிதறிவிடும் என்றுதான் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் இதனாலேயே வெளிநாட்டுப் பயணத்தையே தவிர்த்துவிட்டார்கள். இப்பொழுது நகரில் இருக்கும் வாகன நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு உலங்குவானூர்தி  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நெருக்கடி மிகுந்த நகரில் தரையிறங்குவது மிகக் கடினம்.
இம்மாதிரியான நிலைமைகளை தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சியை மேற்கொண்டுதானிருக்கிறார்கள். அமெரிக்காவின் பெர்க்லி நகரில் இருக்கும் லிபோர்னியா பல்கலைக்கழகம் ரோபோ காப்டர்ஸ் என்றழைக்கப்படும் USRA MAXIMA-2 என்ற விபத்தை தவிர்க்கும் ஆளில்லா உலங்குவானூர்திகளை தயாரித்துள்ளார்கள். இதன்மூலம் எதிர்காலத்தில் விபத்தை தவிர்க்கும் வானூர்திகள் கண்டுபிடிக்க முடியும். இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால், LASER RANGER FINDER  என்ற உணரி மூலம் எதிரே வரும் அல்லது எதிரே இருக்கும் பொருளை இந்த உணரியின் மூலம் கண்டுபிடித்து தன்னுடைய திசையை மாற்றிக்கொள்ளும். இது திசை மற்றும் கணினி கட்டுப்பாட்டுக் கருவிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு வானூர்தி அல்லது உலங்குவானூர்தி ஒரு இடத்திற்கு சென்றால் அது செல்லக்கூடிய பாதை எப்படிப்பட்டது? அதன் தன்மை, காலநிலை எவ்வாறு இருக்கும்? என்று ஆராய்ந்து பிறகு சென்றிறங்கக் கூடிய இடம் எப்படிப்பட்டது? என்றெல்லாம் ஆராய்ந்து பின் அதற்கேற்ற சாதகமான நிலை இருந்தால் மட்டுமே வானூர்தி பயணம் செய்யும். இல்லாவிட்டால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடுமையான மூடுபனி காலங்களில் வானூர்தி மலைகளில் மோதி நொறுங்க வாய்ப்புள்ளது. இவையெல்லாம் எதிர்பாராத விதமாகவோ அல்லது வானோடியின் கவனக்குறைவாகவோ இருக்கலாம்.
இல்லாவிட்டால் வானூர்தி செல்லும் பாதையில் மற்றொரு வானூர்தியோ அல்லது பறவைகளோ பறந்தால்கூட விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பறவை மோதி வானூர்தியில் கோளாறால் திடீரென தரையிரங்கியது. இவையெல்லாம் எதிர்பாராது நடக்கக் கூடியதுதான்.
இந்தவகை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏரோபாட் திட்டத்தில் (AEROBOT PROJECT) USRA MAXIMA-2 ) என்ற இந்த உலங்குவானூர்தியை  தயாரித்துள்ளது. எத்தனையோ நிறுவனங்கள் இந்த விபத்து தவிர்க்கும் வானூர்திகளை கண்டுபிடித்தாலும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஏரோபாட் நிறுவனம் எல்லாவற்றிற்கும் முதன்மையாக விளங்குகிறது. 12 அடி நீளமுள்ள ரோபோ காப்டர்ஸ்  என்றழைக்கப்படும் இந்த உலங்குவானூர்தி தன் எதிரே வரும் வானூர்தி அல்லது உலங்குவானூர்தி இவைகளை லேசர் கதிர் உணரியால் கண்டறிந்து தன்னுடைய பாதையை மாற்றிக்கொள்ளும் அல்லது திசையை திருப்பிக்கொள்ளும்.
அதாவது எதிரே பொருட்கள் தட்டுப்பட்டால் லேசர் உணரியால் ஒளிக்கற்றைகளை பாய்ச்சும். இதனால் எதிரே இருக்கும் பொருளிலோ அல்லது வானூர்தியிலோ மோதாமல்  விபத்தை தவிர்த்துவிடும்.எந்தவித முன் அனுபவமில்லாத இடத்திலும் அல்லது நெருக்கடியான நகரிலும் பறக்கக்கூடிய வல்லமைக் கொண்டது.
வெற்றிகரமான சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. எதிர் காலத்தில் வான் போக்குவரத்து நெருக்கடி, விபத்து இவைகளை தவிர்க்கும் பொருட்டு நவீன யுத்திகள் கொண்ட வானூர்திகள் உருவாக்கப்படுவது நிச்சயம்.

Thursday, October 13, 2011

சிங்கப்பூர் வானூர்தி சாதனைகள்..

                       சிங்கப்பூர் வானூர்தி சாதனைகளில் 100 ஆண்டுகள் கொண்டாட்டம்.
சிங்கப்பூர் வானூர்தி 100 ஆண்டுகள் சாதனைக் கண்காட்சி சாங்கி விமான நிலையத்தில் திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. சிங்கப்பூர் விமான நூற்றாண்டு கண்காட்சி இங்கே விமானவரலாற்று பயணம் தடயங்கள். இலவச கண்காட்சி - பார்வையாளர்கள் iPads மூலம் குரல் பதிவுகள் மற்றும் காணொளிப்பதிவுகள் கேட்க, பார்க்க முடியும் இது - மேலும் வானூர்தி துறையில் சிங்கப்பூர் பொருளாதரம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எப்படி ஒரு ஆழமான புரிதலை வழங்குகிறது.
சிங்கப்பூர் (CAAS) என்ற சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கண்காட்சி, முனையம் 3 டிபார்ச்சர் மண்டபத்தில் நடைபெறுகிறது.
அதன் அங்குரார்ப்பன வைபவம் போக்குவரத்து அமைச்சர் Lui Tuck Yew தலைமையில் நடைபெற்றது.



Wednesday, October 12, 2011

Drones வைரஸ்...



அமெரிக்கா ஆளில்லாமல் ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிறிய வானூர்திககளை தயாரித்துள்ளது. இவை முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்திகள் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமனில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது ஏவுகணைகள் வீசி அழிக்கப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் ஆளில்லா வானூர்திகளை இயக்கும் கம்ப்யூட்டரில் வைரஸ் கிருமிகள் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர் மையம் அமெரிக்காவின் நிவேடாவில் உள்ள கிரீச் வான் படை தளத்தில் உள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்” பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
 
இந்த வைரஸ் தாக்குதலால் ஆளில்லா வானூர்திகள் இயங்குவதில் எந்த தடையும் ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், வைரஸ் கிருமிகள் எங்கிருந்து பரப்பப்பட்டன என தெரியவில்லை. அவை தற்செயலாக நடந்த நிகழ்வா? அல்லது வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டதா? எனவும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

A recent story in Wired claims that the operators of the Reaper and Predator drone fleets are struggling against an enemy we can all relate to: Malware. According to the story’s sources, which are unnamed, the computers used to remotely control drones around the world have been infected with a nasty keylogger that is resisting efforts to destroy it.


Tuesday, October 11, 2011

பறந்த சமையல் எண்ணெய்.....





வானூர்திகள் அனைத்தும் பெட்ரோல் மூலமே இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் உள்ள வானூர்தி நிறுவனம் ஒன்று தனது வானூர்தியை சமையல் எண்ணெய் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது.
தாம்சன் ஏர்வேஸ் என்ற வானூர்தி நிறுவனமே இத்தகைய சாதனையை படைத்துள்ளது. போயிங் 757 ( Boeing - 757 )ரக வானூர்தியில் 2 இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இயந்திரம் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டது.
மற்றொரு இயந்திரம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை மூலம் இயங்கியது. அதற்காக வீடுகளின் சமையலறைகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்கள் சேகரிக்கப்பட்டன.
அவை அதிநவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இந்த வானூர்தி பர்மிங்காமில் இருந்து லான்ஷோரக் நகருக்கு கடந்த வாரம் இயக்கப்பட்டது. அதில் 232 பயணிகளும், வானூர்தி ஊழியர்களும் பயணம் செய்தனர்.
உலகிலேயே முதன் முறையாக சமையல் எண்ணெய் மூலம் வானூர்தியை இயக்கி சாதனை படைத்ததை பெருமையாக கருதுவதாக தாம்சன் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டில் விமானங்கள் முழுவதையும் சமையல் எண்ணெய் மூலம் இயக்க இருப்பதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Tui-owned airline Thomson Airways has flown 232 passengers to Lanzarote yesterday aboard an aircraft that was powered by sustainable biofuel.





Sunday, October 9, 2011

உலகின் பெரிய உலங்குவானூர்திகள் - 2

3. Mil Mi-6 
 97,000 இறாத்தல் (44,000 kg)



இது  உலகின்  மூன்றாவது பெரிய உலங்குவானூர்தி  ஆகும்இந்த உலங்குவானூர்தியும் சோவியத் யூனியனால் தான் 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது வேகம், சுழற்சி போன்ற 11 உலகசாதனைகள்  இதனால் உருவாக்கப்பட்டது.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட Mil Mi-6  உலங்குவானூர்திகள் இன்றும் பாவனையில் உள்ளன.



RoleHeavy transport helicopter
ManufacturerMil Moscow Helicopter Plant
First flight5 September 1957[1]
Introduction1962
Retired2002 (Russia CAA)
StatusIn service with foreign users
Primary usersSoviet Air Force
Aeroflot
Produced1960 to 1981[2]
Number built925+
VariantsMil Mi-10






4. Mil Mi-10

83,775 இறாத்தல் (38,000 kg)

இது  உலகின்  நான்காவது  பெரிய உலங்குவானூர்தி  ஆகும்இந்த உலங்குவானூர்தியும் சோவியத் யூனியனால் தான் 1963 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது   பறக்கும் கொக்கு   என அழைக்கப்படுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட Mil Mi-10  உலங்குவானூர்திகள் இன்றும் பாவனையில் உள்ளன.


RoleSkycrane
National originRussia
ManufacturerMil Moscow Helicopter Plant
First flight15 June 1960
Introduction1963
Number built55+
Developed fromMil Mi-6




Saturday, October 8, 2011

உலகின் பெரிய உலங்குவானூர்திகள் - 1

1. Mil V-12  
231,485 இறாத்தல் (105,000 kg)



முக்கிய ஏவுகணை பாகங்களை சுமந்து  செல்ல  பெரிய உலங்குவானூர்தி தேவை என்று வந்த போது சோவியத் யூனியனால் 1960  ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 
இதுவே உலகின் மிகப்பெரிய உலங்குவானூர்தி ஆகும். சில காரணங்களினால் இரண்டு உலங்குவானூர்தியுடன் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.


RoleHeavy lift helicopter
ManufacturerMil Design Bureau
First flight10 July 1968
StatusPrototypes tested, cancelled
Primary userSoviet Union
Number built2
Developed fromMil Mi-6




2. Mil Mi-26 
123,455 இறாத்தல் (56,000 kg)


இது இன்றும் உலகின்  பாவனையில் உள்ள மிக பெரிய உலங்குவானூர்தி  ஆகும். 150 படையினரை  வரை சுமக்க கூடியது. இதுவும் சோவியத் யூனியனால் தான் 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

RoleHeavy lift cargo helicopter
National originSoviet Union/Russia
ManufacturerMil Moscow Helicopter Plant
First flight14 December 1977
Introduction1983
StatusActive
Primary usersRussian Air Force
Aeroflot
Ukrainian Air Force
Indian Air Force
Produced1980–present
Number built276





Thursday, October 6, 2011

மிக பெரிய ரகசிய இராணுவத்தளம்...

கற்பனைக்கு  எட்ட முடியாத உலகின் தொழில்நுட்பம் நிறைந்த மிக மிக ரகசியமான ஒருவரும் போக முடியாத இடம் தான் ஏரியா 51 . 1990 வரை அமெரிக்க அரசு இப்படியொரு இடம் இருப்பதையே மறைத்து வந்தது .  மிக பெரிய ரகசிய இராணுவத்தளம் . இது லெஸ் வேகஸ்( அமெரிக்காவின் லொஸ் என்ஜெல்சில் இருந்து 250 மயில்கள்  ) நகரத்திலிருந்து சுமார் 100 மயில்களுக்குள் அமைந்துள்ளது . இந்த இடத்தின் மேலே ஒரு விமானம் கூட பறக்க முடியாது . இன்று வரை யாரும் அங்கு சென்றது கிடையாது .  


அப்பிடி என்ன தான் இங்கிருக்கிறது? மிக மிக நவீன தொழில்நுட்பப விமானங்கள் நவீன ஆயுதங்கள் , மிக மிக நவீன நமக்கு தெரியாத பல கண்டுபிடிப்புகள் இருக்கலாம் . ஏன் அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்க வைக்கும் பறக்கும் தட்டு இங்கிருந்தும் வரலாம்!! . வெளிவராத எவளவோ தொழில்நுட்பங்கள் அரசால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது .இவளவு ரகசிய தன்மைக்கு  காரணம் அது தான் . ஒரு வேளை  ஒளிக்கு இணையான வேகத்தில் அல்லது மிக வேகத்தில்  செல்லும் பொருட்களை கண்டு பிடிக்கும் முயற்ச்சி அங்கு நடைபெறுவதாக சில தகவல்கள் உத்தியோகபூர்வம் இல்லாது  கிடைத்துள்ளது. 





முக்கியமாக பல ஏக்கர்கள் பரப்பு கொண்ட பாரிய தளம் . அனேகமாக நிலத்துக்கு அடியில்  மிகப்பெரிய பல தளங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது . இதுவரை யாரும்  செல்லமுடியாத இடத்து செய்மதி புகைப்படங்கள் தான் கிடைத்துள்ளது . இங்கு பணியாற்றுபவர்கள் சத்திய வாக்குறுதி(வெளியில் எவருக்கும் சொல்ல மாட்டோம் ) எடுத்து தான் கடமையாற்றுகின்றனர் .

முக்கியமாக ஏலியன்ஸ் வந்த பறக்கும் தட்டு கண்டெடுக்கப்பட்டு அதை பற்றிய பரிசோதனைகள் இடம் பெறுவதாக ஊகிக்கப்படுகிறது . சில வேளை இவர்களுடைய கண்டுபிடிப்பாகவும் இருக்கலாம் . ஆளில்லாத விமான கண்டுபிடிப்பில் மிகவும் மும்முரம்  காட்டி வருகிறது ஏரியா 51 .     இஸ்ற்றேல்த்(strealth )  ஜெட்டின் இன் ஆரம்ப கட்ட வடிமைப்பு 1977 இல் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 1990  
 இல் அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக அறிவுக்கும்  வரை  யாருக்கும் இப்படியொரு விமானம் தயாராவது தெரியாது .    
                                                     

                                                         Stealth


                                                                        

பின்னர்  தெரிய வந்த SR-71 Blackbird என்ற ஜெட் ஒரு மணித்தியாலத்தில் 2300 மயில்களை கடக்கும் . 90 ,000 அடி உயரம் வரை செல்லக்கூடியது .

                                                                SR-71 Blackbird


TR3A Black Manta எனும் ஆளில்லாத விமானம் தாக்குதல் நடத்த ( இது வரை வேவு மட்டுமே செய்யப்பட்டது ) ஏரியா 51 இல் தயாராகுவதாக செய்தி . அதன் வேகம் ஒரு  மணித்தியாலத்துக்கு 3100 மயில்கள். தயாரிக்க திட்டமிட்டிருக்கும் விமானம் ஹைபெர்சொனிக் (சுமார் 4600 மயில் வேகம் ). 


                                                               TR3A Black Manta



அதி தொழில்நுட்பப  விமானங்கள்  அனைத்தும் உருவாக்கப்பட்டு பரீட்ச்சிக்கப்படும் இந்த ஏரியா  51 இன்னொரு அதி உச்ச தொழில்நுட்ப்பத்திட்க்கு தயாராவது தெரியவருகிறது . அது தான் பறக்கும் தட்டு. சிலர் பறக்கும் தட்டு இரவு வேளையில் அங்கிருந்து புறப்படுவதை அவதானித்து உள்ளனர் .

ஏரியா  51 மேலாக  பறக்கும்  தட்டு  1 


ஏரியா  51 மேலாக  பறக்கும்  தட்டு  2 



Tuesday, October 4, 2011

X 47B........


வானோடி இல்லாமல் தானே இயங்கக் கூடிய ஆளில்லா போர் வானூர்தி ஒன்றைச் செலுத்தி அமெரிக்காவில் ஆய்வு செய்யப்பட்டது. கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உதவியுடன் இந்த வானூர்தி வெற்றிகரமாக பறந்தது. அமெரிக்க வானூர்திப்படையில் ஆளில்லாப் போர் வானூர்திகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. கூடுதல் வசதிகளுடன் புதுப்புது வானூர்திகளை வானூர்திப் படையில் அமெரிக்கா சேர்த்து வருகிறது. வானூர்தி தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் போயிங் (Boeing) மற்றும், நார்த்ராப்கிரம்மேன் (Northrop Grumman) வானூர்தி நிறுவனங்கள்  அமெரிக்க வான்படைக்கான வானூர்திகளை தயாரித்துக் கொடுத்து வருகின்றன.

அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆளில்லாப் போர் வானூர்தி தயாரித்துக் கொடுக்க Northrop Grumman நிறுவனத்துடன் அமெரிக்க வான்படை 2007இல் ஒப்பந்தம் செய்தது. 2009ஆம் ஆண்டு கடைசிக்குள் வானூர்தி உருவாக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது. இயந்திரம் செய்வது மற்றும் உயரே கிளம்பும்போது ஏற்பட்ட அதிக ஒலி ஆகியவற்றை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டதால் இறுதிப்பணி தாமதமானது. கடந்த ஆண்டில் வானூர்தி வடிவமைப்பு முடிந்தது.
சாதாரண ஓடுதளம் அல்லது வானூர்திதாங்கி கப்பலில் இருந்து புறப்பட்டு உயரே கிளம்புவது, சீராகப் பறப்பது, மற்ற வானூர்திகளின் இயக்கத்தை கடைப்பிடித்து பறப்பது, வானிலைக்கு ஏற்ப பயணத்தை மாற்றுவது, எரிபொருள் தீரும் நிலை ஏற்பட்டால் அருகே உரிய இடத்தில் தரையிறங்கி நிரப்புவது அல்லது நடுவானிலேயே நிரப்புவது, போர் சூழ்நிலையில் இலக்குகளை சரியாக கண்டுபிடித்து வெடிகுண்டுகள் வீசுவது என எல்லாவற்றுக்கும் தனித்தனியே கணினிமயவாசெயல்திட்ட பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் தானாக நடக்கும். வானூர்தியின்  மொத்த செயல்பாட்டையும் தரையில் இருந்தபடி விமானி கண்காணித்தால் போதும். X 47B என்று பெயரிடப்பட்ட இந்த வானூர்தியின்  செயல் ஆய்வு- அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ( Edwards Air Force Base ) எட்வர்ட்ஸ் வான்படை தளத்தில் கடந்த 4ஆம் தேதி நடந்தது. சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இன்னும் 3 ஆண்டுகளுக்கு ஆய்வு ஓட்டமே நடக்கும். அதன் பிறகு முறைப்படி வான்படையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
X-47B Specifications

Wingspan........................................62.1 ft 
Length.............................................38.2 ft 
Altitude............................................> 40,000 ft 
Range.............................................> 2,100 nm 
Top Speed ......................................High subsonic 
PowerPlant.....................................Pratt & Whitney F100-PW-220U

System Provisions
Autonomous Aerial Refueling .........Probe & Drogue (USN) Boom Receptacle (USAF)
Weapons Bays ...............................4,500 lb
Sensors ..........................................EO / IR / SAR / ISAR / GMTI / MMTI / ESM