பழமொழி.....

Tuesday, January 31, 2012

The Multi-Function Display..

The Multi-Function Display (MFD) என்பது Integrated Avionics System (IAS) என்ற அமைப்பின் ஒரு பிரிவாகும். இது வானூர்தியின் மின்னியல் கருவிகளின் (Avionic Instrument) செயல்ப் பாட்டை ஒருங்கிணைத்து மற்றும் அதனைச் சீராக அமைத்து, எளிமையான காட்சிகளாக விமானிக்கும், விமான அறைக்கும் வழங்குகிறது. இதனுடைய திரையகம் (Display Unit) இன் அமைப்பு (10.4 Inch diagonal) 6 X 8 அங்குலங்களாகும்.

Fuel FlowCylinder Head Temperature
Oil TemperatureOil Pressure
Amp-MeterVolt Meter
Fuel Quantity: Left/RightFuel Flow
RPMGPS Waypoint Information
  • Estimated Time En-route
  • En-route Safe Altitude
  • Cross Track Error
Manifold PressureTraffic
WeatherWind Direction


The Multi-Function Display அமைப்பானது Electronic Flight Instrument System (EFIS), Primary Flight Display (PFD), and the Integrated Instrument Display System (IIDS) ஆகியவற்றின் செயல்ப் பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியினையும், மற்றும் இதர செயல்ப்பாடுகளான Camera video, நடைமுறைகள், பட்டியல்கள், Systems Status, எரிபொருள், தண்ணீர் அளவு, வானொலி அலைவரிசைகள், GPWS, TCAS, பாதுகாப்பு வீடியோ, வானூர்தி திட்டமிடல், நகரும் வரைபடம் மற்றும் பல கருவிகளையும் ஒருங்கிணைத்து காட்சிப்படுத்துகிறது.



Friday, January 27, 2012

Head Up Display System.....

சிறிலங்காவின் விமானப்படையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனாவிடம் வாங்கப்பட்ட மூன்று போர் விமானங்களை 6 மில்லியன் டொலர் செலவில் இலங்கை அரசாங்கம் தரமுயர்த்தவுள்ளது.
K-8 ரகத்தைச் சேர்ந்த மூன்று போர் வானூர்திகளே முதற்கட்டமாக தரமுயர்த்தப்படவுள்ளன. இந்தப் போர் விமானங்களில் Head Up Display System (HUD) மற்றும் Multi-Function Display System (MFD) ஆகியன நவீன கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
(6 மில்லியன் டொலரில் போர் விமானங்களை தரமுயர்த்தும் இலங்கை............ ஊடக செய்தி)

Head-up display or Heads-up display (HUD)  


வானோடி (Pilot) தங்கள் வழக்கமான பார்வைக் கோணத்திலிருந்து விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்து விபரத்தையும் இது அளிக்கிறது. பார்வைக் கோணத்திற்கு அப்பால் உள்ள (அதாவது கீழ் பகுதியில் உள்ள) உபகரணங்களைப் (Instruments) பார்ப்பதற்க்கான தேவையை Heads-up display பூர்த்தி செய்கிறது. இது பல விபரங்களை ஒருங்கிணைத்து வானோடிக்கு வழங்குவதன் மூலம் வானொடியின் வேலையை சுலபமாக்கிறது.
இது ஆரம்பத்தில் இராணுவ வானூர்தி போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டன என்றாலும், இப்போது பயணிகள் வானூர்திகள் , வாகனங்கள், மற்றும் பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

HUD கருவி 3 அமைப்புகளை கொண்டுள்ளது.
  1. Projector unit 
  2. Combiner
  3. Video generation computer

    
1.  Speed (knots)
 2. Heading
 3. Bank angle
 4. Vertical speed (feet per minute)                     
 6. Throttle
 7. Rudder
 8. Aileron
 9. Elevator 
10.Flap and gear 11.indicators
12.Pitch angle (degrees)
13.Altitude (feet above sea level)






HUD யின் அனுகூலங்கள்
வானோடிக்கு வானூர்தியின் வெளிப்புறச் சூழல் பற்றிய துல்லியமான விபரங்களை வழங்குகிறது....
வானூர்தியின் செயற்ப்பாடு, அதன் சூழ்நிலை விழிப்புணர்வு, மற்றும் வெளிப்புற பொருட்களுடனான போன்ற விபரங்களை வழங்குகிறது.....
வானூர்தியின் சில்லு, தடுப்பி (tire and brake) மற்றும் Airframes போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து, அதன் செயல்திறனை அதிகரிக்கிறது........
அதிக நம்பகத்தன்மை மற்றும் இயக்க செயல்திறனைவழங்குகிறது.........
வானூர்தி விபத்துக்களை பெருமளவு குறைக்கிறது...........
ஓடு பாதையின் அகலம், நீளம்.. வானூர்தியை எப்படி தரையிறக்கம் பண்ணலாம் போன்ற விபரங்களை துல்லியமாக வழங்குகிறது.............





Wednesday, January 25, 2012

மிக் - 03.

மிக்-3  சோவியத் ஒன்றியத்தால் அறிமுகப்படுடப்பட்ட ஓர் போர் வானூர்தியாகும்.  மிக்-1 இல் காணப்பட்ட பல குறைபாடுகள் மற்றும் ஒழுங்கற்ற வடிவமைப்புகள் காரணமாக ஏராளமான வடிவமைப்பு மாற்றங்கள் பல செய்யவேண்டிய கட்டாய சூழல் உருவாகியது. இதன் போது மிக்-1 இல் பல மாற்றங்கள் செய்யப்பட்டு 1941ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இரண்டாவது தயாரிப்பாகும்.


தயாரிப்பின் பொது மிக்-3 இல் கொண்டுவரப்பட்ட மாற்றங்களில் சில........                                                             
  1. வானூர்தி இயந்திரம் 10cm முன் கொண்டுவரப்பட்டது.
  2. வெளி இறக்கை தகடுகள் (outer wing panels) 1 பாகை அதிகரிக்கப்பட்டு இருந்தது. 
  3. 250 லீட்டர் எரிபொருள் தாங்கி வானோடியின் இருக்கைக்கு கீழே பொருத்தப்பட்டது.
  4. அத்துடன் வானுடல் (fuselage) decking குறைக்கப்பட்டது.
  5. Radiator bath fairing முன்நோக்கி பெரிதாக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டது.
  6. Supercharger intakes திருத்தப்பட்டது.
  7. 4 wing points உடைய வெளிச்சுமை 220kg ஆக மாற்றப்பட்டது. 
  8. 12.7mm BK machine guns மற்றும் அதே போன்ற தகுதி வாய்ந்த 2 UBK guns ஆகியன இறக்கைக்கு கீழ் பொருத்தப்பட்டன.
  9. வானூர்தியின் மேல் எழும்பும் நிறை 3510kg ஆல் அதிகரிக்கப்பட்டது.



Saturday, January 21, 2012

மிக் - 02.

மிக்-1 சண்டை வானூர்தி இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தால் உயர்தரத்திலான தாக்குதல் தேவையை கருத்திற் கொண்டு 1939ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இதுவே முதலாவாதாகும்.

அலுமினியத்தின் தேவையை குறைக்க அல்லது தட்டுப்பாடு காரணமாக மிக்-1 இரும்பு குழாய் மற்றும் மரம் ஆகியவற்றால் கட்டப்பட்டது. பல குறைபாடுகள், கடினமான கையாளல், ஒழுங்கற்ற வடிவமைப்பு, வெப்பமான விமானியின் அறை, ஓடுபாதையில் செலுத்துவது சிரமம் ஆகியன இருந்தாலும் போர் காரணமாக நூறுக்கு மேற்ப்பட்ட வானூர்திகள் தயாரிக்கப்பட்டு சோவியத் வான் படைக்கு (Soviet Air Forces) வழங்கப்பட்டன. ஆனாலும் 1941 இல் சோவியத் மீதான ஜெர்மனியின் Barbarossa இராணுவ நடவடிக்கையால் போரின் முதல் நாளன்றே பெரும்பாலும் பல மிக் -1 வானூர்திகள் அழிக்கப்பட்டுவிட்டன.

மிக்-1 வானூர்தியின் வெட்டுமுக வரைவு

Barbarossa இராணுவ நடவடிக்கையின் போது ஜெர்மனியின் படைகளால் கைப்பற்றப்பட்ட மிக்-1



Friday, January 20, 2012

மிக் - 01.



மிகோயன் & குருவிச் (Mikoyan-and-Gurevich) என்பது ரஷ்யாவின் ராணுவதிற்குத் தேவையான சண்டை வானூர்திகளைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ஆர்டம் மிகோயன் மற்றும் மிக்கயில் குருவிச் ஆகியோரால் 1939 ஆம் ஆண்டு உருவக்கப்பட்டது. இவ்விருவரின் பெயர்களைக் கொண்டு Mikoyan-and-Gurevich Design Bureau என்றும் நிறுவனம் சுருக்கமாக மிக் (MIG) என்றும் பெயரிடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு ஆர்டம் மிகோயன் மறைவிற்குப் பின் இந்நிறுவனத்தின் பெயரிலிருந்து மிகோயன் நீக்கப்பட்டது. ஆயினும் புனைப்பெயரான மிக் அப்படியே விடப்பட்டது.

மிக் ரக வானூர்திகளை சீனா, வட கொரியா மற்றும் வட வியட்னாம் ஆகிய நாடுகள் ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளுக்கெதிராகப் பயன்படுத்தியுள்ளன. மேலும் சோவியத் ஒன்றியம் பல்வெறு நாடுகளுக்கு மிக் ரக வானூர்திகளை ஏற்றுமதி செய்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ரஷ்யா இந்நிறுவனத்தின் 100 % சதவிகிதப் பங்குகளை இல்லுயிசின், இர்குட், சுகோய், டியுபோலெவ் மற்றும் யகோவ்லெவ் ஆகிய நிறுவனங்களுடன் ஒன்றினைத்து யுனைடெட் ஏர்க்ராஃப்ட் கார்ப்ரேசன் (United Aircraft Corporation) எனும் நிறுவனத்தை உருவாக்கியது. குறிப்பாக மிகோயன் மற்றும் சுகோய் ஆகியவை ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன.


மிக் வானூர்திகளின் வகைகள்......
1 ) MiG-1, 1940
2 ) MiG-3, 1941
3 ) MiG-7, 1944
4 ) MiG-9, 1946
5 ) MiG-15 , 1948
6 ) MiG-17 , 1953
7 ) MiG-19, 1954 -MiG's first supersonic fighter (ஒலியை விட வேகமாகச் செல்லும் முதல் வானூர்தி)
8 ) MiG-21, 1956,
9 ) MiG-23 , 1967
10) MiG-25, 1965 -Interceptor fighter and recce/strike aircraft
                       (இடைமறித்து தாக்கும், உளவு பார்க்கும் மற்றும் குண்டுவீசும் வானூர்தி)
11) MiG-27, 1970 -A ground-attack aircraft (தரைத்தாக்குதல் வானூர்தி)

            (மிக் -27 ஈழ தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா விமானப்படை பயன்படுத்தியது.)
12) MiG-29, 1977, comparable to the US F-16 Fighting Falcon and F/A-18 Hornet
                                (அமெரிக்காவின் F-16 மற்றும் F/A-18 வானூர்திகளுக்குஇணையானது)
       MiG-29K
       MiG-29M
13) MiG-31, 1975 -Interceptor fighter aircraft (இடைமறித்து தாக்கும் வானூர்தி)
14) MiG-35, 2007,
15) MiG LMFS

Tuesday, January 17, 2012

கிபிர்.. (Kfir)



கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன.

கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர்.
மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன மின்னியல் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட முதல் தயாரிப்பு Kfir-C1 அறிவிக்கப்பட்டது.

பின்னர் கிபிர் போர் வானூர்தி பல நவீன ரகங்களில் தயாரிக்கப்பட்டது.
                              

                                                                        Kfir C.1  

F-21A Kfir : Kfir C.1 வகையை சேர்ந்த 25 வானூர்திகள் அமெரிக்க நிறுவனத்தால் நவீன மயப்படுத்தப்பட்டு, F-21A என பெயர் மாற்றப்பட்டு, குறைந்த இயக்க செலவு மற்றும் நல்ல மாற்றம் என நன்கு தன்னை நிரூபித்தது.


                                                                      Kfir C.2 


மேம்படுத்தப்பட்ட புதிய aerodynamic மாற்றங்கள், புதிய மின்னியல், ஒரு புதிய வகை ரேடார், இரட்டை-கணினி விமான கட்டுப்பாட்டு அமைப்பு (twin-computer flight control system) multi-mode navigation மற்றும் ஆயுத விநியோக அமைப்பு (weapons delivery system) மத்திய விமான தரவு கணினி மற்றும் HUD முதலியன அறிமுகப்படுத்தப்பட்டது.


                                                                         Kfir TC.2 


இரண்டு இருக்கை கொண்ட இவ் வானூர்தி முன் மூக்குப்பகுதி குறைக்கப்பட்டு விமானிகளின் பர்வைப்பகுதி மேம்படுத்தப்பட்டது.


                                                                              Kfir C.7


இதன் முன்னோக்கி செல்லும் உந்துவிசை 454 kg ஆல் அதிகரிக்கப்பட்டது. smart weapons களின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. மிகவும் நுணுக்கமான மின்னணு சாதனங்கள் மற்றும் HOTAS (Hands On Throttel And Stick) ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.


                                                                    Kfir TC.7


மேலே கிளம்புவதற்கான விசை ( take-off weight) 1,540 kg ஆக அதிகரிக்கப்பட்டது. நிறைக்கும் உந்துவிசைகுமான வீதம் (thrust-to-weight ratio) மேம்படுத்தப்பட்டது.


                                                                   Kfir C.10


இது வானிலிருந்து வானுக்கு (air-to-air) ஏவுகணைகள், புதிய வகை ரேடார்கள் மற்றும் நவீன போர் ஆயுதங்களையும் கொண்டுள்ளது.


                                                                     Kfir TC.10 


இது Kfir TC.7 வானூர்தியை கொண்டு கொலம்பியன் வானூர்தி படை உருவாக்கியுள்ளது.


                                                                     Kfir C.12 


இது Kfir C.7 வானூர்தியை கொண்டு கொலம்பியன் வானூர்தி படை உருவாக்கியுள்ளது.


                                                                     Kfir Tzniut  


இது Kfir C.2 வானூர்தியின் புதிய பதிப்பாகும்.


                                                                        Kfir C.60


இது Kfir C.10 வானூர்தியை கொண்டு பல்கேரியன் வானூர்தி படை உருவாக்கியுள்ளது.


இவை தான் ஈழ தமிழர்களின் வாழ்க்கையையும் சிதைத்து சின்னாபின்னமாக்கினவை.



Sunday, January 15, 2012

மிராச் (Mirage) -6.

Dassault Mirage 4000



செப்டம்பர் 1975 இல், அறிவிக்கப்பட்ட மிராஜ் 4000 மார்ச் 1979 இல் முதன் முதலாக அமுலுக்கு வந்தது. மிராஜ் 2000 தின் புதிய பதிப்பாக நவீன தொழில்நுட்பத்துடன் இது உருவாக்கப்பட்டது. இது இடைமறிப்பு தாக்குதல் மற்றும் குறைந்த உயரத்தில் ஊடுருவல் போன்றவற்றில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

மிராஜ் 4000 தாக்குதல் வானூர்தி computer-derived aerodynamics, with a fly-by-wire active control system தொழில்நுட்பத்தையும் rearward CG தொழில்நுட்பத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இது மிராஜ் 2000 வானூர்தியை விட 3 மடங்கு எரிபொருள் கொள்ளளவை கொண்டுள்ளது.