பழமொழி.....

Tuesday, March 13, 2012

M200G Volantor

M200G Volantor ஆனது பறப்பியல் பொறியியலாளர் Paul Moller என்பவரால் பறக்கும் வட்டு வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட ஓர் பறக்கும் கவிகை ஊர்தி (hovercraft) அல்லது காற்று மிதப்பு ஊர்தி (air-cousin vehicle) என்றும் சொல்லலாம். இது இப்போது M200 Neuera என்று பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளது. இது எட்டு கணினியால் கட்டுப்படுத்தப்படும் சுழலிகளால் இயக்கப்படுகிறது. மூன்று (3)அடி உயரத்தையும் பத்து (10) அடி விட்டத்தையும் கொண்ட இதில் இரண்டு பேர் பயணம் செய்யலாம். இதன் மத்தியில் தான் இருக்கைகள் மற்றும் control panel அமைத்துள்ளது. Wankel எனப்படும் gasoline, diesel அல்லது ethanol எரிபொருள் கொண்டு இயங்கும் எட்டு இயந்திரங்களின் வலுவுடன் இயக்கப்படுகிறது. இதன் வேகம், திசை மற்றும் அதன் உயரம் ஆகியவை மட்டும் தான் கணனியால் கட்டுப்படுத்தப்படுகிறது அத்துடன் இதன் கணணி அமைப்பு இதை பத்து அடிக்கு மேல் பறப்பதையும் தடை செய்கிறது (Federal Aviation Administration சட்டப்படி 10 அடிக்கு மேல் பறக்கும் அனைத்தும் வானூர்தியாக கருதப்படும்) இது 80 Km/h வேகத்தில் எப்படிப்பட்ட இடத்திலும் செல்லக்கூடியது.


M200G Volantor பொதுவான இயல்பு... 

  • இருக்கை : 2 பேர் 
  • விட்டம்: 10 ft (3.0 m)
  • உயரம் : 3 ft (0.91 m)
  • வலு:  8 × 550 Wankel rotary engine
  • உயர் வேகம் : 100 mph (160 km/h; 87 kn)
  • குறை வேகம்: 75 mph (65 kn; 121 km/h)
  • தூரம்: 185 mi (161 nmi; 298 km)
  • உயரம்: 10 ft (3 m)


Monday, March 12, 2012

AirScooter II

AirScooter II உலாங்கு வானூர்தி Woody Norris என்பவரால் 2000 ஆண்டலவில் உருவாக்கப்பட்டது. இது செலுத்த இலகுவான, நிறை குறைந்த, மற்றும் பாதுகாப்பான ஓரச்சு உலாங்கு வானூர்தியாகும். இதன் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் செலுத்தும் முறை உந்துருளியைச் செலுத்தும் (motorcycle style) முறைக்கு ஒப்பானது இதன் கைப்பிடிகளை (Handlebars) முறுக்குவதன் மூலம் இதன் ஆர்முடுகலை (acceleration) அதிகரிக்கலாம். அத்துடன் ஓரச்சு சுழலிகள் என்றபடியால் இதற்கு வால் சுழலி தேவை இல்லை. அத்துடன் இதன் கைப்பிடிகளை திருப்புவதன் வலது, இடது என்று திருப்புவதன் மூலம் இதன் திசையை மாற்றலாம். இதன் Throttle உயரத்தைக் (சுழலிகளின் கோணத்தை மாற்றுவதன் மூலம்) கட்டப்படுத்த பயன்படுகிறது. இதை கால் மூலம் (pedal) கட்டுப்படுத்தும் அவசியம் இல்லை.

இதன் சிறப்பம்சங்கள்.....
  1. இது உந்துருளியை செலுத்துவதைப் போல் செலுத்த இலகுவானது.
  2. மிகவும் நிறை குறைந்தது.
  3. நீரிலும் மற்றும் நிலத்திலும் செங்குத்தாய் தரையிறங்கவும், மேலேற்றவும் முடியும்.
  4. இதை செலுத்த வானோடி உரிமம் தேவை இல்லை.

இதன் அமைப்பு......
  1. இயந்திரம்: 1 x 65hp AeroTwin four-stroke 
  2. சுழலிகளின் சுழல் விட்டம்: 4.27m 
  3. நீளம்: 3.81m
  4. உயரம்: 3.35m 
  5. அகலம்: 2.13m 
  6. எடை: 150kg, 
  7. உயர் வேகம்: 100km/h

Saturday, March 10, 2012

UFO - HeliThruster


Ultimate Flying Options - (UFO) HeliThruster எனப்படும் உலாங்கு வானூர்தியானது புதிய தலைமுறையின் இரசனைக்கு ஏற்ப சிறந்த வடிவமைப்பு அம்சங்கள், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கொண்ட தயாரிப்பாகும். இது நியூசிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டது. பெரிய மலைகள், அடர்ந்த காடுகள், பாலைவனங்கள் போன்ற இடங்களிலும் இதன் மூலம் பயணம் செய்ய முடியும். நெருக்கமான நிலங்கள், பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் நீர், கால்வாய்கள் கண்காணிக்க எதுவாக குறைந்த உயரத்தில் மற்றும் மெதுவாக பறக்க முடியும். பெரும் நிலத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இதில் எரிபொருள் நிரப்பினால் 600 மைல்கள் (960 கிலோமீட்டர்) பறக்க முடியும் அத்துடன் அவசர காலத்திற்காக 1/2 மணி நேரம் பறக்க கூடியதாக மேலதிக எரிபொருள் தாக்கியும் கொண்டுள்ளது அத்துடன் இது நிமிடத்திற்கு 1500 அடி மேல் ஏறும் வீதத்தையும் கொண்டுள்ளது. 


UFO - HeliThruster ஆனது 164 குதிரை வலுவைக் கொண்ட EJ25 இயந்திரம் மூலம் இயக்கப்படுவதுடன் (72" - 76") அங்குல உந்துகணைகளையையும் (propeller) கொண்டுள்ளது. இது நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் பாவனையில் உள்ளது. இதன் அதிக வலுவான இயந்திரம், சிறிய வால்கள் மற்றும் குறுகிய வானுடல் (fuselages) இதற்கு சாதகமாகவும், பாதகமாகவும் அமைந்துள்ளது
.




Monday, March 5, 2012

GEN H-4


GEN H-4 ஆனது உலகின் மிகச்சிறிய ஓரச்சு உலாங்கு வானூர்தி (co-axial helicopter) ஆகும். எது ஆளில்லாமல் 155 இறாத்தல் (70kg) எடையுள்ளதாகவும், மற்றும் 55 mph (88 km / h) அதிகபட்ச வேகத்தை அடையும் திறனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. GEN H-4 ஆனது எதிரெதிர் திசையில் திருப்பும் சுழலிகள் (Rotors) இரண்டின் உதவியுடனும் நான்கு இரட்டை சிலிண்டர் இயந்திரங்களின் உதவியுடனும் இயக்கப்படுகிறது. இதன் ஒரு இயந்திரம் பழுதானாலும் மிகுதி மூன்று இயந்திரங்களினாலும் சிறப்பானதாக செயல்ப்பட முடியும். இந்த தனி மனித ஓரச்சு உலாங்கு வானூர்தியை ஜப்பானில் உள்ள Engineering System Co.எனும் நிறுவனத்தின் தலைவர் திரு Gennai Yanagisawa என்பவர் வடிவமைத்தார் . இது தற்போது $ 30,000 விலைக்கு விற்கப்படுகிறது.

GEN H-4 முதன் முதலில் 1998 இல் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது. இதன் இயக்கவியல் மிகவும் எளிதானது. வானோடியின் கழுத்துப்பகுதியில் உள்ள throttle lever மூலம் உலாங்கு வானூர்தியின் உயர்வு மற்றும் வேகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். அத்துடன் Moving the control bar மூலம் பயண திசை, வலது அல்லது இடது பக்கம் திரும்புதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
GEN H-4 ஆனது இரண்டு அங்குல அலுமினிய குழாய்கள் மூலம் உருவாக்கப்பட்டது. 10hp, 125cc வலுவுள்ள நான்கு GEN125 இயந்திரங்கள் இந்த உலாங்கு வானூர்தியை இயக்குகின்றன. இரண்டு சுழலிகளும் எதிர் எதிர் திசையில் பயணிப்பதன் மூலம் இதன் torque கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் வால்ப்பக்க சுழலி தேவை இல்லை. Yaw திருப்பம் ஒரு சிறிய மின் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் எரிபொருள் automobile gasoline மற்றும் two stroke oil ஆகியவற்றின் 30:1 கலவையாகும்.

இதில் பாதுகாப்புக்காக ballistic parachute (வான்குடை) வழங்கப்படுகிறது மற்றும் கூடுதலாக இரண்டு இயந்திரங்கள் மூலம் ஒரு பாதுகாப்பான அவசர தரையிறக்கம் செய்ய முடியும். எதிர்கால வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொண்டு இதில் automatic altitude controller (தனிச்சை உயரக் கட்டுப்பாட்டாளர்) அமைக்கவும் மற்றும் இருக்கையின் கீழ் air bags (காற்று பைகள்) பொருத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாகன நெரிசல் அதிகரித்த நிலையில் இந்த தனி மனித ஓரச்சு உலாங்கு வானூர்தியானது மனிதனுக்கு ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

                                      இந்த காணோளியைப் பாருங்கள்.......

Friday, March 2, 2012

மிக்-11


மிக்-35 
மிக்-35 என்பது ஐந்தாவது தலைமுறையை சேர்ந்த பல் செயற்பாட்டை கொண்ட ஒரு போர் வானூர்தி (Multi-role) ஆகும். இவ்வானூர்தி மிகோயன் குருவிச் நிறுவனத்தால் மிக்-29 வானூர்தியை முன்மாதிரியாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டது. இவ்வானூர்தி பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. மிக் 35 ஆனது இரண்டு வகையை கொண்டது ஒற்றை இருக்கையை கொண்டது மிக் 35 மற்றது இரட்டை இருக்கையை கொண்டது மிக் 35D ஆகும்.
மிக்-35 வானூர்தியின் சிறப்பம்சங்கள்....... 
  • இது வானூர்தி மின்னியல் அமைப்பில் Information-sighting systems integration என்னும் நவீன அமைப்பைக் கொண்டுள்ளது.
  • நவீன ஆயுதங்களையும்,ஏவுகணைகளையும் காவிச் செல்லக்கூடியது.
  • நான்காம், ஐந்தாம் தலைமுறை வானூர்திகளுக்கு சவாலான ஒரே வானூர்தி.
  • மிகச் சிறந்த இடைமறிப்பு தாக்குதல் வானூர்தி.
  • எந்தக் காலநிலையிலும், இரவு பகல் எந்நேரத்திலும், தரை வான் எந்த இலக்கையும் துல்லியமாக அணுகக்கூடியது. 
  • Optical-electronic மற்றும் radio-technical equipment ஆகியவற்றை பயன்படுத்தி உளவு பார்கக்கூடியது.
  • வானூர்தியில் ஒன்பது மேலதிக நிலையங்களில் ஆயுதங்களை சேமித்து வைக்கும் வசதியைக் கொண்டது.
  • மேலதிக எரிபொருள் சேமிப்பகத்தை கொண்டுள்ளது.
  • வெவ்வேறு காலநிலைகளில் போரிடுவதால் நவீன airframe & main systems anti-corrosion protection தொழில்நுட்பத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
  • இதன் Mean time between overhauls மற்றைய வானூதிகளை விட அதிகமானது.
  • மிக்-35 வானூதி பறக்கும் செலவு மிக்-29 தை விட இரண்டரை மடங்கு குறைவானது.
  • Range of operating frequencies அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வான் மற்றும் தரை இலக்குகளை ஒரே நேரத்தில் துல்லியமாக தாக்கி அழிக்கும்.
  • ஏவுகணைகள் மற்றும் லேசர் கதிவீச்சு தாக்குதல் போன்றவற்றை கண்டுபிடிக்கும் Optronic தொழில்நுட்பத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
  • இவ் வானூர்தியைப் பயன்படுத்தும் நிறுவனம் அல்லது நபர் புதிய கருவிகள் மற்றும் ஆயுதங்களை பொருது வசதியை இவ் வானூர்தி கொண்டுள்ளது.


    பொது இயல்புகள் 
      • Crew: one or two
      • Length: 17.3 m (56 ft 9 in) 
      • Wingspan: 12 m (39 ft 4 in) 
      • Height: 4.7 m (15 ft 5 in) 
      • Wing area: 38 m2 (124 ft2) 
      • Empty weight: 11,000 kg (24,250 lb) 
      • Loaded weight: 17,500 kg (38,600 lb) 
      • Max takeoff weight: 29,700 kg (65,500 lb) 
      • Powerplant: 2× Klimov RD-33MK afterburning turbofans 
      • Dry thrust: 5,400 kgf, 53.0 kN (11,900 lbf) each 
      • Thrust with afterburner: 9,000 kgf, 88.3 kN (19,800 lbf) each


        செயல்திறன்