பழமொழி.....

Monday, June 25, 2012

நுண் வேவு வானூர்திகள்..


உலகின் பல நாடுகள் தங்கள் படைத்துறைக்கும் உளவுத் துறைக்கும் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா தனது படைத் துறைக்கு ஆளில்லாப் போர் வானூர்திகளை அதிகமாக இணைத்து வருகிறது. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ யும் சொந்தமாக ஆளில்லா வானூர்தித் தளங்களை உலகின் பல பாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா வானூர்திகள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் வானூர்திகள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா வானூர்திகளை களமிறக்கியுள்ளது.





ஆளில்லாப் போர் வானூர்திகள் அளவில் பெரியதாக உருவாகி வருகையில் வேவு பார்க்கும் ஆளில்லா வானூர்திகள் அளவில் மிகச் சிறியதாகி வருகின்றன. ஆளில்லா வானூர்திகளை ஆங்கிலத்தில் Drones என அழைப்பர். இதில் சிறிய வகைகளை Miniature Drones அல்லது micro air vehicles (MAVs). இந்த micro air vehicles சிறு பூச்சிகளின் உடலமைப்பு, அவற்றின் உணரிகள், பறப்பதற்கு அவை பாவிக்கும் நுட்பங்கள் போன்றவற்றைப் கவனம் செய்து உருவாக்கப்பட்டுள்ளன. சில வேவு வானூர்திகள் குருவிகள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூச்சிகளின் உடலில் உள்ள தொழில் நுட்பங்களை reverse-engineering முறை மூலம் கண்டறிந்து அந்த நுட்பங்களை சிறிய வேவு வானூர்திகளில் பாவித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள். சிறு பூச்சிகளின் கண்கள், வௌவாலின் காதுகள், தேனிக்களின் உணரி ரோமங்கள் போன்றவற்றில் உள்ள தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை வேவு பார்க்கும் micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். பிரெஞ்சு விஞ்ஞானிகள் பறவைகளின் சிறகடிக்கும் தொழில் நுட்பத்தை தமது micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். வேவு வானூர்திளில் வடிவமைப்பில் பூச்சிகளினதும் குருவிகளினதும் செயற்படு நுட்பங்களைப் புகுத்துவதை Nano-biomimicry MAV design என்கின்றனர். கடந்த 350 மில்லிய ஆண்டுகளாக பூச்சியினங்கள் தங்கள் பறக்கும் திறனை எப்படி கூர்ப்படையச் செய்தன என்பதை ஆராய்ந்த பிரித்தானிய விலங்கியலாளர் ரிச்சர்ட் பொம்பிரி (Zoologist Richard Bomphrey) பூச்சியினங்கள் சிறுவிமானங்களை வடிவமைப்பது எப்படி என எமக்குக் கற்றுத் தந்துள்ளன என்கிறார்.



இது கொசு அல்ல கொலைகாரி

'With insects you get a combination of both these assets in miniature. And when you consider we have been flying for just over a hundred years as opposed to 350 million years, I would say it is they who have got it right, and not us!'

















Saturday, June 23, 2012

"பெலூகா" அகல உடல் வானூர்தி..



ஏர்பஸ் A300-600ST (Super Transporter) அல்லது பெலூகா அகல உடல் வானூர்தி வகையைச்சார்ந்தது. அது ஏர்பஸ் நிறுவனத்தின் ஒரு A300-600 வடிவமைப்பு மாற்றப்பட்ட அகல உடல் வானூர்தி ஆகும். வானூர்தி பொருட்களை எடுத்து செல்வதற்கும் பல்வேறு வடிவங்களை கொண்ட பொருடைகளை கொண்டு செல்வதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது . பெலுகா திமிங்கலத்தை போன்ற உருவத்தை கொண்டதால் பெலூகா என்று வழங்கப்பட்டு அவவாறே பெயரும் இடப்பட்டது.

Airbus A-300 வானூர்தியின் அடிப்படையில் தான் பெலூகா வானூர்தி உருவாக்கப்பட்டது. இது  47 தொன் வரை சுமக்கக்கூடியது. 






Tuesday, June 19, 2012

2025 இல் வானூர்தி..

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு, இன்னும் 15 ஆண்டுகளில் வானூர்திகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் மூன்று நிறுவனங்களை வடிவமைப்பு செய்து தருமாறு கேட்டுக் கொண்டது. லோக்கீட் மார்ட்டின் (Lockheed Martin) ,நோர்த்ரோப் குர்ம்மான் (Northrop Grumman), போயிங் (The Boeing) ஆகிய அந்த மூன்று வானூர்தி தயாரிப்பு நிறுவனங்களும் வானூர்தி மாதிரி வடிவமைப்புகளைச் செய்துள்ளன.

ஒவ்வொரு வடிவமைப்பும் மிகவும் வித்தியாசமாகத் தான் தெரிகிறது அனாலும் தூய்மையான புகை வெளியேற்றம் (cleaner exhaust), குறைந்த சத்தம் (less noise) குறைந்தளவு எரிபொருள் பவனை (lower fuel consumption) ஆகியவற்றை கருத்தில் கொண்டே நாசா தனது இறுதி முடிவுகளை எடுக்கும் அத்துடன் நவீன மயப்படுத்தப்பட்டுள்ள வான் போக்குவரவு முகாமை அமைப்புடன் (Air Traffic Management System) பாதுகாப்புடன் செயல்ப்பட வேண்டும்.

இந்த வடிவமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒலியின் வேகத்தின் 85 வீதத்தை பூர்த்தி செய்யும் படியும், 50,000 முதல் 100,000 இறாத்தல்கள் வரை பயணிகள் அல்லது பொருட்களை சுமக்க கூடியதாயும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

..படங்களின் மேல் அழுத்துங்கள் படம் பெரிதாய் தெரியும்..
..லோக்கீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பு..

..நோர்த்ரோப் குர்ம்மான் (Northrop Grumman) நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பு..

..போயிங் (The Boeing) நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பு..

Friday, June 15, 2012

Laser Copter வானூர்தி..

உலங்கு வானூர்திகள் விசேடமான டீசல் எரிபொருளிலேயே இயங்கி வருகின்றன. ஆனாலும் UAV எனப்படும் ஆள் அற்ற வானூர்திகள் எரிபொருள் அல்லது மின்கலம் (fuel or batteries) மூலமே இயங்குகின்றன. அத்துடன் Solar power எனப்படும் சூரிய சக்தி மூலம் இயங்கும் UAV வானூர்திகளும் உள்ளன. எனினும் தற்போது Laser-power எனப்படும் லேசரினால் அதாவது ஒளிக்கதிர்கள் மூலம் இயங்கக்கூடிய சிறிய உலங்கு வானூர்தியைக் கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

22 கிராம் நிறையுள்ள உலங்கு வானூர்தியைக் கொண்டு குறைந்தளவு watts வலுவைக் கொண்ட லேசர் மூலம் சில மணித்தியாலங்கள் இயக்கவைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் பல்லாயிரம் மைல் தூரத்தில் உள்ள வானூர்திகளையும் இயங்கவைக்க முடியும் என தெரியவருகிறது.

Saturday, June 9, 2012

MI-24 உலங்கு வானூர்தி..



1972 ஆம் ஆண்டு தொடக்கம் சோவியத் விமானப்படையினால் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் உலங்குவானூர்தியானது தாக்குதற்திறன் மிக்கதாக இருப்பது மட்டுமல்லாது சிறு எண்ணிக்கையான துருப்புக்களையும் நகர்த்தவல்லது.



ஈழத்தில் இந்தியக் காடையர் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே, அங்கு இவ் உலங்கு வானூர்தி தமிழ் மக்களுக்கு அறிமுகமானது. “முதலைக் கெலி" , "மூஞ்சுறு “ என்று இது தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய Mi- 24 உலங்குவானூர்தியில் தேசியத் தலைவர் அவர்களை புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்ட நிகழ்வானது இந்தியாவிற்கும் ஈழத்திற்க்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணம் ஆக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.


1960 களில். தாக்குதற் திறனுடன் கூடியதும் துருப்புக்களைக் காவிச்செல்லக் கூடியதுமானஉலங்குவானூர்திகளின் தேவை சோவியத்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான Mikhail Leont'yevich Mil என்பவரால் உணரப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் படைகளின் பயன்பாட்டிலிருந்த UH-1A Huey என்ற உலங்குவானூர்தியின் வடிவத்தை ஒத்த வடிவமுடைய உலங்குவானூர்தியே Mil அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அவரது வடிவம் எட்டுத் துருப்புக்களைக் காவிச்செல்லக் கூடியதாகவும் இருபக்கங்களிலுமமைந்த இறக்கைகளில் மொத்தம் ஆறு ஏவுகணைகளைத் தாங்கிச்செல்லக் கூடியதாகவும் அமைந்திருந்தது. இது "பறக்கும் தாங்கி" என அழைக்கப்படுகிறது.




இரண்டு தாரை இயந்திரங்களால் இயக்கப்படும் இதன் பிரதான சுழலியானது (rotor) நான்கு சுழலித் தகடுகளையும் (rotor blade) வாற்சுழலியானது (tail rotor) மூன்று சுழலித் தகடுகளையும் கொண்டுள்ளன. துப்பாக்கி இயக்குபவரும் விமானியும் ஒருவர்பின் ஒருவராக தனித்தனி அறைகளில் (cockpit) அமர்ந்திருப்பர். இருபக்கங்களிலுமுள்ள இறக்கைகள் பலவகையான தாக்குதல் ஆயுதங்களைக் காவவல்லதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடவடிக்கையின் தன்மைக்கேற்ப இவ் உலங்குவானூர்தி ஆயுதங்களைக் காவிச்செல்லவல்லது.



இவ் உலங்குவானூர்தியின் உடற்பகுதி மற்றும் சுழலித் தகடுகள் 50 கலிபர் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கக் கூடியவாறு காப்பிடப்பட்டுள்ள அதேவேளை அதன் விமானியறைகள் 37 மில்லிமீற்றர் கனரக துப்பாக்கித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கவல்லது. வேகமான பறப்பின்போது இதன் சிறப்பான வடிவமைப்பையுடைய இறக்கை உலங்குவானூர்திக்குத் தேவையான மொத்தத் தூக்குசக்தியின் (lift) 25 வீதமான பங்கை வழங்குகின்றது.



1977 – 1978 காலப்பகுதியில் எதியோப்பியப் படைகள் சோமாலியர்களுக்கு எதிராக நடாத்தியயுத்தத்தில் இவ் உலங்குவானூர்திகள் முதன்முதலாக எதியோப்பியப் படைகளுக்கு ஆதரவாகக் களமிறக்கப்பட்டன. அதன் பின்னர் கம்போடிய-வியட்னாமிய யுத்தம், லிபிய யுத்தம் மற்றும் சோவியத்துடனான ஆப்கானிஸ்தான் யுத்தம் என்பவற்றில் இவ் உலங்குவானூர்திகளின் பங்கு கணிசமாகதாக இருந்தது. சிறிலங்கா போரைப் பொறுத்தளவில், ஈழத்தில் இந்தியக் காடையர் படை இவ்வகை உலங்குவானூர்திகளை 1987 – 1990 காலப்பகுதியில் பயன்படுத்தியிருந்தனர். 1995 ஆம் ஆண்டு இவ்வகை உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப் படையிலும் இணைத்துக்கொள்ளப்பட்டு தமிழருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.


1979 ஏப்ரல் மாதத்தில் ஆப்கான் படைகளுக்கு Mi-24 வகை உலங்குவானூர்திகள் சோவியத்தால் வழங்கப்பட்டது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் படைகளால் பயன்படுத்தப்படும் இவ்வகை உலங்குவானூர்திகள் சமர்க்களங்களில் அவற்றின் திறனை நிருபித்துள்
ளன.


Friday, June 8, 2012

MI-17 உலங்கு வானூர்தி..




Mi -17 ஆனது சோவியத் ஒன்றியத்தின் mil வானூர்தி கட்டுமான நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு துருப்புக்காவி உலங்கு வானூர்தியாகும். இது Mi-8M, Hip போன்ற பெயர்களினால் அழைக்கப்படுகிறது.

 

உலங்கு வானூர்தி Mi-8 இன் வான்சட்டத்திற்கு, பெரிய TV3-117MT இயந்திரத்தையும், Mi -14 க்கான சுழலிகளையும் தொலைத் தொடர்புகளையும் பொருத்தி, மேலதிக எடையை தாங்குவதற்காக மறுவமைக்கப்பட்ட உடல்பகுதி என்பவற்றுடன் Mi-17 தயாரிக்கப்பட்டது.


இது 6,000 மீ உயரத்தில் எழுந்து பறக்கவும், level flight speed 270 km / h வேகத்தை அடைவதற்கும், மற்றும் மேல் ஏறும் வீதம் 20 m/s ஆகவும் செயல்பட புதிய TV3-117MT இயந்திரங்கள் உதவுகின்றன. இது சிறந்த, மற்றும் பாரிய துருப்புக்காவி உலங்கு வானூர்தி ஆகும்.


போர்க்களத்தில் துருப்புக்களை விநியோகம் செய்தல் மற்றும் போர் உபகரணங்கள், ஆயுதங்கள், குண்டுகள் வெடி மருந்துகள் போன்றவற்றை விநியோகம் செய்தல், வானிலிருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்குதல், மருத்துவ உதவிகள், காயம்பட்டவர்களை வெளியேற்றுதல், வானிலிருந்து கட்டளைகள் பிறப்பித்தல் மற்றும் வழிகாட்டுதல், முக்கிய நபர்களை கொண்டுசெல்லல், பேரழிவு நிவாரண விநியோகம், மற்றும் மீட்பு போன்ற நடவடிக்கைகளில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.


ஈழத்தில் தமிழருக்கு எதிரான ஸ்ரீலங்கா தரப்பின் போரின்போதும் பாரிய அழிவுகளையும்,சொல்லமுடியாத துயரங்களையும் தமிழர் தரப்பிற்கு ஏற்படுத்தி இருந்தது. போராளிகளின் எதிர் தாக்குதலால் சில Mi-17 உலங்கு வானூர்திகள் அழிக்கப்பட்டன.


இது இறுதியாக லிபியாவின் கடாபிக்கு எதிரான போரின் போது கடாபி தரப்பாலும், நேட்டோ படைகளாலும் பயன்படுத்தப்பட்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தன. அறுபதுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் 12,000 திற்கு மேற்ப்பட்ட Mi-17 உலங்கு வானூர்திகள் பாவனையில் உள்ளன.