பழமொழி.....

Thursday, February 27, 2014

S-512 Spike Aerospace..

மிகவிரைவாக செல்லும் புதிய வானூர்திகளை தயாரிக்கும் நிறுவனமான ஸ்பைக் ஏரோஸ்பேஸ்(Spike Aerospace) தனது வானூர்தியில் கண்ணாடிகளுக்கு பதிலாக முழுஅளவிலான திரைகள் அமையும் என தெரிவித்துள்ளது. கண்ணாடிகள் இல்லாமல் செய்வதன் மூலம் வானூர்தியின் திறன் அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



2018ம் ஆண்டளவில் S-512 எனபெயரிடப்பட்டுள்ள இந்த வானூர்தி அறிமுகப்படுத்தபடும் என எதிர்பார்க்கபடுகிறது. கண்ணாடிகள் மேலதிகமான அமைப்புகளையும் நிறையையும் அதிகரிக்கின்றன, அதை நுன் நிழற்படக்கருவி (micro camera) மற்றும் திரைகள் மூலமாக பிரதியீடு செய்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. பொஸ்டனில் இருந்து இயக்கும் இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் இதைபற்றி அறிமுகப்படுத்தியது. இதுவே முதல் வியாபார மீயொலி ஜெட் வானூர்தியாக (supersonic Business Jet) அமையும்.





கிட்டத்தட்ட 80 மில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள இந்த வானூர்தி 18பேரை ஏற்றிச்செல்லக்கூடியது.1.6 மக் (Mach) (மணித்தியாலத்திற்கு 1800 கிலோ மீற்றர்கள் அல்லது 1100 மைல்கள்) வேகத்தில் செல்லக்கூடிய இந்த வானூர்தி ஆகக்கூடிய வேகமாக 1.8 வரை செல்லும். தற்போது பாவனையில் உள்ள வானூர்தியான போயிங் 777-300 0.8மக் வரையே செல்லும். நியுயோர்கில் இருந்து லண்டன் செல்ல 3-4 மணித்தியாலங்களே எடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தத் தூரத்தைக் கடக்க 6-7 மணித்தியாலங்கள் எடுக்கிறது. இந்த வானூர்தி 131 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்டது. 2 இயந்திரங்களைக் கொண்ட இதன் பறப்பு எல்லை 6500 கிலோ மீற்றர்கள் (4000 மைல்கள்) ஆகும்.