பழமொழி.....

Thursday, March 27, 2014

தொலைந்த MH 370..




மலேசியா எயர்லைன்ஸ் விமானம் MH 370 என்பது ( MH 370 மற்றும் Codeshare உடன்படிக்கை மூலம் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் CZ 748) 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரோடு காணாமல் போன போயிங் 777 வகை விமானம் ஆகும்.

மலேசியா எயர்லைன்க்கு சொந்தமான போயிங் 777 வகை விமானங்களில் அதிக சேதம் விளைவித்ததும், உலகின் போயிங் 777 வகை விமானத்தினால் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதும் இந்த நிகழ்வாகத் தான் இருக்கும். போயிங் 777 வகை விமானம் இத்தகைய மீட்கமுடியா விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.



மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 8 மார்ச் 2014 இவ் விமானம் புறப்பட்டது.
இது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.

கோலாலம்பூரில் ஆரம்பித்த இதன் பயணம் அந்தமான் கடல், தாய்லாந்து வளைகுடா, மலாக்கா நீரிணை, தென் சீனக் கடல் மூலம் பெய்ஜிங்கை சென்றடைந்திருக்க வேண்டும்.



அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்சு, மலேசியா சிங்கப்பூர் மற்றும் வியட்னாமிய கடற்படையினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடும் பணியில் இந்தியாவும் இணைந்து இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 விமானங்கள் அந்தமான் கடலில் தேடுதல் பணியைத் தொடங்கின. இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்களும் சுமார் 35,000 சதுர கி. மீட்டர் பரப்பளவுக்கு விமானத்தைத் தேடி வந்தன. தேடும் பணிகள், ஏழாவது நாளில் இந்தியப் பெருங்கடலுக்கு விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் தேடுதல் பணிகளை மத்திய மற்றும் கிழக்கு வங்காள விரிகுடாவில் தீவிரப்படுத்தியது. சுமத்ராவிலிருந்து தெற்கு இந்தியப் பெருங்கடல்வரை தேடும் பணிகளில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகள் முன்னெடுத்து வந்தன. லாவோசிலிருந்து காப்சியன் கடல்வரை தேடும் பணிகளில் சீனாவும் கசகஸ்தானும் முன்னெடுத்து வந்தன.

இவ்விமானத்தின் பொறுப்பாளர் (captain) சாகிரே அக்மத் ஷா ஆவார். 53 வயதான இவர் மலேசியாவை சேர்த்தவர் 1981இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்த இவர் 18,365 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர். முதல் அதிகாரியான (first officer) இபரிக் அப்துல் அகமதுவும் மலேசியாவை சேர்த்தவர். 12 பணிக்குழுவினரும் மலேசியராவர்.



                               9M-MRO விமானத்தின் கட்டுப்பாட்டு அறை



விமானத்தின் விவரங்கள்..
  1. வகை                      : போயிங் 777 – 2H6ER
  2. வரிசை எண்           : 28420
  3. பதிவு எண்              : 9M-MRO
  4. தயாரிப்பு விவரம்  : போயிங் 777 வகையில் 404ஆவது விமானம்
  5. முதல்முறையாக பறந்த நாள்  : 14 மே 2002
  6.  விற்கப்பட்ட நாள்                      : 31 மே 2002
  7.  இயந்திரங்கள்                            : இரண்டு Rolls-Royce Trent 892
  8. விமானத்தின் பயணிகள் கொள்ளளவு: 282 (35 வர்த்தக வகுப்பு, 247 சாதாரண வகுப்பு)

இந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதற்க்கான காரணத்தை ஆராய்ந்த அந்த நாட்டின் உளவுத்துறை partial ping தகவலை காரணம் காட்டியுள்ளது. இந்த Pinging என்பது விமானத்திற்க்கும் செயற்க்கைக்கோளுக்குமான தொடர்பு ஆகும். மணிகொரு தடவை விமானம், ‘நான் இருக்கிறேன்’ என்று விமானம் செய்மதி மூலம் காட்டிக் கொள்ளும்........