பழமொழி.....

Friday, February 15, 2013

Qaher F-313



ஈரான் ஒரு சர்ச்சைக்குரிய நாடாக திகழ்கிறது. அங்கு சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை தயாரிப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது தனது சொந்த நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் அதி நவீன போர் வானூர்தியை ஈரான் தயாரித்துள்ளது. அது தூரப்புலமானியில் அகப்படாமல் பறக்கும் Stealth தொழிநுட்பத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதற்கு Qaher F-313 (வெற்றியாளர்) என பெயரிட்டுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.

மேலும், அந்த வானூர்தியைப் பார்வையிட்ட அவர் அதன் தொழில் நுட்பத்தை வானோடியிடம் கேட்டறிந்தார். உலக நாடுகளில் இருக்கும் அதிநவீன போர் வானூர்திகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என அவர் வர்ணித்தார். அத்துடன் இது நவீனரக உலோகங்களினால் உருவாக்கப்பட்டது எனவும் இந்த வானூர்தியைப் பல ஆயிரம் மணி நேரம் வானோடிகள் பரிசோதித்ததாகவும் அதன் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார்.
பல போர் வானூர்தி வல்லுனர்கள் ஐக்கிய அமெரிக்காவின் F-22, F-35 ஆகிய போர் வானூர்திளின் தன்மைகளை ஈரானின் Qaher-313 வானூர்தி கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.


Qaher F-313 வானூர்தியின் சிறப்பம்சங்கள்.......

  1. ஒற்றை இருக்கை மட்டும் கொண்ட சிறிய வானூர்தி.
  2. புதியரக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக்கூடியது.
  3. தாக்குதலும் உளவும் செய்யக்கூடியது.
  4. வானூர்தியில் இருந்து வானூர்திக்கும், வானூர்தியிலிருந்து தரைக்கும் தாக்குதல் நடத்தக் கூடியது.
  5. தற்கால போர் வானூர்திகளுடன் ஒப்பிடுகையில் இதன் cockpit சிறிதாக இருப்பதுடன் அடிப்படையானதாகவும் இருக்கிறது.
  6. அனால் இதன் மூக்குப் பகுதி மிகச் சிறியதாக இருக்கிறது.
தூரப்புலமானிகளால் அடையாளம் காண முடியாத தொழில் நுட்பம் கொண்ட போர் வானூர்திகள் Stealth Fighter எனப்படும். உலகிலேயே சிறந்த ரக Stealth Fighter தன்னுடைய Qaher F313போர் வானூர்தி என ஈரான் தெரிவித்திருந்தது.



இது ஈரானின் பொய்........


ஈரான் வெளியிட்ட படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதன் படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.

வானூர்தி மிகவும் சிறியதாக உள்ளமை, பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்டதைப்
போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளமை, வானோடி ருவர் அமர்ந்து செலுத்துவதற்கான இடவசதி மிகவும் குறைவாக இருக்கின்றமை போன்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுவொரு மாதிரி 
வானூர்தி ன நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

காணொளி செய்தி 


Wednesday, February 6, 2013

Black Hornet



இங்கிலாந்து தரைப்படை ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்களுக்கு எதிரான போரில், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் உளவு வானூர்தியை தயாரித்து ஈடுபடுத்துகிறது. 4அங்குல நீளம் (10 cm) மற்றும் 1 அங்குல (2.5 cm)அகலம் கொண்ட இந்த உளவு வானூர்தியின் எடை வெறும் 15 கிராம் தான் அத்துடன் மணிக்கு 35k/m வேகத்தில் பயணிக்கும். 


வானூர்தியின் மூக்கு பகுதியில் உள்ள சக்திவாய்ந்த 3 மிகச் சிறிய ஒளிப்பதிவு கருவிகள் (tiny Cameras), எதிரியின் இலக்கை வெகு துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். ( படை வீரனின் கையில் இருக்கும் Hand Phone, Ipad, Tablet போன்றன தான் இதன் கட்டுப்பாட்டு அறை) G.P.S உதவியுடன் இயங்கும் இந்த உளவு வானூர்திக்கு "Black Hornet" (பிளாக் ஹார்னட்) என பெயரிடப்பட்டுள்ளது. 


து எதிரிகளின் இருப்பு, ஆட்பலம், ஆயுதபலம், எதிகளின் பலவீனங்கள் போன்ற விபரங்களை உளவு பார்த்து தாக்குதலில் ஈடுபடும் படையினர்களுக்கு வழங்கி படையினரின் தாக்குதலை இலகுபடுத்தி அவர்களின் இழப்புகளையும் குறைகிறது.


இந்த வானூர்தி எதிரி இலக்கின் மீது பறக்கும் போது யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஓசையை கூட கேட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



Saturday, February 2, 2013

Avian Infrasound Non-lethal Denial System


வானூர்தி நிலையங்களில் வானூர்திகளை சுற்றிவளைத்து தொல்லை கொடுக்கும் பறவைகளை விரட்ட புது கருவியை அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான Technology International நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

வானூர்தியை தரையிறக்கும்போது மற்றும் மேலே கிளப்பும்போது ஏன் நடுவானில் பறக்கும்போதும் கூட திடீர் திடீரென பறவைகள் குறுக்கே வரும். தற்செயலாக கண்ணாடியில் மோதினாலோ அல்லது இயந்திரத்தில் புகுந்தாலோ பயங்கர விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. வானூர்தி நிலைய பகுதியில் பறவைகள் நடமாட்டத்தை தடுக்க தானியங்கி விசிறி, பறவைகளை சிக்கவைக்கும் வலை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. 


இந் நிலையில், மெல்லிய ஒலி எழுப்பி பறவைகளை விரட்டும் கருவியை அமெரிக்காவின் லூசியானா (Louisiana) மாநிலம் லாபிளேஸ் (Laplace) நகரை சேர்ந்த Technology International என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. Avian Infrasound Non-lethal Denial System என்பது இதன் பெயர் அதாவது "பறவைகளை விரட்டும் ஆபத்தற்ற கேட்கமுடியாத ஒலியமைப்பு" என்பது இதன் பொருள். வானூர்திகள் நெருங்கி வருவதை கண்டறியும் உணரி (Detect) இதில் உள்ளது. வானூர்திகள் நெருங்கி வந்ததும் இக்கருவியில் இருந்து குறைந்த அளவு ஒலி (மனிதரால் கேட்க முடியாது) தொடர்ந்து எழுப்பப்படும். அவ்வகை ஒலி பறவைகளுக்கு அது தெளிவாக கேட்கும் என்பதால், பயந்துபோய் ஓடிவிடும்.

இக்கரு வியின் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் முறைப்படி அறிமுகப்படுத்தப்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

                                        பறக்கும் பறவைகளால் பாதிக்கபட்ட                                                                                                  
                                                     பறந்த வானூர்திகள் சில