பழமொழி.....

Wednesday, May 4, 2011

விண்வெளி..



விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளதுசுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு "உண்மைவரலாறுகள் (True Histories)" என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார்.அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது.கதிரவனுக்கும்நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது.
அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில்விண்வெளி பற்றிக் குறிப்பிடத் தகுந்த நூல் எதுவும் வெளி வரவில்லைஇருப்பினும்நிலவைப் பற்றியும்,விண்மீன்களைப் பற்றியும்அவற்றின் புதிர்களைப் பற்றியும் விளங்கிக் கொள்ள மக்கள் முயன்றே வந்துள்ளனர்.
நிக்கலஸ் கோபர்நிகஸ் என்ற போலந்து நாட்டு வானியல் வல்லுநர் தன்னுடைய ஆய்வுகளின் முடிவில்இந்த அண்டத்தின் மையத்தில் சூரியன்இருப்பதாகவும்இப்புவி ஒரு கோள் என்றும் கூறினார்இத்தாலி நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ 1610-ல் ஒரு தொலைநோக்கியைக்கண்டுபிடித்தார்இதன் வாயிலாக விண்வெளியையும்நிலவின் மேற்பரப்பையும் நெருக்கமாகப் பார்க்க முடிந்தது.
நிலவைப் பற்றியும்பிற கோள்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளைக் கலிலியோ கண்டறிந்து வெளியிட்டார்அவரது கண்டுபிடிப்புகள்மக்களால் வரவேற்கப்படவில்லைஎனினும்ஒரு சில அறிஞர்கள் மட்டும் அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர்அப்போது முதலே விண்வெளிப்பயணம் பற்றிய முயற்சிகளில் அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் எனலாம்.
வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார்அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும்எனக் குறிப்பிட்டார்முதலாவது வழியில்தெய்வீக சக்தி ஒன்று மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லக் கூடும்இரண்டாவதுஆற்றல் மிக்கமிகப் பெரிய பறவைகள் துணையுடன் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும்அடுத்ததாக மிகப் பெரிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டுமனிதனே நிலவிற்குப் பறந்து செல்லலாம்நான்காவதாகபறக்கும் எந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துஅதில் அமர்ந்து நிலவுக்குச் செல்லலாம்.இவையே அவர் கூறிய 4 வழிகள்.
பின்னர் ஐசக் நியூட்டன் விண்வெளி பற்றிப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார்அவரது இயக்க விதிகள் (laws of motion)புதியதோர் அறிவியல் சிந்தனையை உலகிற்கு அளித்ததுபுவியை விட்டு உயரே செல்லச் செல்லபுவியின் ஈர்ப்பு விசை குறைந்து கொண்டேபோகும் என்பதை அவர் நிரூபித்தார்மேலும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும்விண்மீன்கள் முதற்கொண்டு சின்னஞ் சிறு துகள்கள்வரை அனைத்தும் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உடையவை என்றும்அக்கவர்ச்சி விசையே ஈர்ப்பு விசை எனவும் நிரூபித்தார்.
விண்வெளிப் பயணத்தில் நியூட்டனின் ஈர்ப்புவிசை விதிக்கு முக்கிய பங்கு உண்டுஇவ்விதியின் அடிப்படையிலேயேபுவியின் கவர்ச்சிவிசையிலிருந்து விண்வெளி ஓடத்தின் தப்பித்தல் திசை வேகம் தீர்மானிக்கப்படுகிறதுமேலும்நியூட்டன் கண்டுபிடித்த மூன்று இயக்க விதிகளும்விண்வெளிப் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.
சுமார் 475 ஆண்டுகட்கு முன்பு வான்-ஹூ என்ற சீனர் நெருப்பு ஏவுகணை (fire rocket) ஒன்றைத் தயாரித்தார்நாற்காலி வடிவ ஊர்தி ஒன்றில்47 ஏவுகணைகளில் வெடிப் பொருளை நிரப்பி அது உருவாக்கப்பட்டதுஇதன் மீது அமர்ந்து கொண்டு விண்வெளியில் பறக்க இயலும் என அவர்நம்பினார்ஆனால் ஏவுகணைகளில் தீப்பற்றியவுடனேஅவர் உயரே தூக்கி எறியப்பட்டுஅதே வேகத்தில் தரையில் விழுந்து உயிர் இழந்தார்.
வான்-ஹூ அவர்களின் ஆய்வு தோல்வியில் முடிந்தாலும்அறிவியல் அறிஞர்கள் விண்வெளிப் பயணத்திற்குத் தகுதியான ஊர்தியைத் தயாரிக்கும்முயற்சியைக் கைவிடவில்லைவில்லியம் காங்கிரேவ் என்ற இங்கிலாந்து நாட்டுப் போர்ப்படை அதிகாரி 1808ஆம் ஆண்டு துப்பாக்கி ரவையைஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிக்கத் துவங்கினார்இத்தகைய ஏவுகணைகள் கடற் சண்டையில் பெரும் வெற்றியை ஈட்டித்தரும்என்று அவர் நம்பினார்அவர் கண்டுபிடித்த இவ்வகை ஏவுகணைகள் 1812-ல் அமெரிக்காவுடன் நடந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டன.
ஏவுகணையைப் பயன்படுத்தி அண்டவெளியை ஆய்வு செய்வது பற்றிய நூல் ஒன்றை கான்ஸ்டான்லின் சிலோவ்ஸ்கி என்ற இரஷ்ய நாட்டு அறிஞர்1898-ல் எழுதி வெளியிட்டார்விண்வெளிப் பயணத்திற்குப் புதியதோர் துவக்கமாக இந்நூல் விளங்கியது.
அமெரிக்க-ஜெர்மன் நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து திரவ எரிபொருளைப் பயன்படுத்திச் செலுத்தும் ஏவுகணைகளை 1920-ல்உருவாக்கினர்முன்பு சொல்லப்பட்ட இரஷ்ய விஞ்ஞானியும் திரவ எரிபொருளைப் பற்றிக் கூறி இருந்தார்ஆயினும் அப்போது அவர் கருத்துக்குஅவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை.ஏவுகணை வடிவமைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கோடர்ட் என்பவரும் முக்கியபங்காற்றினார்அவரது முயற்சியால் துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணை உருவாக்கப்பட்டதுமேலும் திரவ எரிபொருளால்இயங்கும் ஏவுகணையிலும் அவர் ஆர்வம் காட்டினார்திட எரிபொருளை விடதிரவ எரிபொருள் அதிக ஆற்றல் வழங்குவதாக அவர்கண்டறிந்தார்.
கோடர்ட் பயன்படுத்திய திரவ எரிபொருளானதுபெட்ரோலில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட கேசொலின் (Gasoline) ஆகும்இந்தகேசொலினை எரிக்கத் திரவ உயிர்வளி (oxygen) பயன் படுத்தப்பட்டதுவளிம நிலையிலுள்ள உயிர்வளியானது அழுத்தத்தினால்குளிர்விக்கப்பெற்று திரவ நிலைக்கு மாற்றப்பட்டதுஇதனை "லாக்ஸ் (lox)" எனக் கூறினர்.
திரவ எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட முதலாவது சோதனை ஏவுகணையை கோடர்ட் 1926-ல் செலுத்தினார்ஆனால் அந்தஏவுகணை அதிக உயரம் செல்லவில்லைஎனினும் 1929-ல் மேலும் ஒரு ஏவுகணை அவரால் செலுத்தப்பட்டதுஅது சுமார் 90 அடி உயரம்விண்ணில் சென்றுகட்டுப்பாடு குறைவு காரணமாகத் தரையில் விழுந்துவிட்டதுசுழலாழிக் கருவியைப் (gyroscope) பயன் படுத்தி இந்தப்பிரச்சினையையும் கோடர்ட் தீர்த்து வைத்தார்சுழலாழிக் கருவி என்பது விரைந்து சுழலும் ஒரு சக்கரம்இச்சக்கரத்தின் அச்சு ஒரு குறிப்பிட்டதிசையில் எளிதாகத் திரும்பக் கூடியது.
கோடர்ட் செலுத்திய இறுதி ஏவுகணைமணிக்கு 550 கி.மீவேகத்தில்விண்வெளியில் சுமார் 1.25 மைல் தூரம் சென்றதுஇரண்டாம் உலகப்போரின் போது அவர் அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்தார்குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களை மிகச் சிறிய இடத்திலிருந்துவிண்ணுக்குச் செலுத்தக் கூடிய துணை உந்து கலங்களையும் கோடர்ட் வடிவமைத்தார்மேலும் அவர் வி-1, வி-2 என்ற ஏவுகணைகளைப்போரில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனியில் உருவாக்கினார்இவற்றின் முன்னேறிய வடிவங்களே எதிர்காலத்தில் விண்வெளி ஓடங்களாகஉருவெடுத்தன.
வார்னர் வான் பிரான் (Warner Von Braun) என்ற ஜெர்மன் நாட்டு ஏவுகணைப் பொறியாளர் இரண்டாம் உலகப் போரின் போது தமது நாட்டைவிட்டு அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்அங்கு அவர் விண்வெளி ஆய்வுக் குழுவுக்குப் பொறுப்பேற்றார்அவர் தலைமையில்தான்எக்ஸ்ப்ளோரர்-1 என்ற துணைக்கோள் (Satellite) வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டதுஅடுத்து அவரது மேற்பார்வையில் சாட்டர்ன்(Saturn) ஏவுகணையும் தயாரிக்கப்பட்டதுமுதல் முறையாக புவியிலிருந்து நிலவிற்கு மனிதர்களைக் கொண்டு செல்ல இதுவே பின்னர்பயன்படுத்தப்பட்டதுசிறு வயது முதலே வெர்னர் பிரான் விண்வெளியின் வியத்தகுக் காட்சிகளைக் காண்பதில் விருப்பம் கொண்டிருந்தார்.அவரது தாயாரும் சிறு தொலைநோக்கி ஒன்றை மகனுக்கு அளித்து அவரது ஆர்வத்துக்கு ஊக்கம் அளித்தார்பின்னாளில் வெர்னர் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக வளர்ந்தார்.
சோவியத் யூனியன் 1957 அக்டோபர் 4ஆம் நாள் ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைத் துணைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில்செலுத்தியதுஉலகம் முழுதும் இச்செயலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தது எனலாம்இச்செயற்கைத் துணைக்கோள் சிறியதொரு நிலவைஒத்திருந்ததோடுபுவியை 90 நிமிடங்களில் சுற்றி வந்ததுபுவியிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இந்தச் செயற்கைத் துணைக்கோள்நிலை நிறுத்தப்பட்டதுஅடுத்து 1958 ஜனவரி 31-ல் அமெரிக்கா எக்ஸ்ப்ளோரர்-1 என்ற தனது துணைக்கோளை விண்வெளியில் செலுத்தியது.அடுத்து வந்த சில ஆண்டுகளில் சோவியத் யூனியனும்அமெரிக்காவும் மாறி மாறி துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தின.விண்வெளிக் கண்டுபிடிப்புகள் பலவற்றில் ஈடுபட்டு நிலவுக்குச் செல்லும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டன.
சோவியத் யூனியன் ஸ்புட்னிக்-1ஐத் தொடர்ந்து மற்றொரு விண்வெளிக்கலமான ஸ்புட்னிக்-II-ஐச் செலுத்தியதுஅதில் லைகா என்ற பெயர்கொண்ட பெண் நாய் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டதுஒரு வாரம்பல இன்னல்கள் நிறைந்த விண்வெளிச் சூழ்நிலையில் அந்த நாய் இருந்துஉயிர் வாழ்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனஎனவே விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்த முதலாவது உயிரினம்என்ற பெருமை லைகா என்ற அந்தப் பெண் நாய்க்குக் கிடைத்தது.
விண்வெளிப் பயணத்தின் திருப்பு முனையாக, 1969 ஜூலையில்மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்ததைக் குறிப்பிடலாம்அமெரிக்காஅனுப்பிய விண்வெளிக்கலமான அப்பலோ-II, நெயில் ஆம்ஸ்ட்ராங்க்எட்வின்  ஆல்ட்வின் ஆகிய இரு விண்வெளிப் பயணிகளுடன் 1969ஜூலை 20-ல் நிலவில் சென்று இறங்கியது.
பின்னர் பல துணைக்கோள்கள் பல்வேறு நாடுகளால் விண்ணில் செலுத்தப்பட்டனஅவை புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு முக்கியதகவல்களை ஒளிப்படங்களாக அனுப்பி வைத்தனஅப்படங்களின் அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளின் வரை படங்களில் தேவையானமாற்றங்கள் செய்யப்பட்டனமேலும் வானொலிதொலைக்காட்சி ஆகிய தகவல் தொடர்பு அமைப்புகளில் துணைக்கோள் தொழில்நுட்பம்பெரும் மாற்றங்களை விளைவித்ததுமுக்கியமாக நான்கு வகையான துணைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டனஅவை 1) கூர்ந்துநோக்கித் தகவல் திரட்டும் துணைக் கோள்கள், 2) தட்பவெப்பம் அறிவிக்கும் துணைக்கோள்கள், 3) தகவல் தொடர்புத் துணைக்கோள்கள், 4)பிறகோள்கள்விண்மீன்கள் பற்றிய தகவல்களைத் தந்து வழிகாட்டும் துணைக்கோள்கள் என்பனவாம்
புவியில் உள்ள பல இடங்களைப் பற்றிய சரியான தகவல்களையும்படங்களையும் அனுப்பி இதுவரை புரியாத புதிராக இருந்த பலவற்றிற்கு முதல்வகைத் துணைக்கோள்கள் விடையளித்தனபுவியிலுள்ள காடுகள்மலைகள்எரிமலைகள்கனிம வளங்கள்பனிப்பகுதிகள் ஆகியன பற்றிய பலவிவரங்களை இவ்வகைத் துணைக்கோள்கள் அனுப்பி வைத்தன.
தட்பவெப்பத் துணைக்கோள்கள் அனுப்பும் தகவல்கள் வாயிலாகப் புயல்நிலநடுக்கம்பெருமழைசூறாவளி பற்றிய தகவல்களை முன்கூட்டியேஅறிய முடிவதுடன்தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிகிறது.
அடுத்த வகைத் துணைக்கோள்களால் தகவல் தொடர்பு அமைப்பில் பெரும் புரட்சியே விளைந்துள்ளதுஒரே ஒரு துணைக்கோளின் வாயிலாகபல ஆயிரம் தொலை பேசிகளைச் செயற்படுத்த முடிகிறதுவானொலிதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உலகின் எந்த மூலையிலும் ஒலி/ஒளிபரப்பச் செய்ய முடியும்அடுத்துசில சிறப்பு வகைத் துணைக்கோள்களைப் பயன்படுத்திப் பிற கோள்களின் விவரங்களைப் பெற இயலும்.

Monday, May 2, 2011

மின்காந்தவியல் உந்துவிசை (Electromagnetic Propulsion)



விண்வெளி ஓடங்களில் பிரதான உந்து விசையினை உருவாக்குவதற்கு ஆரம்ப காலந்தொட்டு உந்துகணைகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் விஞ்ஞானிகளும் விண்ணியல் பொறியியலாளர்களும் உந்துகணைகளுக்கு மாற்றீடானதும் விண்ணோடங்களை அதிவேகத்தில் செலுத்தவல்லதுமான மாற்று உந்து விசைகளான ஒளி உந்துவிசை, அணுசக்தி உந்துவிசை போன்ற உந்துவிசைகளைக் கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவண்ணமுள்ளனர். இந்தவகையில் மாற்று உந்துவிசை வரிசையில் முன்மொழியப்பட்டதே மின்காந்தவியல் உந்துவிசையாகும்.
imagesமின்காந்தப் புலக் கதிர்களை அதி தாழ் வெப்பநிலைக்குக் கொண்டு செல்லும்போது மின்காந்தப்புலம் உருவாக்கப்பட்டு சிறிது நேரத்தில் அக்கதிர்கள் சுயமாக அதிர்வுக்குள்ளாகத் தொடங்குகின்றன. இவ்வாறு சுய அதிர்வுக்குள்ளாகும் மின்காந்தப் புலத்தினை ஒரு குறித்த திசையினை நோக்கிக் குவிப்பதன்மூலம் உந்துவிசையினை உருவாக்க முடியும் எனும் முன்மொழிவினை (proposal) அமெரிக்கப் பொறியியலாளரான டேவிட் குட்வின் என்பவர் முன்வைத்தார். இவ்வாறு மின்காந்தப் புலத்தின் மூலம் உருவாக்கப்படும் உந்து விசை ஏனைய வகை உந்துவிசைகளை விட அதிவேகமானதாக இருக்கும் எனவும் குட்வின் குறிப்பிடுகின்றார்.
மின்காந்தவியல் உந்துவிசையானது விண்வெளித்துறையில் இன்னமும் ஆய்வு நிலையிலேயே காணப்பட்ட போதிலும், தரைப் போக்குவரத்துத் துறையில் தற்போது பயன்பாட்டில் காணப்படுகின்றது. ஆனால் இரு துறைகளையும் பொறுத்தமட்டில் அவற்றின் புறச்சூழல் என்பது முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுவதுடன் இருதுறைகளிலும் மின்காந்தப் புலம் பயன்படுத்தப்படும் முறைகளும் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.
தரைப் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் தொடருந்துகளில் மின்காந்தப்புல விசை தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில், தொடருந்துத் தடத்திலும் தொடருந்திலும் காணப்படும் மின்காந்தங்களினால் உருவாக்கப்படும் மிக்காந்த விசை ஒன்றையொன்று எதிர்த்திசையில் தாக்கும்போது, தொடருந்துத் தடம் நிலையாக இருக்கும் காரணத்தினால் தொடருந்து ஒரு திசையில் நகர்கின்றது. எனவே, இச்சந்தர்ப்பத்தில் மின்காந்தப் புல விசையின் தொழிற்பாடு எளிமையானதாகக் காணப்படுகின்றது.
MagLevCompModelஆனால் விண்வெளி ஓடங்களில் மின்காந்தப்புல உந்துவிசை பயன்படுத்தப்படும்போது, தொடருந்துகள் போன்று, எதிர்த்திசையில் தொழிற்படும் காந்தப்புலம் இங்கே காணப்படாது. எனவே, இங்கே காந்தப்புலத்தின் செயற்பாடு வித்தியாசமானதாகக் காணப்படுகின்றது. இந்நிலையில், மிகவும் வலுமிக்க மின்காந்தப்புலம் உருவாக்கப்படவேண்டி இருப்பதுடன் உருவாக்கும் வழிமுறையும் சிக்கலானதாகக் காணப்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில், அதிக வலுவுடன் உருவாக்கப்படும் மின்காந்தப்புலம் செலுத்தப்படும் திசையின் எதிர்த்திசையில் உந்துவிசையினை உருவாக்குகின்றது. இவ்வாறு வலுவான மின்காந்தப் புலத்தினை உருவாக்குவதற்கு வெவ்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
விண்வெளித்துறையில் மின்காந்தப்புல உந்துவிசையின் பயன்பாடென்பது ஆராய்ச்சி நிலையிலேயே காணப்படுவதன் காரணமாக சிறந்ததொரு இறுதிவடிவம் இதுவரை எட்டப்படவில்லை. அதுமட்டுமன்றி, இந்த மின்காந்தப்புல உந்துவிசையினைப் இலகுவான முறையில் பயன்படுத்தவல்ல வெவ்வேறு வடிவிலான விண்ணோடங்களை வடிவமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும் மற்றொரு பக்கத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றவண்ணமுள்ளன.

Sunday, May 1, 2011

சீரொளி உந்துவிசை (Laser propulsion)..



இருபது வருடங்களின் முன்னர் அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பைச்சேர்ந்த நிபுணர்கள் நட்சத்திரப் போர்குறை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர். நட்சத்திரப் போர்முறையிர் அடிப்படை, சீரொளிக் கதிர்களைப் பயன்படுத்தி அமெரிக்காவைத் தாக்க வரும் எதிரிநாட்டு ஏவுகணைகளைத் தாக்கியளிப்பதாகும்.
இந்த ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், சீரொளிக் கதிர்களை வேறுபல தேவைகளுக்குப் பயன்படுத்தவல்ல வழிமுறைகள் காணப்படுவதைக் கண்டறிந்தனர். அவ்வழிமுறைகளில் ஒன்றே சீரொளி உந்துவிசையாகும் (Laser propulsion). அதாவது, சீரொளிக் கதிர்கள் மூலம் உந்துகணைகளுக்கான (rockets) உந்துசக்தியினை வழங்குவதாகும்.

தற்போது விண்வெளிப் பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் உந்துகணைகளில்ப ொருமளவான திண்ம மற்றும் திரவ எரிபொருட்கள் பணன்படுத்தப்படுகின்றது. உந்துகணையின் மொத்த நிறையின் பொரும்பகுதி இந்த எரிபொருட்களின் நிறையாகவே காணப்படுகின்றது. எனவே, சீரொளிக் கதிர் மூலம் உந்துகணைக்கான உந்துவிசையினை வழங்கும் பட்சத்தில் உந்துகணைகளின் நிறை பொருகளிவில் குறைவதோடு உந்துகணைகளின் எரிபொருட்களினால் சூழல் மாசடைதலும் முற்றாகத் தவிர்க்கப்படும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
தரையிலிருந்து விண்ணோக்கிப் பயணிக்கும் உந்துகணையின்மீது செலுத்தப்படும் சீரொளிக் கதிர், உந்துகணையின் சீரொளி இயந்திரப் பாகத்தில் பட்டு இயந்திரத்தை இயக்கி உந்துவிசையை வழங்குகின்றது. இதுதான் சீரொளி உந்துவிசையின் அடிப்படைத் தத்துவம். எனவே சீரொளிக் கதிர்களை உருவாக்குவதற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் புவியிலுள்ள நிலையத்திலேயே காணப்படும். புவியிலிருந்து வீசப்படும் கதிர்களே உந்துகணையை உந்திச்செல்லும். எனவே உந்துகணையினை இலகுவானதாகவும் நிறைகுறைந்ததாகவும் வடிவமைக்க முடியும்.
ஒளிக்கற்றை ஒன்றின்மூலம் உந்துகணையினை மேல்நோக்கி உந்திச்செல்லுதல் என்பது, கேட்பதற்கு விஞ்ஞானப் புனைவு போன்று காணப்பட்டபோதிலும், சீரொளிக் கதிர் உந்துவிசை என்பது பலதடவைகள் பலவழிகளில் பரீட்ச்த்துப் பார்க்கப்பட்ட ஒன்றேயாகும். பல விஞ்ஞானிகள் இந்த விடையம் தொடர்பாக தொடர்ச்சியான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டவண்ணமுள்ளனர்.
இந்தவகை உந்துகணைகள், ஏனைய தற்போது பயன்படுத்தப்படும் உந்துகணைகளைப் போலல்லாது, பயணிக்கும்போது சமநிலையைப் பேணும்விதமாக உயர் வேகத்தில் சுழலத்தக்கவையாகக் காணப்படுகின்றன. தரையிலுள்ள நிலைத்திலிருந்து உருவாக்கப்படும் 10 கிலோவாற் சக்தியுடைய சீரொளிக் கதிரானது உந்துகணை இயந்திரத்திற் காணப்படும் குவிவாடியினாற் குவிக்கப்பட்டு இயந்திரத்தின் எரியூட்டும் பகுதிக்கு செலுத்தப்படுகின்றது. வினாடிக்கு 25-28 தடவைகள் செலுத்தப்படும் இந்த உயர் சக்திவாய்ந்த சீரொளிக் கதிர் 10000 தொடக்கம் 30000 பாகை செல்சியஸ் வரையான வெப்பத்தை உருவாக்குகின்றது. இஙந்திரத்திலிருக்கும் வளி இந்த வெப்பநிலையை அடையும்போது அது plasma நிலையையடைந்து உந்துகணையை உந்திச் செல்கின்றது.
விஞ்ஞானத்தின் இந்த வளர்ச்சியையிட்டு மனிதகுலம் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். இருப்பினும் வல்லரசுகளுக்குக் கட்டுப்பட்ட இந்த வளர்ச்சி ஏனைய நாடுகளில் சத்தமின்றி அழிவுகளை ஏந்படுத்தவல்லன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருபது வருடங்களின் முன்னர் அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பைச்சேர்ந்த நிபுணர்கள் நட்சத்திரப் போர்குறை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர். நட்சத்திரப் போர்முறையிர் அடிப்படை, சீரொளிக் கதிர்களைப் பயன்படுத்தி அமெரிக்காவைத் தாக்க வரும் எதிரிநாட்டு ஏவுகணைகளைத் தாக்கியளிப்பதாகும்.
இந்த ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், சீரொளிக் கதிர்களை வேறுபல தேவைகளுக்குப் பயன்படுத்தவல்ல வழிமுறைகள் காணப்படுவதைக் கண்டறிந்தனர். அவ்வழிமுறைகளில் ஒன்றே சீரொளி உந்துவிசையாகும் (Laser propulsion). அதாவது, சீரொளிக் கதிர்கள் மூலம் உந்துகணைகளுக்கான (rockets) உந்துசக்தியினை வழங்குவதாகும்.
light-propulsion-testதற்போது விண்வெளிப் பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் உந்துகணைகளில்ப ொருமளவான திண்ம மற்றும் திரவ எரிபொருட்கள் பணன்படுத்தப்படுகின்றது. உந்துகணையின் மொத்த நிறையின் பொரும்பகுதி இந்த எரிபொருட்களின் நிறையாகவே காணப்படுகின்றது. எனவே, சீரொளிக் கதிர் மூலம் உந்துகணைக்கான உந்துவிசையினை வழங்கும் பட்சத்தில் உந்துகணைகளின் நிறை பொருகளிவில் குறைவதோடு உந்துகணைகளின் எரிபொருட்களினால் சூழல் மாசடைதலும் முற்றாகத் தவிர்க்கப்படும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
தரையிலிருந்து விண்ணோக்கிப் பயணிக்கும் உந்துகணையின்மீது செலுத்தப்படும் சீரொளிக் கதிர், உந்துகணையின் சீரொளி இயந்திரப் பாகத்தில் பட்டு இயந்திரத்தை இயக்கி உந்துவிசையை வழங்குகின்றது. இதுதான் சீரொளி உந்துவிசையின் அடிப்படைத் தத்துவம். எனவே சீரொளிக் கதிர்களை உருவாக்குவதற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் புவியிலுள்ள நிலையத்திலேயே காணப்படும். புவியிலிருந்து வீசப்படும் கதிர்களே உந்துகணையை உந்திச்செல்லும். எனவே உந்துகணையினை இலகுவானதாகவும் நிறைகுறைந்ததாகவும் வடிவமைக்க முடியும்.
ஒளிக்கற்றை ஒன்றின்மூலம் உந்துகணையினை மேல்நோக்கி உந்திச்செல்லுதல் என்பது, கேட்பதற்கு விஞ்ஞானப் புனைவு போன்று காணப்பட்டபோதிலும், சீரொளிக் கதிர் உந்துவிசை என்பது பலதடவைகள் பலவழிகளில் பரீட்ச்த்துப் பார்க்கப்பட்ட ஒன்றேயாகும். பல விஞ்ஞானிகள் இந்த விடையம் தொடர்பாக தொடர்ச்சியான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டவண்ணமுள்ளனர்.
இந்தவகை உந்துகணைகள், ஏனைய தற்போது பயன்படுத்தப்படும் உந்துகணைகளைப் போலல்லாது, பயணிக்கும்போது சமநிலையைப் பேணும்விதமாக உயர் வேகத்தில் சுழலத்தக்கவையாகக் காணப்படுகின்றன. தரையிலுள்ள நிலைத்திலிருந்து உருவாக்கப்படும் 10 கிலோவாற் சக்தியுடைய சீரொளிக் கதிரானது உந்துகணை இயந்திரத்திற் காணப்படும் குவிவாடியினாற் குவிக்கப்பட்டு இயந்திரத்தின் எரியூட்டும் பகுதிக்கு செலுத்தப்படுகின்றது. வினாடிக்கு 25-28 தடவைகள் செலுத்தப்படும் இந்த உயர் சக்திவாய்ந்த சீரொளிக் கதிர் 10000 தொடக்கம் 30000 பாகை செல்சியஸ் வரையான வெப்பத்தை உருவாக்குகின்றது. இஙந்திரத்திலிருக்கும் வளி இந்த வெப்பநிலையை அடையும்போது அது plasma நிலையையடைந்து உந்துகணையை உந்திச் செல்கின்றது.
விஞ்ஞானத்தின் இந்த வளர்ச்சியையிட்டு மனிதகுலம் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். இருப்பினும் வல்லரசுகளுக்குக் கட்டுப்பட்ட இந்த வளர்ச்சி ஏனைய நாடுகளில் சத்தமின்றி அழிவுகளை ஏந்படுத்தவல்லன என்பதும் குறிப்பிடத்தக்கது.