பழமொழி.....

Saturday, January 21, 2012

மிக் - 02.

மிக்-1 சண்டை வானூர்தி இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தால் உயர்தரத்திலான தாக்குதல் தேவையை கருத்திற் கொண்டு 1939ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இதுவே முதலாவாதாகும்.

அலுமினியத்தின் தேவையை குறைக்க அல்லது தட்டுப்பாடு காரணமாக மிக்-1 இரும்பு குழாய் மற்றும் மரம் ஆகியவற்றால் கட்டப்பட்டது. பல குறைபாடுகள், கடினமான கையாளல், ஒழுங்கற்ற வடிவமைப்பு, வெப்பமான விமானியின் அறை, ஓடுபாதையில் செலுத்துவது சிரமம் ஆகியன இருந்தாலும் போர் காரணமாக நூறுக்கு மேற்ப்பட்ட வானூர்திகள் தயாரிக்கப்பட்டு சோவியத் வான் படைக்கு (Soviet Air Forces) வழங்கப்பட்டன. ஆனாலும் 1941 இல் சோவியத் மீதான ஜெர்மனியின் Barbarossa இராணுவ நடவடிக்கையால் போரின் முதல் நாளன்றே பெரும்பாலும் பல மிக் -1 வானூர்திகள் அழிக்கப்பட்டுவிட்டன.

மிக்-1 வானூர்தியின் வெட்டுமுக வரைவு

Barbarossa இராணுவ நடவடிக்கையின் போது ஜெர்மனியின் படைகளால் கைப்பற்றப்பட்ட மிக்-1



Friday, January 20, 2012

மிக் - 01.



மிகோயன் & குருவிச் (Mikoyan-and-Gurevich) என்பது ரஷ்யாவின் ராணுவதிற்குத் தேவையான சண்டை வானூர்திகளைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ஆர்டம் மிகோயன் மற்றும் மிக்கயில் குருவிச் ஆகியோரால் 1939 ஆம் ஆண்டு உருவக்கப்பட்டது. இவ்விருவரின் பெயர்களைக் கொண்டு Mikoyan-and-Gurevich Design Bureau என்றும் நிறுவனம் சுருக்கமாக மிக் (MIG) என்றும் பெயரிடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு ஆர்டம் மிகோயன் மறைவிற்குப் பின் இந்நிறுவனத்தின் பெயரிலிருந்து மிகோயன் நீக்கப்பட்டது. ஆயினும் புனைப்பெயரான மிக் அப்படியே விடப்பட்டது.

மிக் ரக வானூர்திகளை சீனா, வட கொரியா மற்றும் வட வியட்னாம் ஆகிய நாடுகள் ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளுக்கெதிராகப் பயன்படுத்தியுள்ளன. மேலும் சோவியத் ஒன்றியம் பல்வெறு நாடுகளுக்கு மிக் ரக வானூர்திகளை ஏற்றுமதி செய்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ரஷ்யா இந்நிறுவனத்தின் 100 % சதவிகிதப் பங்குகளை இல்லுயிசின், இர்குட், சுகோய், டியுபோலெவ் மற்றும் யகோவ்லெவ் ஆகிய நிறுவனங்களுடன் ஒன்றினைத்து யுனைடெட் ஏர்க்ராஃப்ட் கார்ப்ரேசன் (United Aircraft Corporation) எனும் நிறுவனத்தை உருவாக்கியது. குறிப்பாக மிகோயன் மற்றும் சுகோய் ஆகியவை ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன.


மிக் வானூர்திகளின் வகைகள்......
1 ) MiG-1, 1940
2 ) MiG-3, 1941
3 ) MiG-7, 1944
4 ) MiG-9, 1946
5 ) MiG-15 , 1948
6 ) MiG-17 , 1953
7 ) MiG-19, 1954 -MiG's first supersonic fighter (ஒலியை விட வேகமாகச் செல்லும் முதல் வானூர்தி)
8 ) MiG-21, 1956,
9 ) MiG-23 , 1967
10) MiG-25, 1965 -Interceptor fighter and recce/strike aircraft
                       (இடைமறித்து தாக்கும், உளவு பார்க்கும் மற்றும் குண்டுவீசும் வானூர்தி)
11) MiG-27, 1970 -A ground-attack aircraft (தரைத்தாக்குதல் வானூர்தி)

            (மிக் -27 ஈழ தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா விமானப்படை பயன்படுத்தியது.)
12) MiG-29, 1977, comparable to the US F-16 Fighting Falcon and F/A-18 Hornet
                                (அமெரிக்காவின் F-16 மற்றும் F/A-18 வானூர்திகளுக்குஇணையானது)
       MiG-29K
       MiG-29M
13) MiG-31, 1975 -Interceptor fighter aircraft (இடைமறித்து தாக்கும் வானூர்தி)
14) MiG-35, 2007,
15) MiG LMFS

Tuesday, January 17, 2012

கிபிர்.. (Kfir)



கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன.

கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர்.
மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன மின்னியல் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட முதல் தயாரிப்பு Kfir-C1 அறிவிக்கப்பட்டது.

பின்னர் கிபிர் போர் வானூர்தி பல நவீன ரகங்களில் தயாரிக்கப்பட்டது.
                              

                                                                        Kfir C.1  

F-21A Kfir : Kfir C.1 வகையை சேர்ந்த 25 வானூர்திகள் அமெரிக்க நிறுவனத்தால் நவீன மயப்படுத்தப்பட்டு, F-21A என பெயர் மாற்றப்பட்டு, குறைந்த இயக்க செலவு மற்றும் நல்ல மாற்றம் என நன்கு தன்னை நிரூபித்தது.


                                                                      Kfir C.2 


மேம்படுத்தப்பட்ட புதிய aerodynamic மாற்றங்கள், புதிய மின்னியல், ஒரு புதிய வகை ரேடார், இரட்டை-கணினி விமான கட்டுப்பாட்டு அமைப்பு (twin-computer flight control system) multi-mode navigation மற்றும் ஆயுத விநியோக அமைப்பு (weapons delivery system) மத்திய விமான தரவு கணினி மற்றும் HUD முதலியன அறிமுகப்படுத்தப்பட்டது.


                                                                         Kfir TC.2 


இரண்டு இருக்கை கொண்ட இவ் வானூர்தி முன் மூக்குப்பகுதி குறைக்கப்பட்டு விமானிகளின் பர்வைப்பகுதி மேம்படுத்தப்பட்டது.


                                                                              Kfir C.7


இதன் முன்னோக்கி செல்லும் உந்துவிசை 454 kg ஆல் அதிகரிக்கப்பட்டது. smart weapons களின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. மிகவும் நுணுக்கமான மின்னணு சாதனங்கள் மற்றும் HOTAS (Hands On Throttel And Stick) ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.


                                                                    Kfir TC.7


மேலே கிளம்புவதற்கான விசை ( take-off weight) 1,540 kg ஆக அதிகரிக்கப்பட்டது. நிறைக்கும் உந்துவிசைகுமான வீதம் (thrust-to-weight ratio) மேம்படுத்தப்பட்டது.


                                                                   Kfir C.10


இது வானிலிருந்து வானுக்கு (air-to-air) ஏவுகணைகள், புதிய வகை ரேடார்கள் மற்றும் நவீன போர் ஆயுதங்களையும் கொண்டுள்ளது.


                                                                     Kfir TC.10 


இது Kfir TC.7 வானூர்தியை கொண்டு கொலம்பியன் வானூர்தி படை உருவாக்கியுள்ளது.


                                                                     Kfir C.12 


இது Kfir C.7 வானூர்தியை கொண்டு கொலம்பியன் வானூர்தி படை உருவாக்கியுள்ளது.


                                                                     Kfir Tzniut  


இது Kfir C.2 வானூர்தியின் புதிய பதிப்பாகும்.


                                                                        Kfir C.60


இது Kfir C.10 வானூர்தியை கொண்டு பல்கேரியன் வானூர்தி படை உருவாக்கியுள்ளது.


இவை தான் ஈழ தமிழர்களின் வாழ்க்கையையும் சிதைத்து சின்னாபின்னமாக்கினவை.



Sunday, January 15, 2012

மிராச் (Mirage) -6.

Dassault Mirage 4000



செப்டம்பர் 1975 இல், அறிவிக்கப்பட்ட மிராஜ் 4000 மார்ச் 1979 இல் முதன் முதலாக அமுலுக்கு வந்தது. மிராஜ் 2000 தின் புதிய பதிப்பாக நவீன தொழில்நுட்பத்துடன் இது உருவாக்கப்பட்டது. இது இடைமறிப்பு தாக்குதல் மற்றும் குறைந்த உயரத்தில் ஊடுருவல் போன்றவற்றில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

மிராஜ் 4000 தாக்குதல் வானூர்தி computer-derived aerodynamics, with a fly-by-wire active control system தொழில்நுட்பத்தையும் rearward CG தொழில்நுட்பத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இது மிராஜ் 2000 வானூர்தியை விட 3 மடங்கு எரிபொருள் கொள்ளளவை கொண்டுள்ளது.

Monday, December 5, 2011

மிராச் (Mirage) -5.

Dassault Mirage 200


மிராச் 2000 1978 ல் தயாரிக்கப்பட்டு 1984 முதல் பிரஞ்சு விமானப்படையின் செயல்பாட்டு வருகிறது, மற்றும் அபுதாபி, எகிப்து, கிரீஸ், இந்தியா, பெரு, கத்தார், தைவான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் பாவனையில் உள்ளது .
இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ம் தலைமுறைப் போர் வானூர்தி ஆகும். இது நிறை குறைந்த வானூர்தியான, மிராச் III இன் வடிவமைப்பைக் கொண்டு 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவ்வகை வானூர்திகள் வெற்றிகரமாக அமைந்ததால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மிராச்
2000N , மிராச் 2000D போன்ற தாக்குதல் வானூர்திகளும், மிராச் 2000 -5 என்ற மேம்படுத்தப்பட்ட வானூர்திகளும், மேலும் பல்வேறு வகையான வானூர்திகளும் உருவாக்கப்பட்டன. 2009 நிலவரப்படி சுமார் 600 க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் தயாரிக்கப்பட்டு ஒன்பது நாடுகளில் சேவையில் உள்ளது.


RoleMultirole fighter
National originFrance
ManufacturerDassault Aviation
First flight10 March 1978[1]
IntroductionNovember 1982[2]
Primary usersFrench Air Force
Indian Air Force
United Arab Emirates Air Force
Republic of China Air Force
Number built601[3]
Unit costUS$23 million
Developed fromDassault Mirage III
VariantsDassault Mirage 2000N/2000D
Dassault Mirage 4000

மிராச் 2000N 
எப்படிப்பட்ட வானிலையிலும் பறக்கக்கூடியது , அணு ஊடுருவல் அணு தாக்குதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு, குறைந்த உயரத்திலும் மிக அதிக வேகம் மற்றும் இரு இருக்கை கொண்டது.


மிராச் 2000D 
எப்படிப்பட்ட வானிலையிலும் பறக்கக்கூடியது , அணு ஊடுருவல் அணு தாக்குதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு, குறைந்த உயரத்திலும் மிக அதிக வேகம் மற்றும் லேசர் வழிகாட்டலுடன் (Laser Guided) தன்னிசையாக குண்டு (Automated Bombing) வீசி எதிரி நிலைகளை அளிக்கக்கூடியது.


மிராச் 2000-5 
நவீன மயப்படுட்டப்பட்ட மின்னியல் சாதனங்கள் (dvanced avionics) பொருத்தப்பட்டு, RDY ரேடார் உதவியுடன் பல்லிலக்கான வானிலிருந்து - தரை மற்றும் வானிலிருந்து - வான் தக்குதல் மேற்கொள்ளக்கூடியது அத்துடன் புதிய ensor and control systems ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


                                                                  ஐயோ! Just miss
மிராச் 2000  தான் தமிழர்கள் மீதான ராஜீவ் காந்தியின் கொலை வெறி படையினரின் ஆக்கிரமிப்பு போரின்போது தமிழர் தரப்புக்கு அழிவையும் துன்பத்தையும் கொடுத்தது.
இதனுடனும் தமிழர்கள் போரிட்டார்கள் என்பது நினைத்து பார்க்க முடியாத பெருமையான சம்பவம். 

Saturday, December 3, 2011

மிராச் (Mirage) -4.

Dassault Mirage F1 
மிராச் F1 1967 ல் தயாரிக்கப்பட்டது. இதற்கு முன் 1966 ல் மிராச் F2 என்ற வானூர்தி தயாரிக்கப்பட்து அவ் வானூர்தி விபத்தை சந்திக்கும் போது அதன் வானோடி (Pilot) மரணமடைந்தார். அதன் பின்னர் மிராச் F2 கைவிடப்பட்டு சிறிய மாற்றங்களுடன் மிராச் 1 உருவாக்கப்பட்டது. மிராச் 1க்கு  சிறிய wingspan இருகிறபொழுதிலும்  43% அதிக எரிபொருள் சுமக்க முடியும், பின்னர் இதில் பல ரகங்கள் உருவாக்கப்பட்டன.

  • 1 மிராச் F1A
  • 2 மிராச் F1B
  • 3 மிராச் F1C
  • 4 மிராச் F1D
  • 5 மிராச் F1E
  • 6 மிராச் F1CG
  • 7 மிராச் F1CR
  • 8 மிராச் F1CT
  • 9 மிராச் F1AZ and F1CZ
  • 10 மிராச் F1M-53
RoleFighter aircraft
ManufacturerDassault Aviation
First flight23 December 1966
Introduction1973
StatusActive
Primary usersFrench Air Force (historical)
Iraqi Air Force (historical)
Spanish Air Force
Royal Moroccan Air Force
Number built>720
Developed fromDassault Mirage III


Dassault Mirage G

மிராச் G4 & மிராச் G8
மிராச் G வானூர்தி1967 ல் தயாரிக்கப்பட்டது.1964 இல் பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சின் விமானம் தாங்கி கப்பல்பயன்படுத்த variable-sweep aircraft  ரக வானூர்தி தேவை என பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டது. அதற்கு இணங்க மிராச் G வானூர்தி மிராச் G4 மற்றும் மிராச் G8 எனும் இரு ரகங்களில் தயாரிக்கப்பட்டது.
RoleSwing-wing multirole fighter
ManufacturerDassault Aviation
First flight18 November 1967
StatusCancelled in the 1970s
Primary userFrench Air Force
Number built3
Developed fromDassault Mirage F2

Thursday, December 1, 2011

மிராச் (Mirage) -3.

Dassault Mirage V

 பாகிஸ்தான் விமானப்படையின் மிராச் V
இது மிராச் குடும்பத்தின் நான்காவது உற்பத்தியாகும். இது 1967 ல் தயாரிக்கப்பட்டது. இஸ்ரேலிய விமானப்படை Dassault Aviation நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டபடி மிராச் V உருவாக்கப்பட்டது.  மத்திய கிழக்கு வானிலை காலநிலை மற்றும் பெரும்பாலான நேரம் சூரிய வெளிச்சம் என்பதால், அதற்கு ஏற்றபடி இது தயாரிக்கப்பட்டது. போர்முனையில்  தாக்குதல் மற்றும்  உளவு நடவடிக்கையில் இது ஈடுபடுகிறது.


RoleAttack aircraft
ManufacturerDassault Aviation
StatusActive
Primary usersFrench Air Force (historical)
Belgian Air Force (historical)
Egyptian Air Force
Pakistan Air Force
Developed fromDassault Mirage III
VariantsIAI Nesher



Dassault Mirage 50


படத்தில் அழுத்துங்கள் பெரிதாய் தெரியும்..
 இது மிராச் குடும்பத்தின் ஐந்தாவது உற்பத்தியாகும். இது 1970 ல் தயாரிக்கப்பட்டது. SNECMA Atar 9K-50 இயந்திரம் புகழ் பெற்று விட்டதால் மிராச் III மற்றும் 5 இல் உள்ள மாதிரி அடிப்படை airframe மாற்றப்படவில்லை ஆனால் ஏவுகணைகள், விமான ரோந்து, சூப்பர்சொனிக் இடைமறிப்பு, மற்றும் சுய பாதுகாப்பு திறன், தாக்குதல் ஆகியவை நவீன மயப்படுத்தப்பப்பட்டது.

 ENGINE1 x SNECMA Atar 9K-50 turbojet, 7200kg
 WEIGHTS
    Take-off weight13700 kg30203 lb
    Loaded weight7150 kg15763 lb
 DIMENSIONS
    Wingspan8.22 m27 ft 12 in
    Length15.56 m51 ft 1 in
    Height4.5 m15 ft 9 in
    Wing area35 m2376.74 sq ft
 PERFORMANCE
    Max. speed2.2M2.2M
    Ceiling18000 m59050 ft
    Range1300 km808 miles
 ARMAMENT2 x 30mm cannon, weapons on underwing hardpoints