பழமொழி.....

Sunday, February 12, 2012

மிக் -7


மிக் -23

மிக்-23 தரைத்தாக்குதல் வானூர்தியாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் வானூர்தி கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இதுவே முதலில் கீழே தரையில் உள்ள இலக்கைப் காணக்கூடிய ராடாரை கொண்டதும் பார்வை எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க கூடிய எறிகணைகளைக் கொண்டதுமான முதல் வானூர்தியாகும். 1970 இல் இதன் உற்பத்தி தொடங்கியது. மிக்-23 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Farmer என்பதாகும். சிறீலங்கா வான்படை இவ்வானூர்திகளை கொண்டு இனப்படுகொலை செய்வதற்கு தனது விமானிகளைப் பயிற்றுவிற்கிறது.

இதன் சிறப்பம்சங்கள்
  1. நம்பகமான வலுவான இயந்திரம்
  2. எளிதான பராமரிப்பு
  3. பறப்பியல் துறையில் அதிக திறன்கள்
  4. பல சிறப்பியல்புகள் கொண்ட வானூர்தி
  5. எல்லா நேரங்களிலும் வெற்றிகரமான பறப்புக்கள் கொண்டது.

Roleசண்டை வானூர்தி 
Manufacturerமிகோயன்-குருவிச்
First flight10 June 1967
Introduction1970
Statusவெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது
Primary usersசோவியத் வான்படை
சிறீலங்கா வான்படை,
இந்திய வான்படை,
சிரிய வான்படை
Produced1967–1985
Number built5,047

மிக் -25


மிக் 25 என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும், உளவு பார்க்கும் மற்றும் குண்டுவீசும் வானூர்தியாகும். இவ்வானூர்தி மிகோயன் குருவிச் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. வானூர்தியின் முன்மாதிரி 1964 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. இவ்வானூர்தி Mach 2.83+ என்னும் அதிஉயர் வேகத்தை கொண்டது. இது மிகவும் சக்தி வாய்ந்த ராடர் மற்றும் வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் நான்கு ஏவுகணைகளையும் (air-to-air missiles) தன்னகத்தே கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் McDonnell Douglas F-15 Eagle என்னும் வானூர்தியை தயாரிக்கத் தூண்டியது. மிக் 25 வானூர்தியின் தயாரிப்பானது 1984 ஆம் ஆண்டு 1,190 வானூர்திகளைத் தயாரித்த பின்பு முடித்துக்கொள்ளப்பட்டது. இவ்வானூர்தி இன்று ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் சிலவற்றில் சேவையில் உள்ளது. மிக்-25 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Foxbat என்பதாகும்.
இதன் சிறப்பம்சங்கள்
  1. ஒரு உயர் அழுத்தம் கொண்ட R-15B-300 இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
  2. உயர் வெப்பநிலை கொண்ட T-6 வானூர்தி எரிபொருளாகவும் aircraft cooling system அமைப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
  3. மிக அதிக வேகம் காரணமாக வானூர்தியின் பெரும் பகுதி இரும்பு, மற்றும் டைட்டானியம் கலப்புலோகங்களினால் கட்டப்பட்டன.
  4. அதி சக்தி வாய்ந்த ராடர், வானோடியின் (pilot) பங்களிப்பு இல்லாமல் இலக்கு நோக்கி வானூர்தியை இயக்கும் திறன் மற்றும் தன்னிச்சையாக தீயை கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
Roleஇடைமறித்து தாக்குதல், உளவு பார்த்தல்
Manufacturerமிகோயன்-குருவிச்
First flight6 March 1964
Introduction1970
Status பயன்பாட்டில் உள்ளது
Primary usersசோவியத் வான்படை
ரஷிய வான்படை,
அல்ஜீரிய  வான்படை,
சிரிய வான்படை
Produced1970 - 1984
Number built1,190


Wednesday, February 8, 2012

மிக் -6

மிக் -19




மிக் 19 ஒரு சோவியத் யூனியனின் இரண்டாவது தலைமுறை, ஒற்றைஇருக்கை, இரட்டை ஜெட்-இயந்திர போர் வானூர்தியாகும். சோவியத் யூனியனின் முதலாவது மிகையொலி (Supersonic) வானூர்தியும் இதுதான். இதுவரை அதாவது 1954 ல் முதல் 1957 ஆம் ஆண்டு வரை 2,069 க்கும் மேற்பட்ட மிக்-19 வானூர்திகள் தயாரிக்கப்பட்டன. மிக்-19 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Farmer என்பதாகும். முதலில் மிக்-19P என்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் விபத்துக்கள் மற்றும் இயந்திரத்தின் நம்பகத்தன்மை காரணமாக நிறுத்தப்பட்டு, இன்னும் சக்திவாய்ந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மிக்-19S உருவாக்கப்பட்டது. அத்துடன் நவீனமாக்கப்பட்ட elevator, வால் பகுதி மற்றும் அனைத்து வானிலையிலும் செயல்திறன் கொண்ட ரேடார் ஆகியவை இணைக்கப்பட்டன. வானிலிருந்து வானுக்கு செல்லும் ஏவுகணைகளை காவும் திறனும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Roleஜெட் போர் வானூர்தி
Manufacturerமிகோயன் & குருவிச்
First flight18 September 1953
IntroductionMarch 1955
Statusபாவனையில் இல்லை.
Primary usersSoviet Air Force
People's Liberation Army Air Force

24 others
Number built2,172
Developed intoமிக்-21



மிக் -21

மிக் 21 சோவியத் யூனியனின் போர் வானூர்தியாகும். இது சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் தயாரிக்கப்பட்ட வானூர்திகள் இரண்டாம் தலைமுறை வானூர்திகளாகவும், பிற்காலங்களில் தயாரிக்கப்பட்ட வானூர்திகள் மூன்றாம் தலைமுறை வானூர்திகளாகவும் கருதப்பட்டன. இது முகோண இறக்கையையும் அம்பு வடிவ Fin னையும் கொண்டுள்ளது. மிக்-21 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Fishbed என்பதாகும்.

இதன் சிறப்பம்சங்கள்................
  1. இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிக அதிகமாக தயாரிக்கப்பட்ட போர் வானூர்தி.
  2. இது 50 ஆண்டுகளாக தொடர்ந்து தயாரிக்கப்பட்ட போர் வானூர்தி.
  3. இது நான்கு தலைமுறைகளுக்கு 20 மாறுபட்ட ரகங்களில் தயாரிக்கப்பட்டது.
  4. இது நான்கு கண்டங்களில் சுமார் 50 நாட்டு வானூர்தி படைகள் பயன்படுத்துகின்றன.
Roleஜெட் போர் வானூர்தி
Manufacturerமிகோயன் & குருவிச்
First flight14 February 1955
Introduction1959
Statusபயன்பாட்டில் உள்ளது.
Primary usersசோவியத் வான்படை
இந்திய வான்படை
பல்கேரிய வான்படை
50 others
Number built11,496



Monday, February 6, 2012

மிக் - 5

மிக் - 15


மிக்-15 ஆனது 1947 இல் தயாரிக்கப்பட்ட முதல் வெற்றிகரமான 35-degree wing sweep இறக்கையை கொண்ட ஜெட் போர் வானூர்தியாகும். இதுவரை 12,000 க்கும் மேற்பட்ட மிக்-15 வானூர்திகள் தயாரிக்கப்பட்டு, பாவனையில் உள்ளன. கொரியா போரில் அமெரிக்காவின் F-86 போர் வானூர்திக்கு இணையாகவும் சிறந்த போர் வானூர்த்தியாகவும் செயல்ப்பட்டதாக கொரியா போர் பற்றிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக்-15 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Fagot என்பதாகும். இதற்கு Klimov RD-45 எனப்படும் ரஷ்யாவின் Nene turbojet இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
Roleஜெட் போர் வானூர்தி
Manufacturerமிகோயன் & குருவிச்
First flight30 December 1947
Introduction1949
Statusபயிற்சி வானூர்தி
Primary usersSoviet Air Force
PLA Air Force
Korean People's Air Force
41 others
Number built~12,000 + ~6,000 in license
Developed intoமிக்-17

மிக் -17 


மிக்-17 ஆனது 1952 இல் தயாரிக்கப்பட்ட உயர்-குறையொலி (High-Subsonic) போர் வானூர்தியாகும்.    இதன் பீரங்கிகளால் பல வானூர்திகளை சுட்டு விழுத்த முடியும் ஆனாலும் air-to-air  ஏவுகணைகளை இவற்றினால் காவிச்செல்ல முடியாது.இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட மிக்-17 வானூர்திகள் தயாரிக்கப்பட்டு, பாவனையில் உள்ளன. வியட்நாம் போரில் அமெரிக்காவின் மிகையொலி (Supersonic) போர் வானூர்திகளுக்கு எதிராகவும் அவற்றிக்கு இணையாகவும்  செயல்ப்பட்டது. மிக்-17 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Fresco என்பதாகும். மிக்-15 கொரியா போரில் சாதனை படைத்து என்றால் மிக்-17 வியட்நாம் போரில் சாதனை படைத்து.

மிக்-17 ஆனது மிக்-15 வானூர்தியை விட பெரிய இறக்கைகள், நீண்ட உடற்பகுதி, எரிபொருள் சக்தி, சிறந்த வேகம் மற்றும் இலகுவான கையாளுதல் போன்ற பண்புகள் கொண்டது.

Roleஉயர்-குறையொலி போர் வானூர்தி
Manufacturerமிகோயன் & குருவிச்
First flight14 January 1950
IntroductionOctober 1952
StatusActive with North Korea airforce and Pakistan air force.
Primary usersSoviet Air Force
PLA Air Force
Polish Air Force
Vietnam People's Air Force

41 others
Number built10,603
Developed from  மிக்-17


Saturday, February 4, 2012

மிக் -4

மிக் - 7

மிக் 3 வானூர்தியின் செயல்திறனை மேம்படுத்த வேண்டியநிலை வந்தபோது 1944 இல் AM-38 இயந்திரம் இணைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இது கடல் மட்டத்தில் உள்ள சாதாரண மிக்-3 விட வேகமாக 14 km / h (8.7 மைல்கள்) என்பதை நிரூபித்து அத்துடன் அதிக உயரத்தில் அதிகவேகத்தில் பறந்து மிக் குடும்பத்தில் மிக்-7 என்ற பெயருடன் தன்னை இணைத்துக்கொண்டது. மிக் குடும்பத்தில் முற்றிலும் உலோகத்தினால் செய்யப்பட்ட முதல் வானூர்தி இதுவாகும்.


மிக் - 9

மிக்-9 போர் வானூர்தி இரண்டம் உலகபோரின் பின்னர் 1946 இல் உருவாக்கப்பட்டு 1948 இல் சோவியத் வான் படையில் இணைக்கப்பட்டது. இது சோவியத் ஒன்றியத்தின் முதலாவது turbojet fighter வானூர்தியாகும். இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Fargo என்பதாகும்.


Tuesday, January 31, 2012

The Multi-Function Display..

The Multi-Function Display (MFD) என்பது Integrated Avionics System (IAS) என்ற அமைப்பின் ஒரு பிரிவாகும். இது வானூர்தியின் மின்னியல் கருவிகளின் (Avionic Instrument) செயல்ப் பாட்டை ஒருங்கிணைத்து மற்றும் அதனைச் சீராக அமைத்து, எளிமையான காட்சிகளாக விமானிக்கும், விமான அறைக்கும் வழங்குகிறது. இதனுடைய திரையகம் (Display Unit) இன் அமைப்பு (10.4 Inch diagonal) 6 X 8 அங்குலங்களாகும்.

Fuel FlowCylinder Head Temperature
Oil TemperatureOil Pressure
Amp-MeterVolt Meter
Fuel Quantity: Left/RightFuel Flow
RPMGPS Waypoint Information
  • Estimated Time En-route
  • En-route Safe Altitude
  • Cross Track Error
Manifold PressureTraffic
WeatherWind Direction


The Multi-Function Display அமைப்பானது Electronic Flight Instrument System (EFIS), Primary Flight Display (PFD), and the Integrated Instrument Display System (IIDS) ஆகியவற்றின் செயல்ப் பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியினையும், மற்றும் இதர செயல்ப்பாடுகளான Camera video, நடைமுறைகள், பட்டியல்கள், Systems Status, எரிபொருள், தண்ணீர் அளவு, வானொலி அலைவரிசைகள், GPWS, TCAS, பாதுகாப்பு வீடியோ, வானூர்தி திட்டமிடல், நகரும் வரைபடம் மற்றும் பல கருவிகளையும் ஒருங்கிணைத்து காட்சிப்படுத்துகிறது.



Friday, January 27, 2012

Head Up Display System.....

சிறிலங்காவின் விமானப்படையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனாவிடம் வாங்கப்பட்ட மூன்று போர் விமானங்களை 6 மில்லியன் டொலர் செலவில் இலங்கை அரசாங்கம் தரமுயர்த்தவுள்ளது.
K-8 ரகத்தைச் சேர்ந்த மூன்று போர் வானூர்திகளே முதற்கட்டமாக தரமுயர்த்தப்படவுள்ளன. இந்தப் போர் விமானங்களில் Head Up Display System (HUD) மற்றும் Multi-Function Display System (MFD) ஆகியன நவீன கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
(6 மில்லியன் டொலரில் போர் விமானங்களை தரமுயர்த்தும் இலங்கை............ ஊடக செய்தி)

Head-up display or Heads-up display (HUD)  


வானோடி (Pilot) தங்கள் வழக்கமான பார்வைக் கோணத்திலிருந்து விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்து விபரத்தையும் இது அளிக்கிறது. பார்வைக் கோணத்திற்கு அப்பால் உள்ள (அதாவது கீழ் பகுதியில் உள்ள) உபகரணங்களைப் (Instruments) பார்ப்பதற்க்கான தேவையை Heads-up display பூர்த்தி செய்கிறது. இது பல விபரங்களை ஒருங்கிணைத்து வானோடிக்கு வழங்குவதன் மூலம் வானொடியின் வேலையை சுலபமாக்கிறது.
இது ஆரம்பத்தில் இராணுவ வானூர்தி போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டன என்றாலும், இப்போது பயணிகள் வானூர்திகள் , வாகனங்கள், மற்றும் பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

HUD கருவி 3 அமைப்புகளை கொண்டுள்ளது.
  1. Projector unit 
  2. Combiner
  3. Video generation computer

    
1.  Speed (knots)
 2. Heading
 3. Bank angle
 4. Vertical speed (feet per minute)                     
 6. Throttle
 7. Rudder
 8. Aileron
 9. Elevator 
10.Flap and gear 11.indicators
12.Pitch angle (degrees)
13.Altitude (feet above sea level)






HUD யின் அனுகூலங்கள்
வானோடிக்கு வானூர்தியின் வெளிப்புறச் சூழல் பற்றிய துல்லியமான விபரங்களை வழங்குகிறது....
வானூர்தியின் செயற்ப்பாடு, அதன் சூழ்நிலை விழிப்புணர்வு, மற்றும் வெளிப்புற பொருட்களுடனான போன்ற விபரங்களை வழங்குகிறது.....
வானூர்தியின் சில்லு, தடுப்பி (tire and brake) மற்றும் Airframes போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து, அதன் செயல்திறனை அதிகரிக்கிறது........
அதிக நம்பகத்தன்மை மற்றும் இயக்க செயல்திறனைவழங்குகிறது.........
வானூர்தி விபத்துக்களை பெருமளவு குறைக்கிறது...........
ஓடு பாதையின் அகலம், நீளம்.. வானூர்தியை எப்படி தரையிறக்கம் பண்ணலாம் போன்ற விபரங்களை துல்லியமாக வழங்குகிறது.............





Wednesday, January 25, 2012

மிக் - 03.

மிக்-3  சோவியத் ஒன்றியத்தால் அறிமுகப்படுடப்பட்ட ஓர் போர் வானூர்தியாகும்.  மிக்-1 இல் காணப்பட்ட பல குறைபாடுகள் மற்றும் ஒழுங்கற்ற வடிவமைப்புகள் காரணமாக ஏராளமான வடிவமைப்பு மாற்றங்கள் பல செய்யவேண்டிய கட்டாய சூழல் உருவாகியது. இதன் போது மிக்-1 இல் பல மாற்றங்கள் செய்யப்பட்டு 1941ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இரண்டாவது தயாரிப்பாகும்.


தயாரிப்பின் பொது மிக்-3 இல் கொண்டுவரப்பட்ட மாற்றங்களில் சில........                                                             
  1. வானூர்தி இயந்திரம் 10cm முன் கொண்டுவரப்பட்டது.
  2. வெளி இறக்கை தகடுகள் (outer wing panels) 1 பாகை அதிகரிக்கப்பட்டு இருந்தது. 
  3. 250 லீட்டர் எரிபொருள் தாங்கி வானோடியின் இருக்கைக்கு கீழே பொருத்தப்பட்டது.
  4. அத்துடன் வானுடல் (fuselage) decking குறைக்கப்பட்டது.
  5. Radiator bath fairing முன்நோக்கி பெரிதாக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டது.
  6. Supercharger intakes திருத்தப்பட்டது.
  7. 4 wing points உடைய வெளிச்சுமை 220kg ஆக மாற்றப்பட்டது. 
  8. 12.7mm BK machine guns மற்றும் அதே போன்ற தகுதி வாய்ந்த 2 UBK guns ஆகியன இறக்கைக்கு கீழ் பொருத்தப்பட்டன.
  9. வானூர்தியின் மேல் எழும்பும் நிறை 3510kg ஆல் அதிகரிக்கப்பட்டது.