பழமொழி.....

Friday, June 15, 2012

Laser Copter வானூர்தி..

உலங்கு வானூர்திகள் விசேடமான டீசல் எரிபொருளிலேயே இயங்கி வருகின்றன. ஆனாலும் UAV எனப்படும் ஆள் அற்ற வானூர்திகள் எரிபொருள் அல்லது மின்கலம் (fuel or batteries) மூலமே இயங்குகின்றன. அத்துடன் Solar power எனப்படும் சூரிய சக்தி மூலம் இயங்கும் UAV வானூர்திகளும் உள்ளன. எனினும் தற்போது Laser-power எனப்படும் லேசரினால் அதாவது ஒளிக்கதிர்கள் மூலம் இயங்கக்கூடிய சிறிய உலங்கு வானூர்தியைக் கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

22 கிராம் நிறையுள்ள உலங்கு வானூர்தியைக் கொண்டு குறைந்தளவு watts வலுவைக் கொண்ட லேசர் மூலம் சில மணித்தியாலங்கள் இயக்கவைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு மூலம் பல்லாயிரம் மைல் தூரத்தில் உள்ள வானூர்திகளையும் இயங்கவைக்க முடியும் என தெரியவருகிறது.

Saturday, June 9, 2012

MI-24 உலங்கு வானூர்தி..



1972 ஆம் ஆண்டு தொடக்கம் சோவியத் விமானப்படையினால் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் உலங்குவானூர்தியானது தாக்குதற்திறன் மிக்கதாக இருப்பது மட்டுமல்லாது சிறு எண்ணிக்கையான துருப்புக்களையும் நகர்த்தவல்லது.



ஈழத்தில் இந்தியக் காடையர் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே, அங்கு இவ் உலங்கு வானூர்தி தமிழ் மக்களுக்கு அறிமுகமானது. “முதலைக் கெலி" , "மூஞ்சுறு “ என்று இது தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய Mi- 24 உலங்குவானூர்தியில் தேசியத் தலைவர் அவர்களை புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்ட நிகழ்வானது இந்தியாவிற்கும் ஈழத்திற்க்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணம் ஆக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.


1960 களில். தாக்குதற் திறனுடன் கூடியதும் துருப்புக்களைக் காவிச்செல்லக் கூடியதுமானஉலங்குவானூர்திகளின் தேவை சோவியத்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான Mikhail Leont'yevich Mil என்பவரால் உணரப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் படைகளின் பயன்பாட்டிலிருந்த UH-1A Huey என்ற உலங்குவானூர்தியின் வடிவத்தை ஒத்த வடிவமுடைய உலங்குவானூர்தியே Mil அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அவரது வடிவம் எட்டுத் துருப்புக்களைக் காவிச்செல்லக் கூடியதாகவும் இருபக்கங்களிலுமமைந்த இறக்கைகளில் மொத்தம் ஆறு ஏவுகணைகளைத் தாங்கிச்செல்லக் கூடியதாகவும் அமைந்திருந்தது. இது "பறக்கும் தாங்கி" என அழைக்கப்படுகிறது.




இரண்டு தாரை இயந்திரங்களால் இயக்கப்படும் இதன் பிரதான சுழலியானது (rotor) நான்கு சுழலித் தகடுகளையும் (rotor blade) வாற்சுழலியானது (tail rotor) மூன்று சுழலித் தகடுகளையும் கொண்டுள்ளன. துப்பாக்கி இயக்குபவரும் விமானியும் ஒருவர்பின் ஒருவராக தனித்தனி அறைகளில் (cockpit) அமர்ந்திருப்பர். இருபக்கங்களிலுமுள்ள இறக்கைகள் பலவகையான தாக்குதல் ஆயுதங்களைக் காவவல்லதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடவடிக்கையின் தன்மைக்கேற்ப இவ் உலங்குவானூர்தி ஆயுதங்களைக் காவிச்செல்லவல்லது.



இவ் உலங்குவானூர்தியின் உடற்பகுதி மற்றும் சுழலித் தகடுகள் 50 கலிபர் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கக் கூடியவாறு காப்பிடப்பட்டுள்ள அதேவேளை அதன் விமானியறைகள் 37 மில்லிமீற்றர் கனரக துப்பாக்கித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கவல்லது. வேகமான பறப்பின்போது இதன் சிறப்பான வடிவமைப்பையுடைய இறக்கை உலங்குவானூர்திக்குத் தேவையான மொத்தத் தூக்குசக்தியின் (lift) 25 வீதமான பங்கை வழங்குகின்றது.



1977 – 1978 காலப்பகுதியில் எதியோப்பியப் படைகள் சோமாலியர்களுக்கு எதிராக நடாத்தியயுத்தத்தில் இவ் உலங்குவானூர்திகள் முதன்முதலாக எதியோப்பியப் படைகளுக்கு ஆதரவாகக் களமிறக்கப்பட்டன. அதன் பின்னர் கம்போடிய-வியட்னாமிய யுத்தம், லிபிய யுத்தம் மற்றும் சோவியத்துடனான ஆப்கானிஸ்தான் யுத்தம் என்பவற்றில் இவ் உலங்குவானூர்திகளின் பங்கு கணிசமாகதாக இருந்தது. சிறிலங்கா போரைப் பொறுத்தளவில், ஈழத்தில் இந்தியக் காடையர் படை இவ்வகை உலங்குவானூர்திகளை 1987 – 1990 காலப்பகுதியில் பயன்படுத்தியிருந்தனர். 1995 ஆம் ஆண்டு இவ்வகை உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப் படையிலும் இணைத்துக்கொள்ளப்பட்டு தமிழருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.


1979 ஏப்ரல் மாதத்தில் ஆப்கான் படைகளுக்கு Mi-24 வகை உலங்குவானூர்திகள் சோவியத்தால் வழங்கப்பட்டது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் படைகளால் பயன்படுத்தப்படும் இவ்வகை உலங்குவானூர்திகள் சமர்க்களங்களில் அவற்றின் திறனை நிருபித்துள்
ளன.


Friday, June 8, 2012

MI-17 உலங்கு வானூர்தி..




Mi -17 ஆனது சோவியத் ஒன்றியத்தின் mil வானூர்தி கட்டுமான நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு துருப்புக்காவி உலங்கு வானூர்தியாகும். இது Mi-8M, Hip போன்ற பெயர்களினால் அழைக்கப்படுகிறது.

 

உலங்கு வானூர்தி Mi-8 இன் வான்சட்டத்திற்கு, பெரிய TV3-117MT இயந்திரத்தையும், Mi -14 க்கான சுழலிகளையும் தொலைத் தொடர்புகளையும் பொருத்தி, மேலதிக எடையை தாங்குவதற்காக மறுவமைக்கப்பட்ட உடல்பகுதி என்பவற்றுடன் Mi-17 தயாரிக்கப்பட்டது.


இது 6,000 மீ உயரத்தில் எழுந்து பறக்கவும், level flight speed 270 km / h வேகத்தை அடைவதற்கும், மற்றும் மேல் ஏறும் வீதம் 20 m/s ஆகவும் செயல்பட புதிய TV3-117MT இயந்திரங்கள் உதவுகின்றன. இது சிறந்த, மற்றும் பாரிய துருப்புக்காவி உலங்கு வானூர்தி ஆகும்.


போர்க்களத்தில் துருப்புக்களை விநியோகம் செய்தல் மற்றும் போர் உபகரணங்கள், ஆயுதங்கள், குண்டுகள் வெடி மருந்துகள் போன்றவற்றை விநியோகம் செய்தல், வானிலிருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்குதல், மருத்துவ உதவிகள், காயம்பட்டவர்களை வெளியேற்றுதல், வானிலிருந்து கட்டளைகள் பிறப்பித்தல் மற்றும் வழிகாட்டுதல், முக்கிய நபர்களை கொண்டுசெல்லல், பேரழிவு நிவாரண விநியோகம், மற்றும் மீட்பு போன்ற நடவடிக்கைகளில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.


ஈழத்தில் தமிழருக்கு எதிரான ஸ்ரீலங்கா தரப்பின் போரின்போதும் பாரிய அழிவுகளையும்,சொல்லமுடியாத துயரங்களையும் தமிழர் தரப்பிற்கு ஏற்படுத்தி இருந்தது. போராளிகளின் எதிர் தாக்குதலால் சில Mi-17 உலங்கு வானூர்திகள் அழிக்கப்பட்டன.


இது இறுதியாக லிபியாவின் கடாபிக்கு எதிரான போரின் போது கடாபி தரப்பாலும், நேட்டோ படைகளாலும் பயன்படுத்தப்பட்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தன. அறுபதுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் 12,000 திற்கு மேற்ப்பட்ட Mi-17 உலங்கு வானூர்திகள் பாவனையில் உள்ளன.





Sunday, May 27, 2012

சூரிய சக்தி வானூர்தி..

சுவிட்சர்லாந்து நாட்டில் சூரிய சக்தியால் இயங்கும் வானூர்தி ஒன்று பரிசோதனை அடிப்படையில் நேற்று தனது முதல் பயணத்தை தொடங்கியது.

இவ்விமானத்தை ஆன்ரி போர்ஷ்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகிய 2 விமானிகள் ஸ்பெயின், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஓட்டிச் சென்றனர்.

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் இன்று தரையிறங்கும் இந்த விமானம், 70 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டைப் பிரிக்கும் பைரனீஸ் மலைகளைக் கடந்து செல்லும் இந்த விமானத்தின் இறக்கை 63 மீட்டர் நீளமுடையது. இறக்கை முழுவதும் சூரிய ஒளியை கிரகிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.















Wednesday, May 2, 2012

Westland Lynx....


Westland Lynx உலங்கு வானூர்தியானது பிரித்தானியாவின் Yeovil இல் அமைந்துள்ள Westland Helicopters கட்டுமான பணியகத்தில் கட்டப்பட்ட பல்பயன்பாட்டை கொண்ட இராணுவ உலங்கு வானூர்தி ஆகும். முதலில் சாதாரண போக்குவரத்து மற்றும் கடற்படை பயன்படுத்தப்பட்டது. பின்னர் இராணும், போர்க்களம் மற்றும் கடற்படை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இது 1977 ஆம் ஆண்டிலிருந்து 15 க்கு மேற்ப்பட்ட நாடுகளில் போர்க்களங்களில் பயன்படுடப்படுகிறது. இது போர்க்களத்தில் ஆயுத விநியோகம், எதிர்த்து தாக்குதல், தேடல், மீட்பு மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மீது எதிர்த்து போன்ற சேவைகளில் ஈடுபடுகிறது.


Westland Lynx உலங்கு வானூர்தியானது உலகில் உள்ள வானூர்திகளில் அதிஉயர் வேகத்தைக் கொண்ட உலங்கு வானூர்தியாகும். அத்துடன் உலகின் முதல் முழு Aerobatic Helicopter என்ன சிறப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் ஆரம்ப வடிவமைப்பு Westland WG.13 ஆகும் பின்னர் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் Westland Lynx உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டது.




Monday, April 30, 2012

CyberQuad UAV..



ஆஸ்திரேலிய "Cyber Technology (WA) Pty Ltd" நிறுவனத்தின் உருவாக்கத்தில் உருவான "CyberQuad UAV" எனப்படும் வானோடி இல்லாத சிறியரக உளவு உலங்கு வானூதியானது சாதாரண சுழலிகளுக்குப் பதிலாக நான்கு ducted fans (உள்ளமை சுழலிகள்) உதவியுடன் செயல்ப்படுகிறது , ஏற்கனவே சேதமடைந்த, பாவனைக்கு உதவாத Oil Rigs பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

CyberQuad UAV ஆனது செங்குத்தாக புறப்படும் மற்றும் தரையிறங்கும் (VTOL) வசதியைக் கொண்டது." அதன் ducted fans அடிப்படையிலான தொழிநுட்பம் சிறப்பாக இருப்பதால் "இருந்து உற்றுப்பார்க்கும் கழுகுப்பார்வை" (perch and stare) முன்னேற்றகரமாக உள்ளது. இது தீயணைப்பு, ஆபத்துக்களை கண்டறியவும், மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கும் பயன்படுகிறது. ஏதும் முக்கிய சேதம் அல்லது தீவிபத்து ஏற்பட்டால் அங்கு என்ன நிலைகளிலும் CyberQuad தரையிறக்கும் திறன் கொண்டது. அத்துடன் பொறியியலாளர்கள் மற்றும் பேரழிவு கட்டுப்பாட்டு நிபுணர்கள் பார்வைக்கு கட்டமைப்பு சேதம், மற்றும் சேதத்தின் தன்மை போன்றவற்றை துல்லியமாக முன்வைக்கிறது.




இரசாயனப் பொருட்கள், மாசுக்கள் மற்றும் எண்ணெய், எரிபொருட்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு விசேட உயர் தொழில்நுட்பத்தை கொண்ட வீடியோக்கமரா (HD Video Camera) மற்றும் உணர் கருவிகள் (Sensors) போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் வீடியோக்கமரா மூலம் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு கோணங்களில் நகர்த்தி தெளிவான காட்சிகளைப் பெற முடியும். இது காற்றில் அமைதியாகப் பறந்து தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்திற்கு நேரடி படங்கள் மற்றும் காட்சிகளை தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும்.

இதன் உணர் கருவிகள் மூலம் பலவற்றை உணரமுடியும். உதாரணத்திற்கு குண்டுவெடித்த இடத்திற்கு இதனை அனுப்பினால் அதன் சத்தம், அதிர்வுகள் மற்றும் வெளிச்சம் போன்றவற்றை வைத்து அதன் நிறை, வகை, தன்மை மற்றும் பாவித்த இரசாயனப் பொருட்கள் போன்ற விபரங்களை துல்லியமாக அறியத்தரும்.






Thursday, April 26, 2012

தமிழ் மொழியில் Air France



Air France வானூர்தி சேவை நிறுவனம், பயணிகளுக்கான தனது விரிவாக்கசேவையில், தமிழ் மொழிக்கு முக்கிய இடத்தினை வழங்கவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

Air France வானூர்தி சேவையானது,பிரான்சின் Charles De Gaulle பிரதான வானூர்தி நிலையத்தில் தனதுசேவையினை விரிவாக்கம்செய்யவுள்ளது. Air France வானூர்திசேவையில், தமிழ்ப்பயணிகளின் போக்குவரத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள Air France, இதனைக்கருத்தில் கொண்டே, பயணிகளுக்கான சேவை விரிவாக்கத்தில் தமிழர்களுக்குமுக்கிய இடத்தினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டில் இந்த விரிவாகம் முழுமையடையவுள்ள நிலையில்,தமிழ்ப்பயணிகளுக்கான இலகுபடுத்தப்பட்ட பயணித்தினை உறுதிசெய்ய, தமிழ்மொழியிலான சேவையினை உள்ளடக்கவுள்ளதாகவும், இதற்காக தமிழர்களை வேலையில் அமர்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


                                     பிரான்ஸ் அஞ்சல் சேவையில் உள்ள தமிழர் முத்திரைகள்