ஈரானிய ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆளில்லா வானூர்தியானது 100கிலோ நிறையுள்ள ஏவுகணைகளைக் காவிக்கொண்டு 100கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்ட இவ்வானூர்தியானது துரப்புலமானிக்கு (Radar) அகப்படாமல் தப்பிக்கும் திறனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
Liko என்ற பெயர் கொண்ட இவ் ஆளில்லா வானூர்தியின் சிறப்பம்சம் ஓடுபாதை தேவையில்லை. உந்துகணை (Rocket) போன்று விண்ணில் பறந்து செல்லக்கூடியது. அத்துடன் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கொடுக்கப்படும் உத்தரவுகளுக்கு அமைய தரை வான் மற்றும் தரைக்கடியில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கக்கூடியது.
தற்போது ஆளில்லா வானூர்திகளை அமெரிக்கா தயாரித்து வருகிறது. அதன் மூலம் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு போட்டியாக ஈரானும் ஆளில்லா வானூர்திகளை தயாரிக்கும் பணியில் சத்தமில்லாமல் ஈடுபட்டு வருகிறது.ஆனால் அமெரிக்க ஆளில்லா வானூர்திகள் ஓடுதளத்தில் சிறிது தூரம் ஓடித்தான் விண்ணில் பறக்கிறது. . அப்பாஸ்ஜாம் என்ற ஆராய்ச்சியாளர் இதை வடிவமைத்து வருகிறார். இதுபோன்ற வானூர்தி உலகில் தயாரிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வானூர்தி அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருகிறது.
“Son of Concorde” என அழைக்கப்படும் A2 Hypersonic வானூர்தியானது பழைய Concorde வானூர்தியை விட இரு மடங்கு வேகத்துடனும் மற்றும் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்துடனும் பறக்கக்கூடியது.
வர்த்தக வானூர்திப் போக்குவரத்தில் A2 Hypersonic வானூர்தியானது (6000km/h / 3728mph) வேகத்தில் பயணம் செய்வது குறித்து தற்போது ஐரோப்பிய வானூர்தி உற்பத்தியாளர்களிடையே மிகத்தீவிரமான ஆராய்ச்சி செய்யப்படுகிறது.
இந்த வானூர்தியானது 300 பயணிகள் மற்றும் மொத்தமாக 400 தொன்களையும் சுமக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது.
இது Lapcat ( Long Term Advanced Propulsion Concepts and Tchnologies)செயற்றிட்டம் எனப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்தை ESTEC (European Space Research and Technology Centre)மற்றும் ESA ( The Engireening Branch of the European Space Agency) ஆகியன இணைந்து ஒழுங்கமைக்கின்றன.
திரவ ஐதரசன் இயந்திரங்களானது (Liquid Hydrogen Engines) பாரம்பரியமான ஜெட் (Traditional Kerosene Turbo-Jets) முறையிலிருந்து முழுவதும் வித்தியாசமானது. இச்செய்முறையானது Lapcat செயற்றிட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ளது.
திரவ ஐதரசன் எரிபொருளானது மிக உயர்ந்தளவான சக்தி வினைத்திறனாகும், பாரம் குறைந்தது, காபன் வெளியேற்றங்கள் (Carbon Emissions) இல்லை, சூழலுக்கு குறைந்தளவான சேதம், ஆகியவற்றுடன் இயந்திரத்தினை குளிர்மைப்படுத்தும் ஒரு மிதமான தட்பநிலையை உண்டு பண்ணும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஏவுகணை நிலையமைத்தல், மற்றும் விண்வெளி இயந்திர உற்பத்தி தொழிற்துறைகள் ஆகிய மிகமுன்னேற்றமடைந்த உயர் செயற்பாட்டு தொழில்நுட்பங்களுக்கு இந்த உயர்வான எரிபொருளை பயன்படுத்தும்முகமாக நீண்டகாலத்துக்கு அபிவிருத்தி செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும் இதனுடைய உயர் கொழுந்துவிட்டெரிதல் (High Flammability) மிகமுக்கியமானதொரு பிரச்சினையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
Lapcat செயற்றிட்டத்தில் 6 நாடுகளுடன் (பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ்,இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன்) 14 பங்காளிகளும் அடங்குகின்றனர். அத்துடன் பிரித்தானிய Reaction Engines கம்பனியும் இணைந்துள்ளது. Scimitar என்ற பெயரின் கீழ் ஒரு ஆராய்ச்சி பிரதிகலத்தை அபிவிருத்தி செய்துகொண்டிருக்கின்றது. இந்த இயந்திரமானது Turbo-Jet தொழிற்பாடுகளையும் Ramjet தொழிற்பாடுகளையும் கொண்டுள்ளது.
இன்றைய தலைமுறையின் வானூர்திகலையியலில் A2 Hypersonic வானூர்திகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வானூர்தியானது 140m க்கு அதிகமான நீளமுடையதாகவும், (Airbus A380 ஆனது 73m நீளமானது) ,பாரம் குறைந்த வானூர்திகட்டுமாணம், 7.5m விட்டம், மத்தியில் Delta இறக்கைகள் ,ஒவ்வொன்றும் இரண்டு இயந்திரங்களை சுமந்து செல்லும்படியாகவும் வடிவமைக்கப்படவுள்ளது, மேலும் ஐதரசன் வானூர்தி எரிபொருள் தாங்கிகள் ஆகியவற்றினையும் உள்ளடக்கவுள்ளன.
இந்த அதிவேக விமானப்பயணம் 2023 ஆம் ஆண்டளவில் சாத்தியமாகும் என பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். நடைமுறை வணிக வகுப்பு பயணச்சீட்டில் உங்கள் பயணம் சாத்தியமாகும். அதிகவேகத்துக்கு உதாரணமாக Brussels To Sydney நகரங்களுக்கிடையில் 4மணி நேரப்பறப்பு சாத்தியமாகுமாம்.
யாழ்ப்பாணம் என்று பெயரிடப்பட்ட போர் வானூர்தி பிரித்தானிய படையில் இருந்தது
மறைந்துபோன பல வரலாறுகளை நாம் திரும்பிப் பார்க்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். 2ம் உலகப் போர் நடைபெற்றவேளை, மலேசியாவில் வசித்த ஈழத் தமிழர்கள் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக செயற்பட விரும்பியுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் பணத்தை சேகரித்து, ஒரு போர் வானூர்தியை வாங்கி அதனை பிரித்தானிய படைக்கு கொடுத்துள்ளார்கள். ஆனால் அந்த வானூர்திக்கு யாழ்ப்பாணம் என்று பெயர்வைக்கவேண்டும் என்றும் அவர்கள் அன்றைய தினம் கோரிக்கை விடுத்துள்ளனர். 1915ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி, இந்த வானூர்தியை பிரித்தானிய படையிடம் கையளித்துள்ளனர் ஈழத் தமிழர்கள். சுமார் 97 ஆண்டுகளுக்கு முன்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கான ஆவணங்களும், புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியர்களுக்கு தெரியாதா, மற்றும் அவர்கள் மறந்துபோன விடையங்கள் கூட தற்போது வெளியாகி தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. சுமார் 97 வருடங்களுக்கு முன்னர், ஜேர்மன் நாட்டுடன் பிரித்தானியா போரில் ஈடுபட்டவேளை, ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு உதவியுள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. இதேபோலவே இந்தியாவின் மாபெரும் புரட்சியாளரான சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள், இந்தியாவை விட்டு வெளியேறி மலேசியாவில், ஒரு இராணுவத்தைத் திரட்டினார். இதற்கு இந்திய தேசிய விடுதலை இராணுவம் என்று பெயர் சூட்டினார். இதில் வெளிநாட்டில் வசித்துவந்த பலர் இணைந்துகொண்டனர். ஆனால் இதிலும் மறைந்திருக்கும் உண்மை ஒன்று உள்ளது. இப் படையில் இந்தியர்கள் மட்டும் இணையவில்லை. இதில் ஈழத் தமிழர்கள் பலரும் இணைந்து போரிட்டுள்ளனர்.
அதாவது இந்திய விடுதலைக்காக ஈழத் தமிழர்களும் போராடியுள்ளனர் என்பதுதான் உண்மை. இச் செய்திகள் மலேசியாவில் இருந்து தற்போது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
தரை, கடல் மற்றும் பனிப் பிரதேசத்தில் பறக்கும் வானூர்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். அமெரிக்காவின் லிசா அகோயா (Lisa Akoya) என்ற நிறுவனம் அதி நவீன வானூர்தியை வடிவமைத்துள்ளது.
தரையில் பறக்கும்போது அதன் இரு இறக்கைகளும் விரியும். தண்ணீரில் பறக்கும்போது அது படகு போன்று மாறும். அதே நேரத்தில் பனிப் பிரதேசத்தில் செல்லும்போது அதன் இரு இறக்கைகளும் பனிக்கட்டிகளை உடைத்து சீரமைத்து அதில், பயணிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வானூர்தியில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதில் 2011 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். மணிக்கு 135 மைல் முதல் 155 மைல் வேகத்தில் பறக்கும். இந்த அதி நவீன வானூர்தியின் விலை €300,000 என நிர் ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளில் அதாவது 2014ஆம் ஆண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.
அதற்கு முன்னதாக இந்த வானூர்திகள் 70 தடவை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனை கண் காட்சி அமெரிக்காவின் வின்கான்சின் (Wisconsin, USA) மாகா ணத்தில் உள்ள (EAA AirVenture Oshkosh) ஒஸ்காஷ் ஏர்வென்ஞ்சர் நிறு வனத்தில் கடந்த மாதம் நடந்தது.
உலகின் பல நாடுகள் தங்கள் படைத்துறைக்கும் உளவுத் துறைக்கும் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா தனது படைத் துறைக்கு ஆளில்லாப் போர் வானூர்திகளை அதிகமாக இணைத்து வருகிறது. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ யும் சொந்தமாக ஆளில்லா வானூர்தித் தளங்களை உலகின் பல பாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா வானூர்திகள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் வானூர்திகள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா வானூர்திகளை களமிறக்கியுள்ளது.
ஆளில்லாப் போர் வானூர்திகள் அளவில் பெரியதாக உருவாகி வருகையில் வேவு பார்க்கும் ஆளில்லா வானூர்திகள் அளவில் மிகச் சிறியதாகி வருகின்றன. ஆளில்லா வானூர்திகளை ஆங்கிலத்தில் Drones என அழைப்பர். இதில் சிறிய வகைகளை Miniature Drones அல்லது micro air vehicles (MAVs). இந்த micro air vehicles சிறு பூச்சிகளின் உடலமைப்பு, அவற்றின் உணரிகள், பறப்பதற்கு அவை பாவிக்கும் நுட்பங்கள் போன்றவற்றைப் கவனம் செய்து உருவாக்கப்பட்டுள்ளன. சில வேவு வானூர்திகள் குருவிகள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூச்சிகளின் உடலில் உள்ள தொழில் நுட்பங்களை reverse-engineering முறை மூலம் கண்டறிந்து அந்த நுட்பங்களை சிறிய வேவு வானூர்திகளில் பாவித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள். சிறு பூச்சிகளின் கண்கள், வௌவாலின் காதுகள், தேனிக்களின் உணரி ரோமங்கள் போன்றவற்றில் உள்ள தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை வேவு பார்க்கும் micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். பிரெஞ்சு விஞ்ஞானிகள் பறவைகளின் சிறகடிக்கும் தொழில் நுட்பத்தை தமது micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். வேவு வானூர்திளில் வடிவமைப்பில் பூச்சிகளினதும் குருவிகளினதும் செயற்படு நுட்பங்களைப் புகுத்துவதை Nano-biomimicry MAV design என்கின்றனர். கடந்த 350 மில்லிய ஆண்டுகளாக பூச்சியினங்கள் தங்கள் பறக்கும் திறனை எப்படி கூர்ப்படையச் செய்தன என்பதை ஆராய்ந்த பிரித்தானிய விலங்கியலாளர் ரிச்சர்ட் பொம்பிரி (Zoologist Richard Bomphrey) பூச்சியினங்கள் சிறுவிமானங்களை வடிவமைப்பது எப்படி என எமக்குக் கற்றுத் தந்துள்ளன என்கிறார்.
இது கொசு அல்ல கொலைகாரி
'With insects you get a combination of both these assets in miniature. And when you consider we have been flying for just over a hundred years as opposed to 350 million years, I would say it is they who have got it right, and not us!'
ஏர்பஸ் A300-600ST (Super Transporter) அல்லது பெலூகா அகல உடல் வானூர்தி வகையைச்சார்ந்தது. அது ஏர்பஸ் நிறுவனத்தின் ஒரு A300-600 வடிவமைப்பு மாற்றப்பட்ட அகல உடல் வானூர்தி ஆகும். வானூர்தி பொருட்களை எடுத்து செல்வதற்கும் பல்வேறு வடிவங்களை கொண்ட பொருடைகளை கொண்டு செல்வதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது . பெலுகா திமிங்கலத்தை போன்ற உருவத்தை கொண்டதால் பெலூகா என்று வழங்கப்பட்டு அவவாறே பெயரும் இடப்பட்டது.
Airbus A-300 வானூர்தியின் அடிப்படையில் தான் பெலூகா வானூர்தி உருவாக்கப்பட்டது. இது 47 தொன் வரை சுமக்கக்கூடியது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு, இன்னும் 15 ஆண்டுகளில் வானூர்திகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் மூன்று நிறுவனங்களை வடிவமைப்பு செய்து தருமாறு கேட்டுக் கொண்டது. லோக்கீட் மார்ட்டின் (Lockheed Martin) ,நோர்த்ரோப் குர்ம்மான் (Northrop Grumman), போயிங் (The Boeing) ஆகிய அந்த மூன்று வானூர்தி தயாரிப்பு நிறுவனங்களும் வானூர்தி மாதிரி வடிவமைப்புகளைச் செய்துள்ளன.
ஒவ்வொரு வடிவமைப்பும் மிகவும் வித்தியாசமாகத் தான் தெரிகிறது அனாலும் தூய்மையான புகை வெளியேற்றம் (cleaner exhaust), குறைந்த சத்தம் (less noise) குறைந்தளவு எரிபொருள் பவனை (lower fuel consumption) ஆகியவற்றை கருத்தில் கொண்டே நாசா தனது இறுதி முடிவுகளை எடுக்கும் அத்துடன் நவீன மயப்படுத்தப்பட்டுள்ள வான் போக்குவரவு முகாமை அமைப்புடன் (Air Traffic Management System) பாதுகாப்புடன் செயல்ப்பட வேண்டும்.
இந்த வடிவமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒலியின் வேகத்தின் 85 வீதத்தை பூர்த்தி செய்யும் படியும், 50,000 முதல் 100,000 இறாத்தல்கள் வரை பயணிகள் அல்லது பொருட்களை சுமக்க கூடியதாயும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
..படங்களின் மேல் அழுத்துங்கள் படம் பெரிதாய் தெரியும்..
..லோக்கீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பு..
..நோர்த்ரோப் குர்ம்மான் (Northrop Grumman) நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பு..
..போயிங் (The Boeing) நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பு..