பழமொழி.....

Sunday, May 27, 2012

சூரிய சக்தி வானூர்தி..

சுவிட்சர்லாந்து நாட்டில் சூரிய சக்தியால் இயங்கும் வானூர்தி ஒன்று பரிசோதனை அடிப்படையில் நேற்று தனது முதல் பயணத்தை தொடங்கியது.

இவ்விமானத்தை ஆன்ரி போர்ஷ்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகிய 2 விமானிகள் ஸ்பெயின், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஓட்டிச் சென்றனர்.

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் இன்று தரையிறங்கும் இந்த விமானம், 70 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டைப் பிரிக்கும் பைரனீஸ் மலைகளைக் கடந்து செல்லும் இந்த விமானத்தின் இறக்கை 63 மீட்டர் நீளமுடையது. இறக்கை முழுவதும் சூரிய ஒளியை கிரகிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.















Wednesday, May 2, 2012

Westland Lynx....


Westland Lynx உலங்கு வானூர்தியானது பிரித்தானியாவின் Yeovil இல் அமைந்துள்ள Westland Helicopters கட்டுமான பணியகத்தில் கட்டப்பட்ட பல்பயன்பாட்டை கொண்ட இராணுவ உலங்கு வானூர்தி ஆகும். முதலில் சாதாரண போக்குவரத்து மற்றும் கடற்படை பயன்படுத்தப்பட்டது. பின்னர் இராணும், போர்க்களம் மற்றும் கடற்படை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இது 1977 ஆம் ஆண்டிலிருந்து 15 க்கு மேற்ப்பட்ட நாடுகளில் போர்க்களங்களில் பயன்படுடப்படுகிறது. இது போர்க்களத்தில் ஆயுத விநியோகம், எதிர்த்து தாக்குதல், தேடல், மீட்பு மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மீது எதிர்த்து போன்ற சேவைகளில் ஈடுபடுகிறது.


Westland Lynx உலங்கு வானூர்தியானது உலகில் உள்ள வானூர்திகளில் அதிஉயர் வேகத்தைக் கொண்ட உலங்கு வானூர்தியாகும். அத்துடன் உலகின் முதல் முழு Aerobatic Helicopter என்ன சிறப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் ஆரம்ப வடிவமைப்பு Westland WG.13 ஆகும் பின்னர் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் Westland Lynx உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டது.




Monday, April 30, 2012

CyberQuad UAV..



ஆஸ்திரேலிய "Cyber Technology (WA) Pty Ltd" நிறுவனத்தின் உருவாக்கத்தில் உருவான "CyberQuad UAV" எனப்படும் வானோடி இல்லாத சிறியரக உளவு உலங்கு வானூதியானது சாதாரண சுழலிகளுக்குப் பதிலாக நான்கு ducted fans (உள்ளமை சுழலிகள்) உதவியுடன் செயல்ப்படுகிறது , ஏற்கனவே சேதமடைந்த, பாவனைக்கு உதவாத Oil Rigs பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

CyberQuad UAV ஆனது செங்குத்தாக புறப்படும் மற்றும் தரையிறங்கும் (VTOL) வசதியைக் கொண்டது." அதன் ducted fans அடிப்படையிலான தொழிநுட்பம் சிறப்பாக இருப்பதால் "இருந்து உற்றுப்பார்க்கும் கழுகுப்பார்வை" (perch and stare) முன்னேற்றகரமாக உள்ளது. இது தீயணைப்பு, ஆபத்துக்களை கண்டறியவும், மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கும் பயன்படுகிறது. ஏதும் முக்கிய சேதம் அல்லது தீவிபத்து ஏற்பட்டால் அங்கு என்ன நிலைகளிலும் CyberQuad தரையிறக்கும் திறன் கொண்டது. அத்துடன் பொறியியலாளர்கள் மற்றும் பேரழிவு கட்டுப்பாட்டு நிபுணர்கள் பார்வைக்கு கட்டமைப்பு சேதம், மற்றும் சேதத்தின் தன்மை போன்றவற்றை துல்லியமாக முன்வைக்கிறது.




இரசாயனப் பொருட்கள், மாசுக்கள் மற்றும் எண்ணெய், எரிபொருட்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு விசேட உயர் தொழில்நுட்பத்தை கொண்ட வீடியோக்கமரா (HD Video Camera) மற்றும் உணர் கருவிகள் (Sensors) போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் வீடியோக்கமரா மூலம் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு கோணங்களில் நகர்த்தி தெளிவான காட்சிகளைப் பெற முடியும். இது காற்றில் அமைதியாகப் பறந்து தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்திற்கு நேரடி படங்கள் மற்றும் காட்சிகளை தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும்.

இதன் உணர் கருவிகள் மூலம் பலவற்றை உணரமுடியும். உதாரணத்திற்கு குண்டுவெடித்த இடத்திற்கு இதனை அனுப்பினால் அதன் சத்தம், அதிர்வுகள் மற்றும் வெளிச்சம் போன்றவற்றை வைத்து அதன் நிறை, வகை, தன்மை மற்றும் பாவித்த இரசாயனப் பொருட்கள் போன்ற விபரங்களை துல்லியமாக அறியத்தரும்.






Thursday, April 26, 2012

தமிழ் மொழியில் Air France



Air France வானூர்தி சேவை நிறுவனம், பயணிகளுக்கான தனது விரிவாக்கசேவையில், தமிழ் மொழிக்கு முக்கிய இடத்தினை வழங்கவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

Air France வானூர்தி சேவையானது,பிரான்சின் Charles De Gaulle பிரதான வானூர்தி நிலையத்தில் தனதுசேவையினை விரிவாக்கம்செய்யவுள்ளது. Air France வானூர்திசேவையில், தமிழ்ப்பயணிகளின் போக்குவரத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள Air France, இதனைக்கருத்தில் கொண்டே, பயணிகளுக்கான சேவை விரிவாக்கத்தில் தமிழர்களுக்குமுக்கிய இடத்தினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டில் இந்த விரிவாகம் முழுமையடையவுள்ள நிலையில்,தமிழ்ப்பயணிகளுக்கான இலகுபடுத்தப்பட்ட பயணித்தினை உறுதிசெய்ய, தமிழ்மொழியிலான சேவையினை உள்ளடக்கவுள்ளதாகவும், இதற்காக தமிழர்களை வேலையில் அமர்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


                                     பிரான்ஸ் அஞ்சல் சேவையில் உள்ள தமிழர் முத்திரைகள்

Tuesday, March 13, 2012

M200G Volantor

M200G Volantor ஆனது பறப்பியல் பொறியியலாளர் Paul Moller என்பவரால் பறக்கும் வட்டு வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட ஓர் பறக்கும் கவிகை ஊர்தி (hovercraft) அல்லது காற்று மிதப்பு ஊர்தி (air-cousin vehicle) என்றும் சொல்லலாம். இது இப்போது M200 Neuera என்று பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளது. இது எட்டு கணினியால் கட்டுப்படுத்தப்படும் சுழலிகளால் இயக்கப்படுகிறது. மூன்று (3)அடி உயரத்தையும் பத்து (10) அடி விட்டத்தையும் கொண்ட இதில் இரண்டு பேர் பயணம் செய்யலாம். இதன் மத்தியில் தான் இருக்கைகள் மற்றும் control panel அமைத்துள்ளது. Wankel எனப்படும் gasoline, diesel அல்லது ethanol எரிபொருள் கொண்டு இயங்கும் எட்டு இயந்திரங்களின் வலுவுடன் இயக்கப்படுகிறது. இதன் வேகம், திசை மற்றும் அதன் உயரம் ஆகியவை மட்டும் தான் கணனியால் கட்டுப்படுத்தப்படுகிறது அத்துடன் இதன் கணணி அமைப்பு இதை பத்து அடிக்கு மேல் பறப்பதையும் தடை செய்கிறது (Federal Aviation Administration சட்டப்படி 10 அடிக்கு மேல் பறக்கும் அனைத்தும் வானூர்தியாக கருதப்படும்) இது 80 Km/h வேகத்தில் எப்படிப்பட்ட இடத்திலும் செல்லக்கூடியது.


M200G Volantor பொதுவான இயல்பு... 

  • இருக்கை : 2 பேர் 
  • விட்டம்: 10 ft (3.0 m)
  • உயரம் : 3 ft (0.91 m)
  • வலு:  8 × 550 Wankel rotary engine
  • உயர் வேகம் : 100 mph (160 km/h; 87 kn)
  • குறை வேகம்: 75 mph (65 kn; 121 km/h)
  • தூரம்: 185 mi (161 nmi; 298 km)
  • உயரம்: 10 ft (3 m)


Monday, March 12, 2012

AirScooter II

AirScooter II உலாங்கு வானூர்தி Woody Norris என்பவரால் 2000 ஆண்டலவில் உருவாக்கப்பட்டது. இது செலுத்த இலகுவான, நிறை குறைந்த, மற்றும் பாதுகாப்பான ஓரச்சு உலாங்கு வானூர்தியாகும். இதன் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் செலுத்தும் முறை உந்துருளியைச் செலுத்தும் (motorcycle style) முறைக்கு ஒப்பானது இதன் கைப்பிடிகளை (Handlebars) முறுக்குவதன் மூலம் இதன் ஆர்முடுகலை (acceleration) அதிகரிக்கலாம். அத்துடன் ஓரச்சு சுழலிகள் என்றபடியால் இதற்கு வால் சுழலி தேவை இல்லை. அத்துடன் இதன் கைப்பிடிகளை திருப்புவதன் வலது, இடது என்று திருப்புவதன் மூலம் இதன் திசையை மாற்றலாம். இதன் Throttle உயரத்தைக் (சுழலிகளின் கோணத்தை மாற்றுவதன் மூலம்) கட்டப்படுத்த பயன்படுகிறது. இதை கால் மூலம் (pedal) கட்டுப்படுத்தும் அவசியம் இல்லை.

இதன் சிறப்பம்சங்கள்.....
  1. இது உந்துருளியை செலுத்துவதைப் போல் செலுத்த இலகுவானது.
  2. மிகவும் நிறை குறைந்தது.
  3. நீரிலும் மற்றும் நிலத்திலும் செங்குத்தாய் தரையிறங்கவும், மேலேற்றவும் முடியும்.
  4. இதை செலுத்த வானோடி உரிமம் தேவை இல்லை.

இதன் அமைப்பு......
  1. இயந்திரம்: 1 x 65hp AeroTwin four-stroke 
  2. சுழலிகளின் சுழல் விட்டம்: 4.27m 
  3. நீளம்: 3.81m
  4. உயரம்: 3.35m 
  5. அகலம்: 2.13m 
  6. எடை: 150kg, 
  7. உயர் வேகம்: 100km/h

Saturday, March 10, 2012

UFO - HeliThruster


Ultimate Flying Options - (UFO) HeliThruster எனப்படும் உலாங்கு வானூர்தியானது புதிய தலைமுறையின் இரசனைக்கு ஏற்ப சிறந்த வடிவமைப்பு அம்சங்கள், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கொண்ட தயாரிப்பாகும். இது நியூசிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டது. பெரிய மலைகள், அடர்ந்த காடுகள், பாலைவனங்கள் போன்ற இடங்களிலும் இதன் மூலம் பயணம் செய்ய முடியும். நெருக்கமான நிலங்கள், பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் நீர், கால்வாய்கள் கண்காணிக்க எதுவாக குறைந்த உயரத்தில் மற்றும் மெதுவாக பறக்க முடியும். பெரும் நிலத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இதில் எரிபொருள் நிரப்பினால் 600 மைல்கள் (960 கிலோமீட்டர்) பறக்க முடியும் அத்துடன் அவசர காலத்திற்காக 1/2 மணி நேரம் பறக்க கூடியதாக மேலதிக எரிபொருள் தாக்கியும் கொண்டுள்ளது அத்துடன் இது நிமிடத்திற்கு 1500 அடி மேல் ஏறும் வீதத்தையும் கொண்டுள்ளது. 


UFO - HeliThruster ஆனது 164 குதிரை வலுவைக் கொண்ட EJ25 இயந்திரம் மூலம் இயக்கப்படுவதுடன் (72" - 76") அங்குல உந்துகணைகளையையும் (propeller) கொண்டுள்ளது. இது நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் பாவனையில் உள்ளது. இதன் அதிக வலுவான இயந்திரம், சிறிய வால்கள் மற்றும் குறுகிய வானுடல் (fuselages) இதற்கு சாதகமாகவும், பாதகமாகவும் அமைந்துள்ளது
.