வானில் வானூர்திகள், உலங்கு வானூர்திகள்,ஆளில்லா வானூர்திகள் போன்ற பல ஊர்திகள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தாலும், அதிகளவு சுமைகளை சுமந்துகொண்டு வான்போக்குவரத்ததில் ஈடுபடுபவை Aeroscraft எனப்படும் பலூன் போன்ற வானூர்திகளே. இவை Aeroship எனவும் அழைக்கப்படுகின்றன. இப்போது Skylifter என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் காற்றில் மிதந்தபடி பயணிக்கும் Aeroscraft ML866 என்ற Aeroship ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த வானூர்தி மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. 1. Aerostat System. சமச்சீரான பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் காணப்படும் இந்த அமைப்பு தான் மேலே மிதக்கக்கூடிய பகுதி, இதில் தான் வளிமண்டல வாயுவை விட அடர்த்தி குறைந்த வாயுவை நிரப்ப வேண்டும். சூரிய சக்தியை சேமிக்கும் சூரியகலங்களையும் (solar panels), வானூர்தியை கட்டுப்படுத்தும் Propulsion System என்ற அமைப்பும் இதில் காணப்படுகிறது.
2. Service Trunk. control pod with flight deck மற்றும் Aerostat System ஆகியவற்றை இணைக்கும் பாலமாகவும் control pod with flight deck அமைப்பைத் தாங்கும் தூணாகவும் தொழிற்படுகிறது.
3. control pod with flight deck இவ் வானூர்தியின் பிரதான கட்டுப்பாட்டு மையம் இது தான். இதில் இரண்டு வானோடிகள் இருக்கக்கூடிய வானோடி அறை மற்றும் வானூர்தியை கட்டுப்படுத்தும் Propulsion System ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. flight deck மற்றும் Aerostat System ஆகியவற்றை suspension lines என்ற அமைப்பு இணைக்கிறது. இதன் கீழ் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு சுமைகள் (Cargo) ஏற்றப்படுகின்றன.
Aeroscraft ML866 வானூர்தியானது Biodiesel மற்றும் சூரியசக்தி மூலம் இயக்கப்படும் மூன்று இயந்திரங்கள் மூலம் இது இயக்கப்படுகிறது. 148 km/h வேகத்தில் பயணிக்க கூடிய இந்த வானூர்தி 150 தொன் வரை சுமந்து 2,000 km தொடர்சியாகப் பயணிக்கக்கூடியது. குறைதளவு எரிபொருள் பாவனை, குறைதளவு Co2 வெளியேற்றம், எந்த பக்கமும் திரும்பும் தன்மை, மற்றும் எப்படிப்பட்ட இடங்களிலும் தரை இறங்கும் வசதி போன்றன இதன் சிறப்பம்சங்களாகும்.
இந்த வானூர்தி பயணிகள் போக்குவரதிற்கு சாத்தியமா? அப்படி சாத்தியமானால் 80 பயணிகள் வரை பயணிக்கலாம் எனத் தெரியவருகிறது.
வானூர்திகள் தமது பறப்பை மேல் எழும்புதல், வானில் பறத்தல், தரை இறங்குதல் போன்ற மூன்று கட்டங்களில் நிறைவு செய்கின்றன. இவற்றில் மேல் எழும்புதல் என்பது மிகவும் சிக்கலானதும், செலவு கூடியதாகவும் உள்ளது. இதனை தவிர்பதற்காக எனன செய்யலாம் என மண்டையை போட்டு குழப்பின Air Bus நிறுவன பொறியியளாளர்களுக்கு தோன்றிய திட்டம் தான் இந்த Eco-Climb தொழில்நுட்பம் ஆகும்.
மின்காந்த (electro-magnetic motors) விசையால் இயங்கும் சிறிய ரக இயந்திரங்களின் மூலம் இயங்கும் Eco-Climb ஆனது வானூர்தியைச் சுமந்து கொண்டு ஓடுபாதையில் வேகமாக பயணிப்பதன் மூலம் வானூர்திக்கு விசையை வழங்கி மேல் எழும்பச் செய்கிறது. இதன் செயற்பாட்டையும் வேகத்தையும் ஓடுபாதையின் நீளம் (runway length), காற்றின் வேகம் (wind speed), சூழல் வெப்பநிலை (temperature), வானூர்தியின் எடை (the weight of the aircraft) போன்ற காரணிகள் கட்டுப்படுத்துகின்றன.
Eco-Climb தொழில்நுட்பத்தின் நன்மைகள்.......
வானூர்தி மேல் எழும்புவதற்கு 1/3 பங்கு ஓடுபாதை போதுமானது. அதனால் வானூர்தி நிலையங்களை நகரங்களிற்கு மத்தியிலும் அமைக்கலாம்.
வானூர்தி சிறிதளவு தூரம் ஓடியவுடன் உடனடியாக மேல் எழும்புகிறது.
இது மின்காந்த விசையால் செயற்படுவதாலும் மேல் எழும்புவதற்கு வானூர்தி இயந்திரம் பயன்படுத்தாமையலும் எரிபொருள் செலவு குறிக்கப்படுகிறது.
இதன் பயன்பாட்டால் இயந்திரங்களின் சத்தம் இல்லை.
அத்துடன் சூழல் மாசடைதல், Co2 வெளியேறம் குறைவு.
மேல் எழும்புவதற்கு இயந்திரம் பயன்படுத்தாமையால் வானூர்தியின் எடை குறைகிறது.
இந்த தொழில்நுட்பத்தில் பல சிக்கல்கள் இருந்தாலும், அவற்றை அகற்றி இதை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு Air Bus நிறுவனம் தீர்மானித்துள்ளது.
Airbus வானூர்தி கட்டுமான நிறுவனம் வானத்தில் பறக்கும் அனுபவத்தை பயணிகள் பெற புதிய வகை வானூர்தி ஒன்றை வடிவமைத்து வருகின்றனர். இந்த வானூர்தி முழுக்க முழுக்க கண்ணாடி போன்ற பொருளால் தயாரிக்கப்படுகிறது. உள்ளே இருந்தபடி ஆகாயத்தை அப்படியே தெளிவாகப் பார்க்கலாம். மேகக் கூட்டங்கள் உங்களைத் தாண்டிச் செல்வதைப் பார்த்து ரசிக்கலாம். இரவில் வானத்து நட்சத்திரங்களுக்குள்ளே பறக்கும் இனிய அனுபவத்தைப் பெறலாம். இந்த வானூர்தி Bionic Structures, Biopolymer membrane, Composite Materials, Integrated Neural Network, Morphing Materials, Self-reliant Materials, Ecological Materials, 3D Printing, Holographic Technology, Energy Harvesting போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ் வானூர்தியின் எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையில் இதன் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன அத்துடன் வெளியேறும் காபனின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வானூர்தியில் First class, Business class, Economy class என்றெல்லாம் தனித் தனி வகுப்புகள் கிடையாது. எல்லாமே ஒரே வகுப்பு தான். ஆனால் மூன்று வலையங்களாக பிரிக்கப்பட்டுள்ளது எந்த வகை வலயம் தங்களுக்கு தேவை என்பதை பயணிகளே தேர்வு செய்து கொள்ளலாம். கட்டணம் ஒன்றுதான்.
1. Vitalising Zone
இந்த வலயம் வானூர்தியின் முன்பகுதியில் அமைத்துள்ளது. இதில் இதில் பொருத்தப்படும் இருக்கைகள் பயணிகளின் உடல் பருமனுக்கேற்ப மாறும் வசதி கொண்டவை, உடம்பு பிடிக்கும் (massage) வசதி உள்ளது அத்துடன் விரும்பிய பக்கம் திரும்பும் வசதியும் கொண்டுள்ளது. பயணிக்கும் போது வானில் உள்ள நட்சத்திரங்களைப் பார்க்கலாம். இதன் உள்புற நிறம், சூழலுக்கேற்றவாறு மாறிக் கொள்ளும் வசதியைக்கொண்டுள்ளது. பகல் நேரத்தில் பயணிக்கும்போது சூரியஒளியை தடுத்து, வான்வெளியில் காணப்படும் பொருட்கள் பற்றிய விபரங்களை பயணிகளுக்கு வழங்குகிறது.
2. Interaction Zone
இவ் வலயம் வானூர்தியின் மத்தியில் அமைத்துள்ளது. இதில் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளை கணணியில் விளையாடும் வசதி, மது அருந்த Bar வசதி, வானூர்தி எங்கு பறக்கிறது போன்ற விபரங்களுடன் கூடிய முப்பரிமானத் தொழில்நுட்பத்துடனான உலகவரைபடங்கள், பலவசதிகள் கொண்ட மாநாட்டுமண்டபம் போன்றவற்றை கொண்டுள்ளது. எதில் சிறப்பம்சம் என்னவென்றால் இவை எல்லாமே ஒரே இடத்தில்தான் அமைத்துள்ளது. பயணிகள் விரும்பியவற்றை தெரிவு செய்யலாம்.
3. Smart Tech Zone
இவ் வலயம் வானூர்தியின் வால் பகுதியில் அமைத்துள்ளது. Holographics Communication Technologies தொழினுட்பத்துடன் கூடிய இருக்கைகள் அத்துடன் அவை பயணிகளின் உடல் பருமனுக்கேற்ப மாறும் வசதியையும் கொண்டுள்ளது.Holographics Technologies மூலம் கணணியில் விளையாடும் வசதி, புத்தகம் படிக்கும் வசதி, இணையம் பயன்படுத்துதல் போன்றவற்றுடன் பயணிக்கலாம். காணோளியைப் பாருங்கள்
2050-ம் ஆண்டு முதல் இந்த வகை வானூர்திகள் நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்
ஆளில்லா போர் வானூர்திகள் இப்போது படைத் துறையில் பிரபலமாகிவிட்டன. இனி இந்தத் தொழில் நுட்பம் பயணிகள் வானூர்தியிலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது வானோடி இல்லாமல் வானூர்தி இயங்கப்போகிறது
இரட்டை இயந்திரம் கொண்ட பயணிகள் வானூர்தி ஒன்று பிரித்தானியாவில் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது. இது தரையில் இருந்து தொலைக் கட்டுப்பாட்டு மையம் (Remote Control), வானூர்தியில் அதிசக்தி வாய்ந்த உள்ள கணனிகள் மற்றும் காணொளிப் பதிவுக் கருவிகள் அத்துடன் செய்மதி தொலைத் தொடர்பு அமைப்பு (satellite communications) போன்றவற்றின் மூலம் பறக்க வைக்கப்பட இருக்கிறது. பிரித்தானிய அரசும் ஏழு வானூர்தி நிறுவனங்களும் இணைந்து 62 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றன. இத்திட்டம் Autonomous Systems Technology Related Airborne Evaluation and Assessment (ASTRAEA)என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டதில் முதலில் பறக்க விடும் வானூர்தி Jetstream எனப் பெயரிடப்பட்டுள்ளது. அது The Flying Test Bed எனவும் ஆழைக்கப்படுகிறது. தற்போது வானோடிகள் ஓட்டும் பல வானூர்திகளில் பல தானியங்கிக்கருவிகள் உள்ளன. வானூர்திகள் மேலெழுதல் தரையிறங்குதல் போன்றவை தானியங்கிகள் மூலமே செய்யப்படுகின்றன.
ASTRAEAஇன் Jetstreamஇல் உருவங்களை இனம் காணும் காணொளிப்பதிவு கருவிகள் முக்கிய பாகம் வகிக்கின்றன. வேறு வானூர்திகளில் மோதும் சூழல் உருவாக்கப்பட்டு அதில் வானோடியில்லா வானூர்திகள் எப்படி செயற்படுகின்றன என்றும் பரீட்சித்துப் பார்க்கப்படவிருக்கிறது.
அத்துடன் இதில் 3 முக்கிய செயற்ப்பாடுகள் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது.
Cockpit இல் உள்ள electronic eye ஆக செயற்படும் காணொளி கருவி கணணி அமைப்புடனும், நிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும். weather avoidance system ஆனது செய்மதி மூலமும், காணொளி கருவி மூலமும் மேகம், முகில், மழை, காற்று, இடி, மின்னல், காற்றின் ஈரப்பதன், காற்றின் அடர்த்தி, காற்றின் அமுக்கம் போன்றவற்றின் துல்லியமான தகவல்களைப் பெற்று நிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு அறிவிப்பதுடன், தன்னிச்சையான முடிவுகளையும் எடுத்து காலநிலையைச் சமாளிக்கிறது.
2) Sense And Avoid Test...... (உணர்ந்து தவிர்த்தல்)
காணொளி கருவி (Camera) மற்றும் வானூர்தியின் அடையாளம்காண் உணரி (Aircraft Identification Antenna) ஆகியவை இணைந்து செயற்பட்டு வானூர்திக்கு அண்மையில் உள்ள வானூர்திகள் மற்றும் வேறு பறக்கும் பொருட்களை இனம் கண்டு அதிலிருந்து விலகிகொள்வதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கிறது. Aircraft Identification Antenna சமிக்ஞைகளை வெளியிட்டு அதனை உள்வாங்கி கொள்வதன் மூலம் அயலில் உள்ளவற்றை உணர்கிறது. Camera அயலில் உள்ளவற்றை படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புகிறது. 3) Emergency Landing Test.. (அவசர தரையிறக்கம்)
வானூர்தி பயணங்களிற்கு அவசர தரையிறக்கம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் ஆளில்லா வானூர்தி பயணங்களில் அவசர தரையிறக்கம் என்பது முக்கியமானதும் சிக்கலானதும் ஆகும். தரையிறக்கும் இடத்தை கண்டு பிடித்தல், தரையிறக்கும் இடம் பாதுகாப்பானது என உறுதிசெய்தல் அதில் உள்ள தடைகளை தவிர்த்தல், ஆபத்தில்லாமல் பாதுகாப்பாக தரையிறங்குதல் போன்றவற்றை தீர்மானிக்கிறது.
வானோடிகள் இல்லாத வானூர்திகளை மலிவாக இயக்க முடியும். 2020ஆண்டு வானோடிகள் இல்லாத வானூர்திகள் ஐம்பது பில்லிய டாலர் பெறுமதியான விற்பனை வருமானத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு ஐரோப்பிய நாடுகளின் Stealth தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா தாக்குதல் போர் வானூர்தியின் unmanned combat air vehicle (UCAV) முதலாவது பறப்பு 01/12/2012அன்று நடைபெற்றது. பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், ஸ்பெயின், கிரேக்கம், சுவிற்சலாந்து ஆகிய 6 நாடுகள் இத்திட்டத்தில் இணைந்திருந்தன. 500 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த வானூர்திக்கு நியுரோன் nEUROn எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தூரப்புலமானி தவிர்ப்பு(Stealth) தொழில் நுட்பம் Stealth என்பதன் தமிழ் அர்த்தம் தவிர்த்து அல்லது அகப்படாமல் முன்னேறுதல். போர் முனையில் எதிரி வானூர்திகளை தூரப்புலமானி (Radar) மூலம் கண்டறிவர். தூரப்புலமானியால் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு Stealth தொழில் நுட்பம் உதவிகிறது. இதன்படி வானூர்தி தட்டையாக வடிவமைக்கப்படும். அத்துடன் தூரப்புலமானியில் இருந்து வரும் வானொலி அலைகளை உறிஞ்சும் இரசாயனப் பதார்த்தம் வானூர்தியில் பூசப்பட்டிருக்கும். ஈழ வான்படையின் வானூர்திகள் கூட தூரப்புலமானியில் அகப்படாமல் இருந்தது. அது எப்படியோ தெரியாது.
ஆளில்லாப் போர் வானூர்திகள் உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் வானூர்திகளின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் வானூர்திகள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் வானூர்திகள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன.
நியுரோன் வானூர்திகள் நியுரோன் வானூர்திகள் ஆளில்லாத தொழில்நுட்பத்தையும் (Drone Technology) தூரப்புலமானி தவிர்ப்பு(Stealth Technology) தொழில் நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்படுகின்றன. இது இரண்டு Adour mk951 இயந்திரங்கள் மூலம் இயக்கப்படுகிறது. lesar உதவியுடன் செல்லக்கூடிய 250kg எடையுடைய இரு குண்டுகளையும் காவிச் செல்லக்கூடியது. இதன் உயர் வேகம் Mach 0.8 ஆகவும் எடை 4,500 கிலோ ஆகவும் காணப்படுகிறது.
எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய முக்கோண வடிவ பயணிகள் (Hybrid wing-body plane) வானூர்தியை நாசா அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்காலத்தில் வானூர்தி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் ஐக்கிய இராட்சியத்தின் Cranfield Aerospace Limited நிறுவனத்தின் உதவியுடன் போயிங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதலில் X-48C ரக முக்கோண வடிவ வானூர்தியை மட்டும் தயாரித்துள்ளது. இது கலிபோர்னியாவின் எட்வார்ட் வான்படை தளத்திலிருந்து (Edwards Air Force Base in California) தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.
வானோடி இல்லாமல் இயங்கும் இந்த வானூர்தி X-48B Blended Wing Body வானூர்தியின் மாதிரியைக் கொண்டு வேகம், கட்டுப்பாட்டு அமைப்புகள், மூக்குப்பகுதி, வானூர்தியின் சத்தம் போன்ற மாற்றங்களுடன் தயாரிக்கப்பட்டது. அத்துடன் உடல் அகலம் 20 அடியாக நீட்டப்பட்டது.
பின்னர் விரிவுபடுத்தப்பட்டு பல வானூர்திகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முக்கோண வானூர்தியின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இந்த வானூர்திகளே அடுத்த 20 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எனவே இந்த விமானம் அடுத்த 15-20 ஆண்டுகளில் மிகச்சிறந்த பயணிகள் விமானங்களாக மாறுவதுடன், ராணுவ பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்று நாசா கூறியுள்ளது.
உளவு வானூர்தியைப் போன்று உள்ள இந்த வானூர்தியில் ஜன்னலோர இருக்கைகளே இருக்காது. மாறாக அதிக இருக்கைகள் மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும். அத்துடன் அதிக சரக்குகளையும் இதில் ஏற்றிச் செல்லவும் முடியும். முக்கோண வடிவில் இருப்பதால், இது காற்றை எளிதில் கிழித்துக்கொண்டு வேகமாக செல்ல முடியும். 500 இறாத்தல் நிறையையும், மணிக்கு 140 மைல் வேகத்திலும் பறக்கும் இவ் வானூர்தி 10,000 அடி உயரத்திற்கு மேல் பயணிக்கக்கூடியது.
அமெரிக்க ராணுவத்தின் Falcon (Force Application and Launch from Continental United States) HTV-2 ( Hypersonic Technology Vehicle 2) மிகையொலி (Hypersonic) வானூர்தி சாதாரண வர்த்தக வானூர்தியைக் விட 22 மடங்கு அதிவேகமாக சீறி செல்லக்கூடியதாகும். கலிபோர்னியாவில் வான்டென் பெர்க் விமானப்படை தளத்தில் உந்துகணை (Rocket) பின்புறத்தில் இணைக்கப்பட்ட இந்த வானூர்தி சீறிப் பாய்ந்து சென்றது. இந்த அதிவேக வானூர்தி புறப்பட்ட 9 நிமிடத்தில் தொடர்பை நிறுத்திக் கொண்டது. இந்த வானூர்தி பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த வானூர்தி 2000 சென்டிகிரேடு வெப்பநிலையை தாங்கக் கூடியதாகும். அதிவேக வானூர்தி ஏற்கனவே ஏவும் திட்டம் கைவிடப்பட்டு வடிவமைப்பு மாற்றப்பட்டது. வானூர்தியில் குறைபாடு இருந்ததைத் தொடர்ந்து அப்போது வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. இந்த மிகையொலி வானூர்தி 139 வினாடிகளில் மணிக்கு 16700 மைல் வேகத்தில் சென்று உள்ளது. அதிவேக வானூர்தி கட்டுப்பாட்டை இழந்ததை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கடலில் விழ உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த HTV-2 வானூர்தியானது ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு பயணிக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டது. அதாவது Mach 22. வேகத்தைக் கொண்டது.இது நியூயோக்கிலிருந்து லொஸ் ஏஞ்சல்சிற்கு 12 நிமிடங்களில் பயணிக்கக்கூடியதெனக் கூறப்படுகின்றது. அத்துடன் அமெரிக்கப் படையால் உலகின் எந்தவொரு இடத்திற்கும் 1 மணித்தியாலத்திற்குள் சென்று இலக்கைத் தாக்கக்கூடியவாறு இது வடிவமைக்கப்பட்டிருந்தது.
கடலில் விழ உத்தரவிடப்படுவதற்கு அதாவது அதன் தொடர்புகள் இல்லாமல் போக முன்னர் 9 நிமிடங்களிற்கும் மேலாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டுவந்ததாக அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வுநிறுவனம் கூறியது. லொஸ் ஏஞ்சல்சின் வடமேற்காக 130 மைல்கள் தூரத்திலுள்ள வன்டன்பேக் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இவ்வானூர்தி திட்டமிட்ட பறப்புப் பாதையான பசுபிக் வழியாகச் செல்லும்போதே வீழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இது இத்திட்டத்தின் இரண்டாவது பரிசோதனையாகும். ஏப்ரல் 2010 இல் ஏவப்பட்ட முதல் வானூர்தியும் தொடர்பையிழந்து வீழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியாவில் வான்டென் பெர்க் விமானப்படை தளத்தில் Minotaur 4உந்துகணையுடன் பறக்க தயார் நிலையில்
ஈட்டிமுனை போன்ற வடிவமுள்ள இந்த HTV-2 வானூர்தியானது, இதனை ஏவும் Minotaur 4 உந்துகணையிலிருந்து தனியாகப் பிரிந்து விண்வெளி எல்லைக்குச் சென்று பின்னர் பூமியின் பரப்பிற்குள் மணிக்கு 13,000 மைல் வேகத்தில் திரும்பி வரும். இந்த வேகத்தில்தான் இது சமுத்திரத்திற்குள் விழும்போதும் பயணித்திருந்தது. HTV-2 இன் நிர்வாகி கூறுகையில், ‘எங்களுக்கு வானூர்தியை விண்வெளிக்கருகே கொண்டுசெல்லத் தெரிகின்றது. அதனை மணிக்கு 13,000 மைல் வேகத்துடன் புவிச்சுற்றுவட்டத்திற்குள் எப்படி நுழைப்பதென்றும் தெரிகின்றது. ஆனால் அதனை இந்தளவு வேகத்துடன் எப்படி விரும்பிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதென்றுதான் தெரியவில்லை. இது கவலைக்குரியதே என்று குறிப்பிட அவர் எதற்கும் ஒரு தீர்வு இருக்குமென்பதில் நாம் உறுதியாயிருக்கிறோம் என்றும் நாங்கள் அதைத்தான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார்.
FLIGHT OF THE FALCON
பெயர் : பல்கன் HTV-2
உயர்வேகம் : 13,000mph or Mach 22. A MiG-25
can typically reach Mach 2.3, or 1,520mph
நீளம் : 12ft long
நிறை : 900kg
உருவாக்கப்பட்ட உலோகம் : Made of experimental material that can
withstand up to 3,500f (2000C) it will experience upon re-entry.
செலவு : $308million (£189million), so far payload
Potentially anything up to 12,000lbs, including a nuclear bomb.
ஆளுமை: Anywhere in the world in less than 60 minutes
பாதுகாப்பமைச்சுடன் தொடர்புடைய லெக்சிங்ரன் நிறுவனத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி, ‘இராணுவத்திற்கு இவ்வாறான மிகையொலி (Hypersonic) வானூர்திகளைப் பயன்பாட்டில் கொடுப்பதற்கு இன்னும் நீண்ட நாட்கள் எடுக்கும்,’ என்றார்.
ஆயிரத்து 386 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இவ் மிகையொலி வானூர்தியின் இரண்டாவது முயற்சியும் பிழைத்ததை அடுத்து இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்து மீளாய்வு செய்யப்படலாம் என நம்பப்படுகிறது.