பழமொழி.....

Friday, February 15, 2013

Qaher F-313



ஈரான் ஒரு சர்ச்சைக்குரிய நாடாக திகழ்கிறது. அங்கு சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை தயாரிப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது தனது சொந்த நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் அதி நவீன போர் வானூர்தியை ஈரான் தயாரித்துள்ளது. அது தூரப்புலமானியில் அகப்படாமல் பறக்கும் Stealth தொழிநுட்பத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதற்கு Qaher F-313 (வெற்றியாளர்) என பெயரிட்டுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.

மேலும், அந்த வானூர்தியைப் பார்வையிட்ட அவர் அதன் தொழில் நுட்பத்தை வானோடியிடம் கேட்டறிந்தார். உலக நாடுகளில் இருக்கும் அதிநவீன போர் வானூர்திகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என அவர் வர்ணித்தார். அத்துடன் இது நவீனரக உலோகங்களினால் உருவாக்கப்பட்டது எனவும் இந்த வானூர்தியைப் பல ஆயிரம் மணி நேரம் வானோடிகள் பரிசோதித்ததாகவும் அதன் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார்.
பல போர் வானூர்தி வல்லுனர்கள் ஐக்கிய அமெரிக்காவின் F-22, F-35 ஆகிய போர் வானூர்திளின் தன்மைகளை ஈரானின் Qaher-313 வானூர்தி கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.


Qaher F-313 வானூர்தியின் சிறப்பம்சங்கள்.......

  1. ஒற்றை இருக்கை மட்டும் கொண்ட சிறிய வானூர்தி.
  2. புதியரக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக்கூடியது.
  3. தாக்குதலும் உளவும் செய்யக்கூடியது.
  4. வானூர்தியில் இருந்து வானூர்திக்கும், வானூர்தியிலிருந்து தரைக்கும் தாக்குதல் நடத்தக் கூடியது.
  5. தற்கால போர் வானூர்திகளுடன் ஒப்பிடுகையில் இதன் cockpit சிறிதாக இருப்பதுடன் அடிப்படையானதாகவும் இருக்கிறது.
  6. அனால் இதன் மூக்குப் பகுதி மிகச் சிறியதாக இருக்கிறது.
தூரப்புலமானிகளால் அடையாளம் காண முடியாத தொழில் நுட்பம் கொண்ட போர் வானூர்திகள் Stealth Fighter எனப்படும். உலகிலேயே சிறந்த ரக Stealth Fighter தன்னுடைய Qaher F313போர் வானூர்தி என ஈரான் தெரிவித்திருந்தது.



இது ஈரானின் பொய்........


ஈரான் வெளியிட்ட படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதன் படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.

வானூர்தி மிகவும் சிறியதாக உள்ளமை, பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்டதைப்
போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளமை, வானோடி ருவர் அமர்ந்து செலுத்துவதற்கான இடவசதி மிகவும் குறைவாக இருக்கின்றமை போன்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுவொரு மாதிரி 
வானூர்தி ன நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

காணொளி செய்தி 


Wednesday, February 6, 2013

Black Hornet



இங்கிலாந்து தரைப்படை ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்களுக்கு எதிரான போரில், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் உளவு வானூர்தியை தயாரித்து ஈடுபடுத்துகிறது. 4அங்குல நீளம் (10 cm) மற்றும் 1 அங்குல (2.5 cm)அகலம் கொண்ட இந்த உளவு வானூர்தியின் எடை வெறும் 15 கிராம் தான் அத்துடன் மணிக்கு 35k/m வேகத்தில் பயணிக்கும். 


வானூர்தியின் மூக்கு பகுதியில் உள்ள சக்திவாய்ந்த 3 மிகச் சிறிய ஒளிப்பதிவு கருவிகள் (tiny Cameras), எதிரியின் இலக்கை வெகு துல்லியமாக படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். ( படை வீரனின் கையில் இருக்கும் Hand Phone, Ipad, Tablet போன்றன தான் இதன் கட்டுப்பாட்டு அறை) G.P.S உதவியுடன் இயங்கும் இந்த உளவு வானூர்திக்கு "Black Hornet" (பிளாக் ஹார்னட்) என பெயரிடப்பட்டுள்ளது. 


து எதிரிகளின் இருப்பு, ஆட்பலம், ஆயுதபலம், எதிகளின் பலவீனங்கள் போன்ற விபரங்களை உளவு பார்த்து தாக்குதலில் ஈடுபடும் படையினர்களுக்கு வழங்கி படையினரின் தாக்குதலை இலகுபடுத்தி அவர்களின் இழப்புகளையும் குறைகிறது.


இந்த வானூர்தி எதிரி இலக்கின் மீது பறக்கும் போது யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஓசையை கூட கேட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



Saturday, February 2, 2013

Avian Infrasound Non-lethal Denial System


வானூர்தி நிலையங்களில் வானூர்திகளை சுற்றிவளைத்து தொல்லை கொடுக்கும் பறவைகளை விரட்ட புது கருவியை அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான Technology International நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

வானூர்தியை தரையிறக்கும்போது மற்றும் மேலே கிளப்பும்போது ஏன் நடுவானில் பறக்கும்போதும் கூட திடீர் திடீரென பறவைகள் குறுக்கே வரும். தற்செயலாக கண்ணாடியில் மோதினாலோ அல்லது இயந்திரத்தில் புகுந்தாலோ பயங்கர விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. வானூர்தி நிலைய பகுதியில் பறவைகள் நடமாட்டத்தை தடுக்க தானியங்கி விசிறி, பறவைகளை சிக்கவைக்கும் வலை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. 


இந் நிலையில், மெல்லிய ஒலி எழுப்பி பறவைகளை விரட்டும் கருவியை அமெரிக்காவின் லூசியானா (Louisiana) மாநிலம் லாபிளேஸ் (Laplace) நகரை சேர்ந்த Technology International என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. Avian Infrasound Non-lethal Denial System என்பது இதன் பெயர் அதாவது "பறவைகளை விரட்டும் ஆபத்தற்ற கேட்கமுடியாத ஒலியமைப்பு" என்பது இதன் பொருள். வானூர்திகள் நெருங்கி வருவதை கண்டறியும் உணரி (Detect) இதில் உள்ளது. வானூர்திகள் நெருங்கி வந்ததும் இக்கருவியில் இருந்து குறைந்த அளவு ஒலி (மனிதரால் கேட்க முடியாது) தொடர்ந்து எழுப்பப்படும். அவ்வகை ஒலி பறவைகளுக்கு அது தெளிவாக கேட்கும் என்பதால், பயந்துபோய் ஓடிவிடும்.

இக்கரு வியின் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் முறைப்படி அறிமுகப்படுத்தப்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

                                        பறக்கும் பறவைகளால் பாதிக்கபட்ட                                                                                                  
                                                     பறந்த வானூர்திகள் சில







Wednesday, January 30, 2013

Sky Lifter



வானில் வானூர்திகள், உலங்கு வானூர்திகள்,ஆளில்லா வானூர்திகள் போன்ற பல ஊர்திகள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தாலும், அதிகளவு சுமைகளை சுமந்துகொண்டு வான்போக்குவரத்ததில் ஈடுபடுபவை Aeroscraft எனப்படும் பலூன் போன்ற வானூர்திகளே. இவை Aeroship எனவும் அழைக்கப்படுகின்றன. இப்போது Skylifter என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் காற்றில் மிதந்தபடி பயணிக்கும் Aeroscraft ML866 என்ற Aeroship ஒன்றை உருவாக்கியுள்ளது.


இந்த வானூர்தி மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. 
1. Aerostat System.
சமச்சீரான பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் காணப்படும் இந்த அமைப்பு தான் மேலே மிதக்கக்கூடிய பகுதி, இதில் தான் வளிமண்டல வாயுவை விட அடர்த்தி குறைந்த வாயுவை நிரப்ப வேண்டும். சூரிய சக்தியை சேமிக்கும் சூரியகலங்களையும் (solar panels), வானூர்தியை கட்டுப்படுத்தும் Propulsion System என்ற அமைப்பும் இதில் காணப்படுகிறது.

2. Service Trunk.
control pod with flight deck மற்றும் Aerostat System ஆகியவற்றை இணைக்கும் பாலமாகவும் control pod with flight deck அமைப்பைத் தாங்கும் தூணாகவும் தொழிற்படுகிறது.

3. control pod with flight deck
இவ் வானூர்தியின் பிரதான கட்டுப்பாட்டு மையம் இது தான். இதில் இரண்டு வானோடிகள் இருக்கக்கூடிய வானோடி அறை மற்றும் வானூர்தியை கட்டுப்படுத்தும் Propulsion System ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. flight deck மற்றும் Aerostat System ஆகியவற்றை suspension lines என்ற அமைப்பு இணைக்கிறது. இதன் கீழ் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு சுமைகள் (Cargo) ஏற்றப்படுகின்றன.



Aeroscraft ML866 வானூர்தியானது Biodiesel மற்றும் சூரியசக்தி மூலம் இயக்கப்படும் மூன்று இயந்திரங்கள் மூலம் இது இயக்கப்படுகிறது. 148 km/h வேகத்தில் பயணிக்க கூடிய இந்த வானூர்தி 150 தொன் வரை சுமந்து 2,000 km தொடர்சியாகப் பயணிக்கக்கூடியது. குறைதளவு எரிபொருள் பாவனை, குறைதளவு Co2 வெளியேற்றம், எந்த பக்கமும் திரும்பும் தன்மை, மற்றும் எப்படிப்பட்ட இடங்களிலும் தரை இறங்கும் வசதி போன்றன இதன் சிறப்பம்சங்களாகும்.

இந்த வானூர்தி பயணிகள் போக்குவரதிற்கு சாத்தியமா? அப்படி சாத்தியமானால் 80 பயணிகள் வரை பயணிக்கலாம் எனத் தெரியவருகிறது.



Saturday, January 12, 2013

Eco-Climb



வானூர்திகள் தமது பறப்பை மேல் எழும்புதல், வானில் பறத்தல், தரை இறங்குதல் போன்ற மூன்று கட்டங்களில் நிறைவு செய்கின்றன. இவற்றில் மேல் எழும்புதல் என்பது மிகவும் சிக்கலானதும், செலவு கூடியதாகவும் உள்ளது. இதனை தவிர்பதற்காக எனன செய்யலாம் என மண்டையை போட்டு குழப்பின Air Bus நிறுவன பொறியியளாளர்களுக்கு தோன்றிய திட்டம் தான் இந்த Eco-Climb தொழில்நுட்பம் ஆகும்.


மின்காந்த (electro-magnetic motors) விசையால் இயங்கும் சிறிய ரக இயந்திரங்களின் மூலம் இயங்கும் Eco-Climb ஆனது வானூர்தியைச் சுமந்து கொண்டு ஓடுபாதையில் வேகமாக பயணிப்பதன் மூலம் வானூர்திக்கு விசையை வழங்கி மேல் எழும்பச் செய்கிறது. இதன் செயற்பாட்டையும் வேகத்தையும் ஓடுபாதையின் நீளம் (runway length), காற்றின் வேகம் (wind speed), சூழல் வெப்பநிலை (temperature), வானூர்தியின் எடை (the weight of the aircraft) போன்ற காரணிகள் கட்டுப்படுத்துகின்றன.


Eco-Climb தொழில்நுட்பத்தின் நன்மைகள்.......
  1. வானூர்தி மேல் எழும்புவதற்கு 1/3 பங்கு ஓடுபாதை போதுமானது. அதனால் வானூர்தி நிலையங்களை நகரங்களிற்கு மத்தியிலும் அமைக்கலாம்.
  2. வானூர்தி சிறிதளவு தூரம் ஓடியவுடன் உடனடியாக மேல் எழும்புகிறது.
  3. இது மின்காந்த விசையால் செயற்படுவதாலும் மேல் எழும்புவதற்கு வானூர்தி இயந்திரம் பயன்படுத்தாமையலும் எரிபொருள் செலவு குறிக்கப்படுகிறது.
  4. இதன் பயன்பாட்டால் இயந்திரங்களின் சத்தம் இல்லை.
  5. அத்துடன் சூழல் மாசடைதல், Co2 வெளியேறம் குறைவு.
  6. மேல் எழும்புவதற்கு இயந்திரம் பயன்படுத்தாமையால் வானூர்தியின் எடை குறைகிறது.

இந்த தொழில்நுட்பத்தில் பல சிக்கல்கள் இருந்தாலும், அவற்றை அகற்றி இதை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு Air Bus நிறுவனம் தீர்மானித்துள்ளது.

2050 ஆண்டளவில் இதை எதிர்பார்க்கலாம்.


Friday, January 4, 2013

கண்ணாடி வானூர்தி.


Airbus வானூர்தி கட்டுமான நிறுவனம் வானத்தில் பறக்கும் அனுபவத்தை பயணிகள் பெற புதிய வகை வானூர்தி ஒன்றை வடிவமைத்து வருகின்றனர். இந்த வானூர்தி முழுக்க முழுக்க கண்ணாடி போன்ற பொருளால் தயாரிக்கப்படுகிறது. உள்ளே இருந்தபடி ஆகாயத்தை அப்படியே தெளிவாகப் பார்க்கலாம். மேகக் கூட்டங்கள் உங்களைத் தாண்டிச் செல்வதைப் பார்த்து ரசிக்கலாம். இரவில் வானத்து நட்சத்திரங்களுக்குள்ளே பறக்கும் இனிய அனுபவத்தைப் பெறலாம். இந்த வானூர்தி Bionic Structures, Biopolymer membrane, Composite Materials, Integrated Neural Network, Morphing Materials, Self-reliant Materials, Ecological Materials, 3D Printing, Holographic Technology, Energy Harvesting போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ் வானூர்தியின் எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையில் இதன் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன அத்துடன் வெளியேறும் காபனின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வானூர்தியில் First class, Business class, Economy class என்றெல்லாம் தனித் தனி வகுப்புகள் கிடையாது. எல்லாமே ஒரே வகுப்பு தான். ஆனால் மூன்று வலையங்களாக பிரிக்கப்பட்டுள்ளது எந்த வகை வலயம் தங்களுக்கு தேவை என்பதை பயணிகளே தேர்வு செய்து கொள்ளலாம். கட்டணம் ஒன்றுதான்.



1. Vitalising Zone



இந்த வலயம் வானூர்தியின் முன்பகுதியில் அமைத்துள்ளது. இதில் இதில் பொருத்தப்படும் இருக்கைகள் பயணிகளின் உடல் பருமனுக்கேற்ப மாறும் வசதி கொண்டவை, உடம்பு பிடிக்கும் (massage) வசதி உள்ளது அத்துடன் விரும்பிய பக்கம் திரும்பும் வசதியும் கொண்டுள்ளது. பயணிக்கும் போது வானில் உள்ள நட்சத்திரங்களைப் பார்க்கலாம். இதன் உள்புற நிறம், சூழலுக்கேற்றவாறு மாறிக் கொள்ளும் வசதியைக்கொண்டுள்ளது. பகல் நேரத்தில் பயணிக்கும்போது சூரியஒளியை தடுத்து, வான்வெளியில் காணப்படும் பொருட்கள் பற்றிய விபரங்களை பயணிகளுக்கு வழங்குகிறது.

2. Interaction Zone



இவ் வலயம் வானூர்தியின் மத்தியில் அமைத்துள்ளது. இதில் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளை கணணியில் விளையாடும் வசதி, மது அருந்த Bar வசதி, வானூர்தி எங்கு பறக்கிறது போன்ற விபரங்களுடன் கூடிய முப்பரிமானத் தொழில்நுட்பத்துடனான உலகவரைபடங்கள், பலவசதிகள் கொண்ட மாநாட்டுமண்டபம் போன்றவற்றை கொண்டுள்ளது. எதில் சிறப்பம்சம் என்னவென்றால் இவை எல்லாமே ஒரே இடத்தில்தான் அமைத்துள்ளது. பயணிகள் விரும்பியவற்றை தெரிவு செய்யலாம்.


3. Smart Tech Zone



இவ் வலயம் வானூர்தியின் வால் பகுதியில் அமைத்துள்ளது. Holographics Communication Technologies தொழினுட்பத்துடன் கூடிய இருக்கைகள் அத்துடன் அவை பயணிகளின் உடல் பருமனுக்கேற்ப மாறும் வசதியையும் கொண்டுள்ளது.Holographics Technologies மூலம் கணணியில் விளையாடும் வசதி, புத்தகம் படிக்கும் வசதி, இணையம் பயன்படுத்துதல் போன்றவற்றுடன் பயணிக்கலாம்.

                                                காணோளியைப் பாருங்கள்

2050-ம் ஆண்டு முதல் இந்த வகை வானூர்திகள் நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்

Friday, December 28, 2012

ஆளில்லா பயணிகள் வானூர்தி


ஆளில்லா போர் வானூர்திகள் இப்போது படைத் துறையில் பிரபலமாகிவிட்டன. இனி இந்தத் தொழில் நுட்பம் பயணிகள் வானூர்தியிலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது வானோடி இல்லாமல் வானூர்தி இயங்கப்போகிறது

இரட்டை இயந்திரம் கொண்ட பயணிகள் வானூர்தி ஒன்று பிரித்தானியாவில் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது. இது தரையில் இருந்து தொலைக் கட்டுப்பாட்டு மையம் (Remote Control), வானூர்தியில் அதிசக்தி வாய்ந்த உள்ள கணனிகள் மற்றும் காணொளிப் பதிவுக் கருவிகள் அத்துடன் செய்மதி தொலைத் தொடர்பு அமைப்பு (satellite communications) போன்றவற்றின் மூலம் பறக்க வைக்கப்பட இருக்கிறது. பிரித்தானிய அரசும் ஏழு வானூர்தி நிறுவனங்களும் இணைந்து 62 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றன. இத்திட்டம் Autonomous Systems Technology Related Airborne Evaluation and Assessment (ASTRAEA) என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டதில் முதலில் பறக்க விடும் வானூர்தி Jetstream எனப் பெயரிடப்பட்டுள்ளது. அது The Flying Test Bed எனவும் ஆழைக்கப்படுகிறது. தற்போது வானோடிகள் ஓட்டும் பல வானூர்திகளில் பல தானியங்கிக்கருவிகள் உள்ளன. வானூர்திகள் மேலெழுதல் தரையிறங்குதல் போன்றவை தானியங்கிகள் மூலமே செய்யப்படுகின்றன.

ASTRAEAஇன் Jetstreamஇல் உருவங்களை இனம் காணும் காணொளிப்பதிவு கருவிகள் முக்கிய பாகம் வகிக்கின்றன. வேறு வானூர்திகளில் மோதும் சூழல் உருவாக்கப்பட்டு அதில் வானோடியில்லா வானூர்திகள் எப்படி செயற்படுகின்றன என்றும் பரீட்சித்துப் பார்க்கப்படவிருக்கிறது.

அத்துடன் இதில் 3 முக்கிய செயற்ப்பாடுகள் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது.

1)  Weather Avoidance Test.... (காலநிலையைச் சமாளித்தல்)


Cockpit இல் உள்ள electronic eye ஆக செயற்படும் காணொளி கருவி கணணி அமைப்புடனும், நிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும். weather avoidance system ஆனது செய்மதி மூலமும், காணொளி கருவி மூலமும் மேகம், முகில், மழை, காற்று, இடி, மின்னல், காற்றின் ஈரப்பதன், காற்றின் அடர்த்தி, காற்றின் அமுக்கம் போன்றவற்றின் துல்லியமான தகவல்களைப் பெற்று நிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு அறிவிப்பதுடன், தன்னிச்சையான முடிவுகளையும் எடுத்து காலநிலையைச் சமாளிக்கிறது.


2) Sense And Avoid Test...... (உணர்ந்து தவிர்த்தல்) 


காணொளி கருவி (Camera) மற்றும் வானூர்தியின் அடையாளம்காண் உணரி (Aircraft Identification Antenna) ஆகியவை இணைந்து செயற்பட்டு வானூர்திக்கு அண்மையில் உள்ள வானூர்திகள் மற்றும் வேறு பறக்கும் பொருட்களை இனம் கண்டு அதிலிருந்து விலகிகொள்வதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கிறது. Aircraft Identification Antenna சமிக்ஞைகளை வெளியிட்டு அதனை உள்வாங்கி கொள்வதன் மூலம் அயலில் உள்ளவற்றை உணர்கிறது. Camera அயலில் உள்ளவற்றை படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புகிறது.


3) Emergency Landing Test.. (அவசர தரையிறக்கம்)


வானூர்தி பயணங்களிற்கு அவசர தரையிறக்கம் என்பது மிகவும் முக்கியம். அதிலும் ஆளில்லா வானூர்தி பயணங்களில் அவசர தரையிறக்கம் என்பது முக்கியமானதும் சிக்கலானதும் ஆகும். தரையிறக்கும் இடத்தை கண்டு பிடித்தல், தரையிறக்கும் இடம் பாதுகாப்பானது என உறுதிசெய்தல் அதில் உள்ள தடைகளை தவிர்த்தல், ஆபத்தில்லாமல் பாதுகாப்பாக தரையிறங்குதல் போன்றவற்றை தீர்மானிக்கிறது.



வானோடிகள் இல்லாத வானூர்திகளை மலிவாக இயக்க முடியும். 2020ஆண்டு வானோடிகள் இல்லாத வானூர்திகள் ஐம்பது பில்லிய டாலர் பெறுமதியான விற்பனை வருமானத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.