உலங்கு வானூர்தி, மனிதனால் உருவாக்கபட்ட மிகச் சிறந்த, பயனுள்ள வானூர்தி ஆகும்.
வானூர்த்தியினால் செங்குத்தாக மேலே உயரவும், கீழிறங்கவும், முன்னோக்கி, பின்னோக்கியும், பக்கவாட்டிலும் பறக்க முடியும். இதனால் நகராமல் ஒரே இடத்திலும் தொடர்ந்து பறக்க இயலும். உலங்கு வானூர்தி தரையிறங்கவும், மேலேறவும் சிறிய இடமிருந்தால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலங்கு வானூர்தி பறக்கும் நுட்பம் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கபட்டுவிட்டது என்பதே உண்மை. கி.பி. 4-ம் நுற்றாண்டில் சீன நாட்டில் ஒரு விளையாட்டுக் கருவி உருவாக்க பட்டது. அக் கருவியில் உலங்கு வானூர்தி விசிறி போல இருந்தவற்றின் உதவியால் அது காற்றில் சுற்றி பறந்தது. 1483-ம் ஆண்டில், பிரபல ஓவியரான லியனார்டோ டாவின்சி, ஒரு உலங்குவானூர்த்திக்கான மாதிரியை வரைந்தார். ஆனால் முதல்முறையாக 1907-ம் ஆண்டில்தான் உலங்கு வானூர்தி வெற்றிகரமாக பறக்கபட்டது. பிரெஞ்சு நாட்டவரான பால் கோர்னு அச்சாதனையை புரிந்தார். அவர் சுமார் 2 மீட்டர் உயரத்தில் 20 நொடிகள் பறந்தார்.
அடுத்து 1936-ம் ஆண்டில், இரட்டை விசிறி உலங்கு வானூர்தியை ஹென்ரிக் போக்கே உருவாக்கினார். ரஷியாவில் பிறந்த பொறியாளரான இகோர் சிகோர்ஸ்கி, ஓர் ஒற்றை விசிறி உலங்கு வானூர்தியை 1939-ல் அமெரிக்காவில் உருவாக்கினார். `சிகோர்ஸ்கி விஎஸ்- 300′ என்ற அந்த உலங்கு வானூர்தி, போரில் பயன்படுத்தபட்ட முதல் உலங்கு வானூர்தி ஆகும்.
இன்று உலகிலேயே பெரியது, ரஷியாவின் `எம்ஐ 26′ உலங்கு வானூர்தி ஆகும். இதில் 20 மெட்ரிக் டன் எடையளவுக்குச் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இது சாதாரண உலங்குவானூர்திகளிலும் எடுத்துச் செல்லபடும் அளவை விட பத்து மடங்கு அதிகம். கடந்த 2005-ம் ஆண்டில் பாகிஸ்தானில் பூகம்பம் ஏற்பட்டது. அபோது, பாதிக்கபட்ட பகுதிகளுக்கு `புல்டோசர்களை’யும், மற்ற அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்ல ஐ.நா.வால் இந்த உலங்கு வானூர்தி பயன்படுத்தபட்டது.
No comments:
Post a Comment