அமெரி்க்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 89 மில்லியன் ஸ்டேலிங் பவுண்ட்ஸ் செலவில் எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர் ( X-51A Waverider ) என்ற ஜெட் வானூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி மணிக்கு 6 Mach அதாவது 4500 மைல்/மணி (1 Mach ஆனது 761.2 மைல்கள் ஆகும்) வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு திட்டத்தை WaveRider Programme என அழைக்கின்றனர்.
இந்த வானூர்தி தெற்கு கலிபோர்னியாவின் எட்வர்டு விமானப்படை (Edwards Air Force Base) தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்தை ஆரம்பித்து. B -52 போர் வானூர்தியின் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர், 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஒரு ராக்கெட் உதவியுடன் உந்தி செலுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த வானூர்தி 70 ஆயிரம் உயரத்தில் பறக்கும் திறன் பெற்றது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்க ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரி்ல் இருந்து பிரிட்டனின் லண்டன் நகருக்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான பரிட்சார்த்த சோதனை அண்மையில் நடைபெற்றது.
அமெரிக்க படையினரின் பயன்பாட்டுக்காக சோதிக்கப்பட்ட அந்த வேவ்ரைடர் வானூர்தியால் ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தை எட்ட முடியவில்லை. B -52 போர் வானூர்தியின் இறக்கையில் இணைக்கப்பட்டு 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பசிபிக் சமுத்திரத்தில் Point Mugu promontory க்கு அருகில் வைத்து உந்திச் செலுத்தப்பட்டது. வேவ்ரைடர் பின்னர் மணிக்கு 4500 மைல் வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அந்த வேகத்தை அடையாமல் கட்டுப்பாட்டை இழந்து புறப்பட்ட 31 விநாடிகளில் அது பசிபிக் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.
அடுத்த தலைமுறை ஏவுகணைகளை தயாரிக்க இந்த அளவுக்கு மிகையொலி (Hypersonic) வேகம் தேவை என்று அமெரிக்க படைத்துறை தெரிவித்துள்ளது. இந்த அதியுயர் தொழில்நுட்பத்துக்காக அமெரிக்கா இரண்டு பில்லியன் செலவழித்ததாக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறது என்பதை இது எடுத்துரைக்கிறது.
No comments:
Post a Comment