பழமொழி.....

Sunday, September 25, 2011

Antonov An-225 (அன்டனோ An-225 ரக வானூர்தி)



Antonov என்று சுருக்கமாக அழைக்கப்படும் Antonov Aeronautical Scientist/Technical Complex வானூர்தி  உற்பத்தி நிறுவனமானது உக்ரெய்னைத் தலைமையகமாகக் கொண்டு 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட Antonov An-225 வானூர்தியே உலகின் மிகப்பெரிய வானூர்தியாகும். இவ்வானூர்தி சோவியத் ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்காக, விண்ணோடங்களை இடம்மாற்றல் மற்றும் விண்ணோடங்களுக்கான உந்துகணைகளை ஏற்றிச்செல்லல் போன்ற செயற்பாடுகளிற் பயன்படுத்தப்படுகின்றது. 1988 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஒரேயொரு வானூர்தியே Antonov நிறுவனத்தினால் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.
பொருட்களை ஏற்றுவதனையே பிரதான நோக்காகக் கொண்டு உருாக்கப்பட்ட இவ்வானூர்திவானூர்தியின் உட்பகுதியில் 250000 கிலோக்கிராம் நிறையையோ அல்லது அதன் உடற்பகுதியின் மேற்புறத்தே 200000 கிலோக்கிராம் நிறையையோ காவிச்செல்ல வல்லது.
An-225 வானூர்தியானது அதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வானூர்தியான An-124 வானூர்தியின் அடியொற்றியே தயாரிக்கப்பட்டது. மேலதிக சுமை ஏற்றத்தக்கதாக வானூர்தியின் உடற்பாகம் மற்றும் இறக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன் மேலதிகமான இரு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு ஆறு இயந்திரங்களைக்கொண்ட வானூர்தியாக உருவாக்கப்பட்டது. அத்துடன் அதிக எடையைத் தாங்கவல்லதாக, பிரதான சக்கரத்தொகுதி (landing gear) 32 சக்கரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டதுடன் உடற்பகுதியின் மேற்புறத்தில் சுமையேற்றிச்செல்ல வல்லதாகக் காணப்படுவதன் காரணமாக, விமானத்தின் காற்றியக்க நிலையைச் சமன்செய்வதற்காக இரட்டை நிலைக்குத்துச் சமநிலைச் செட்டைகள் (twin vertical stabilizer) கொண்டதாக இவ்வானூர்தி உருவாக்கப்பட்டது. இந்த வானூர்தி An-124 விமானத்தினை அடியொற்றி உருவாக்கப்பட்ட போதிலும், முன்னணி இராணுவ நிலைகளுக்கான விநியோகத்திற்கோ அல்லது குறுந்தூரப் பறப்புக்களுக்கோ பயன்படுத்தப்படுவதில்லை.
An-225 வானூர்தியின் மேலெழும் நிறையானது (takeoff weight), அண்மையில் பயன்பாட்டிற்கு வந்த Airbus A-380 உள்ளடங்கலாக அனைத்து விமானங்களிலும் அதிகமாகும்.
இவ்வகை வானூர்தி உலகிலேயே ஒன்றேயொன்றுதான் காணப்படுகின்றது. இரண்டாவது வானூர்தியின் உற்பத்திச் செயற்பாடுகள் 1980 களின் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரண்டாவது வானூர்தி முதல் வானூர்தியின் வடிவத்திலிருந்து சிறிது மாறுபட்டுக் காணப்பட்டது. ஆயினும் சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து இரண்டாவது வானூர்தியின் உற்பத்திச் செயற்பாடுகள் யாவும் இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு அந்த இரண்டாவது வானூர்தியின் உற்பத்திப் பணியினைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டளவில் அதனை முடிப்பதாகத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேறவில்லை.


6 உயர்வலு இயந்திரங்கள் (D-18T 26 390 kgp)
அதிக வேகம் 850 Km/h
பறப்பு வேகம்: 700 Km/h
தொடர்ந்து பறக்கக் கூடிய து}ரம் : 15 400 Km
பறக்கக் கூடிய உயரம் : 11 145 m
நிறை : 350 000 Kg
சுமக்கக் கூடிய நிறை : 250 000 Kg
12 பணியாளர்கள்.
துருப்புக் காவி நிலையில் 600 துருப்புக்கள்
விண்வெளி விமானத்தை மேற்பகுதியில் காவிச்செல்லக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது
நீளம் : 84 m.
உயரம் : 18.20 m 



Saturday, September 24, 2011

உலங்கு வானூர்தி...



உலங்கு வானூர்தி, மனிதனால் உருவாக்கபட்ட மிகச் சிறந்த, பயனுள்ள வானூர்தி ஆகும்.
வானூர்த்தியினால் செங்குத்தாக மேலே உயரவும், கீழிறங்கவும், முன்னோக்கி, பின்னோக்கியும், பக்கவாட்டிலும் பறக்க முடியும். இதனால் நகராமல் ஒரே இடத்திலும் தொடர்ந்து பறக்க இயலும். உலங்கு வானூர்தி தரையிறங்கவும், மேலேறவும் சிறிய இடமிருந்தால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலங்கு வானூர்தி பறக்கும் நுட்பம் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கபட்டுவிட்டது என்பதே உண்மை. கி.பி. 4-ம் நுற்றாண்டில் சீன நாட்டில் ஒரு விளையாட்டுக் கருவி உருவாக்க பட்டது. அக் கருவியில் உலங்கு வானூர்தி விசிறி போல இருந்தவற்றின் உதவியால் அது காற்றில் சுற்றி பறந்தது. 1483-ம் ஆண்டில், பிரபல ஓவியரான லியனார்டோ டாவின்சி, ஒரு உலங்குவானூர்த்திக்கான மாதிரியை வரைந்தார். ஆனால் முதல்முறையாக 1907-ம் ஆண்டில்தான் உலங்கு வானூர்தி வெற்றிகரமாக பறக்கபட்டது. பிரெஞ்சு நாட்டவரான பால் கோர்னு அச்சாதனையை புரிந்தார். அவர் சுமார் 2 மீட்டர் உயரத்தில் 20 நொடிகள் பறந்தார்.
அடுத்து 1936-ம் ஆண்டில், இரட்டை விசிறி உலங்கு வானூர்தியை ஹென்ரிக் போக்கே உருவாக்கினார். ரஷியாவில் பிறந்த பொறியாளரான இகோர் சிகோர்ஸ்கி, ஓர் ஒற்றை விசிறி உலங்கு வானூர்தியை 1939-ல் அமெரிக்காவில் உருவாக்கினார். `சிகோர்ஸ்கி விஎஸ்- 300′ என்ற அந்த உலங்கு வானூர்தி, போரில் பயன்படுத்தபட்ட முதல் உலங்கு வானூர்தி ஆகும்.
இன்று உலகிலேயே பெரியது, ரஷியாவின் `எம்ஐ 26′ உலங்கு வானூர்தி ஆகும். இதில் 20 மெட்ரிக் டன் எடையளவுக்குச் பொருட்களை  எடுத்துச் செல்ல முடியும். இது சாதாரண உலங்குவானூர்திகளிலும் எடுத்துச் செல்லபடும் அளவை விட பத்து மடங்கு அதிகம். கடந்த 2005-ம் ஆண்டில் பாகிஸ்தானில் பூகம்பம் ஏற்பட்டது. அபோது, பாதிக்கபட்ட பகுதிகளுக்கு `புல்டோசர்களை’யும், மற்ற அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்ல ஐ.நா.வால் இந்த உலங்கு வானூர்தி பயன்படுத்தபட்டது.

Friday, September 23, 2011

வேகத்தின் அடிப்படையில் வானூர்தி வகைகள்...


1)ஒலியின் வேகத்தை (1236 கி.மீ) விட குறைவான வேகத்தில் செல்லும் வானூர்தி (Subsonic aircraft).

2) ஓலியின் வேகத்தை (1236 கி.மீ மேல் 5625 கீ.மீ க்கு கீழாக) விட அதிக வேகத்தில் செல்லும் வானூர்தி (Supersonic aircraft).

3) ஐந்து மடங்கு (5625 கி.மீ) ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும் வானூர்தி(Hypersonic aircraft).




Thursday, September 22, 2011

எடை (Weight) அடிப்படையில் வானூர்தி வகைகள்..


1) காற்றைவிட லேசானது. (Hot Air Baloons - பலூன்கள்)

2) மிக குறைந்த எடை உடைய வானூர்தி.
கிளைடர் வானூர்தி.   ( Glider )

 3) 7000 Kgs கும் குறைந்த எடை உள்ள வானூர்தி.

 4) 7001 - 1,36,000 kgs மிதமான எடை உள்ள வானூர்தி.

5) 1,36,001 kgs மேல் அதிக எடை உடைய வானூர்தி.

Wednesday, September 21, 2011

இறக்கை மற்றும் உடல் அடிப்படையில் வானூர்தி வகைகள்..


1. இறக்கையை அடிப்படையில்:
 பிக்ஸ்ட் விங் (Fixed Wing) சாதாரண  வானூர்தி 
 ரோட்டரி விங் (rotary wing) 
உலாங்கு வானூர்தி 


 2 உடல் அமைப்பு அடிப்படையில்:

 நீளமான உடல் (Long Body)
 அகலமான 
உடல் (Wide body)









Friday, September 16, 2011

இயந்திரத்தின் அடிப்படையில் வானூர்தி வகைகள்....


1 .Hot Air Baloon
2 .Glider Aircraft
3 .Single Engine
4 .Twin Engine
5 .Multi Engine
6 .Reciprocal Engine
7 .Jet Engine
8 .Turbo Jet Engine
9 .Turbo Propeller
10.Rocket Engine
                                                   காற்றை விட லேசான பலூன் 
                                                           (Hot Air Baloon) 


                   இயந்திரம் இல்லாம பறக்க கூடிய கிளைடர் வானூர்தி  
                                     Glider Aircraft
  
                                                   ஒற்றை என்ஜின் உள்ள வானூர்தி  
                                                               Single Engine

                                              
                                                 இரண்டு என்ஜின் உள்ள வானூர்தி 
                                                               Twin Engine

                                                 
                                                       பல என்ஜின் உள்ள வானூர்தி 
                                                                Multi Engine

                
                கார்களில் உபயோகப்படும் என்ஜின் உள்ள வானூர்தி     Reciprocal Engine 
                   முன்பக்கம் உள்ள காற்றாடி போல் உள்ள சுற்றும் இறக்கை   Propeller

                                                      
                                                    ஜெட் என்ஜின் உள்ள வானூர்தி  
                                                                  Jet Engine


                                                          டோர்போ ஜெட் வானூர்தி  
                                                                Turbo Jet Engine

                        
                                                        டோர்போ ப்ரோப்பெல்லர் வானூர்தி 
                                                                   Turbo Propeller


                                                  ரொக்கெட் இயந்திரம் உள்ள 
வானூர்தி
                                                                    Rocket Engine


Sunday, July 24, 2011

காற்றின் அழுத்தமும் அடர்த்தியும்..


காற்றின் குணங்கள்..
1. காற்றழுத்தம் (Pressure)
2. காற்றின் அடர்த்தி (Air density)
3. காற்றி வெப்பம்( Air Temperature)
4. காற்றின் வேகம்(Wind Speed)
5. காற்றின் ஆற்றல்(Entropy)
இதில் விமான பயணத்தில் காற்றி அழுத்தம் மட்டுமே நம்மை நேரடியாகவும், மற்றவை விமானத்தின் இயக்கத்தையும் பாதிக்கும்.
                                 காற்றழுத்தம் (Pressure)

 கடல் மட்டத்தில் காற்றி அழுத்தம்
101.3 Kilo Newton Force
1013.25 mili Bar pressure (mb)
14.7 Inches of Hg (Mercury)
760 Millimeters of Mercury (mm Hg) அதில் O
2 அழுத்தம் மட்டும் 160 mm Hg
33.9 feet water pressure
29.92 Pounds per squire Inches of mercury
இருக்கும் ஆனால் நாம் உயர போக போக அது குறைந்து கொண்டே வரும்.
10,000 அடி உயரத்தில் 523 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 105 mm Hg
20,000 அடி உயரத்தில் 349 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 70 mm Hg
30,000 அடி உயரத்தில் 225 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 45 mm Hg
40,000 அடி உயரத்தில் 141 mm Hg ,  O2 அழுத்தம் மட்டும் 29 mm Hg
இதில் காற்றழுத்தம் நம்மை இரண்டு விதமாக பாதிக்கும், உடலுக்கு வெளியே அழுத்தம் குறையும் போது நம் உடலில் உள்ள திரவத்தில் இருக்கும் காற்று வெளிவர ஆரம்பிக்கும் ( அதாவது குறைந்த அழுத்ததினால் நம் ரத்தம் கொதிக்க ஆரம்பிக்கும்) இது 25, 000 அடிக்கு மேல்தான் ஆரம்பிக்கும் அதன் பெயர் எபுலிஸம் லெவல். (Ebulisam Level)
இரண்டாவதாக காற்றில் உள்ள ஆக்ஸிசன் குறைவதால் மயக்கம் ஏற்படும், மனிதனால் 10,000 அடிக்கு மேல்தான் இது ஆரம்பிக்கும் 25,000 அடிக்கு மேல் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அழுத்தம் மிக குறைவு அதனால் மனிதன் மயக்கம் அடைந்து விடுவான்.
அதனால் விமானத்தின் உள் இருக்கும் அழுத்த்தை செயற்கை முறையில் 8,000 அடியில் இருக்குமாறு கண்ணி மூலம் கட்டுபடுத்துவார்கள்.
                        
                   காற்றின் அடர்த்தி (Air Density)

காற்றின் அடர்த்தி (Air Density) விமான இயக்கத்தை இருவிதமாக பாதிக்கும். ஒன்று அடர்த்தி குறைந்தால் இயந்திரத்தின் (Engine) உருவாகும் வலு (power) குறையும், அதனால் தேவையான வலு (power) கிடைக்காது, Take off சமயத்தில் விபத்து ஏற்படலாம். இரண்டாவது விமானத்தின் உயரம் காட்டும் கருவி உண்மையான உயரத்தை விட அதிகமாக காட்டும், அதனாலும் விபத்து ஏற்படலாம். உ.ம்.
ஒரு மலையின் உயரம் 8,000 அடிகள். அதை கடக்க விமானம் குறைந்த பட்சம் 10,000 (2,000 அதிகமாக) கடக்க வேண்டும் என் வைத்துக் கொள்வோம். காற்றின் அடர்த்தி மிகவும் குறைந்து இருக்கும் போது விமானம் 7,000 அடிகள் இருக்கும் போதே உயரம் காட்டும் கருவி 10,000 அடி என்று காட்டும். அப்படி என்றால் அந்த விமானம் மலையை கடக்கும் போது மலையில் மோதி விபத்துக்குள்ளாகும்.
அதற்கு விமான பயிற்சியின் போது சரியான பயிற்சி முறைகள் சொல்லி தருவார்கள், அப்படி இருந்தும் சில விபத்துகள் நடந்து இருக்கிறது.
காற்றின் வெப்பம்: அதிகரித்தால் காற்றின் அடர்த்தி குறையும், மேலே கூறிய அனைத்தும் விளைய வாய்ப்புகள் உண்டு.
காற்றின் வேகம்: Take Off, Landing எப்போதுமே எதிர்காற்றில்தான் செய்ய வேண்டும், அப்போதுதான் விமான தரையில் ஓடும் தூரம் குறையும். அதே போல் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் காற்று இருந்தாலும் விமானம் பறக்க அனுமதி இல்லை.