பழமொழி.....

Sunday, November 13, 2011

வானூர்தியில் கணணி மென்பொருட்கள்...



 வானூர்திகள் ஓடுதளத்தில் இருந்து பறக்க தொடங்குவது முதல் தரை இறங்குவது வரை அனைத்து செயல்களும் கணணி வழிகாட்டுதலில் அதன் கட்டுப்பாட்டிலும் தான் இயங்குகின்றன. நடுவானில் பறக்கும் பொது  ‘Auto Pilot’ தானியங்கி வானோடி என்ற வசதியை பயன்படுத்தி விமானியின் உதவி இல்லாமல் தானாகவே வானூர்திகள் செயல்படும் வசதி முழுக்க முழுக்க கணணி உதவியுடன் தான் செயல்படுகிறது. வானூர்திகளில் பயன்படுத்தப்படும் கணணி கருவிகள் மற்றும் கணணி மென்பொருள்கள் போன்ற தகவல்கள் பாருங்கள்.
விமானங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் மென்பொருட்கள்......
விமானங்களில் பயன்படுத்தப்படும் கணணி மற்றும் மென் பொருட்களில் காலதாமதம், செயலற்று போதல் போன்றவை இருக்க கூடாது.
சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வேண்டும் என்று விமானி கட்டளையிட்டால் அதை ஏற்று உடனே செயல்படும் வகையில் விமானகணணி மற்றும் அதன் மென்பொருட்கள் இருக்க வேண்டும். விமானியின் கட்டளையை எவ்வளவு துரிதமாக முடிக்க வேண்டுமோ அவ்வளவு வேகமாக முடித்து அடுத்த கட்டளையை நிறைவேற்றத் தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற நேர நிர்ணயத்தையும் வானூர்தி கணணி மற்றும் அதன் மென்பொருட்கள்களே செய்கின்றன. விமானி தொடர்ந்து கட்டளைகளை பிறப்பித்தவுடன் கணணி  அதை ஏற்று வரிசைப்படுத்திக் கொள்ளும். பின்னர் ஒவ்வொரு கட்டளையாக நிறைவேற்றும். வேலையின் தரத்துக்கு ஏற்ப 2.2 மில்லி விநாடி முதல் 6.25 மில்லி விநாடி நேரத்துக்குள் இந்த பணிகள் செய்து முடிக்கப்படும்.
ஒரு பணியை செய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதில் மாற்றம் கொடுக்கும் வரை பழைய கட்டளைப் படியே கணணி தொடர்ந்து செயல்படும். அதாவது சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் 75 டிகிரி தென் கிழக்கு திசையில் பறக்க மணிக்கு 500 km வேகத்தில் வேண்டும் என்று விமானி கணனிக்கு கட்டளையிட்டால் அதை ஏற்று உடனடியாக கணனி செயல்படும். இந்த கட்டளைக்கு ஏற்ப வானூர்தி இயந்திரத்தின் செயல்திறன் மணிக்கு 500 km வேகம் கொண்டதாக மாற்றப்படும். குறிப்பிட்ட உயரத்தில், திசையில் பறக்கும் வகையில் மற்ற கருவிகளும் இயங்கத் தொடங்கும். விமானி புதிய கட்டளையை கொடுக்கும் வரை இந்த பழைய உத்தரவுப்படியே வானூர்தி பறக்கும்.
விமான கணனிக்கு என்று சில மென் பொருள்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்ரு மெண்ட்ஸ் ஆப் ஆஸ்டின் என்ற நிறுவனம் தயாரித்த மேட்ரிக்ஸ்  மென்பொருளாகும். பல்வேறு சிக்கலான ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு சாதனம் மற்றும் வானூர்தியின் பிற கட்டுப்பாட்டு கருவிகளிடம் இருந்துபெறப்படும் தகவல்கள் அனைத்தும் வரிசைப்படுத்தப்படுகின்றன. இதன் அடிப்படையில் வானூர்தியில் உள்ள கருவிகளின் செயல் திறன் கண்காணிக்கப்படுகிறது. மேலும் விமானியின் கட்டளைக்கு ஏற்பவும் வானூர்தி கருவிகளின் தகவல்களுக்கு ஏற்பவும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் இந்த மேட்ரிக்ஸ் மென்பொருள்  வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக கிழக்கு திசையில் 37 டிகிரியில் 7 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு விமானம் பறந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அப்போது விமானி தென்கிழக்கு திசையில் 42 டிகிரியில் 8 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறார்.
விமான கருவிகளில் இருந்து பெறப்பட்டுள்ள தகவல் மற்றும் விமானியின் கட்டளை இரண்டையும் மேட்ரிக்ஸ் மென்பொருள் ஒப்பிட்டு பார்க்கும். பின்னர் விமானியின் கட்டளைக்கு ஏற்ப தற்போது பறக்கும் உயரம், திசையில் எவ்வளவு மாற்றம் தேவை என்பதை கணக்கிட்டுக் கொள்ளும். பின்னர் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப பறக்கும் கட்டளையை கருவிகளுக்கு கணணி அனுப்பும். இந்த செயல்கள் அனைத்தும் மில்லி செகண்டுகள் நேரத்தில் நடந்து விடுகிறது. இத்தகைய மென்பொருள் துரிதமாகவும் சிக்கல்கள் இல்லாமலும் செயல்படுவதால் வானூர்தியின் பாதுகாப்பான இயக்கம் உறுதி செய்யப்படுகிறது.
சிறப்புகள்
மற்ற மென்பொருளில் இருப்பது போன்ற குழப்பம் விளைவிக்கும் பல தொகுப்புக்கள் இந்த ‘மேட்ரிக்ஸ்’ மென்பொருட்களில் இல்லை. வானூர்தி கணணி வன்பொருள்(Hard ware) மிகச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டு அதில் மென்பொருள் ஏற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் ஆய்வுக் கூடத்தில் நடத்திப் பார்த்த பின்னரே வானூர்திகளில் பொருத்தப்படுகிறது.
பறக்கும் பொது விமானி கொடுப்பது போன்ற கட்டளைகள் ஆய்வுக் கூடத்திலும் கொடுக்கப்படுகின்றன. அதே போல் கணணி கட்டளைக்கு ஏற்ப வானூர்தியின் இறக்கை, சுக்கான் மற்றும் சக்கரம் போன்ற  பகுதிகள் சரியாக இயங்குகின்றனவா என்று சோதனை செய்து பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் வானூர்தி கணணி மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
வானூர்தி மென்பொருட்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் மொத்தமாக சோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. அவ்வாறு செய்தால் மென்பொருள்களில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் அதைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிக்கலான காரியமாகும். இதற்கு பதிலாக வானூர்தி மென்பொருள்கல் தனி 420 கூறுகளாக பிரிக்கப்பட்டு பின் ஒவ்வொரு தனித்தனியே சோதனைகள் மேற்கொள்ள ப்படுகிறது.
ஒவ்வொரு கூறுகளும் ஒன்றே அல்லது அதற்கு மேற்பட்ட எளிதான செயல்களை கொண்டிருக்கும். பிரத்தியேக தவறு முக்கால் பாங்கு (Debugging Mode) ஒன்றை விமான கணினிக்குப் பொருத்தப்பட்டது. இதன் மூலம் தனித்தனி கூறுகளை ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியது. பலரக உள்ளீட்டுக் கட்டளைகளை உட்செலுத்தபட்டு இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வகை தனித்தனி கூறுகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகு மிகப் பெரிய அளவில் இவற்றை இணைத்து சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கடுத்தப்படியாக சோதனை வானோடிகள் (Test Pilot) கொண்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இது இரண்டாவது கட்ட சோதனையாகும். இதில் திறன் மிகுந்த பாவனைக் காட்டிகள் (Simulatros) பயன்படுத்தப்படுகிறது. இச்சோதனை போயிங் நிறுவனத்தில் செயிண்ட் லூயிஸ் பிரிவில் மேற்கொள்ளபடுகிறது.  HILS (Hardware In the Loob Simulators)I F/A 1-8 வானூர்தியின் உண்மையான விமானி அறையேடு புதிய வானூர்தி கட்டுபாட்டு கணினி இணைக்கப்படுகிறது. இதில் முக்கியமான செயல்பாடு என்னவென்றால் விமானிகள் சோதனை வானூர்தி முறையிலிருந்து மூலவிமான கணினி CPUக்குமாற்றும் போது கட்டுபாட்டை இழக்காமல் இருப்பதை HILS உறுதி செய்கிறது. ஜுலை மாத மத்தியில் AAW மென்பொருள்களின் இறுதிக்கட்ட சோதனைகள் நாசாவின் டிரெய்டென் தளத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் வானூர்தி சரியாகத்தான் இயங்கியது என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, டிரெய்டென் சோதனைத் தளத்தில் வானூர்தியில் பழுது ஏற்பட்டால் மேற்கொள்ளவேண்டிய மென்பொருள்களின் நடவடிக்கைகள் சரிபார்க்கபடுகிறது. இந்த வானூர்தி மென்பொருள் மேம்படுத்தப்பட்ட சோதனை முறைகள் இம்மாதத்தில் நடைபெறவிருக்கின்றன. இதில் சோதனை விமானிகள் FA 1-8 விமானத்தை (மீள் நிகழ் இறக்கைகள் பொருத்தப்பட்ட) ஒட்ட இருக்கிறார்கள். வானூர்தியின் இயக்கங்கள் நிலப் பரப்பிலிருந்து கண்காணிக்கப்பட்டாலும் விமானியும் வானூர்தியும் தன்னிச்சையாகவே செயல்படுவார்கள்.
நடுவானில் சாகசம் காட்டும் FA 1-8 போர்விமானம்....

இவ்விதமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சோதனைகளின் முடிவைக் கொண்ட  AAW திட்டத்தின் அடுத்த நடவடிக்கைகள் அமையும். இதற்கு அடுத்தக்கட்டத்தில் Flaps இல்லாமல் விமானத்தை திருப்புவதற்கேதுவான இறக்கைகள் வடிவமைக்கப்படும். இதில் இறக்கைகளின் குறைவான எடை மிகவும் சாதகமாக அமையும், இதற்கும் அடுத்தக்கட்டமாக வரப்போவது மார்பிள் இறக்கைகள் எனப்படுவது. இவ்விறக்கைகள் விமானம் ஆகாயத்தில் பறக்கும் பொது சூழ்நிலைக்கேற்றவாறு தன்னைத்தானே முடுக்கிக்கொள்ளும் விதமாக அமையப்போகிறது. இதன் மூலமாக மிகுந்த எரிபொருள் சேமிப்பும் மிகச்சிறந்த பறக்கும் திறனும் எதிர்கால வானூர்திகள் கொண்டிருக்கப்போகின்றன. மேலும் மற்ற சாதாரண வானூர்திகளில் இருக்கும் வாலிறகு, சுக்கான்கள் மற்றும் Flaps தேவைகள் அகற்றப்பட்டு ஒரு பறவை போல் இருக்கும்

Wednesday, November 9, 2011

உலகின் பெரிய உலங்குவானூர்திகள் - 4

7 Hughes XH-17
50,000 இறாத்தல் (22,680 kg)



இது  உலகின்  ஏழாவது பெரிய உலங்குவானூர்தி  ஆகும். இது XH-17 பறக்கும் கொக்கு  என்று அழைக்கப்படும். அதிக செலவினால் இதன் உற்பத்தி ஒன்றுடன் நிறுத்தப்பட்டது. இது 1940 இல் இருந்து கட்டுமான ஒரு ஆராய்ச்சி வாகனமாக பயன்படுத்தப்படுகிறது.



RoleHelicopter
ManufacturerHughes Helicopters
First flight23 October 1952
RetiredDecember 1955
StatusScrapped
Number built1






8. Sikorsky CH-54
 47,000 இறாத்தல் (21,320 kg)


இது  உலகின்  எட்டாவது பெரிய உலங்குவானூர்தி  ஆகும். இது அமெரிக்காவின்  உற்பத்தியாகும். இது தீயணைப்பு துறையில் மிகவும் சிறப்பாக செயல்ப்படுகிறது.

RoleHeavy-lift cargo helicopter
ManufacturerSikorsky Aircraft
First flight9 May 1962
Statusretired
Primary userUnited States Army
Number built105
VariantsS-64 Skycrane


Monday, November 7, 2011

உலகின் பெரிய உலங்குவானூர்திகள் - 3

5. Sikorsky CH-53E 
73,500 இறாத்தல் (33,340 kg)
இது  உலகின்  ஐந்தாவது பெரிய உலங்குவானூர்தி  ஆகும் இது அமெரிக்க இராணுவத்திடம்  உள்ள மிகப்பெரிய ஹெலிகாப்டர் ஆகும். இது  கடல் டிராகன் என அழைக்கப்படுகிறது.



RoleHeavy-lift cargo helicopter
ManufacturerSikorsky Aircraft
First flight1 March 1974
Introduction1981
StatusActive service
Primary usersUnited States Marine Corps
United States Navy
Japan Maritime Self-Defense Force
Number built≈115
Unit costUS$24.36 million (1992) average[1]
Developed fromCH-53 Sea Stallion
Developed intoSikorsky CH-53K





6. Boeing Vertol MH-47E/G 
54,000 இறாத்தல் (24,495 kg)



இது  உலகின்  ஆறாவது பெரிய உலங்குவானூர்தி  ஆகும். 1960 களின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட இவ்வகை உலங்குவானூர்திகள் 170 நொட்ஸ்                      
வேகத்தில் பறக்கவல்லதாகக் காணப்பட்டன. இவ்வேகம், அப்போது பயன்பாட்டிலிருந்த ஏனைய தாக்குதல் உலங்குவானூர்திகளைவிட அதிகமானதாகும். அதுமட்டுமன்றி அக்காலத்திற் பயன்படுத்தப்பட்டு, தற்போதும் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் காணப்படும் ஒருசில வானூர்திகளில் இவ்வானூர்தியும் ஒன்றாகும்.
இவ்வகை வானூர்திகள், இராணுவப் பயன்பாட்டில் பிரதானமாக துருப்புக்களை இடம்நகர்த்துதல், முன்னணி நிலைகளுக்கான வழங்கல்களை மேற்கொள்ளல் மற்றும் கனரக ஆயுத, வாகனங்களை இடம்நகர்த்துதல் போன்ற செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.


RoleTransport helicopter
National originUnited States
ManufacturerBoeing Rotorcraft Systems
(Ridley Park, PA plant)
First flight21 September 1961
Introduction1962
StatusActive service, in production
Primary usersUnited States Army
Japan Ground Self-Defense Force
Royal Netherlands Air Force
See CH-47 operators for others
Produced1962 – present
Number builtover 1,179[1]
Unit cost$35 million (2008) average[2]
Developed fromVertol Model 107
VariantsBoeing Chinook (UK variant


Friday, October 14, 2011

விபத்தை தவிர்க்கும் உலங்குவானூர்தி


UNSW@ADFA gas-turbine powered helicopter.This helicopter is fitted with laser range finder, embedded vision sensor, GPS and Inertial Measurement Sensors.
   வானூர்தி என்றாலே எங்கேயாவது மோதி சிதறிவிடும் என்றுதான் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் இதனாலேயே வெளிநாட்டுப் பயணத்தையே தவிர்த்துவிட்டார்கள். இப்பொழுது நகரில் இருக்கும் வாகன நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு உலங்குவானூர்தி  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நெருக்கடி மிகுந்த நகரில் தரையிறங்குவது மிகக் கடினம்.
இம்மாதிரியான நிலைமைகளை தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சியை மேற்கொண்டுதானிருக்கிறார்கள். அமெரிக்காவின் பெர்க்லி நகரில் இருக்கும் லிபோர்னியா பல்கலைக்கழகம் ரோபோ காப்டர்ஸ் என்றழைக்கப்படும் USRA MAXIMA-2 என்ற விபத்தை தவிர்க்கும் ஆளில்லா உலங்குவானூர்திகளை தயாரித்துள்ளார்கள். இதன்மூலம் எதிர்காலத்தில் விபத்தை தவிர்க்கும் வானூர்திகள் கண்டுபிடிக்க முடியும். இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால், LASER RANGER FINDER  என்ற உணரி மூலம் எதிரே வரும் அல்லது எதிரே இருக்கும் பொருளை இந்த உணரியின் மூலம் கண்டுபிடித்து தன்னுடைய திசையை மாற்றிக்கொள்ளும். இது திசை மற்றும் கணினி கட்டுப்பாட்டுக் கருவிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு வானூர்தி அல்லது உலங்குவானூர்தி ஒரு இடத்திற்கு சென்றால் அது செல்லக்கூடிய பாதை எப்படிப்பட்டது? அதன் தன்மை, காலநிலை எவ்வாறு இருக்கும்? என்று ஆராய்ந்து பிறகு சென்றிறங்கக் கூடிய இடம் எப்படிப்பட்டது? என்றெல்லாம் ஆராய்ந்து பின் அதற்கேற்ற சாதகமான நிலை இருந்தால் மட்டுமே வானூர்தி பயணம் செய்யும். இல்லாவிட்டால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடுமையான மூடுபனி காலங்களில் வானூர்தி மலைகளில் மோதி நொறுங்க வாய்ப்புள்ளது. இவையெல்லாம் எதிர்பாராத விதமாகவோ அல்லது வானோடியின் கவனக்குறைவாகவோ இருக்கலாம்.
இல்லாவிட்டால் வானூர்தி செல்லும் பாதையில் மற்றொரு வானூர்தியோ அல்லது பறவைகளோ பறந்தால்கூட விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பறவை மோதி வானூர்தியில் கோளாறால் திடீரென தரையிரங்கியது. இவையெல்லாம் எதிர்பாராது நடக்கக் கூடியதுதான்.
இந்தவகை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏரோபாட் திட்டத்தில் (AEROBOT PROJECT) USRA MAXIMA-2 ) என்ற இந்த உலங்குவானூர்தியை  தயாரித்துள்ளது. எத்தனையோ நிறுவனங்கள் இந்த விபத்து தவிர்க்கும் வானூர்திகளை கண்டுபிடித்தாலும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஏரோபாட் நிறுவனம் எல்லாவற்றிற்கும் முதன்மையாக விளங்குகிறது. 12 அடி நீளமுள்ள ரோபோ காப்டர்ஸ்  என்றழைக்கப்படும் இந்த உலங்குவானூர்தி தன் எதிரே வரும் வானூர்தி அல்லது உலங்குவானூர்தி இவைகளை லேசர் கதிர் உணரியால் கண்டறிந்து தன்னுடைய பாதையை மாற்றிக்கொள்ளும் அல்லது திசையை திருப்பிக்கொள்ளும்.
அதாவது எதிரே பொருட்கள் தட்டுப்பட்டால் லேசர் உணரியால் ஒளிக்கற்றைகளை பாய்ச்சும். இதனால் எதிரே இருக்கும் பொருளிலோ அல்லது வானூர்தியிலோ மோதாமல்  விபத்தை தவிர்த்துவிடும்.எந்தவித முன் அனுபவமில்லாத இடத்திலும் அல்லது நெருக்கடியான நகரிலும் பறக்கக்கூடிய வல்லமைக் கொண்டது.
வெற்றிகரமான சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. எதிர் காலத்தில் வான் போக்குவரத்து நெருக்கடி, விபத்து இவைகளை தவிர்க்கும் பொருட்டு நவீன யுத்திகள் கொண்ட வானூர்திகள் உருவாக்கப்படுவது நிச்சயம்.

Thursday, October 13, 2011

சிங்கப்பூர் வானூர்தி சாதனைகள்..

                       சிங்கப்பூர் வானூர்தி சாதனைகளில் 100 ஆண்டுகள் கொண்டாட்டம்.
சிங்கப்பூர் வானூர்தி 100 ஆண்டுகள் சாதனைக் கண்காட்சி சாங்கி விமான நிலையத்தில் திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. சிங்கப்பூர் விமான நூற்றாண்டு கண்காட்சி இங்கே விமானவரலாற்று பயணம் தடயங்கள். இலவச கண்காட்சி - பார்வையாளர்கள் iPads மூலம் குரல் பதிவுகள் மற்றும் காணொளிப்பதிவுகள் கேட்க, பார்க்க முடியும் இது - மேலும் வானூர்தி துறையில் சிங்கப்பூர் பொருளாதரம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எப்படி ஒரு ஆழமான புரிதலை வழங்குகிறது.
சிங்கப்பூர் (CAAS) என்ற சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கண்காட்சி, முனையம் 3 டிபார்ச்சர் மண்டபத்தில் நடைபெறுகிறது.
அதன் அங்குரார்ப்பன வைபவம் போக்குவரத்து அமைச்சர் Lui Tuck Yew தலைமையில் நடைபெற்றது.



Wednesday, October 12, 2011

Drones வைரஸ்...



அமெரிக்கா ஆளில்லாமல் ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிறிய வானூர்திககளை தயாரித்துள்ளது. இவை முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்திகள் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமனில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது ஏவுகணைகள் வீசி அழிக்கப்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில் ஆளில்லா வானூர்திகளை இயக்கும் கம்ப்யூட்டரில் வைரஸ் கிருமிகள் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர் மையம் அமெரிக்காவின் நிவேடாவில் உள்ள கிரீச் வான் படை தளத்தில் உள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்” பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
 
இந்த வைரஸ் தாக்குதலால் ஆளில்லா வானூர்திகள் இயங்குவதில் எந்த தடையும் ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், வைரஸ் கிருமிகள் எங்கிருந்து பரப்பப்பட்டன என தெரியவில்லை. அவை தற்செயலாக நடந்த நிகழ்வா? அல்லது வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டதா? எனவும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

A recent story in Wired claims that the operators of the Reaper and Predator drone fleets are struggling against an enemy we can all relate to: Malware. According to the story’s sources, which are unnamed, the computers used to remotely control drones around the world have been infected with a nasty keylogger that is resisting efforts to destroy it.


Tuesday, October 11, 2011

பறந்த சமையல் எண்ணெய்.....





வானூர்திகள் அனைத்தும் பெட்ரோல் மூலமே இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கிலாந்தில் உள்ள வானூர்தி நிறுவனம் ஒன்று தனது வானூர்தியை சமையல் எண்ணெய் மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது.
தாம்சன் ஏர்வேஸ் என்ற வானூர்தி நிறுவனமே இத்தகைய சாதனையை படைத்துள்ளது. போயிங் 757 ( Boeing - 757 )ரக வானூர்தியில் 2 இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒரு இயந்திரம் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டது.
மற்றொரு இயந்திரம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை மூலம் இயங்கியது. அதற்காக வீடுகளின் சமையலறைகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்கள் சேகரிக்கப்பட்டன.
அவை அதிநவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இந்த வானூர்தி பர்மிங்காமில் இருந்து லான்ஷோரக் நகருக்கு கடந்த வாரம் இயக்கப்பட்டது. அதில் 232 பயணிகளும், வானூர்தி ஊழியர்களும் பயணம் செய்தனர்.
உலகிலேயே முதன் முறையாக சமையல் எண்ணெய் மூலம் வானூர்தியை இயக்கி சாதனை படைத்ததை பெருமையாக கருதுவதாக தாம்சன் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டில் விமானங்கள் முழுவதையும் சமையல் எண்ணெய் மூலம் இயக்க இருப்பதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Tui-owned airline Thomson Airways has flown 232 passengers to Lanzarote yesterday aboard an aircraft that was powered by sustainable biofuel.