பழமொழி.....

Sunday, October 2, 2011

திருடப்பட்ட Drone தொழில் நுட்ப்பம்.....



ஆளில்லா தானியங்கி விமானம் (Unmanned Aerial Vehicles)  இப்போது அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. இந்த விமானம் “ட்ரோன்ஸ்”  Drone technology ) என அழைக்கப்படுகிறது.
இப்போது சீனாவும் ஆளில்லா தானியங்கி விமானங்களை தயாரித்து வருகிறது. அமெரிக்காவிடம் மட்டுமே இருந்து வந்த இந்த விமானத்தின் ரகசிய தொழில்நுட்பம் இப்போது சீனாவுக்கும் கிடைத்துள்ளது.
விபத்தில் சிக்கிய அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் பாகங்களை திருடி அதன் மூலம் அந்த விமானத்தின் தொழில்நுட்பத்தை சீனா விஞ்ஞானிகள் அறிந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதைக் கொண்டு தற்போது ஆளில்லா விமானங்களை மும்முரமாக தயாரித்து வருகிறது சீனா.
தாங்கள் தயாரித்த ஆளில்லா விமானத்தின் மாதிரியை கடந்த 5 ஆண்டுக்கு முன்பு ஷாங்காய் விமான கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தது.


தான் தயாரிக்கும் ஆளில்லா விமானங்களை தங்கள் பயன்பாட்டுக்கு மட்டும் வைத்துக் கொள்ள சீனா நினைக்கவில்லை. மாறாக அவற்றை உலக நாடுகளுக்கு விற்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த விமானங்களை வாங்குவதில் சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தான் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை தவிர ஆளில்லா விமானங்களை வாங்குவதற்காக ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் சீனாவை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் இந்தியாவை வேவு பார்ப்பதற்கு சீனா முயற்சி செய்கிறது.  சிறிலங்காவுக்கு நட்பு நாடான சீனா இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறீலங்காவின் உதவியையும் எதிர்பார்க்கிறது.
                           
                                                     இந்த காணோளியைப் பாருங்கள்....... 
 

10 comments:

Anonymous said...

திருட்டு பயல்கள்.

Anonymous said...

சீனக்காரன் கிளம்பிட்டான்யா.....

Anonymous said...

thief chiness

Anonymous said...

this flight srilankavukku free ya?

விண்ணும் மண்ணும் said...

மகிந்த மாமாவை தான் கேட்க வேண்டும்...........

Anonymous said...

keddu sollunga

விண்ணும் மண்ணும் said...

ok.........

Anonymous said...

எல்லாருமே கள்ளன்கள் தான்

Anonymous said...

தனது உள்ளக் குமுறலைக் கேலிப் பேச்சாக வெளிப்படுத்தும் திறமை படைத்த பிரபாகரன் அவர்கள், தனக்கு அடுத்த வருடம் நோபல் பரிசு கிடைக்கப் போவதாகச் சொன்னார். எப்படி என்று விளக்கம் கேட்டவர்களுக்கு அவர் சொன்ன பதில், இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூவரையும் ஒரே நுகத்தடியில் பிணைத்த பெருமைக்காக எனக்கு இந்தப் பரிசு வழங்கப்பட வேண்டும்

விண்ணும் மண்ணும் said...

அற்புதமான பதில்....