பழமொழி.....

Tuesday, October 4, 2011

X 47B........


வானோடி இல்லாமல் தானே இயங்கக் கூடிய ஆளில்லா போர் வானூர்தி ஒன்றைச் செலுத்தி அமெரிக்காவில் ஆய்வு செய்யப்பட்டது. கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உதவியுடன் இந்த வானூர்தி வெற்றிகரமாக பறந்தது. அமெரிக்க வானூர்திப்படையில் ஆளில்லாப் போர் வானூர்திகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. கூடுதல் வசதிகளுடன் புதுப்புது வானூர்திகளை வானூர்திப் படையில் அமெரிக்கா சேர்த்து வருகிறது. வானூர்தி தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் போயிங் (Boeing) மற்றும், நார்த்ராப்கிரம்மேன் (Northrop Grumman) வானூர்தி நிறுவனங்கள்  அமெரிக்க வான்படைக்கான வானூர்திகளை தயாரித்துக் கொடுத்து வருகின்றன.

அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆளில்லாப் போர் வானூர்தி தயாரித்துக் கொடுக்க Northrop Grumman நிறுவனத்துடன் அமெரிக்க வான்படை 2007இல் ஒப்பந்தம் செய்தது. 2009ஆம் ஆண்டு கடைசிக்குள் வானூர்தி உருவாக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது. இயந்திரம் செய்வது மற்றும் உயரே கிளம்பும்போது ஏற்பட்ட அதிக ஒலி ஆகியவற்றை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டதால் இறுதிப்பணி தாமதமானது. கடந்த ஆண்டில் வானூர்தி வடிவமைப்பு முடிந்தது.
சாதாரண ஓடுதளம் அல்லது வானூர்திதாங்கி கப்பலில் இருந்து புறப்பட்டு உயரே கிளம்புவது, சீராகப் பறப்பது, மற்ற வானூர்திகளின் இயக்கத்தை கடைப்பிடித்து பறப்பது, வானிலைக்கு ஏற்ப பயணத்தை மாற்றுவது, எரிபொருள் தீரும் நிலை ஏற்பட்டால் அருகே உரிய இடத்தில் தரையிறங்கி நிரப்புவது அல்லது நடுவானிலேயே நிரப்புவது, போர் சூழ்நிலையில் இலக்குகளை சரியாக கண்டுபிடித்து வெடிகுண்டுகள் வீசுவது என எல்லாவற்றுக்கும் தனித்தனியே கணினிமயவாசெயல்திட்ட பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் தானாக நடக்கும். வானூர்தியின்  மொத்த செயல்பாட்டையும் தரையில் இருந்தபடி விமானி கண்காணித்தால் போதும். X 47B என்று பெயரிடப்பட்ட இந்த வானூர்தியின்  செயல் ஆய்வு- அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ( Edwards Air Force Base ) எட்வர்ட்ஸ் வான்படை தளத்தில் கடந்த 4ஆம் தேதி நடந்தது. சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இன்னும் 3 ஆண்டுகளுக்கு ஆய்வு ஓட்டமே நடக்கும். அதன் பிறகு முறைப்படி வான்படையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
X-47B Specifications

Wingspan........................................62.1 ft 
Length.............................................38.2 ft 
Altitude............................................> 40,000 ft 
Range.............................................> 2,100 nm 
Top Speed ......................................High subsonic 
PowerPlant.....................................Pratt & Whitney F100-PW-220U

System Provisions
Autonomous Aerial Refueling .........Probe & Drogue (USN) Boom Receptacle (USAF)
Weapons Bays ...............................4,500 lb
Sensors ..........................................EO / IR / SAR / ISAR / GMTI / MMTI / ESM




1 comment:

Anonymous said...

இது எல்லாம் அழிப்பதுக்கு தான்