பழமொழி.....

Wednesday, November 23, 2011

குட்டி ரோபோ வானூர்தி.....



இதன் எடை மிகவும் குறைவு என்பதால் இதனை குட்டி ரோபோ வானூர்தி என்று அழைக்கலாம். இதன் நீளம் 80 சென்டி மீட்டர்தான் இந்தக் குட்டி ரோபோட்டின் நீளம். இதனை சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடட்டைச் (The Swiss Federal Institute) சேர்ந்த ஜீன் கிரிஸ்டோப் மற்றும் டேரியோ ப்ளோரீனோ என்ற ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த குட்டி பறக்கும் ரோபோட் வானூர்தி மிகவும் சிக்கலான இடங்களில் அதாவது குகை, சுரங்க வழிப்பாதை போன்றவைகளில் எந்த இடத்திலும் மோதாமல் பறக்கும் தன்மைக் கொண்டது. இதுபோன்ற இடங்களில் மீட்புப் பணி மற்றும் தேடும் பணிக்கு மிகவும் உதவிகரமாக இந்த மிகச்சிறிய பறக்கும் ரோபோட் இருக்கும். இதன் சிறப்பம்சமே எந்த இடத்திலும் மோதாமல் தானாகவே சரி செய்து கொள்ளும் ஆற்றல்தான்.
இதனை ஆராய்ச்சியாளர்கள் கார்பன் இழைகள், மிக லேசான பிளைவுட் மற்றும் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பிலிம்களால் தயாரித்துள்ளனர். இதனுடைய வால் மற்றும் இறக்கைகள் பிளாஸ்டிக் ப்லிம்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இறக்கைகளின் முனைகளிலும் முறையே இரண்டு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மிகுந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 30 கிராம் எடையுள்ள பறக்கும் ரோபோட்டின் இறக்கையில் கேமிரா என்றால் அது எவ்வளவு நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
விமானத்தின் முன்புறமும் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இக்கேமிரா ஒரு வினாடியில் 20ல் பங்கு நேரத்தில் எதிரே தட்டுப்படும் சுவரோ மற்றும் பொருளையோ படம் எடுத்து உடனடியாகக் கணக்கிட்டு மோதலை தவிர்க்கக்கூடியது. இதன் அடுத்தக்கட்டமாக ஆராய்ச்சியாளர்கள் இதைவிட மிகச்சிறிய அதாவது அதிகபட்சம் 12 கிராம் எடை மற்றும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள பறக்கும் மிகச்சிறிய ரோபோட்டை தயாரிக்கும் பணியில் உள்ளனர்.
The Swiss Federal Institute of Technology has developed an ultralight robotic aircraft that mimics the navigational abilities of a fly. The plane is completely autonomous, weighs 10 grams and has a 14 inch wingspan. It is designed to fly indoors, which is difficult because of the many potential obstacles. It can fly around a room completely unassisted for nearly five minutes.


No comments: