பழமொழி.....

Wednesday, November 16, 2011

Elastic Wing (எலாஸ்டிக் இறக்கை)


F-A 18 ரக போர் வானூர்தி


வானூர்திகள் தயாரிப்பதில் புகழ் பெற்ற ‘போயிங்’ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’ ஆகியவை இணைந்து இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தின. இந்த ஆய்வுக்காக அமெரிக்க ராணுவத்தின் F-A 18 ரக போர் வானூர்தியை எடுத்துக் கொண்டனர். இந்த வானூர்தியின் கணணி கருவிகள், இறக்கை அமைப்புகள் போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டு வந்து சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆய்வுத் திட்டத்துக்கு ‘வானூர்தி பொருள் மீள்மையியல் இறக்கைத் திட்டம்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த ஆய்வின் மூலம் வானூர்தி இறக்கை வடிவமைப்பில் இருந்து வரும் தொழில் நுட்பங்களை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளனர்.

சாதாரணமாக வானூர்திகள் பறக்கும் போது இடது அல்லது வலது புறமாக திரும்ப வாலிற்கு மற்றும் பிளாப்ஸ் (Flaps) போன்ற கட்டுப்பாட்டு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வானூர்தியின் இறக்கையின் முன் மற்றும் தொடர் முனைகளில் பொருத்தப்பட்டிருக்கும்.




இந்த கட்டுப்பாடு சாதனங்கள் மேலும், கீழும் இயக்கப்பட்டு இதன் மூலம் மாறுபடும் இறக்கையின் தூக்கு விசையினால் வானூர்தி இடமாகவோ, வலமாகவோ திரும்புகிறது.

ஆனால் புதிய ‘எலாஸ்டிக் இறக்கை’ முறையில் விமானியின் (கணணி) கட்டளைக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மை கொண்ட இறக்கைகள் இடது_வலது என வளைந்து கொள்ளும். இதன் காரணமாக வானூர்தி இறக்கைகளில் வாலிறகு மற்றும் ‘பிளாப்ஸ்’ பொருத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் வளையும் தன்மை கொண்ட இறக்கை மூலம் வானூர்தியின் மொத்த எடையில் கணிசமான பகுதி குறைகிறது. வானூர்தியின் எடை குறைய குறைய எரிபொருள் செலவும் குறைகிறது.




உதாரணமாக ஒரு ஜாம்போ ஜெட் (Jambo Jet) விமானத்தின் மொத்த எடையில் 10 சதவிகிதம் குறைத்தால் அந்த விமானத்திற்கு ஒரு ஆண்டுக்கு ஆகும் எரிபொருள் செலவில் ரூ.6 கோடியே 58 லட்சம் மிச்சமாகும்.

‘எலாஸ்டிக் இறக்கை’ திட்டத்தின் ஆய்வுப் பணிகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட சோதனைகள் கடந்த வருடம் நடந்தது. இதில் jவானூர்தியை கட்டுப்படுத்துவதற்கு இறக்கைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, இறக்கையில் ஸ்டிரெயின் காஜ் பயன்படுத்தி அதன் இயக்கங்களை கண்காணித்தனர்.

எலாஸ்டிக் இறக்கைகள் பொருத்தப்பட்ட F-A 18 வானூர்திகளின் இயக்க சோதனை விரைவில் நடக்க இருக்கிறது. இந்த சோதனை தொடங்கும் முன்பு ‘கணணி மூலம் வானூர்தியை கட்டுப்படுத்தும் முறை’யின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானிக்கு எந்த ஒரு பயமும் இன்றி வானூர்தியை இயக்கும் ஆர்வம் ஏற்படும்.




F-A 18 வானூர்தியில் மோட்ட ரோலா 68040 ரக சி.பி.யு. பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 18 சி.பி.யு.க்கள் ஒருங்கிணைந்து வானூர்தியின் இயக்கத்தை கண்காணித்து கட்டுப்படுத்தும். ஒரு வேளை கணனியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் விமானிக்கு அது உடனே தெரிவிக்கப்படும். இதையடுத்து அவர் வானூர்தியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இயக்கும் வசதிகளும் பொருத் தப்பட்டுள்ளது...

1 comment:

Anonymous said...

இனி விமானமும் செட்டை கட்டிப்பறக்கும்