அவாக்ஸ்' (AWACS) airborne warning and control systems (வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு) எனப்படும் நவீன தொழிநுட்பமானது இன்று பலவகை வானூர்திகளில் மற்றும் உலங்கு வானூர்திகளில் பயன்படுத்தப்படுகிறது. எதிரிநாட்டு போர் வானூர்திகள் வந்தால் அதனை கண்டறிந்து எச்சரிகை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை இவ்வகை தொழிநுட்பத்தின் சிறப்பம்சமாகும்.
'வானத்தில் இருக்கும் கண் ' என்று அழைக்கப்படும் இந்த தொழிநுட்பம், எதிரிநாட்டு வானூர்திகள் ஆயுதங்களை சுமந்துகொண்டு நாட்டின் எல்லைக்குள் நுழைந்தால் அதனை கண்டறிந்து வானூர்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கும் திறன் கொண்டது. அத்துடன் வான்வழி தொடர்புகளையும் கவனிக்கும் திறன் கொண்டது.
எதிரி படைகளை கண்காணிக்க வானூர்திப் படையில் ‘அவாக்ஸ்' பயன்படுத்தப்படுகின்றன. இது வானூர்தியின் மேல் பகுதியில் (Dish Antenna) செய்மதி ஆண்டனா வடிவில் ரேடார் பொருத்தப்பட்டிருக்கும். இந்த வானூர்திகள் மூலம் வானில் மிக உயரத்தில் பறந்தபடியே, வெகு தொலைவில் உள்ள எதிரிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கணக்கிட்டு தகவல் அனுப்ப முடியும்.
அவாக்ஸ்' (AWACS) தொழிநுட்பத்தின் சிறப்பம்சங்கள்......
- எல்லை தாண்டி வரும் வானூர்திகள், உலங்கு வானூர்திகள், கப்பல்கள் போன்றவற்றை பல மைல் தூரத்தில் கண்டறிந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுக்கிறது.
- இத் தொழிநுட்பமானது தற்காப்பு தாக்குதல் மற்றும் வானூர்தித் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் (Defensive and Offensive air operations) பயன்படுத்தப்படுகிறது.
- இதன் மூலம் பாரிய பிரதேசத்தை கண்காணிக்க மற்றும் கட்டுப்பாடில் வைத்திருக்கமுடியும். ( 30,000 அடி உயரத்தில் பறக்கும் ஒரு அவாக்ஸ் வானூர்தியால் 120,460 சதுர மைல் பரப்பை (312,000 சதுர கிலோமீட்டர்) கண்காணிக்கமுடியும் )