பழமொழி.....

Saturday, November 24, 2012

X-48C வானூர்தி


எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய முக்கோண வடிவ பயணிகள் (Hybrid wing-body plane) வானூர்தியை நாசா அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்காலத்தில் வானூர்தி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் ஐக்கிய இராட்சியத்தின் Cranfield Aerospace Limited நிறுவனத்தின் உதவியுடன் போயிங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதலில் X-48C ரக முக்கோண வடிவ வானூர்தியை மட்டும் தயாரித்துள்ளது. இது கலிபோர்னியாவின் எட்வார்ட் வான்படை தளத்திலிருந்து (Edwards Air Force Base in California) தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.

வானோடி இல்லாமல் இயங்கும் இந்த வானூர்தி X-48B Blended Wing Body வானூர்தியின் மாதிரியைக் கொண்டு வேகம், கட்டுப்பாட்டு அமைப்புகள், மூக்குப்பகுதி, வானூர்தியின் சத்தம் போன்ற மாற்றங்களுடன் தயாரிக்கப்பட்டது. அத்துடன் உடல் அகலம் 20 அடியாக நீட்டப்பட்டது. 


பின்னர் விரிவுபடுத்தப்பட்டு பல வானூர்திகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முக்கோண வானூர்தியின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இந்த வானூர்திகளே அடுத்த 20 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எனவே இந்த விமானம் அடுத்த 15-20 ஆண்டுகளில் மிகச்சிறந்த பயணிகள் விமானங்களாக மாறுவதுடன், ராணுவ பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்று நாசா கூறியுள்ளது.


உளவு வானூர்தியைப் போன்று உள்ள இந்த வானூர்தியில் ஜன்னலோர இருக்கைகளே இருக்காது. மாறாக அதிக இருக்கைகள் மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும். அத்துடன் அதிக சரக்குகளையும் இதில் ஏற்றிச் செல்லவும் முடியும். முக்கோண வடிவில் இருப்பதால், இது காற்றை எளிதில் கிழித்துக்கொண்டு வேகமாக செல்ல முடியும். 500 இறாத்தல் நிறையையும், மணிக்கு 140 மைல் வேகத்திலும் பறக்கும் இவ் வானூர்தி 10,000 அடி உயரத்திற்கு மேல் பயணிக்கக்கூடியது. 


Friday, November 23, 2012

HTV-2 மிகையொலி வானூர்தி.


அமெரிக்க ராணுவத்தின் Falcon (Force Application and Launch from Continental United States) HTV-2 ( Hypersonic Technology Vehicle 2) மிகையொலி (Hypersonic) வானூர்தி சாதாரண வர்த்தக வானூர்தியைக் விட 22 மடங்கு அதிவேகமாக சீறி செல்லக்கூடியதாகும். கலிபோர்னியாவில் வான்டென் பெர்க் விமானப்படை தளத்தில் உந்துகணை (Rocket) பின்புறத்தில் இணைக்கப்பட்ட இந்த வானூர்தி சீறிப் பாய்ந்து சென்றது. இந்த அதிவேக வானூர்தி புறப்பட்ட 9 நிமிடத்தில் தொடர்பை நிறுத்திக் கொண்டது. இந்த வானூர்தி பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 


இந்த வானூர்தி 2000 சென்டிகிரேடு வெப்பநிலையை தாங்கக் கூடியதாகும். அதிவேக வானூர்தி ஏற்கனவே ஏவும் திட்டம் கைவிடப்பட்டு வடிவமைப்பு மாற்றப்பட்டது. வானூர்தியில் குறைபாடு இருந்ததைத் தொடர்ந்து அப்போது வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. இந்த மிகையொலி வானூர்தி 139 வினாடிகளில் மணிக்கு 16700 மைல் வேகத்தில் சென்று உள்ளது. அதிவேக வானூர்தி கட்டுப்பாட்டை இழந்ததை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கடலில் விழ உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த HTV-2 வானூர்தியானது ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு பயணிக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டது. அதாவது Mach 22. வேகத்தைக் கொண்டது.இது நியூயோக்கிலிருந்து லொஸ் ஏஞ்சல்சிற்கு 12 நிமிடங்களில் பயணிக்கக்கூடியதெனக் கூறப்படுகின்றது. அத்துடன் அமெரிக்கப் படையால் உலகின் எந்தவொரு இடத்திற்கும் 1 மணித்தியாலத்திற்குள் சென்று இலக்கைத் தாக்கக்கூடியவாறு இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

கடலில் விழ உத்தரவிடப்படுவதற்கு அதாவது அதன் தொடர்புகள் இல்லாமல் போக முன்னர் 9 நிமிடங்களிற்கும் மேலாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டுவந்ததாக அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வுநிறுவனம் கூறியது. லொஸ் ஏஞ்சல்சின் வடமேற்காக 130 மைல்கள் தூரத்திலுள்ள வன்டன்பேக் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இவ்வானூர்தி திட்டமிட்ட பறப்புப் பாதையான பசுபிக் வழியாகச் செல்லும்போதே வீழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. இது இத்திட்டத்தின் இரண்டாவது பரிசோதனையாகும். ஏப்ரல் 2010 இல் ஏவப்பட்ட முதல் வானூர்தியும் தொடர்பையிழந்து வீழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 கலிபோர்னியாவில் வான்டென் பெர்க் விமானப்படை தளத்தில் Minotaur 4 உந்துகணையுடன் பறக்க தயார் நிலையில் 

ஈட்டிமுனை போன்ற வடிவமுள்ள இந்த HTV-2 வானூர்தியானது, இதனை ஏவும் Minotaur 4 உந்துகணையிலிருந்து தனியாகப் பிரிந்து விண்வெளி எல்லைக்குச் சென்று பின்னர் பூமியின் பரப்பிற்குள் மணிக்கு 13,000 மைல் வேகத்தில் திரும்பி வரும். இந்த வேகத்தில்தான் இது சமுத்திரத்திற்குள் விழும்போதும் பயணித்திருந்தது. HTV-2 இன் நிர்வாகி கூறுகையில், ‘எங்களுக்கு வானூர்தியை விண்வெளிக்கருகே கொண்டுசெல்லத் தெரிகின்றது. அதனை மணிக்கு 13,000 மைல் வேகத்துடன் புவிச்சுற்றுவட்டத்திற்குள் எப்படி நுழைப்பதென்றும் தெரிகின்றது. ஆனால் அதனை இந்தளவு வேகத்துடன் எப்படி விரும்பிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதென்றுதான் தெரியவில்லை. இது கவலைக்குரியதே என்று குறிப்பிட அவர் எதற்கும் ஒரு தீர்வு இருக்குமென்பதில் நாம் உறுதியாயிருக்கிறோம் என்றும் நாங்கள் அதைத்தான் கண்டுபிடிக்கவேண்டும்’ என்றார்.


FLIGHT OF THE FALCON

பெயர் : பல்கன் HTV-2

உயர்வேகம் : 13,000mph or Mach 22. A MiG-25 
can typically reach Mach 2.3, or 1,520mph

நீளம் : 12ft long

நிறை : 900kg

உருவாக்கப்பட்ட உலோகம் : Made of experimental material that can
 withstand up to 3,500f (2000C) it will experience upon re-entry.

செலவு : $308million (£189million), so far payload
Potentially anything up to 12,000lbs, including a nuclear bomb.

ஆளுமை: Anywhere in the world in less than 60 minutes

பாதுகாப்பமைச்சுடன் தொடர்புடைய லெக்சிங்ரன் நிறுவனத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி, ‘இராணுவத்திற்கு இவ்வாறான மிகையொலி (Hypersonic) வானூர்திகளைப் பயன்பாட்டில் கொடுப்பதற்கு இன்னும் நீண்ட நாட்கள் எடுக்கும்,’ என்றார்.

ஆயிரத்து 386 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இவ் மிகையொலி வானூர்தியின் இரண்டாவது முயற்சியும் பிழைத்ததை அடுத்து இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்து மீளாய்வு செய்யப்படலாம் என நம்பப்படுகிறது.


Friday, November 16, 2012

X-51A Waverider வானூர்தி


அமெரி்க்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 89 மில்லியன் ஸ்டேலிங் பவுண்ட்ஸ் செலவில் எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர் ( X-51A Waverider ) என்ற ஜெட் வானூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி மணிக்கு 6 Mach அதாவது 4500 மைல்/மணி (1 Mach ஆனது 761.2 மைல்கள் ஆகும்) வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு திட்டத்தை WaveRider Programme என அழைக்கின்றனர்.


இந்த வானூர்தி தெற்கு கலிபோர்னியாவின் எட்வர்டு விமானப்படை (Edwards Air Force Base) தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்தை ஆரம்பித்து. B -52 போர் வானூர்தியின் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர், 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஒரு ராக்கெட் உதவியுடன் உந்தி செலுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த வானூர்தி 70 ஆயிரம் உயரத்தில் பறக்கும் திறன் பெற்றது.


இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்க ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரி்ல் இருந்து பிரிட்டனின் லண்டன் நகருக்கு ஒரு மணி நேரத்தில் ‌சென்றுவிடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான பரிட்சார்த்த சோதனை அண்மையில் நடைபெற்றது.


அமெரிக்க படையினரின் பயன்பாட்டுக்காக சோதிக்கப்பட்ட அந்த வேவ்ரைடர் வானூர்தியால் ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தை எட்ட முடியவில்லை. B -52 போர் வானூர்தியின் இறக்கையில் இணைக்கப்பட்டு 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பசிபிக் சமுத்திரத்தில் Point Mugu promontory க்கு அருகில் வைத்து உந்திச் செலுத்தப்பட்டது. வேவ்ரைடர் பின்னர் மணிக்கு 4500 மைல் வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அந்த வேகத்தை அடையாமல் கட்டுப்பாட்டை இழந்து புறப்பட்ட 31 விநாடிகளில் அது பசிபிக் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.

அடுத்த தலைமுறை ஏவுகணைகளை தயாரிக்க இந்த அளவுக்கு மிகையொலி (Hypersonic) வேகம் தேவை என்று அமெரிக்க படைத்துறை தெரிவித்துள்ளது. இந்த அதியுயர் தொழில்நுட்பத்துக்காக அமெரிக்கா இரண்டு பில்லியன் செலவழித்ததாக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறது என்பதை இது எடுத்துரைக்கிறது.


Saturday, November 10, 2012

Liko வானூர்தி..


ஈரானிய ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆளில்லா வானூர்தியானது 100கிலோ நிறையுள்ள ஏவுகணைகளைக் காவிக்கொண்டு 100கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்ட இவ்வானூர்தியானது துரப்புலமானிக்கு (Radar) அகப்படாமல் தப்பிக்கும் திறனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


Liko என்ற பெயர் கொண்ட இவ் ஆளில்லா வானூர்தியின் சிறப்பம்சம் ஓடுபாதை தேவையில்லை. உந்துகணை (Rocket) போன்று விண்ணில் பறந்து செல்லக்கூடியது. அத்துடன் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கொடுக்கப்படும் உத்தரவுகளுக்கு அமைய தரை வான் மற்றும் தரைக்கடியில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கக்கூடியது.


தற்போது ஆளில்லா வானூர்திகளை அமெரிக்கா தயாரித்து வருகிறது. அதன் மூலம் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு போட்டியாக ஈரானும் ஆளில்லா வானூர்திகளை தயாரிக்கும் பணியில் சத்தமில்லாமல் ஈடுபட்டு வருகிறது.ஆனால் அமெரிக்க ஆளில்லா வானூர்திகள் ஓடுதளத்தில் சிறிது தூரம் ஓடித்தான் விண்ணில் பறக்கிறது.

அப்பாஸ்ஜாம் என்ற ஆராய்ச்சியாளர் இதை வடிவமைத்து வருகிறார். இதுபோன்ற வானூர்தி உலகில் தயாரிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வானூர்தி அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருகிறது.


Thursday, November 8, 2012

A2 வானூர்தி...


“Son of Concorde” என அழைக்கப்படும் A2  Hypersonic வானூர்தியானது பழைய Concorde வானூர்தியை விட இரு மடங்கு வேகத்துடனும் மற்றும் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்துடனும்  பறக்கக்கூடியது.

வர்த்தக வானூர்திப் போக்குவரத்தில் A2  Hypersonic வானூர்தியானது (6000km/h / 3728mph) வேகத்தில் பயணம் செய்வது குறித்து தற்போது ஐரோப்பிய வானூர்தி உற்பத்தியாளர்களிடையே மிகத்தீவிரமான ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

 இந்த 
வானூர்தியானது  300 பயணிகள் மற்றும் மொத்தமாக 400 தொன்களையும் சுமக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது.

இது Lapcat ( Long Term Advanced Propulsion Concepts and Tchnologies)செயற்றிட்டம் எனப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்தை ESTEC (European Space Research and Technology Centre)மற்றும் ESA ( The Engireening Branch of the European Space Agency) ஆகியன இணைந்து ஒழுங்கமைக்கின்றன.

திரவ ஐதரசன் இயந்திரங்களானது (Liquid Hydrogen Engines) பாரம்பரியமான ஜெட் (Traditional Kerosene Turbo-Jets) முறையிலிருந்து முழுவதும் வித்தியாசமானது. இச்செய்முறையானது Lapcat செயற்றிட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ளது.


திரவ ஐதரசன் எரிபொருளானது மிக உயர்ந்தளவான சக்தி வினைத்திறனாகும், பாரம் குறைந்தது,  காபன் வெளியேற்றங்கள் (Carbon Emissions) இல்லை, சூழலுக்கு குறைந்தளவான சேதம், ஆகியவற்றுடன் இயந்திரத்தினை குளிர்மைப்படுத்தும் ஒரு மிதமான தட்பநிலையை உண்டு பண்ணும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏவுகணை நிலையமைத்தல், மற்றும் விண்வெளி இயந்திர உற்பத்தி தொழிற்துறைகள் ஆகிய மிகமுன்னேற்றமடைந்த உயர் செயற்பாட்டு தொழில்நுட்பங்களுக்கு இந்த உயர்வான எரிபொருளை பயன்படுத்தும்முகமாக நீண்டகாலத்துக்கு அபிவிருத்தி செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும் இதனுடைய உயர் கொழுந்துவிட்டெரிதல் (High Flammability) மிகமுக்கியமானதொரு பிரச்சினையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Lapcat செயற்றிட்டத்தில் 6 நாடுகளுடன் (பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ்,இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன்) 14 பங்காளிகளும் அடங்குகின்றனர். அத்துடன் பிரித்தானிய 
 Reaction Engines கம்பனியும் இணைந்துள்ளது.
Scimitar என்ற பெயரின் கீழ் ஒரு ஆராய்ச்சி பிரதிகலத்தை அபிவிருத்தி செய்துகொண்டிருக்கின்றது. இந்த இயந்திரமானது Turbo-Jet தொழிற்பாடுகளையும் Ramjet தொழிற்பாடுகளையும் கொண்டுள்ளது.

இன்றைய தலைமுறையின் வானூர்திகலையியலில் 
 A2  Hypersonic வானூர்திகள்  முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வானூர்தியானது 140m க்கு அதிகமான நீளமுடையதாகவும், (Airbus A380 ஆனது 73m நீளமானது) ,பாரம் குறைந்த வானூர்திகட்டுமாணம், 7.5m விட்டம், மத்தியில் Delta இறக்கைகள் ,ஒவ்வொன்றும் இரண்டு இயந்திரங்களை சுமந்து செல்லும்படியாகவும் வடிவமைக்கப்படவுள்ளது, மேலும் ஐதரசன் வானூர்தி எரிபொருள் தாங்கிகள்  ஆகியவற்றினையும் உள்ளடக்கவுள்ளன.

இந்த அதிவேக விமானப்பயணம் 2023 ஆம் ஆண்டளவில் சாத்தியமாகும் என பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். நடைமுறை வணிக வகுப்பு பயணச்சீட்டில் உங்கள் பயணம் சாத்தியமாகும்.
அதிகவேகத்துக்கு உதாரணமாக Brussels To Sydney நகரங்களுக்கிடையில் 4மணி நேரப்பறப்பு சாத்தியமாகுமாம்.

.