Mi -17 ஆனது சோவியத் ஒன்றியத்தின் mil வானூர்தி கட்டுமான நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு துருப்புக்காவி உலங்கு வானூர்தியாகும். இது Mi-8M, Hip போன்ற பெயர்களினால் அழைக்கப்படுகிறது.
உலங்கு வானூர்தி Mi-8 இன் வான்சட்டத்திற்கு, பெரிய TV3-117MT இயந்திரத்தையும், Mi -14 க்கான சுழலிகளையும் தொலைத் தொடர்புகளையும் பொருத்தி, மேலதிக எடையை தாங்குவதற்காக மறுவமைக்கப்பட்ட உடல்பகுதி என்பவற்றுடன் Mi-17 தயாரிக்கப்பட்டது.
இது 6,000 மீ உயரத்தில் எழுந்து பறக்கவும், level flight speed 270 km / h வேகத்தை அடைவதற்கும், மற்றும் மேல் ஏறும் வீதம் 20 m/s ஆகவும் செயல்பட புதிய TV3-117MT இயந்திரங்கள் உதவுகின்றன. இது சிறந்த, மற்றும் பாரிய துருப்புக்காவி உலங்கு வானூர்தி ஆகும்.
போர்க்களத்தில் துருப்புக்களை விநியோகம் செய்தல் மற்றும் போர் உபகரணங்கள், ஆயுதங்கள், குண்டுகள் வெடி மருந்துகள் போன்றவற்றை விநியோகம் செய்தல், வானிலிருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்குதல், மருத்துவ உதவிகள், காயம்பட்டவர்களை வெளியேற்றுதல், வானிலிருந்து கட்டளைகள் பிறப்பித்தல் மற்றும் வழிகாட்டுதல், முக்கிய நபர்களை கொண்டுசெல்லல், பேரழிவு நிவாரண விநியோகம், மற்றும் மீட்பு போன்ற நடவடிக்கைகளில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஈழத்தில் தமிழருக்கு எதிரான ஸ்ரீலங்கா தரப்பின் போரின்போதும் பாரிய அழிவுகளையும்,சொல்லமுடியாத துயரங்களையும் தமிழர் தரப்பிற்கு ஏற்படுத்தி இருந்தது. போராளிகளின் எதிர் தாக்குதலால் சில Mi-17 உலங்கு வானூர்திகள் அழிக்கப்பட்டன.
இது இறுதியாக லிபியாவின் கடாபிக்கு எதிரான போரின் போது கடாபி தரப்பாலும், நேட்டோ படைகளாலும் பயன்படுத்தப்பட்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தன. அறுபதுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் 12,000 திற்கு மேற்ப்பட்ட Mi-17 உலங்கு வானூர்திகள் பாவனையில் உள்ளன.
No comments:
Post a Comment