ஆசியாவின் மிகப்பெரிய வானூர்தி கண்காட்சியாக "சிங்கப்பூர் வானூர்தி கண்காட்சி 2012" விளங்கியது. இது விண்வெளி, போக்குவரத்து வானூர்திகள், இராணுவ வானூர்திகள், போர், நவீன ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது.
50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பிரதேசத்தில் 22 அரங்குகள் இருந்தன. முதல் முறையாக ஜப்பான் மற்றும் உக்ரைன் அரங்குகள் அங்கு இருந்தன.
மேலும் உள்ளக பாதுகாப்பு மற்றும் ஆளில்லா உளவு வானூர்தி (UAV) அரங்கில் புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் உளவு (ISR) தளங்களில் உள்ள உயர் தொழில்நுட்பங்கள், நிலம் சார்ந்த பாதுகாப்பு தயாரிப்புகள், மற்றும் தொழில்நுட்பங்கள் இடம்பெற்று இருந்தன.
பசுமை அரங்கில் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க மாற்று எரிபொருள் உருவாக்கம் பற்றிய தொழில்நுட்பங்கள் இடம்பெற்று இருந்தன.
100,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட வெளியரங்கில் 65 க்கு மேற்ப்பட்ட சமீபத்திய இராணுவ வானூர்திகள், பயணிகள் வானூர்திகள் மற்றும் ஆடம்பர வணிக வானூர்திகள் இடம்பெற்று இருந்தன. முக்கியமாக போயிங் 787 Dreamliner (கனவு வானூர்தி) சிங்கப்பூருக்கு தனது முதலாவது வருகையை பறைசாற்றியது. அத்துடன் ஏர்பஸ் இராணுவ நிறுவனத்தின் A330 MRTT multi-role tanker மற்றும் the ACJ318 corporate jet ஆகியவற்றிக்கும் சிங்கப்பூர் புதியது தான்.
சிங்கப்பூர் வான்படையின் (RSAF) F-15SG வானூர்தியும் F-16C வானூர்தியும் அத்துடன் மலேசிய வான்படையின் (RMAF) MiG-29N வானூர்திகளும் பல சிறப்பான வான் சாகசங்களை நிகழ்த்திக் காட்டின.அத்துடன் ஆஸ்திரேலிய Blair Aerosports flying நிறுவனத்தின் வானோடி Rebel 300 single propeller வானூர்தியை கொண்டு வான் சாகசங்களை நிகழ்த்தியது சிங்கப்பூர் வானூர்தி கண்காட்சி வரலாற்றில் முதன் முதலாக இடம்பெற்று இருந்தது.
சிங்கப்பூர் வானூர்தி கண்காட்சி 2012 இன் அமைப்பாளர் திரு ஜிம்மி லா இந்த கண்காட்சி சிங்கப்பூருக்கு புதிய நன்மைகளை கொண்டு வரும் என தெரிவித்தார்.
சாங்கி கண்காட்சி மையத்தில் பிப்ரவரி 14 முதல் 19 வரை நடைபெற்ற கண்காட்சியில் 50 நாடுகளிலிருந்து குறைந்தது 900 exhibitors ( வானூர்திகள் மற்றும் காட்சி பொருட்கள்) மற்றும் 80 நாடுகளில் இருந்து 266 பிரதிநிதிகளும் இக் கண்காட்சியில் பங்குபற்றின.
100 விண்வெளி நிறுவனங்களின் 60 பிரதிநிதிகள், மற்றும் 20 வானூர்தி நிறுவனங்கள் என்பனவும் கலந்து கொண்டன.
50,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பிரதேசத்தில் 22 அரங்குகள் இருந்தன. முதல் முறையாக ஜப்பான் மற்றும் உக்ரைன் அரங்குகள் அங்கு இருந்தன.
மேலும் உள்ளக பாதுகாப்பு மற்றும் ஆளில்லா உளவு வானூர்தி (UAV) அரங்கில் புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் உளவு (ISR) தளங்களில் உள்ள உயர் தொழில்நுட்பங்கள், நிலம் சார்ந்த பாதுகாப்பு தயாரிப்புகள், மற்றும் தொழில்நுட்பங்கள் இடம்பெற்று இருந்தன.
பசுமை அரங்கில் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க மாற்று எரிபொருள் உருவாக்கம் பற்றிய தொழில்நுட்பங்கள் இடம்பெற்று இருந்தன.
100,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட வெளியரங்கில் 65 க்கு மேற்ப்பட்ட சமீபத்திய இராணுவ வானூர்திகள், பயணிகள் வானூர்திகள் மற்றும் ஆடம்பர வணிக வானூர்திகள் இடம்பெற்று இருந்தன. முக்கியமாக போயிங் 787 Dreamliner (கனவு வானூர்தி) சிங்கப்பூருக்கு தனது முதலாவது வருகையை பறைசாற்றியது. அத்துடன் ஏர்பஸ் இராணுவ நிறுவனத்தின் A330 MRTT multi-role tanker மற்றும் the ACJ318 corporate jet ஆகியவற்றிக்கும் சிங்கப்பூர் புதியது தான்.
சிங்கப்பூர் வான்படையின் (RSAF) F-15SG வானூர்தியும் F-16C வானூர்தியும் அத்துடன் மலேசிய வான்படையின் (RMAF) MiG-29N வானூர்திகளும் பல சிறப்பான வான் சாகசங்களை நிகழ்த்திக் காட்டின.அத்துடன் ஆஸ்திரேலிய Blair Aerosports flying நிறுவனத்தின் வானோடி Rebel 300 single propeller வானூர்தியை கொண்டு வான் சாகசங்களை நிகழ்த்தியது சிங்கப்பூர் வானூர்தி கண்காட்சி வரலாற்றில் முதன் முதலாக இடம்பெற்று இருந்தது.
சிங்கப்பூர் வானூர்தி கண்காட்சி 2012 இன் அமைப்பாளர் திரு ஜிம்மி லா இந்த கண்காட்சி சிங்கப்பூருக்கு புதிய நன்மைகளை கொண்டு வரும் என தெரிவித்தார்.
சிங்கப்பூர் வான் படையின் F-15SG வானூர்தியின் வான் சாகசம்.
சிங்கப்பூர் விமான படையின் F-15SG (வலது) மற்றும் F-16C வானூர்திகளின் வான் சாகசம்.
மலேசிய வான்படையின் (RMAF) MiG-29N வானூர்திகளின் வான் சாகசம்.
மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் வானூர்தி கண்காட்சியில் இடம்பெற்ற 7.62mm general purpose machine gun (GPMG) பார்வையிட்டார். (தமிழர்களின் கவனத்திற்கு)
சிங்கப்பூர் வானூர்தி கண்காட்சியில் முக்கிய இடம் பிடித்த போயிங் F-15SG Eagle fighter jet.
மலேசிய வான்படையின் (RMAF) MiG-29N வானூர்திகளின் வான் சாகசம்.
ஆஸ்திரேலிய Blair Aerosports flying இன் வான் சாகசங்கள்.
வானூர்தி கண்காட்சியில் முக்கிய இடம் பிடித்த போயிங் 787 Dreamliner (கனவு வானூர்தி)
வானூர்தி கண்காட்சியில் முக்கிய இடம் பிடித்த வானூர்திகளின் வான் சகச காணொளி
1 comment:
அங்கையும் வந்து விட்டானா?
Post a Comment