பழமொழி.....

Monday, February 6, 2012

மிக் - 5

மிக் - 15


மிக்-15 ஆனது 1947 இல் தயாரிக்கப்பட்ட முதல் வெற்றிகரமான 35-degree wing sweep இறக்கையை கொண்ட ஜெட் போர் வானூர்தியாகும். இதுவரை 12,000 க்கும் மேற்பட்ட மிக்-15 வானூர்திகள் தயாரிக்கப்பட்டு, பாவனையில் உள்ளன. கொரியா போரில் அமெரிக்காவின் F-86 போர் வானூர்திக்கு இணையாகவும் சிறந்த போர் வானூர்த்தியாகவும் செயல்ப்பட்டதாக கொரியா போர் பற்றிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக்-15 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Fagot என்பதாகும். இதற்கு Klimov RD-45 எனப்படும் ரஷ்யாவின் Nene turbojet இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
Roleஜெட் போர் வானூர்தி
Manufacturerமிகோயன் & குருவிச்
First flight30 December 1947
Introduction1949
Statusபயிற்சி வானூர்தி
Primary usersSoviet Air Force
PLA Air Force
Korean People's Air Force
41 others
Number built~12,000 + ~6,000 in license
Developed intoமிக்-17

மிக் -17 


மிக்-17 ஆனது 1952 இல் தயாரிக்கப்பட்ட உயர்-குறையொலி (High-Subsonic) போர் வானூர்தியாகும்.    இதன் பீரங்கிகளால் பல வானூர்திகளை சுட்டு விழுத்த முடியும் ஆனாலும் air-to-air  ஏவுகணைகளை இவற்றினால் காவிச்செல்ல முடியாது.இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட மிக்-17 வானூர்திகள் தயாரிக்கப்பட்டு, பாவனையில் உள்ளன. வியட்நாம் போரில் அமெரிக்காவின் மிகையொலி (Supersonic) போர் வானூர்திகளுக்கு எதிராகவும் அவற்றிக்கு இணையாகவும்  செயல்ப்பட்டது. மிக்-17 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Fresco என்பதாகும். மிக்-15 கொரியா போரில் சாதனை படைத்து என்றால் மிக்-17 வியட்நாம் போரில் சாதனை படைத்து.

மிக்-17 ஆனது மிக்-15 வானூர்தியை விட பெரிய இறக்கைகள், நீண்ட உடற்பகுதி, எரிபொருள் சக்தி, சிறந்த வேகம் மற்றும் இலகுவான கையாளுதல் போன்ற பண்புகள் கொண்டது.

Roleஉயர்-குறையொலி போர் வானூர்தி
Manufacturerமிகோயன் & குருவிச்
First flight14 January 1950
IntroductionOctober 1952
StatusActive with North Korea airforce and Pakistan air force.
Primary usersSoviet Air Force
PLA Air Force
Polish Air Force
Vietnam People's Air Force

41 others
Number built10,603
Developed from  மிக்-17


1 comment:

ரங்கன் (நோர்வே) said...

மிக் தொடரட்டும். வாழ்த்துகளும் நன்றிகளும்