இதன் சிறப்பம்சங்கள்
- நம்பகமான வலுவான இயந்திரம்
- எளிதான பராமரிப்பு
- பறப்பியல் துறையில் அதிக திறன்கள்
- பல சிறப்பியல்புகள் கொண்ட வானூர்தி
- எல்லா நேரங்களிலும் வெற்றிகரமான பறப்புக்கள் கொண்டது.
Role | சண்டை வானூர்தி |
---|---|
Manufacturer | மிகோயன்-குருவிச் |
First flight | 10 June 1967 |
Introduction | 1970 |
Status | வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ளது |
Primary users | சோவியத் வான்படை சிறீலங்கா வான்படை, இந்திய வான்படை, சிரிய வான்படை |
Produced | 1967–1985 |
Number built | 5,047 |
மிக் -25
மிக் 25 என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும், உளவு பார்க்கும் மற்றும் குண்டுவீசும் வானூர்தியாகும். இவ்வானூர்தி மிகோயன் குருவிச் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. வானூர்தியின் முன்மாதிரி 1964 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. இவ்வானூர்தி Mach 2.83+ என்னும் அதிஉயர் வேகத்தை கொண்டது. இது மிகவும் சக்தி வாய்ந்த ராடர் மற்றும் வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் நான்கு ஏவுகணைகளையும் (air-to-air missiles) தன்னகத்தே கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் McDonnell Douglas F-15 Eagle என்னும் வானூர்தியை தயாரிக்கத் தூண்டியது. மிக் 25 வானூர்தியின் தயாரிப்பானது 1984 ஆம் ஆண்டு 1,190 வானூர்திகளைத் தயாரித்த பின்பு முடித்துக்கொள்ளப்பட்டது. இவ்வானூர்தி இன்று ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் சிலவற்றில் சேவையில் உள்ளது. மிக்-25 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Foxbat என்பதாகும்.
இதன் சிறப்பம்சங்கள்
- ஒரு உயர் அழுத்தம் கொண்ட R-15B-300 இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
- உயர் வெப்பநிலை கொண்ட T-6 வானூர்தி எரிபொருளாகவும் aircraft cooling system அமைப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
- மிக அதிக வேகம் காரணமாக வானூர்தியின் பெரும் பகுதி இரும்பு, மற்றும் டைட்டானியம் கலப்புலோகங்களினால் கட்டப்பட்டன.
- அதி சக்தி வாய்ந்த ராடர், வானோடியின் (pilot) பங்களிப்பு இல்லாமல் இலக்கு நோக்கி வானூர்தியை இயக்கும் திறன் மற்றும் தன்னிச்சையாக தீயை கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
Role | இடைமறித்து தாக்குதல், உளவு பார்த்தல் |
---|---|
Manufacturer | மிகோயன்-குருவிச் |
First flight | 6 March 1964 |
Introduction | 1970 |
Status | பயன்பாட்டில் உள்ளது |
Primary users | சோவியத் வான்படை ரஷிய வான்படை, அல்ஜீரிய வான்படை, சிரிய வான்படை |
Produced | 1970 - 1984 |
Number built | 1,190 |
2 comments:
இனப்படுகொலை செய்வதற்கு தனது விமானிகளைப் பயிற்றுவிற்கிறது.
நன்றாக உள்ளது.
Post a Comment