பழமொழி.....

Tuesday, February 14, 2012

மிக் -8

மிக் -27



மிக்-27 ஆனது தரைத்தாக்குதல் வானூர்தியாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் வானூர்தி கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது பகதூர் என்ற பெயருடன் சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் இந்துஸ்தான் விமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இது மிக்-23 வானூர்தியின் அடிப்படையில் கட்டப்பட்டது ஆனாலும் வானிலிருந்து தரைக்கு தாக்குதல் நடத்துவது எத்தன சிறப்பம்சமாகும். இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் "Flogger-D/J" என்பதாகும்.

இதன் சிறப்பம்சங்கள்
  1. அனைத்து வகை காலநிலையின் போதும் தாக்குதல் நடத்தக்கூடிய தாக்குதல் வானூர்தி.
  2. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு வகை இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வகை உபகரணங்கள் கொண்டு உற்பத்திசெய்யப்பட்டன.
  3. கவசதினால் பாதுகாக்கப்பட்ட வானோடி அறையை (Cockpit) தன்னகத்தே கொண்டது.
  4. ஆயுதங்கள், rocket pods, bombs, guided ஏவுகணைகள் ஆகியவற்றை காவிச் செல்லக்கூடியது.
  5. KAB-500L லேசரினால் வழிநடத்தப்படும் குண்டு மற்றும் KAB-500KR தொலைக்காட்சியினால் வழிநடத்தப்படும் குண்டு ஆகியவற்றை காவிச் செல்லக்கூடியது.
  6. 500kg அளவு, கொத்து குண்டுகள் மற்றும் தீமூட்டும் சாதனங்கள், S-24, S-25,S-8, S5 unguided rockets, மற்றும் வான்வழி குண்டுகள் ஆகியவற்றை காவிச் செல்லக்கூடியது.
  7. இதில் Inferior மின்னியல் கருவிகள் பொறுத்தப்ப்பட்டுள்ளன.
  8. இது high-mounted, variable, swept-back, and tapered with blunt tips கொண்ட இறக்கைகளை தன்னகத்தே கொண்டது.

சிறீலங்கா வான்படை 2000 ஆம் ஆண்டு முதல் தமிழரை அழிப்பதற்கு மிக் -27 வானூர்தியை ஈழப் போரில் இதைப் பயன்படுத்தி வருகின்றது. கடைசி கட்ட ஈழப்போரில் மாத்திரம் மிக்-27 யுத்த வானூர்திகள் மட்டும் 1071 தொன் எடையுள்ள குண்டுகளை வன்னியில் வீசியுள்ளன என முன்னாள் விமானப்படைத் தளபதி றொசான் குணதிலக தெரிவித்துள்ளார்.


சிறிலங்காவில் அழிந்த மிக்-27

  1. மிக்-27 வானூர்தி அதன் உக்ரேனியன் வானோடியுடன் நீர்கொழும்பு அருகே விழுந்து நொறுங்கியது.
  2. ஜூலை 2001 இல், தமிழீழ போராளிகளின் கட்டுநாயக்க விமான படை தளம் மீதான வீரம் செறிந்த தாக்குதலின் போது  மிக்-27 பல வானூர்திகளுடன் அழிக்கப்பட்டது. 
  3. ஜூன் 2004 இல் நீர்கொழும்பு கடலில் விழுந்து நொறுங்கியது.
  4. தமிழீழப் போராளிகளால் 2007 ஆம் ஆண்டு இரணைமடுவில் வானில் வைத்து தாக்கி அழிக்கப்பட்டது.
  5. புத்தளம் நாத்தாண்டிய தும்மலசூரிய பகுதியில் சற்றுமுன்னர் மிக் 27 ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

2 comments:

Rajan said...

The MiG 27 was used by the SLAF during all phases of Eelam wars and these infamous monsters were behind the death and injury of hundreads of tamil civilians and LTTE fighters.

Tamil people around the world in general and Srilanka's north-east in particular expressed happy over the crash of the said MiG.

Anonymous said...

Iam also Happy