பழமொழி.....

Monday, February 27, 2012

மிக்-10

மிக்-31



மிக்-31 என்பது ஒலியின் வேகத்தை விட மிக வேகமாகச் சென்று இடைமறித்து தாக்கும் வானூர்தி (மிகையொலி வானூர்தி) ஆகும். இவ்வானூர்தி மிகோயன் குருவிச் நிறுவனத்தால் மிக்-25 வானூர்தியை முன்மாதிரியாகக்கொண்டு சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இவ்வானூர்தியின் முன்மாதிரி 1975 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு சோவியத் வான்படையில் சேர்க்கப்பட்டது. ஒரே நேரத்தில் வெவ்வேறு வேகம் மற்றும் வெவ்வேறு உயரத்தில் பறக்கும் பொருட்கள், ஏவுகணைகள், வானூர்திகள் போன்றவற்றை அழிக்கும் திறன் இதன் சிறப்பம்சமாகும். 

இதனால் மிகப்பெரும் வான்வெளியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். சிறிய மற்றும் பெரிய அளவிலான ஏவுகணைகள், உலங்கு வானூர்திகள், அதிக உயரத்தில் பறக்கும் மிகையொலி வானூர்திகள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் குறையோலி வானூர்திகள் எவையாயினும் எந்த காலநிலையிலும், பகல் அல்லது இரவு எந்த நேரத்திலும் வான் எப்படிப்பட்ட (நகரும் அல்லது நிலையான) இலக்கானாலும் தொடர்ந்து சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதற்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Foxhound என்பதாகும்.

இது சோவியத் வானூர்திகளில் Multiple-target (பல்-இலக்கு), N007 Zaslon radar (இது 200 கிமீ தூரத்தில் உள்ள 10 இலக்குகளை ஒரே நேரத்தில் முன்னோக்கியும்,பெரிதாகவும் காட்டக்கூடியது), மற்றும் look-down, shoot-down capability (இது அடிவானத்திற்கு கீழே நகரும் வான் இலக்கை கண்காணிக்க மற்றும் கண்டறிய வழிகாட்டும் ஒரு ரேடார் அமைப்பு) ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.



No comments: