கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன.
கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர்.
மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன மின்னியல் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட முதல் தயாரிப்பு Kfir-C1 அறிவிக்கப்பட்டது.
பின்னர் கிபிர் போர் வானூர்தி பல நவீன ரகங்களில் தயாரிக்கப்பட்டது.
Kfir C.1
F-21A Kfir : Kfir C.1 வகையை சேர்ந்த 25 வானூர்திகள் அமெரிக்க நிறுவனத்தால் நவீன மயப்படுத்தப்பட்டு, F-21A என பெயர் மாற்றப்பட்டு, குறைந்த இயக்க செலவு மற்றும் நல்ல மாற்றம் என நன்கு தன்னை நிரூபித்தது.
Kfir C.2
மேம்படுத்தப்பட்ட புதிய aerodynamic மாற்றங்கள், புதிய மின்னியல், ஒரு புதிய வகை ரேடார், இரட்டை-கணினி விமான கட்டுப்பாட்டு அமைப்பு (twin-computer flight control system) multi-mode navigation மற்றும் ஆயுத விநியோக அமைப்பு (weapons delivery system) மத்திய விமான தரவு கணினி மற்றும் HUD முதலியன அறிமுகப்படுத்தப்பட்டது.
Kfir TC.2
இரண்டு இருக்கை கொண்ட இவ் வானூர்தி முன் மூக்குப்பகுதி குறைக்கப்பட்டு விமானிகளின் பர்வைப்பகுதி மேம்படுத்தப்பட்டது.
Kfir C.7
இதன் முன்னோக்கி செல்லும் உந்துவிசை 454 kg ஆல் அதிகரிக்கப்பட்டது. smart weapons களின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. மிகவும் நுணுக்கமான மின்னணு சாதனங்கள் மற்றும் HOTAS (Hands On Throttel And Stick) ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.
Kfir TC.7
மேலே கிளம்புவதற்கான விசை ( take-off weight) 1,540 kg ஆக அதிகரிக்கப்பட்டது. நிறைக்கும் உந்துவிசைகுமான வீதம் (thrust-to-weight ratio) மேம்படுத்தப்பட்டது.
Kfir C.10
இது வானிலிருந்து வானுக்கு (air-to-air) ஏவுகணைகள், புதிய வகை ரேடார்கள் மற்றும் நவீன போர் ஆயுதங்களையும் கொண்டுள்ளது.
Kfir TC.10
இது Kfir TC.7 வானூர்தியை கொண்டு கொலம்பியன் வானூர்தி படை உருவாக்கியுள்ளது.
Kfir C.12
இது Kfir C.7 வானூர்தியை கொண்டு கொலம்பியன் வானூர்தி படை உருவாக்கியுள்ளது.
Kfir Tzniut
இது Kfir C.2 வானூர்தியின் புதிய பதிப்பாகும்.
Kfir C.60
இது Kfir C.10 வானூர்தியை கொண்டு பல்கேரியன் வானூர்தி படை உருவாக்கியுள்ளது.
இவை தான் ஈழ தமிழர்களின் வாழ்க்கையையும் சிதைத்து சின்னாபின்னமாக்கினவை.
5 comments:
இவை தான் ஈழ தமிழர்களின் வாழ்க்கையையும் சிதைத்து சின்னாபின்னமாக்கினவை.
நன்று
very nice
gooood
உண்மை தான்
Post a Comment