பழமொழி.....

Friday, January 20, 2012

மிக் - 01.



மிகோயன் & குருவிச் (Mikoyan-and-Gurevich) என்பது ரஷ்யாவின் ராணுவதிற்குத் தேவையான சண்டை வானூர்திகளைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். ஆர்டம் மிகோயன் மற்றும் மிக்கயில் குருவிச் ஆகியோரால் 1939 ஆம் ஆண்டு உருவக்கப்பட்டது. இவ்விருவரின் பெயர்களைக் கொண்டு Mikoyan-and-Gurevich Design Bureau என்றும் நிறுவனம் சுருக்கமாக மிக் (MIG) என்றும் பெயரிடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு ஆர்டம் மிகோயன் மறைவிற்குப் பின் இந்நிறுவனத்தின் பெயரிலிருந்து மிகோயன் நீக்கப்பட்டது. ஆயினும் புனைப்பெயரான மிக் அப்படியே விடப்பட்டது.

மிக் ரக வானூர்திகளை சீனா, வட கொரியா மற்றும் வட வியட்னாம் ஆகிய நாடுகள் ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளுக்கெதிராகப் பயன்படுத்தியுள்ளன. மேலும் சோவியத் ஒன்றியம் பல்வெறு நாடுகளுக்கு மிக் ரக வானூர்திகளை ஏற்றுமதி செய்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ரஷ்யா இந்நிறுவனத்தின் 100 % சதவிகிதப் பங்குகளை இல்லுயிசின், இர்குட், சுகோய், டியுபோலெவ் மற்றும் யகோவ்லெவ் ஆகிய நிறுவனங்களுடன் ஒன்றினைத்து யுனைடெட் ஏர்க்ராஃப்ட் கார்ப்ரேசன் (United Aircraft Corporation) எனும் நிறுவனத்தை உருவாக்கியது. குறிப்பாக மிகோயன் மற்றும் சுகோய் ஆகியவை ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன.


மிக் வானூர்திகளின் வகைகள்......
1 ) MiG-1, 1940
2 ) MiG-3, 1941
3 ) MiG-7, 1944
4 ) MiG-9, 1946
5 ) MiG-15 , 1948
6 ) MiG-17 , 1953
7 ) MiG-19, 1954 -MiG's first supersonic fighter (ஒலியை விட வேகமாகச் செல்லும் முதல் வானூர்தி)
8 ) MiG-21, 1956,
9 ) MiG-23 , 1967
10) MiG-25, 1965 -Interceptor fighter and recce/strike aircraft
                       (இடைமறித்து தாக்கும், உளவு பார்க்கும் மற்றும் குண்டுவீசும் வானூர்தி)
11) MiG-27, 1970 -A ground-attack aircraft (தரைத்தாக்குதல் வானூர்தி)

            (மிக் -27 ஈழ தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா விமானப்படை பயன்படுத்தியது.)
12) MiG-29, 1977, comparable to the US F-16 Fighting Falcon and F/A-18 Hornet
                                (அமெரிக்காவின் F-16 மற்றும் F/A-18 வானூர்திகளுக்குஇணையானது)
       MiG-29K
       MiG-29M
13) MiG-31, 1975 -Interceptor fighter aircraft (இடைமறித்து தாக்கும் வானூர்தி)
14) MiG-35, 2007,
15) MiG LMFS

No comments: