பழமொழி.....

Friday, January 27, 2012

Head Up Display System.....

சிறிலங்காவின் விமானப்படையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனாவிடம் வாங்கப்பட்ட மூன்று போர் விமானங்களை 6 மில்லியன் டொலர் செலவில் இலங்கை அரசாங்கம் தரமுயர்த்தவுள்ளது.
K-8 ரகத்தைச் சேர்ந்த மூன்று போர் வானூர்திகளே முதற்கட்டமாக தரமுயர்த்தப்படவுள்ளன. இந்தப் போர் விமானங்களில் Head Up Display System (HUD) மற்றும் Multi-Function Display System (MFD) ஆகியன நவீன கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
(6 மில்லியன் டொலரில் போர் விமானங்களை தரமுயர்த்தும் இலங்கை............ ஊடக செய்தி)

Head-up display or Heads-up display (HUD)  


வானோடி (Pilot) தங்கள் வழக்கமான பார்வைக் கோணத்திலிருந்து விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் அனைத்து விபரத்தையும் இது அளிக்கிறது. பார்வைக் கோணத்திற்கு அப்பால் உள்ள (அதாவது கீழ் பகுதியில் உள்ள) உபகரணங்களைப் (Instruments) பார்ப்பதற்க்கான தேவையை Heads-up display பூர்த்தி செய்கிறது. இது பல விபரங்களை ஒருங்கிணைத்து வானோடிக்கு வழங்குவதன் மூலம் வானொடியின் வேலையை சுலபமாக்கிறது.
இது ஆரம்பத்தில் இராணுவ வானூர்தி போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டன என்றாலும், இப்போது பயணிகள் வானூர்திகள் , வாகனங்கள், மற்றும் பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

HUD கருவி 3 அமைப்புகளை கொண்டுள்ளது.
  1. Projector unit 
  2. Combiner
  3. Video generation computer

    
1.  Speed (knots)
 2. Heading
 3. Bank angle
 4. Vertical speed (feet per minute)                     
 6. Throttle
 7. Rudder
 8. Aileron
 9. Elevator 
10.Flap and gear 11.indicators
12.Pitch angle (degrees)
13.Altitude (feet above sea level)






HUD யின் அனுகூலங்கள்
வானோடிக்கு வானூர்தியின் வெளிப்புறச் சூழல் பற்றிய துல்லியமான விபரங்களை வழங்குகிறது....
வானூர்தியின் செயற்ப்பாடு, அதன் சூழ்நிலை விழிப்புணர்வு, மற்றும் வெளிப்புற பொருட்களுடனான போன்ற விபரங்களை வழங்குகிறது.....
வானூர்தியின் சில்லு, தடுப்பி (tire and brake) மற்றும் Airframes போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து, அதன் செயல்திறனை அதிகரிக்கிறது........
அதிக நம்பகத்தன்மை மற்றும் இயக்க செயல்திறனைவழங்குகிறது.........
வானூர்தி விபத்துக்களை பெருமளவு குறைக்கிறது...........
ஓடு பாதையின் அகலம், நீளம்.. வானூர்தியை எப்படி தரையிறக்கம் பண்ணலாம் போன்ற விபரங்களை துல்லியமாக வழங்குகிறது.............





No comments: