பழமொழி.....

Wednesday, January 25, 2012

மிக் - 03.

மிக்-3  சோவியத் ஒன்றியத்தால் அறிமுகப்படுடப்பட்ட ஓர் போர் வானூர்தியாகும்.  மிக்-1 இல் காணப்பட்ட பல குறைபாடுகள் மற்றும் ஒழுங்கற்ற வடிவமைப்புகள் காரணமாக ஏராளமான வடிவமைப்பு மாற்றங்கள் பல செய்யவேண்டிய கட்டாய சூழல் உருவாகியது. இதன் போது மிக்-1 இல் பல மாற்றங்கள் செய்யப்பட்டு 1941ஆம் ஆண்டளவில் தயாரிக்கப்பட்டது. மிக் ரக வானூர்தி வரிசையில் இரண்டாவது தயாரிப்பாகும்.


தயாரிப்பின் பொது மிக்-3 இல் கொண்டுவரப்பட்ட மாற்றங்களில் சில........                                                             
  1. வானூர்தி இயந்திரம் 10cm முன் கொண்டுவரப்பட்டது.
  2. வெளி இறக்கை தகடுகள் (outer wing panels) 1 பாகை அதிகரிக்கப்பட்டு இருந்தது. 
  3. 250 லீட்டர் எரிபொருள் தாங்கி வானோடியின் இருக்கைக்கு கீழே பொருத்தப்பட்டது.
  4. அத்துடன் வானுடல் (fuselage) decking குறைக்கப்பட்டது.
  5. Radiator bath fairing முன்நோக்கி பெரிதாக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டது.
  6. Supercharger intakes திருத்தப்பட்டது.
  7. 4 wing points உடைய வெளிச்சுமை 220kg ஆக மாற்றப்பட்டது. 
  8. 12.7mm BK machine guns மற்றும் அதே போன்ற தகுதி வாய்ந்த 2 UBK guns ஆகியன இறக்கைக்கு கீழ் பொருத்தப்பட்டன.
  9. வானூர்தியின் மேல் எழும்பும் நிறை 3510kg ஆல் அதிகரிக்கப்பட்டது.



1 comment:

Anonymous said...

Good Information.