பழமொழி.....

Wednesday, February 8, 2012

மிக் -6

மிக் -19




மிக் 19 ஒரு சோவியத் யூனியனின் இரண்டாவது தலைமுறை, ஒற்றைஇருக்கை, இரட்டை ஜெட்-இயந்திர போர் வானூர்தியாகும். சோவியத் யூனியனின் முதலாவது மிகையொலி (Supersonic) வானூர்தியும் இதுதான். இதுவரை அதாவது 1954 ல் முதல் 1957 ஆம் ஆண்டு வரை 2,069 க்கும் மேற்பட்ட மிக்-19 வானூர்திகள் தயாரிக்கப்பட்டன. மிக்-19 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Farmer என்பதாகும். முதலில் மிக்-19P என்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் விபத்துக்கள் மற்றும் இயந்திரத்தின் நம்பகத்தன்மை காரணமாக நிறுத்தப்பட்டு, இன்னும் சக்திவாய்ந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மிக்-19S உருவாக்கப்பட்டது. அத்துடன் நவீனமாக்கப்பட்ட elevator, வால் பகுதி மற்றும் அனைத்து வானிலையிலும் செயல்திறன் கொண்ட ரேடார் ஆகியவை இணைக்கப்பட்டன. வானிலிருந்து வானுக்கு செல்லும் ஏவுகணைகளை காவும் திறனும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Roleஜெட் போர் வானூர்தி
Manufacturerமிகோயன் & குருவிச்
First flight18 September 1953
IntroductionMarch 1955
Statusபாவனையில் இல்லை.
Primary usersSoviet Air Force
People's Liberation Army Air Force

24 others
Number built2,172
Developed intoமிக்-21



மிக் -21

மிக் 21 சோவியத் யூனியனின் போர் வானூர்தியாகும். இது சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் தயாரிக்கப்பட்ட வானூர்திகள் இரண்டாம் தலைமுறை வானூர்திகளாகவும், பிற்காலங்களில் தயாரிக்கப்பட்ட வானூர்திகள் மூன்றாம் தலைமுறை வானூர்திகளாகவும் கருதப்பட்டன. இது முகோண இறக்கையையும் அம்பு வடிவ Fin னையும் கொண்டுள்ளது. மிக்-21 க்கு NATO வினால் அறிவிக்கப்பட்ட பெயர் Fishbed என்பதாகும்.

இதன் சிறப்பம்சங்கள்................
  1. இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிக அதிகமாக தயாரிக்கப்பட்ட போர் வானூர்தி.
  2. இது 50 ஆண்டுகளாக தொடர்ந்து தயாரிக்கப்பட்ட போர் வானூர்தி.
  3. இது நான்கு தலைமுறைகளுக்கு 20 மாறுபட்ட ரகங்களில் தயாரிக்கப்பட்டது.
  4. இது நான்கு கண்டங்களில் சுமார் 50 நாட்டு வானூர்தி படைகள் பயன்படுத்துகின்றன.
Roleஜெட் போர் வானூர்தி
Manufacturerமிகோயன் & குருவிச்
First flight14 February 1955
Introduction1959
Statusபயன்பாட்டில் உள்ளது.
Primary usersசோவியத் வான்படை
இந்திய வான்படை
பல்கேரிய வான்படை
50 others
Number built11,496



1 comment:

சிவம் (தமிழ் நாடு) said...

தகவலுக்கு நன்றி.