பழமொழி.....

Monday, June 25, 2012

நுண் வேவு வானூர்திகள்..


உலகின் பல நாடுகள் தங்கள் படைத்துறைக்கும் உளவுத் துறைக்கும் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா தனது படைத் துறைக்கு ஆளில்லாப் போர் வானூர்திகளை அதிகமாக இணைத்து வருகிறது. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ யும் சொந்தமாக ஆளில்லா வானூர்தித் தளங்களை உலகின் பல பாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா வானூர்திகள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் வானூர்திகள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா வானூர்திகளை களமிறக்கியுள்ளது.





ஆளில்லாப் போர் வானூர்திகள் அளவில் பெரியதாக உருவாகி வருகையில் வேவு பார்க்கும் ஆளில்லா வானூர்திகள் அளவில் மிகச் சிறியதாகி வருகின்றன. ஆளில்லா வானூர்திகளை ஆங்கிலத்தில் Drones என அழைப்பர். இதில் சிறிய வகைகளை Miniature Drones அல்லது micro air vehicles (MAVs). இந்த micro air vehicles சிறு பூச்சிகளின் உடலமைப்பு, அவற்றின் உணரிகள், பறப்பதற்கு அவை பாவிக்கும் நுட்பங்கள் போன்றவற்றைப் கவனம் செய்து உருவாக்கப்பட்டுள்ளன. சில வேவு வானூர்திகள் குருவிகள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூச்சிகளின் உடலில் உள்ள தொழில் நுட்பங்களை reverse-engineering முறை மூலம் கண்டறிந்து அந்த நுட்பங்களை சிறிய வேவு வானூர்திகளில் பாவித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள். சிறு பூச்சிகளின் கண்கள், வௌவாலின் காதுகள், தேனிக்களின் உணரி ரோமங்கள் போன்றவற்றில் உள்ள தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை வேவு பார்க்கும் micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். பிரெஞ்சு விஞ்ஞானிகள் பறவைகளின் சிறகடிக்கும் தொழில் நுட்பத்தை தமது micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். வேவு வானூர்திளில் வடிவமைப்பில் பூச்சிகளினதும் குருவிகளினதும் செயற்படு நுட்பங்களைப் புகுத்துவதை Nano-biomimicry MAV design என்கின்றனர். கடந்த 350 மில்லிய ஆண்டுகளாக பூச்சியினங்கள் தங்கள் பறக்கும் திறனை எப்படி கூர்ப்படையச் செய்தன என்பதை ஆராய்ந்த பிரித்தானிய விலங்கியலாளர் ரிச்சர்ட் பொம்பிரி (Zoologist Richard Bomphrey) பூச்சியினங்கள் சிறுவிமானங்களை வடிவமைப்பது எப்படி என எமக்குக் கற்றுத் தந்துள்ளன என்கிறார்.



இது கொசு அல்ல கொலைகாரி

'With insects you get a combination of both these assets in miniature. And when you consider we have been flying for just over a hundred years as opposed to 350 million years, I would say it is they who have got it right, and not us!'

















No comments: