பழமொழி.....

Saturday, November 10, 2012

Liko வானூர்தி..


ஈரானிய ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆளில்லா வானூர்தியானது 100கிலோ நிறையுள்ள ஏவுகணைகளைக் காவிக்கொண்டு 100கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்ட இவ்வானூர்தியானது துரப்புலமானிக்கு (Radar) அகப்படாமல் தப்பிக்கும் திறனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


Liko என்ற பெயர் கொண்ட இவ் ஆளில்லா வானூர்தியின் சிறப்பம்சம் ஓடுபாதை தேவையில்லை. உந்துகணை (Rocket) போன்று விண்ணில் பறந்து செல்லக்கூடியது. அத்துடன் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கொடுக்கப்படும் உத்தரவுகளுக்கு அமைய தரை வான் மற்றும் தரைக்கடியில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கக்கூடியது.


தற்போது ஆளில்லா வானூர்திகளை அமெரிக்கா தயாரித்து வருகிறது. அதன் மூலம் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு போட்டியாக ஈரானும் ஆளில்லா வானூர்திகளை தயாரிக்கும் பணியில் சத்தமில்லாமல் ஈடுபட்டு வருகிறது.ஆனால் அமெரிக்க ஆளில்லா வானூர்திகள் ஓடுதளத்தில் சிறிது தூரம் ஓடித்தான் விண்ணில் பறக்கிறது.

அப்பாஸ்ஜாம் என்ற ஆராய்ச்சியாளர் இதை வடிவமைத்து வருகிறார். இதுபோன்ற வானூர்தி உலகில் தயாரிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வானூர்தி அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருகிறது.


No comments: