பழமொழி.....

Saturday, November 24, 2012

X-48C வானூர்தி


எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய முக்கோண வடிவ பயணிகள் (Hybrid wing-body plane) வானூர்தியை நாசா அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்காலத்தில் வானூர்தி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் ஐக்கிய இராட்சியத்தின் Cranfield Aerospace Limited நிறுவனத்தின் உதவியுடன் போயிங் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதலில் X-48C ரக முக்கோண வடிவ வானூர்தியை மட்டும் தயாரித்துள்ளது. இது கலிபோர்னியாவின் எட்வார்ட் வான்படை தளத்திலிருந்து (Edwards Air Force Base in California) தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.

வானோடி இல்லாமல் இயங்கும் இந்த வானூர்தி X-48B Blended Wing Body வானூர்தியின் மாதிரியைக் கொண்டு வேகம், கட்டுப்பாட்டு அமைப்புகள், மூக்குப்பகுதி, வானூர்தியின் சத்தம் போன்ற மாற்றங்களுடன் தயாரிக்கப்பட்டது. அத்துடன் உடல் அகலம் 20 அடியாக நீட்டப்பட்டது. 


பின்னர் விரிவுபடுத்தப்பட்டு பல வானூர்திகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முக்கோண வானூர்தியின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இந்த வானூர்திகளே அடுத்த 20 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எனவே இந்த விமானம் அடுத்த 15-20 ஆண்டுகளில் மிகச்சிறந்த பயணிகள் விமானங்களாக மாறுவதுடன், ராணுவ பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்று நாசா கூறியுள்ளது.


உளவு வானூர்தியைப் போன்று உள்ள இந்த வானூர்தியில் ஜன்னலோர இருக்கைகளே இருக்காது. மாறாக அதிக இருக்கைகள் மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும். அத்துடன் அதிக சரக்குகளையும் இதில் ஏற்றிச் செல்லவும் முடியும். முக்கோண வடிவில் இருப்பதால், இது காற்றை எளிதில் கிழித்துக்கொண்டு வேகமாக செல்ல முடியும். 500 இறாத்தல் நிறையையும், மணிக்கு 140 மைல் வேகத்திலும் பறக்கும் இவ் வானூர்தி 10,000 அடி உயரத்திற்கு மேல் பயணிக்கக்கூடியது. 


No comments: