பழமொழி.....

Wednesday, December 5, 2012

Neuron வானூர்தி..


ஆறு ஐரோப்பிய நாடுகளின் Stealth தொழில் நுட்பத்துடன் கூடிய ஆளில்லா தாக்குதல் போர் வானூர்தியின் unmanned combat air vehicle (UCAV) முதலாவது பறப்பு 01/12/2012அன்று நடைபெற்றது. பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், ஸ்பெயின், கிரேக்கம், சுவிற்சலாந்து ஆகிய 6 நாடுகள் இத்திட்டத்தில் இணைந்திருந்தன. 500 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த வானூர்திக்கு நியுரோன் nEUROn எனப் பெயரிடப்பட்டுள்ளது.




தூரப்புலமானி தவிர்ப்பு(Stealth) தொழில் நுட்பம்
Stealth என்பதன் தமிழ் அர்த்தம் தவிர்த்து அல்லது அகப்படாமல் முன்னேறுதல். போர் முனையில் எதிரி வானூர்திகளை தூரப்புலமானி (Radar) மூலம் கண்டறிவர். தூரப்புலமானியால் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்கு Stealth தொழில் நுட்பம் உதவிகிறது. இதன்படி வானூர்தி தட்டையாக வடிவமைக்கப்படும். அத்துடன் தூரப்புலமானியில் இருந்து வரும் வானொலி அலைகளை உறிஞ்சும் இரசாயனப் பதார்த்தம் வானூர்தியில் பூசப்பட்டிருக்கும். ஈழ வான்படையின் வானூர்திகள் கூட தூரப்புலமானியில் அகப்படாமல் இருந்தது. அது எப்படியோ தெரியாது. 


ஆளில்லாப் போர் வானூர்திகள்
உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் வானூர்திகளின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் வானூர்திகள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் வானூர்திகள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. 

நியுரோன் வானூர்திகள்
நியுரோன் வானூர்திகள் ஆளில்லாத தொழில்நுட்பத்தையும் (Drone Technology) தூரப்புலமானி தவிர்ப்பு(Stealth Technology) தொழில் நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்படுகின்றன. இது இரண்டு Adour mk951 இயந்திரங்கள் மூலம் இயக்கப்படுகிறது. lesar உதவியுடன் செல்லக்கூடிய 250kg எடையுடைய இரு குண்டுகளையும் காவிச் செல்லக்கூடியது. இதன் உயர் வேகம் Mach 0.8 ஆகவும் எடை 4,500 கிலோ ஆகவும் காணப்படுகிறது.


No comments: