பழமொழி.....

Thursday, May 14, 2015

Greased Lightning........



மின்கலத்தில் கிடைக்கும் மின்சாரத்தின் சக்தியைக் கொண்டு இயங்கும் 10 இயந்திரங்கள் கொண்ட நாசாவின் புதிய வானூர்தியின் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.


ஒரு வானூர்தியின் சக்தியைக் கொண்ட Greased Lightning அல்லது GL-10 என்று அழைக்கப்படும் இந்த வானூர்தி ஒரு உலங்குவானூர்தியைப் போல் மேல் கிளம்பி, தரையிறங்கும் vertical takeoff and landing (VTOL) அத்துடன் பறக்கும் போது வானூர்தியைப் போல் பறக்கும்.


இவ் ஆளில்லா வானூர்தி பல்வேறு சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாக ஹாம்டனில் உள்ள நாசா மையத்தின் விண்வெளி பொறியாளர் பில் அறிவித்துள்ளார். This Unmanned Air Vehicle (UAV) has a wingspan of 20 ft (6.1 m), a dry weight of 55 lb (24.9 kg), and a takeoff weight of 62 lb (28.1 kg).


இந்த வானூர்தி குறித்து பில் கூறுகையில் “சிறிய பொருட்களை இடம் மாற்றம் செய்ய இந்த வானூர்தி உதவும். மற்றும் விவசாயத்தை நீண்டநேரம் கண்காணிப்பது, உளவு, தனி நபர் உபயோகம் என்று பல வகையில் இந்த வானூர்தி பயன்படும்” என்றார்.


Thursday, April 16, 2015

PAK TA....

7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்க தயாராகும் அதிநவீன ரஷ்ய விமானம்.


 அமெரிக்காவின் வல்லாதிக்க கனவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்துவரும் ரஷ்யா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

உக்ரைன் நாட்டை உடைத்து வெகு சாதுர்யமாக கிரிமியாவை பிரித்து தனிநாடாக்கி, தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவின் அரசியல் ராஜதந்திரத்தை கண்டு உலக நாடுகள் அசந்துப்போய் வாயடைத்து நிற்கும் வேளையில் எதிர்கால போர் யுத்திகள் தொடர்பாகவும், போர்க்காலங்களை எதிர்கொள்ள வேண்டிய எதிர்கால அணுகுமுறைகள் தொடர்பாகவும் ரஷ்ய ராணுவம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்துள்ளது.


அந்த சிந்தனையின் விளைவாக, ஏழே மணி நேரத்தில் உலகின் எந்த மூலைக்கும் ஆயுதங்களையும், ராணுவ டாங்கிகளையும், காலாட்படைகளையும் அனுப்பி வைக்கும் ராட்சத சக்தி கொண்ட அதிநவீன வானூர்தியை  தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

‘PAK TA’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் இந்த வானூர்தி ராணுவ பயன்பாட்டிற்கான விசேஷ அம்சங்களுடன் தயாரிக்கப்பட உள்ளது. ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை விரைவாக கொண்டு சேர்க்கும் வல்லமை கொண்ட இவ்வானூர்தி 400 ராணுவ டாங்கிகளையும், அவற்றுக்கு தேவையான வெடிப் பொருட்களையும் ஒரே வேளையில் சுமந்து கொண்டு ஏழே மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் சென்றடைந்து விடும்.


இந்த வானூர்தியை பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைபிரிட் நுட்பம் கொண்ட வானூர்தியாக இதனை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனாலும், இந்த பிரம்மாண்ட வானூர்தியில் பேட்டரிகள் மற்றும் மின்மோட்டார்களில் இயங்கும் தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்துவதில் கடும் சவால்கள் உள்ளன.

மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வழியில் எங்கும் நிற்காமல் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையில் பறக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த வானூர்தி, 200 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதாக இருக்கும். 

இந்த வானூர்திக்குள் ஏராளமான அர்மதா டாங்கிகளையும், அதற்குண்டான வெடிப்பொருட்களையும் எடுத்துச் செல்ல முடியும். வரும் 2024ம் ஆண்டில் இந்த வானூர்தி தயாரிப்பு நிறைவடைந்து அறிமுகம் செய்யப்படும்.

எதிரி நாடுகளால் இருக்கும் அச்சுறுத்தலை குறைத்துக் கொள்ளும் விதத்தில், இந்த இராணுவ வானூர்தி திட்டத்தை ரஷ்யா கையிலெடுத்துள்ளது. மேலும், உலகின் எந்த ஒரு மூலையிலும், சில மணிநேரத்தில் தற்காலிக ராணுவ தளத்தை அமைக்கும் விதத்தில் இந்த வானூர்தியை தயாரிக்க அந்நாடு திட்டமிட்டிருக்கிறது.