பழமொழி.....

Wednesday, December 3, 2014

MQ-4C Triton Unmanned Aircraft System...



 அமெரிக்கா MQ-4C Triton unmanned aircraft system  என்னும் ஆளில்லாப் போர்வானூர்திகள் மூலம் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளனர்.  அமெரிக்கா உருவாக்கும்  இவ் வகை ஆளில்லாப் போர் வானூர்திகள் தற்போது கடற்படையின் பாவனையில் உள்ள ராடார்கள், சோனார்கள், அல்லது வானோடிகள்  ஓட்டும் வானூர்திகள் செய்வதைவிட, பல மடங்கு உபயோகமானது. MQ-4C வானூர்தி அமெரிக்காவின் Boeing P-8 Poseidon என்னும் வானோடிகள்  ஓட்டும் கண்காணிப்பு வானூர்திகளுடன் இணைந்து செயற்படக் கூடியவை.


உலகின் அதி உயரம் பறக்கும் இவ் ஆளில்லாப் போர் வானூர்திகள் 40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்டு உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும்  மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும்.




2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும் MQ-4C Triton ஆளில்லா வானூர்திகள் மணிக்கு முன்னூறு மைல்கள் வேகத்தில் பறந்து இரண்டாயிரம் கடல் மைல்களைக் கண்காணிக்கக் கூடியவை. இவற்றினுள் 3200 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை எடுத்துக் கொண்டு பறக்கும் போது வெளியில் 2400 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களையும் பொருத்திக் கொண்டும் பறக்க முடியும்.


 
வானில் பறந்தபடியே ஒரு flying communications relay station ஆக இயங்கும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால், கடலுக்கு மேல் எடுக்கும் படங்களையும், வீடியோக்களையும் கப்பல்களுக்கு நேரடியாக அனுப்புவதுடன், இரு கப்பல்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களையும் இந்த வானூர்திகள் செய்து கொடுக்க முடியும்.

 

50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தேவை ஏற்படின் தனது electro-optical / infrared உணரிகளின் துணையுடன் எந்தவித முகில்களூடாகவும் இறங்கி மிகவும் தாழப்பறந்து உளவு, கண்காணிப்பு, வேவு போன்றவற்றைச் செய்ய முடியும்.

2014 ஒக்டோபர் மாதம் செய்யப்பட்ட இரண்டாவது பரீட்சார்த்த பறப்புக்கள் மிகவும் சிறப்பாக அமைந்ததாக அமெரிக்கக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.





Monday, May 26, 2014

இன்மசெட் (Inmarsat)......

  

உலகிலுள்ள அனைத்து பயணிகள் வானூர்திகளுக்கும் அடிப்படையான ஒரு பாதை அறிவிப்பு சேவையை இலவசமாக வழங்க பிரிட்டனின் செயற்கைக்கோள் வலயமைப்பு நிறுவனமான இன்மசெட் (Inmarsat) முன்வந்துள்ளது.


மலேசிய வானூர்தி MH370 கடந்த மார்ச் எட்டாம் தேதி சுவடே இல்லாமல் காணாமல்போனதை அடுத்து இன்மசெட் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளது. மலேசிய வானூர்தியில் இருந்த இன்மசெட் கருவியில் இருந்து சற்று நேரம் வந்த மின் அலை ஒலிச் சமிக்ஞைகளைக் கொண்டுதான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதன் எச்சங்களைத் தேட நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்நிலையில் பறக்கும் வானூர்திகள் இருக்கும் இடம் பற்றி துல்லியமாக தகவல் வழங்கக்கூடிய இலவச சேவை ஒன்றை வழங்க இன்மசெட் முன்வந்துள்ளது.

பறக்கின்ற ஒரு வானூர்தி தான் இருக்கும் இடத்தை செயற்கைக்கோள் துணைகொண்டு அறிந்து அந்த விவரத்தையும் அது பயணிக்கும் வேகம், உயரம் பற்றிய தகவலை இன்மசெட்டின் உலகலாவிய செயற்கைக்கோள் கட்டமைப்புக்கு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை அனுப்பிக்கொண்டிக்கும் வகையிலான கட்டமைப்பு இது.

  "உலகிலுள்ள அகலமான வானூர்திகளில் தொண்ணூறு சதவீதமானவற்றில் இன்மசெட்டின் கருவி ஏற்கனவே இருக்கிறது. எனவே எவ்வித செல்வும் இல்லாமல் வானூர்திப் போக்குவரத்துத்துறை உடனடியாக தீர்வு காண்பதற்கான வழி இதுதான்" என இன்மர்சாட்டின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ் மெக்லவ்லின் பிபிசியிடம் தெரிவித்தார்.

சேட்டிலைட் டிராக்கிங் என்று சொல்லப்படுகின்ற செயற்கைக்கோள் மூலமாக பாதையை அறிவிக்கும் முறையை வானூர்தி நிறுவனங்கள் பயன்படுத்த தயங்குவது பெரும்பாலும் அது அதிக செலவாகும் என்பதால்தான்.
 
  வானூர்திகள் பறக்கும் இடத்தை அறிவதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்காக சர்வதேச சிவில் வானூர்திப் பயண நிர்வாக அமைப்பான ICAOவின் ஏற்பாட்டில் கனடாவின் மோண்ட்ரியல் நகரில் மாநாடு ஒன்று ஆரம்பிக்கவிருப்பதற்கு முன்பாக பிரிட்டிஷ் நிறுவனமான இன்மர்சாட் இந்த அறிவிப்பை செய்துள்ளது.

 மலேசிய வானூர்தி காணாமல் போன பின்னணியில் உலக வானூர்திப் போக்குவரத்து நிறுவனங்கள் எவ்விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை ICAOவும் சர்வதேச வானூர்தி போக்குவரத்து சங்கமான IATA வும் பரிசீலித்து வருகின்றன.

போயிங் 777 ரகத்திலான பெரிய வானூர்தி ஒன்று இப்படி மறைந்து போனது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஒரு வானூர்தியினை அடையாளம் காட்டக்கூடிய கருவிகள் அதன் உள்ளிருந்தே நிறுத்தப்படலாம் என்பதும், பூமியில் உள்ள ராடார்களின் வீச்சை விட்டு நகர்ந்து விட்டால், ஒரு வானூர்தியின் இடம் பற்றி கண்டறிய வழியில்லாமல் இருப்பதும் பலருக்கும் ஏற்க முடியாத விஷயமாக இருக்கிறது.

 இப்படியான சூழ்நிலையில், இன்மர்சாட் வழங்க முன்வந்திருக்கும் சேவை பறக்கும் வானூர்தியின்  இடத்தை எப்போது வேண்டுமானாலும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் என்றால், அது நிச்சயம் வானூர்திப் போக்குவதத்துக்கு துறைக்கு பெரிய உதவியாக அமையும் எனக் கூறலாம்.







Monday, May 19, 2014

E -Fan வானூர்தி...


உலகில் முதல் முறையாக மின்கலம் (Electric battery) மூலம் இயங்கும் வானூர்தி வெற்றிகரமாக வானத்தில் பறக்கவைத்து, சோதனை செய்து பார்க்கப்பட்டதாக அதனை உருவாக்கியுள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "ஏர்பஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் உள்ள பிரச்சினைகளில் ஒன்றாக மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் சூரிய ஒளி, காற்று, கடல் அலை போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் மின்சாரத்தால் பறக்க கூடிய ஒரு குட்டி வானூர்தியை தயாரித்துள்ளது. அதற்கு E-Fan என பெயரிடப்பட்டுள்ளது.




பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கிலுள்ள போர்டாக்ஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள வானூர்தி நிலையத்தில் E-Fan என்று அழைக்கப்படக்கூடிய இந்த சிறிய ரக வானூர்தி கடந்த மாத இறுதியில் 10 நிமிடங்கள் பறக்கவைக்கப்பட்டு, சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த வானூர்தியானது சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய, சப்தமில்லாத மற்றும் விலைகுறைவான வானூர்தி பயணத்தை தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 19 அடியாகும். மின்சாரத்தை சேமிக்கும் விதமாக இதில் லித்தியம் தாது மற்றும் இரும்பு அடங்கிய சுமார் 120 மின்கலங்கள் பொருத்தப்பட்டிருந்தன.






ஒருமுறை இந்த மின்கலங்களை முழுவதுமாக மின்னேற்றினால் செய்தால், 1 மணி நேரம் வானூர்தி பறக்கக்கூடிய ஆற்றலைப் பெறும்.இவ் வானூர்தி மொத்தமே 19 அடி நீளமே உள்ளது. அதில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதிநவீன தொழில்நுட்பத்தினால் ஆன இந்த வானூர்தியின் சோதனை ஓட்டம் தென் மேற்கு பிரான்சில் உள்ள போர்டியாஸ் விமான நிலையம் அருகே நடந்தது.

அப்போது இந்த வானூர்தி சுமார் ஒரு மணி நேரம் பறந்து சாதனை படைத்தது. கடந்த மாதம் நடந்த சோதனை ஓட்டத்தில் 10 நிமிட நேரம் மட்டுமே பறந்தது. தற்போது நடந்த சோதனை ஓட்டம் மூலம்

பெரிய அளவில் ஆன வானூர்தியைத் தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.



E-Fan வரிசையில் E-Fan 2.0 மற்றும் E-Fan 4.0 என்ற 2 வகையான வானூர்திகளை Airbus நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

Thursday, March 27, 2014

தொலைந்த MH 370..




மலேசியா எயர்லைன்ஸ் விமானம் MH 370 என்பது ( MH 370 மற்றும் Codeshare உடன்படிக்கை மூலம் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் CZ 748) 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரோடு காணாமல் போன போயிங் 777 வகை விமானம் ஆகும்.

மலேசியா எயர்லைன்க்கு சொந்தமான போயிங் 777 வகை விமானங்களில் அதிக சேதம் விளைவித்ததும், உலகின் போயிங் 777 வகை விமானத்தினால் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதும் இந்த நிகழ்வாகத் தான் இருக்கும். போயிங் 777 வகை விமானம் இத்தகைய மீட்கமுடியா விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.



மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 8 மார்ச் 2014 இவ் விமானம் புறப்பட்டது.
இது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.

கோலாலம்பூரில் ஆரம்பித்த இதன் பயணம் அந்தமான் கடல், தாய்லாந்து வளைகுடா, மலாக்கா நீரிணை, தென் சீனக் கடல் மூலம் பெய்ஜிங்கை சென்றடைந்திருக்க வேண்டும்.



அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்சு, மலேசியா சிங்கப்பூர் மற்றும் வியட்னாமிய கடற்படையினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடும் பணியில் இந்தியாவும் இணைந்து இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 விமானங்கள் அந்தமான் கடலில் தேடுதல் பணியைத் தொடங்கின. இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்களும் சுமார் 35,000 சதுர கி. மீட்டர் பரப்பளவுக்கு விமானத்தைத் தேடி வந்தன. தேடும் பணிகள், ஏழாவது நாளில் இந்தியப் பெருங்கடலுக்கு விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் தேடுதல் பணிகளை மத்திய மற்றும் கிழக்கு வங்காள விரிகுடாவில் தீவிரப்படுத்தியது. சுமத்ராவிலிருந்து தெற்கு இந்தியப் பெருங்கடல்வரை தேடும் பணிகளில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகள் முன்னெடுத்து வந்தன. லாவோசிலிருந்து காப்சியன் கடல்வரை தேடும் பணிகளில் சீனாவும் கசகஸ்தானும் முன்னெடுத்து வந்தன.

இவ்விமானத்தின் பொறுப்பாளர் (captain) சாகிரே அக்மத் ஷா ஆவார். 53 வயதான இவர் மலேசியாவை சேர்த்தவர் 1981இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்த இவர் 18,365 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர். முதல் அதிகாரியான (first officer) இபரிக் அப்துல் அகமதுவும் மலேசியாவை சேர்த்தவர். 12 பணிக்குழுவினரும் மலேசியராவர்.



                               9M-MRO விமானத்தின் கட்டுப்பாட்டு அறை



விமானத்தின் விவரங்கள்..
  1. வகை                      : போயிங் 777 – 2H6ER
  2. வரிசை எண்           : 28420
  3. பதிவு எண்              : 9M-MRO
  4. தயாரிப்பு விவரம்  : போயிங் 777 வகையில் 404ஆவது விமானம்
  5. முதல்முறையாக பறந்த நாள்  : 14 மே 2002
  6.  விற்கப்பட்ட நாள்                      : 31 மே 2002
  7.  இயந்திரங்கள்                            : இரண்டு Rolls-Royce Trent 892
  8. விமானத்தின் பயணிகள் கொள்ளளவு: 282 (35 வர்த்தக வகுப்பு, 247 சாதாரண வகுப்பு)

இந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதற்க்கான காரணத்தை ஆராய்ந்த அந்த நாட்டின் உளவுத்துறை partial ping தகவலை காரணம் காட்டியுள்ளது. இந்த Pinging என்பது விமானத்திற்க்கும் செயற்க்கைக்கோளுக்குமான தொடர்பு ஆகும். மணிகொரு தடவை விமானம், ‘நான் இருக்கிறேன்’ என்று விமானம் செய்மதி மூலம் காட்டிக் கொள்ளும்........



Thursday, February 27, 2014

S-512 Spike Aerospace..

மிகவிரைவாக செல்லும் புதிய வானூர்திகளை தயாரிக்கும் நிறுவனமான ஸ்பைக் ஏரோஸ்பேஸ்(Spike Aerospace) தனது வானூர்தியில் கண்ணாடிகளுக்கு பதிலாக முழுஅளவிலான திரைகள் அமையும் என தெரிவித்துள்ளது. கண்ணாடிகள் இல்லாமல் செய்வதன் மூலம் வானூர்தியின் திறன் அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



2018ம் ஆண்டளவில் S-512 எனபெயரிடப்பட்டுள்ள இந்த வானூர்தி அறிமுகப்படுத்தபடும் என எதிர்பார்க்கபடுகிறது. கண்ணாடிகள் மேலதிகமான அமைப்புகளையும் நிறையையும் அதிகரிக்கின்றன, அதை நுன் நிழற்படக்கருவி (micro camera) மற்றும் திரைகள் மூலமாக பிரதியீடு செய்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. பொஸ்டனில் இருந்து இயக்கும் இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் இதைபற்றி அறிமுகப்படுத்தியது. இதுவே முதல் வியாபார மீயொலி ஜெட் வானூர்தியாக (supersonic Business Jet) அமையும்.





கிட்டத்தட்ட 80 மில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள இந்த வானூர்தி 18பேரை ஏற்றிச்செல்லக்கூடியது.1.6 மக் (Mach) (மணித்தியாலத்திற்கு 1800 கிலோ மீற்றர்கள் அல்லது 1100 மைல்கள்) வேகத்தில் செல்லக்கூடிய இந்த வானூர்தி ஆகக்கூடிய வேகமாக 1.8 வரை செல்லும். தற்போது பாவனையில் உள்ள வானூர்தியான போயிங் 777-300 0.8மக் வரையே செல்லும். நியுயோர்கில் இருந்து லண்டன் செல்ல 3-4 மணித்தியாலங்களே எடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தத் தூரத்தைக் கடக்க 6-7 மணித்தியாலங்கள் எடுக்கிறது. இந்த வானூர்தி 131 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்டது. 2 இயந்திரங்களைக் கொண்ட இதன் பறப்பு எல்லை 6500 கிலோ மீற்றர்கள் (4000 மைல்கள்) ஆகும்.