AirScooter II உலாங்கு வானூர்தி Woody Norris என்பவரால் 2000 ஆண்டலவில் உருவாக்கப்பட்டது. இது செலுத்த இலகுவான, நிறை குறைந்த, மற்றும் பாதுகாப்பான ஓரச்சு உலாங்கு வானூர்தியாகும். இதன் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் செலுத்தும் முறை உந்துருளியைச் செலுத்தும் (motorcycle style) முறைக்கு ஒப்பானது இதன் கைப்பிடிகளை (Handlebars) முறுக்குவதன் மூலம் இதன் ஆர்முடுகலை (acceleration) அதிகரிக்கலாம். அத்துடன் ஓரச்சு சுழலிகள் என்றபடியால் இதற்கு வால் சுழலி தேவை இல்லை. அத்துடன் இதன் கைப்பிடிகளை திருப்புவதன் வலது, இடது என்று திருப்புவதன் மூலம் இதன் திசையை மாற்றலாம். இதன் Throttle உயரத்தைக் (சுழலிகளின் கோணத்தை மாற்றுவதன் மூலம்) கட்டப்படுத்த பயன்படுகிறது. இதை கால் மூலம் (pedal) கட்டுப்படுத்தும் அவசியம் இல்லை.
- இது உந்துருளியை செலுத்துவதைப் போல் செலுத்த இலகுவானது.
- மிகவும் நிறை குறைந்தது.
- நீரிலும் மற்றும் நிலத்திலும் செங்குத்தாய் தரையிறங்கவும், மேலேற்றவும் முடியும்.
- இதை செலுத்த வானோடி உரிமம் தேவை இல்லை.
இதன் அமைப்பு......
- இயந்திரம்: 1 x 65hp AeroTwin four-stroke
- சுழலிகளின் சுழல் விட்டம்: 4.27m
- நீளம்: 3.81m
- உயரம்: 3.35m
- அகலம்: 2.13m
- எடை: 150kg,
- உயர் வேகம்: 100km/h
No comments:
Post a Comment