வானில் வானூர்திகள், உலங்கு வானூர்திகள்,ஆளில்லா வானூர்திகள் போன்ற பல ஊர்திகள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தாலும், அதிகளவு சுமைகளை சுமந்துகொண்டு வான்போக்குவரத்ததில் ஈடுபடுபவை Aeroscraft எனப்படும் பலூன் போன்ற வானூர்திகளே. இவை Aeroship எனவும் அழைக்கப்படுகின்றன. இப்போது Skylifter என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் காற்றில் மிதந்தபடி பயணிக்கும் Aeroscraft ML866 என்ற Aeroship ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த வானூர்தி மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. 1. Aerostat System. சமச்சீரான பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் காணப்படும் இந்த அமைப்பு தான் மேலே மிதக்கக்கூடிய பகுதி, இதில் தான் வளிமண்டல வாயுவை விட அடர்த்தி குறைந்த வாயுவை நிரப்ப வேண்டும். சூரிய சக்தியை சேமிக்கும் சூரியகலங்களையும் (solar panels), வானூர்தியை கட்டுப்படுத்தும் Propulsion System என்ற அமைப்பும் இதில் காணப்படுகிறது.
2. Service Trunk. control pod with flight deck மற்றும் Aerostat System ஆகியவற்றை இணைக்கும் பாலமாகவும் control pod with flight deck அமைப்பைத் தாங்கும் தூணாகவும் தொழிற்படுகிறது.
3. control pod with flight deck இவ் வானூர்தியின் பிரதான கட்டுப்பாட்டு மையம் இது தான். இதில் இரண்டு வானோடிகள் இருக்கக்கூடிய வானோடி அறை மற்றும் வானூர்தியை கட்டுப்படுத்தும் Propulsion System ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. flight deck மற்றும் Aerostat System ஆகியவற்றை suspension lines என்ற அமைப்பு இணைக்கிறது. இதன் கீழ் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு சுமைகள் (Cargo) ஏற்றப்படுகின்றன.
Aeroscraft ML866 வானூர்தியானது Biodiesel மற்றும் சூரியசக்தி மூலம் இயக்கப்படும் மூன்று இயந்திரங்கள் மூலம் இது இயக்கப்படுகிறது. 148 km/h வேகத்தில் பயணிக்க கூடிய இந்த வானூர்தி 150 தொன் வரை சுமந்து 2,000 km தொடர்சியாகப் பயணிக்கக்கூடியது. குறைதளவு எரிபொருள் பாவனை, குறைதளவு Co2 வெளியேற்றம், எந்த பக்கமும் திரும்பும் தன்மை, மற்றும் எப்படிப்பட்ட இடங்களிலும் தரை இறங்கும் வசதி போன்றன இதன் சிறப்பம்சங்களாகும்.
இந்த வானூர்தி பயணிகள் போக்குவரதிற்கு சாத்தியமா? அப்படி சாத்தியமானால் 80 பயணிகள் வரை பயணிக்கலாம் எனத் தெரியவருகிறது.
வானூர்திகள் தமது பறப்பை மேல் எழும்புதல், வானில் பறத்தல், தரை இறங்குதல் போன்ற மூன்று கட்டங்களில் நிறைவு செய்கின்றன. இவற்றில் மேல் எழும்புதல் என்பது மிகவும் சிக்கலானதும், செலவு கூடியதாகவும் உள்ளது. இதனை தவிர்பதற்காக எனன செய்யலாம் என மண்டையை போட்டு குழப்பின Air Bus நிறுவன பொறியியளாளர்களுக்கு தோன்றிய திட்டம் தான் இந்த Eco-Climb தொழில்நுட்பம் ஆகும்.
மின்காந்த (electro-magnetic motors) விசையால் இயங்கும் சிறிய ரக இயந்திரங்களின் மூலம் இயங்கும் Eco-Climb ஆனது வானூர்தியைச் சுமந்து கொண்டு ஓடுபாதையில் வேகமாக பயணிப்பதன் மூலம் வானூர்திக்கு விசையை வழங்கி மேல் எழும்பச் செய்கிறது. இதன் செயற்பாட்டையும் வேகத்தையும் ஓடுபாதையின் நீளம் (runway length), காற்றின் வேகம் (wind speed), சூழல் வெப்பநிலை (temperature), வானூர்தியின் எடை (the weight of the aircraft) போன்ற காரணிகள் கட்டுப்படுத்துகின்றன.
Eco-Climb தொழில்நுட்பத்தின் நன்மைகள்.......
வானூர்தி மேல் எழும்புவதற்கு 1/3 பங்கு ஓடுபாதை போதுமானது. அதனால் வானூர்தி நிலையங்களை நகரங்களிற்கு மத்தியிலும் அமைக்கலாம்.
வானூர்தி சிறிதளவு தூரம் ஓடியவுடன் உடனடியாக மேல் எழும்புகிறது.
இது மின்காந்த விசையால் செயற்படுவதாலும் மேல் எழும்புவதற்கு வானூர்தி இயந்திரம் பயன்படுத்தாமையலும் எரிபொருள் செலவு குறிக்கப்படுகிறது.
இதன் பயன்பாட்டால் இயந்திரங்களின் சத்தம் இல்லை.
அத்துடன் சூழல் மாசடைதல், Co2 வெளியேறம் குறைவு.
மேல் எழும்புவதற்கு இயந்திரம் பயன்படுத்தாமையால் வானூர்தியின் எடை குறைகிறது.
இந்த தொழில்நுட்பத்தில் பல சிக்கல்கள் இருந்தாலும், அவற்றை அகற்றி இதை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு Air Bus நிறுவனம் தீர்மானித்துள்ளது.
Airbus வானூர்தி கட்டுமான நிறுவனம் வானத்தில் பறக்கும் அனுபவத்தை பயணிகள் பெற புதிய வகை வானூர்தி ஒன்றை வடிவமைத்து வருகின்றனர். இந்த வானூர்தி முழுக்க முழுக்க கண்ணாடி போன்ற பொருளால் தயாரிக்கப்படுகிறது. உள்ளே இருந்தபடி ஆகாயத்தை அப்படியே தெளிவாகப் பார்க்கலாம். மேகக் கூட்டங்கள் உங்களைத் தாண்டிச் செல்வதைப் பார்த்து ரசிக்கலாம். இரவில் வானத்து நட்சத்திரங்களுக்குள்ளே பறக்கும் இனிய அனுபவத்தைப் பெறலாம். இந்த வானூர்தி Bionic Structures, Biopolymer membrane, Composite Materials, Integrated Neural Network, Morphing Materials, Self-reliant Materials, Ecological Materials, 3D Printing, Holographic Technology, Energy Harvesting போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ் வானூர்தியின் எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையில் இதன் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன அத்துடன் வெளியேறும் காபனின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வானூர்தியில் First class, Business class, Economy class என்றெல்லாம் தனித் தனி வகுப்புகள் கிடையாது. எல்லாமே ஒரே வகுப்பு தான். ஆனால் மூன்று வலையங்களாக பிரிக்கப்பட்டுள்ளது எந்த வகை வலயம் தங்களுக்கு தேவை என்பதை பயணிகளே தேர்வு செய்து கொள்ளலாம். கட்டணம் ஒன்றுதான்.
1. Vitalising Zone
இந்த வலயம் வானூர்தியின் முன்பகுதியில் அமைத்துள்ளது. இதில் இதில் பொருத்தப்படும் இருக்கைகள் பயணிகளின் உடல் பருமனுக்கேற்ப மாறும் வசதி கொண்டவை, உடம்பு பிடிக்கும் (massage) வசதி உள்ளது அத்துடன் விரும்பிய பக்கம் திரும்பும் வசதியும் கொண்டுள்ளது. பயணிக்கும் போது வானில் உள்ள நட்சத்திரங்களைப் பார்க்கலாம். இதன் உள்புற நிறம், சூழலுக்கேற்றவாறு மாறிக் கொள்ளும் வசதியைக்கொண்டுள்ளது. பகல் நேரத்தில் பயணிக்கும்போது சூரியஒளியை தடுத்து, வான்வெளியில் காணப்படும் பொருட்கள் பற்றிய விபரங்களை பயணிகளுக்கு வழங்குகிறது.
2. Interaction Zone
இவ் வலயம் வானூர்தியின் மத்தியில் அமைத்துள்ளது. இதில் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளை கணணியில் விளையாடும் வசதி, மது அருந்த Bar வசதி, வானூர்தி எங்கு பறக்கிறது போன்ற விபரங்களுடன் கூடிய முப்பரிமானத் தொழில்நுட்பத்துடனான உலகவரைபடங்கள், பலவசதிகள் கொண்ட மாநாட்டுமண்டபம் போன்றவற்றை கொண்டுள்ளது. எதில் சிறப்பம்சம் என்னவென்றால் இவை எல்லாமே ஒரே இடத்தில்தான் அமைத்துள்ளது. பயணிகள் விரும்பியவற்றை தெரிவு செய்யலாம்.
3. Smart Tech Zone
இவ் வலயம் வானூர்தியின் வால் பகுதியில் அமைத்துள்ளது. Holographics Communication Technologies தொழினுட்பத்துடன் கூடிய இருக்கைகள் அத்துடன் அவை பயணிகளின் உடல் பருமனுக்கேற்ப மாறும் வசதியையும் கொண்டுள்ளது.Holographics Technologies மூலம் கணணியில் விளையாடும் வசதி, புத்தகம் படிக்கும் வசதி, இணையம் பயன்படுத்துதல் போன்றவற்றுடன் பயணிக்கலாம். காணோளியைப் பாருங்கள்
2050-ம் ஆண்டு முதல் இந்த வகை வானூர்திகள் நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்