Airbus வானூர்தி கட்டுமான நிறுவனம் வானத்தில் பறக்கும் அனுபவத்தை பயணிகள் பெற புதிய வகை வானூர்தி ஒன்றை வடிவமைத்து வருகின்றனர். இந்த வானூர்தி முழுக்க முழுக்க கண்ணாடி போன்ற பொருளால் தயாரிக்கப்படுகிறது. உள்ளே இருந்தபடி ஆகாயத்தை அப்படியே தெளிவாகப் பார்க்கலாம். மேகக் கூட்டங்கள் உங்களைத் தாண்டிச் செல்வதைப் பார்த்து ரசிக்கலாம். இரவில் வானத்து நட்சத்திரங்களுக்குள்ளே பறக்கும் இனிய அனுபவத்தைப் பெறலாம். இந்த வானூர்தி Bionic Structures, Biopolymer membrane, Composite Materials, Integrated Neural Network, Morphing Materials, Self-reliant Materials, Ecological Materials, 3D Printing, Holographic Technology, Energy Harvesting போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ் வானூர்தியின் எரிபொருள் செலவை கட்டுப்படுத்தும் வகையில் இதன் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன அத்துடன் வெளியேறும் காபனின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வானூர்தியில் First class, Business class, Economy class என்றெல்லாம் தனித் தனி வகுப்புகள் கிடையாது. எல்லாமே ஒரே வகுப்பு தான். ஆனால் மூன்று வலையங்களாக பிரிக்கப்பட்டுள்ளது எந்த வகை வலயம் தங்களுக்கு தேவை என்பதை பயணிகளே தேர்வு செய்து கொள்ளலாம். கட்டணம் ஒன்றுதான்.
1. Vitalising Zone
இந்த வலயம் வானூர்தியின் முன்பகுதியில் அமைத்துள்ளது. இதில் இதில் பொருத்தப்படும் இருக்கைகள் பயணிகளின் உடல் பருமனுக்கேற்ப மாறும் வசதி கொண்டவை, உடம்பு பிடிக்கும் (massage) வசதி உள்ளது அத்துடன் விரும்பிய பக்கம் திரும்பும் வசதியும் கொண்டுள்ளது. பயணிக்கும் போது வானில் உள்ள நட்சத்திரங்களைப் பார்க்கலாம். இதன் உள்புற நிறம், சூழலுக்கேற்றவாறு மாறிக் கொள்ளும் வசதியைக்கொண்டுள்ளது. பகல் நேரத்தில் பயணிக்கும்போது சூரியஒளியை தடுத்து, வான்வெளியில் காணப்படும் பொருட்கள் பற்றிய விபரங்களை பயணிகளுக்கு வழங்குகிறது.
2. Interaction Zone
இவ் வலயம் வானூர்தியின் மத்தியில் அமைத்துள்ளது. இதில் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளை கணணியில் விளையாடும் வசதி, மது அருந்த Bar வசதி, வானூர்தி எங்கு பறக்கிறது போன்ற விபரங்களுடன் கூடிய முப்பரிமானத் தொழில்நுட்பத்துடனான உலகவரைபடங்கள், பலவசதிகள் கொண்ட மாநாட்டுமண்டபம் போன்றவற்றை கொண்டுள்ளது. எதில் சிறப்பம்சம் என்னவென்றால் இவை எல்லாமே ஒரே இடத்தில்தான் அமைத்துள்ளது. பயணிகள் விரும்பியவற்றை தெரிவு செய்யலாம்.
3. Smart Tech Zone
இவ் வலயம் வானூர்தியின் வால் பகுதியில் அமைத்துள்ளது. Holographics Communication Technologies தொழினுட்பத்துடன் கூடிய இருக்கைகள் அத்துடன் அவை பயணிகளின் உடல் பருமனுக்கேற்ப மாறும் வசதியையும் கொண்டுள்ளது.Holographics Technologies மூலம் கணணியில் விளையாடும் வசதி, புத்தகம் படிக்கும் வசதி, இணையம் பயன்படுத்துதல் போன்றவற்றுடன் பயணிக்கலாம்.
காணோளியைப் பாருங்கள்
2050-ம் ஆண்டு முதல் இந்த வகை வானூர்திகள் நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்
No comments:
Post a Comment