பழமொழி.....

Saturday, February 2, 2013

Avian Infrasound Non-lethal Denial System


வானூர்தி நிலையங்களில் வானூர்திகளை சுற்றிவளைத்து தொல்லை கொடுக்கும் பறவைகளை விரட்ட புது கருவியை அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான Technology International நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

வானூர்தியை தரையிறக்கும்போது மற்றும் மேலே கிளப்பும்போது ஏன் நடுவானில் பறக்கும்போதும் கூட திடீர் திடீரென பறவைகள் குறுக்கே வரும். தற்செயலாக கண்ணாடியில் மோதினாலோ அல்லது இயந்திரத்தில் புகுந்தாலோ பயங்கர விபத்து ஏற்படும் அபாயம் உண்டு. வானூர்தி நிலைய பகுதியில் பறவைகள் நடமாட்டத்தை தடுக்க தானியங்கி விசிறி, பறவைகளை சிக்கவைக்கும் வலை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. 


இந் நிலையில், மெல்லிய ஒலி எழுப்பி பறவைகளை விரட்டும் கருவியை அமெரிக்காவின் லூசியானா (Louisiana) மாநிலம் லாபிளேஸ் (Laplace) நகரை சேர்ந்த Technology International என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. Avian Infrasound Non-lethal Denial System என்பது இதன் பெயர் அதாவது "பறவைகளை விரட்டும் ஆபத்தற்ற கேட்கமுடியாத ஒலியமைப்பு" என்பது இதன் பொருள். வானூர்திகள் நெருங்கி வருவதை கண்டறியும் உணரி (Detect) இதில் உள்ளது. வானூர்திகள் நெருங்கி வந்ததும் இக்கருவியில் இருந்து குறைந்த அளவு ஒலி (மனிதரால் கேட்க முடியாது) தொடர்ந்து எழுப்பப்படும். அவ்வகை ஒலி பறவைகளுக்கு அது தெளிவாக கேட்கும் என்பதால், பயந்துபோய் ஓடிவிடும்.

இக்கரு வியின் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் முறைப்படி அறிமுகப்படுத்தப்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

                                        பறக்கும் பறவைகளால் பாதிக்கபட்ட                                                                                                  
                                                     பறந்த வானூர்திகள் சில







No comments: