பழமொழி.....

Friday, February 15, 2013

Qaher F-313



ஈரான் ஒரு சர்ச்சைக்குரிய நாடாக திகழ்கிறது. அங்கு சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை தயாரிப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது தனது சொந்த நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் அதி நவீன போர் வானூர்தியை ஈரான் தயாரித்துள்ளது. அது தூரப்புலமானியில் அகப்படாமல் பறக்கும் Stealth தொழிநுட்பத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதற்கு Qaher F-313 (வெற்றியாளர்) என பெயரிட்டுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.

மேலும், அந்த வானூர்தியைப் பார்வையிட்ட அவர் அதன் தொழில் நுட்பத்தை வானோடியிடம் கேட்டறிந்தார். உலக நாடுகளில் இருக்கும் அதிநவீன போர் வானூர்திகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என அவர் வர்ணித்தார். அத்துடன் இது நவீனரக உலோகங்களினால் உருவாக்கப்பட்டது எனவும் இந்த வானூர்தியைப் பல ஆயிரம் மணி நேரம் வானோடிகள் பரிசோதித்ததாகவும் அதன் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார்.
பல போர் வானூர்தி வல்லுனர்கள் ஐக்கிய அமெரிக்காவின் F-22, F-35 ஆகிய போர் வானூர்திளின் தன்மைகளை ஈரானின் Qaher-313 வானூர்தி கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.


Qaher F-313 வானூர்தியின் சிறப்பம்சங்கள்.......

  1. ஒற்றை இருக்கை மட்டும் கொண்ட சிறிய வானூர்தி.
  2. புதியரக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக்கூடியது.
  3. தாக்குதலும் உளவும் செய்யக்கூடியது.
  4. வானூர்தியில் இருந்து வானூர்திக்கும், வானூர்தியிலிருந்து தரைக்கும் தாக்குதல் நடத்தக் கூடியது.
  5. தற்கால போர் வானூர்திகளுடன் ஒப்பிடுகையில் இதன் cockpit சிறிதாக இருப்பதுடன் அடிப்படையானதாகவும் இருக்கிறது.
  6. அனால் இதன் மூக்குப் பகுதி மிகச் சிறியதாக இருக்கிறது.
தூரப்புலமானிகளால் அடையாளம் காண முடியாத தொழில் நுட்பம் கொண்ட போர் வானூர்திகள் Stealth Fighter எனப்படும். உலகிலேயே சிறந்த ரக Stealth Fighter தன்னுடைய Qaher F313போர் வானூர்தி என ஈரான் தெரிவித்திருந்தது.



இது ஈரானின் பொய்........


ஈரான் வெளியிட்ட படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதன் படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.

வானூர்தி மிகவும் சிறியதாக உள்ளமை, பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்டதைப்
போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளமை, வானோடி ருவர் அமர்ந்து செலுத்துவதற்கான இடவசதி மிகவும் குறைவாக இருக்கின்றமை போன்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுவொரு மாதிரி 
வானூர்தி ன நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

காணொளி செய்தி 


No comments: