பழமொழி.....

Wednesday, March 6, 2013

நிஞ்சா வானூர்தி.



அதிரடியாக செயல்படக் கூடிய, தூரப்புலமானிகளுக்கு அகப்படாமல் தப்பிக்கக்கூடிய, விரும்பும் பக்கத்தில் திரும்பக்கூடிய வித்தியாசமான வடிவத்தைக் கொண்ட நவீன வானூர்தி தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் புளோரிடா (Florida State University aerospace engineer) பல்கலைக்கழக பேராசிரியர் Ge-Chen Zha கண்டுபிடித்துள்ளார்.


இதை மேலும் மேம்படுத்துவதற்காக அமெரிக்க டொலர் 1 லட்சத்தை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் (Nasa) ஒதுக்கீடு செய்துள்ளது. சாதாரண வானூர்திளுக்கு இறக்கைகள் பெரிதாக இருக்கும். இதில் இருக்கும் காற்றாடிகள் சுழலும்போதுதான் வானூர்திக்கு அதிக உந்துசக்தி கிடைத்து வானில் பறக்க முடிகிறது. போர் விமானங்களில் உந்து சக்தி தாரை (turbo engine) இயந்திரங்கள் மூலம் கிடைக்கின்றன.

இந்நிலையில், நிஞ்சா வீரனைபோல் அதிரடியாக செயல்படக்கூடிய அதிநவீன வானூர்தியை அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Ge-Chen Zha குழுவினர் தயாரித்துள்ளனர். இந்த வானூர்தி சாதாரண வானூர்திகளைப் போலவே தரையில் இருந்து மேலே எழும்பிச் செல்லும். ஆனால், வானத்தில் பறக்க ஆரம்பித்தவுடன் அதன் இறக்கைகள் பக்கவாட்டில் விரிந்து கொள்ளும், அதாவது நிஞ்சா வீரர்கள், எதிரியை பார்க்கும்போது, தங்களுடைய கைகளை அகலமாக விரிப்பார்கள். அப்போது அவர்களின் ஆடையும் பக்கவாட்டில் விரியும். அது பார்ப்பதற்கு, பிரம்மாண்டமான தோற்றத்தை தரும்.


இதேபோல் இந்த வானூர்தியின் இறக்கைகளும் பக்கவாட்டில் விரியும். தரையில் நீளமாக இருக்கும் இந்த வானூர்தி, ஆகாயத்தில் பறக்கத் தொடங்கும்போது அகலமாக தெரியும். இறக்கைகள் விரிந்தவுடன், Supersonic என்ற ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய சக்தி கிடைக்கும். இதன் மூலம் மிக உயரமாக பறக்க முடியும். மேலும், இந்த வானூர்தி ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, சடாரென 90 பாகை வரையில் திரும்ப முடியும்.

இத்தொழில்நுட்பத்தில் வானூர்தி தயாரிக்கப்பட்டால், அது எப்படி பறக்கும் என்பது குறித்து விளக்கும் அனிமேஷன் காணொளி காட்சிகளை, பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது.



இதன் சிறப்பம்சங்கள்....
  1. 70 பயணிகளுடன் பயணிக்கக் கூடியது.
  2. ஒலியை விட இரு மடங்கு வேகத்துடன் பயணிக்கக் கூடியது.
  3. தொடர்சியாக 4,000 மைல் பயணிக்கக் கூடியது.
  4. இதன் இறக்கை அமைப்பு Supersonic Bi-Directional Flying Wing என்று அழைக்கப்படுகிறது.

No comments: