பழமொழி.....

Friday, March 15, 2013

வானூர்தி விபத்து - 01

வானூர்தி விபத்துக்கான காலநிலைக் காரணிகள்..........
  1. மின்னல்
  2. கொந்தளிப்பு நிலை
  3. புயல்
  4. பனிப்படிவுகள்

                                                      மின்னல்

மின்னல் தாக்கத்தினால் பல வானூர்திகள் வெடித்துச் சிதறியுள்ளன. 1963ம் ஆண்டில் அமெரிக்காவின் வானூர்தி ஒன்று மின்னல் தாக்கத்திற்குள்ளானதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். ரேடார் மற்றும் காலநிலை பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால் இடி, மின்னல் போன்றவற்றைத் தவிர்த்து செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 1980களின் முற்பகுதியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா Jet வானூர்தி ஒன்றை மின்னல்கள் நிறைந்த பகுதிக்குள் அனுப்பி சோதனை நடாத்தியதில் 45 நிமிடங்களில் 72 தடவைகள் அவ்வானூர்தி மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளது. இதன்மூலம் மின்னல் தாக்கம்தொடர்பாக பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டு அவை வானூர்தித் தயாரிப்பின்போது பிரயோகிக்கப்பட்டுகின்றன.

வர்த்தக வானூர்திகள் வருடத்திற்கு ஒரு தடவை வீதம் மின்னல் தாக்கத்திற்குள்ளாவதாக புளோரிடா பல்கழைக்கழகம் நடாத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பொதுவாக வானூர்தியின் இறக்கை முனைகள், வால், மூக்குப்பகுதி போன்ற பகுதிகளே மின்னல் தாக்கத்திற்குற்படுகின்றன. தற்போது நவீன வானூர்திகள் மின்னைக் கடத்தும் தன்மை குறைவாகவுள்ள உலோகப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.


                               கொந்தளிப்பு நிலை

பறந்துகொண்டிருக்கும் வானூர்திகள் எதிர்கொள்ளும் மற்றுமொரு அபாய நிலைதான் இது. வளிமண்டலத்தில் ஏற்படும் இத்தகைய கொந்தளிப்பு நிலைமையால் (Turbulence) வானூர்திப் பயணிகள் பெறும் பீதிக்குள்ளாகின்றனர். வளிமண்டல அமுக்க வித்தியாசம் காரணமாக இந்நிலை ஏற்படுகின்றது. இதனைக் கடந்துசெல்லும் போது வானூர்திகள் தட தட வென்று குலுங்கும் நிலை ஏற்படுகின்றது. கொந்தளிப்புகளை இலகுவில் கண்டறிய முடியாது. அவை திடீரென எதிர்பார்க்காத விதத்தில் நிகழ்கின்றன.

இந்நிலையினால் உயிர்ச்சேதங்கள் ஏற்படாதபோதிலும் வானூர்திப் பயணிகள் பலர் இதனால் காயமடைந்துள்ளனர். 1980 முதல் 2004 வரை அமெரிக்க வானூர்திகளில் இத்தகைய 198 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் 266 பேர்வரை கடுமையாகக் காயங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் அமெரிக்க வானூர்தி சேவைகள் நிர்வாகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


                                          புயல்

திடீரென்று உருவாகும் புயற் காற்றினாலும் வானூர்திகள் அலைக்கழிக்கப்படுகின்றன. இதனால் வானூர்திக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு விபத்துக்கள் நிகழ அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன. வானூர்திகளில் பொறுத்தப்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புயல் உருவாவதை முன்கூட்டியே அறிந்து அதற்குண்டானா நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. மோசமான வானிலை நிலவும் பகுதிகளைத் தவிர்த்துச் செல்வதற்காக வானிலை பற்றிய தகவல்கள் நிமிடத்திற்கு நிமிடம் வானூர்ததிக்கு அனுப்பப்படுகின்றன.


                                  பனிப்படிவுகள்

வானூர்தி இறக்கைகளில் குளிர்காலங்களில் படியும் பனிப்படடிவுகளால் பாரிய அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. கடும் குளிரான நீர்த்துளிகள் விமான இறக்கைகளில் ஒட்டிக்கொள்வதால் பனி தேங்குகின்றது. இறக்கைகளில் பனி அதிகளவில் தேங்குவது விமானம் மேலே எழும் தன்மையைப் பாதித்து அனர்த்தங்களுக்கு வழிவகுக்கலாம். பறக்கும்போது மட்டுமன்றி வானூர்தி நிலையங்ககளில் தரித்திருக்கும்போதும் பனி தேங்குவற்கு வாய்ப்புள்ளது. சிறிய வானூர்திகளின் உட்புறத்திலும் பனி உருவாகி இதனால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

1982 முதல் 2000 ஆம் ஆண்டுவரை 819 பேர் வானூர்திகளின் உட்புறத்தில் ஏற்படும் பனி காரணமாக இறந்துள்ளதாக அமெரிக்காவி
ன் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கிறது. பனிபடிவதைப் தடுப்பதற்காக வானூர்திகள் பறப்பதற்கு முன்னர் ஒருவகைப் பதார்த்தம் பூசப்படுகின்றது.

No comments: